நிரஞ்சனா திருவள்ளுர் மாவட்டம், திருநின்றவூரில் உள்ளது இந்த திருக்கோயில். அரக்கோணம் செல்லும் ரயில் மூலமாக திருநின்றவூர் ரெயில் நிலையத்தில் இறங்கி, ஒன்றரை கி.மீட்டர் தூரம் சென்றால் இருதயாலீஸ்வரர் திருக்கோயிலை அடையலாம். திருநின்றவூர் திருநின்றவூர் என்றவுடன் உங்களால் ஓரளவுக்கு யூகிக்க முடியும், இந்த ஊருக்கு திருமகளின் ஆசியும் இருக்கிறது என்று. ஆம். மகாலஷ்மிக்கு திருமகள் என பெயரும் உண்டு. மகாலஷ்மி இந்த பகுதிக்கு வந்து நின்றதால்தான், திரு – நின்ற – ஊர் = திருநின்றவூர் என்று […]
நிரஞ்சனா தெய்வங்களை தரிசிக்க நாம் திருக்கோயில்களுக்குள் நுழையும்போது முதலில் நம்மை வரவேற்பது விநாயகர்தான். அதுபோல, யாகங்கள், சுபநிகழ்ச்சிகளின் தொடக்கம் போன்ற சுபகாரியங்களில் முதல் மரியாதை விநாயகப் பெருமானுக்குதான் தரவேண்டும். அவருக்கு நாம் தரும் மரியாதையை பொறுத்தே நமது எந்த செயல்களுக்கான வெற்றியும் அமைகிறது. நம்பிக்கை உள்ளவர்களை எந்த கணத்திலும் கைவிடாத கடவுள் தும்பிக்கைநாதனாம் கணபதி. தெய்வங்களுக்கு மட்டுமல்ல, பூலோக மக்கள் அனைவருக்கும் செல்ல பிள்ளையாக இருக்கிறார் பிள்ளையார். நள சக்கரவர்த்தி, சனீஸ்வரரால் அவதிப்பட்டு திருநள்ளாறு சென்று, சனி […]
நிரஞ்சனா ஜீவராசிகள் அனைத்துக்கும் ஒரு குணம், உடல் அமைப்பு இருக்கும். உதாரணத்திற்கு ஆண் யானைக்கு தந்தம் இருக்கும், பெண் யானைக்கு தந்தம் இருக்காது என்பது பொதுவான கருத்து. ஆனால் ஆப்பிரிக்கா யானைகளில் ஆண் மற்றும் பெண் யானைகளுக்கும் தந்தங்கள் இருக்கின்றன என்ற தகவல் இருக்கிறது. ஆனால் குணங்களை மட்டும் அந்தந்த ஜீவராசிகளுக்கு ஏற்ப இறைவனின் தந்துள்ளான். மனிதன் என்ற ஜீவனுக்கு உடல் அமைப்பு ஒரே மாதிரியாக இருந்தாலும், உருவ அமைப்பும், குணமும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமாக இருக்கும். […]
Niranjhana வைகுண்டமூர்த்தி சுவாமி ஆலயம், விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூர் வட்டத்தில் உள்ள சுந்தரபாண்டியம் என்ற ஊருக்கு 1கி.மீதொலைவில் கோட்டையூர் மெயின் சாலையில் உள்ளது. இறைவனின் படைப்பில் அனைத்து ஜீவராசிகளும் உருவாகிறது. அப்படி இருக்கும்போது ஏன் சிலர் தெய்வ நம்பிக்கை இல்லாமல் இருக்கிறார்கள்? என்று பலருக்கு சந்தேகம் இருக்கிறது. அந்த சந்தேகத்தை ஒரு மகானிடம் கேட்டார் ஒருவர். “ஒரு மரத்தில் எத்தனையோ பழங்கள் இருக்கிறது. அத்தனை பழங்களிலும் விதைகள் இருக்கிறது. அத்தனை விதைகளும் மரங்களாக மாறியா விடுகிறது? இல்லை. […]
