லண்டன், இந்திய வம்சாவளியை சேர்ந்த தம்பதியினர் இங்கிலாந்தின் வயதான தம்பதியாக உள்ளனர். அவர்கள் இரண்டு பேரும் 100 வயதை தாண்டி உள்ளனர். அவர்கள் இந்த வாரம் தங்களது 88வது திருமண நாளை கொண்டாட உள்ளனர். கார்தாரி (101) அவரது கணவர் கராம் சந்த் (108) பிராட்போர்டு நகரில் வசித்து வருகின்றனர். அவர்களது மகன் பால் சந்த் அந்நகரத்தில் காஸ்டல் பப் ஒன்றை நடத்திவருகிறார். அவர்களுக்கு இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சி நடைபெற்ற போது 1925ம் ஆண்டு டிசம்பர் மாதம் […]
மதுரை தியாகராஜர் கலைக்கல்லூரியில் தமிழிசை ஆய்வு மையம் தொடங்கப்பட்டது. தொடங்கி வைக்க தொடக்க விழாவுக்கு வருகை தந்திருந்தார் இளையராஜா. தமிழிசை ஆராய்ச்சி மையம் ஆரம்பிக்க வேண்டும் என்பது இளையராஜாவின் நீண்ட நாள் கனவாகும். அதை தியாகாராஜர் கல்லூரியினர் ஓரளவு பூர்த்தி செய்துள்ளனர். கு.ஞான சம்பந்தன் தலைமை தாங்க, தமிழ் ஆராய்ச்சியாளர் தொ.பரமசிவன், திரைப்பட இயக்குனர் சுகா ஆகியோர் கலந்து கொண்ட விழாவில் ஆராய்ச்சி மையத்தைத் தொடங்கி வைத்துப் பேசினார். “இங்கே அதிக அளவில் ரசிகர்கள் கூடியிருப்பதன் காரணம் […]
சென்னை மனைவி வேலைக்கு சென்றது தொடர்பாக ஐ.ஏ.எஸ். அதிகாரிக்கு எதிராக தமிழக தலைமை செயலாளர் பிறப்பித்த குற்றச்சாட்டு குறிப்பாணையை சென்னை ஐகோர்ட்டு ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. சென்னை ஐகோர்ட்டில், ஐ.ஏ.எஸ். அதிகாரி உமா சங்கர் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:– மனைவிக்கு வேலை நான் 1990–ம் ஆண்டு ஐ.ஏ.எஸ். அதிகாரியாக பணியில் சேர்ந்து, பல்வேறு அரசு பதவிகளை வகித்துள்ளேன். எல்காட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராக 26–5–2008 முதல் 5–8–2008 வரை பதவி வகித்தேன். இதன் பின்னர், தமிழ்நாடு […]
சமீபத்தில் ஒரு விழாவில் பேசிய வைரமுத்து தமிழ்தான் பெரிது என்று உணர்வு பொங்கப் பேசினார். “என்னிடம் வரும் எல்லா இயக்குனர்களையும் நான் சமமாக மதிக்கிறேன். எல்லோருக்கும் பாரபட்சமின்றியே உழைக்கிறேன். பெரிய இயக்குனர்களுக்கு எப்படி உழைக்கிறேனோ அதே போலவே புதிய இயக்குனர்களுக்கும் உழைக்கிறேன்.(ஆனால் பாட்டுக்கள் மட்டும் ஏனோ வேறு வேறு குவாலிட்டியில் வந்துவிடுகின்றன. என்ன செய்வது ?) . இதில் பணம் பெரிதல்ல. தமிழ்தான் பெரிது. மணிரத்னம் ‘ராவணன்‘ படத்தை தமிழிலும் இந்தியிலும் ஒரே நேரத்தில் எடுத்தார். ஹிந்தியில் […]
தஞ்சாவூர் தஞ்சை பெரியகோவிலுக்கு ரூ.50 லட்சத்தில் புதிய தேர் செய்யும்பணி சிறப்பு பூஜைகளுடன் இன்று தொடங்கியது. 3 நிலைகளில் அமைக்கப்படும் இந்த தேரில் 231 சிற்பங்கள் பொருத்தப்படுகிறது. தஞ்சை பெரியகோவில் தஞ்சை பெரியகோவில் உலக பிரசித்தி பெற்ற கோவிலாகும். இது உலக பாரம்பரிய சின்னமாகவும் விளங்கி வருகிறது. இந்த கோவில் தஞ்சை அரண்மனை தேவஸ்தானத்துடன் இணைந்த கோவிலாகும். இந்த கோவிலுக்கு ரூ.50 லட்சம் செலவில் புதிய தேர் செய்யப்படும் என சட்டசபையில் முதல்–அமைச்சர் ஜெயலலிதா அறிவித்தார். அதைத்தொடர்ந்து […]
சொத்துக்குவிப்பு வழக்கு தொடர்பாக ஜெயலலிதாவிடமிருந்து கைப்பற்றப்பட்ட அசையும் சொத்துகளை டிசம்பர் 21-ம் தேதிக்குள் ஒப்படைக்குமாறு பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கு பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இதில் ஜெயலலிதாவிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட தங்க, வைர நகைகள் உள்ளிட்ட அசையும் சொத்துகளை ஒப்படைக்க வேண்டுமென்று திமுக எம்பி தாமரைச்செல்வன் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் ஜெயலலிதாவிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டு, சென்னை ரிசர்வ் […]
சிங்கப்பூர், டிச. 12– சிங்கப்பூரில் நடந்த பஸ் விபத்தில் புதுக்கோட்டை சத்திரம் கிராமத்தைச் சேர்ந்த குமாரவேல் பலியானார். இதைத் தொடர்ந்து சிங்கப்பூரில் லிட்டில் இந்தியா பகுதியில் கலவரம் ஏற்பட்டு போலீஸ் வாகனத்துக்கு தீ வைக்கப்பட்டது. பொதுச் சொத்துக்களுக்கும் சேதம் விளைவிக்கப்பட்டது. இதையடுத்து கலவரத்தில் ஈடுபட்டதாக தமிழர்களை சிங்கப்பூர் போலீசார் கைது செய்து கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து வருகிறார்கள். இதுவரை 27 தமிழர்கள் கைது செய்யப்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். இந்த நிலையில் இன்று மேலும