இறைவனுக்காக வேண்டிக்கொண்டு பல கிலோ மீட்டர் தூரம் பாதயாத்திரை செல்வார்கள் பக்தர்கள். சைவ, வைணவ ஒற்றுமையை வலியுறுத்தும் வகையில் பக்தர்கள் ஆண்டுதோறும் சிவாலய ஓட்டம் ஓடுவார்கள். இதனால் இறைவனின் அருளும் அத்துடன் காலணி அணியாமல் வெறுங்காலில் நடப்பதால் கால்பாதத்திற்கு நன்மையும் கிடைக்கிறது. வெறுங்காலில் நடப்பதிலும் ஓடுவதிலும் மருத்துவ நன்மையும் உள்ளதாக இப்போது ஆராய்சியாளர்கள் சொல்லி இருக்கிறார்கள். இதை பற்றி 2009-ம் ஆண்டில் கிறிஸ்டோபர் மெக்டோகால் என்பவர் பான் டு ரன் என்ற புத்தகம் எழுதி உள்ளார். அந்த […]
Article by: Niranjhana எத்தனை கோடி சம்பாதித்தாலும் உடல் ஆரோக்கியமாக இருந்தால்தான் மனதில் மகிழ்ச்சி ஏற்படும். உடல் முழுவதும் புண் வைத்துக்கொண்டு பட்டுதுணியில் சட்டைபோட்டாலும் மனதில் தெம்பு இருக்குமா? நிச்சயம் இருக்காது. அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பார்கள். அகத்தில் வஞ்சனையும், பொறாமையும், அடுத்தவர்களை கெடுக்கும் துர்புத்தியும் இருந்தாலும் உடல் என்ற கோவிலில் இருந்து சந்தோஷம் என்கிற இறைவன் வெளியேறி விடுகிறான். இதனால் அழகாக பிறந்தவர்களும் தனக்கதானே சூனியம் வைத்துக்கொள்வதுபோல தங்களுடைய தீய எண்ணத்தால் பாதிப்படைகிறார்கள். அவர்களின் […]
Article by Niranjana பல வருடங்களுக்கு முன்பு நீரிழிவு நோய் என்பது பணக்காரர்களுக்கு மட்டும்தான் வரும் என்றும் அது பணக்கார நோய் என்றும் சொல்வார்கள். ஏன் அப்படி கூறினார்கள் என்றால், அவர்களுக்கு உடல் உழைப்பு இருக்காது, உணவு கட்டுப்பாடும் இருக்காது என்கிற காரணமும் இருக்கலாம். ஆனால் இன்று இந்த நீரிழிவு பிரச்னை, ஏழை-பணக்காரன், பெரியவர்கள் சிறியவர்கள் என்றெல்லாம் பாகுபாடு பார்ப்பதில்லை. இன்று இந்த நீரிழிவு, பலருக்கு வருகிறது. பிறந்த பஞ்சிளம் குழந்தையும் நீரிழிவு தொல்லையுடன் பிறக்கிறது. நீரிழிவு […]
Niranjana நாம் செய்யும் நற்காரியங்களை தொடங்கி வைக்க வேண்டும் என்றால், அதற்கு முதலில் நாம் கைராசிகாரர்களின் கைகளால் தொடங்கி வைக்க வேண்டும் என்று விரும்புவோம். பொதுவாக பிள்ளைகளின் எதிர்காலம் நன்றாக இருக்க, பெற்றோர்களின் கைகளால் எதை வாங்கினாலும் விருத்தியடையும். ஆனால் மற்றவர்களின் கைகளால் நல்ல காரியம் தொடங்க வேண்டும் என்றால், அவர்கள் கைராசிகாரர்களாக இருக்க வேண்டும் என்று சிலர் விரும்புவார்கள். கை இராசி என்பது உண்மையா? அல்லது அவரவர்களின் தலையெழுத்தபடிதான் அமையுமா? என்றால், தலையெழுத்து நன்றாக இருந்தால்தான் […]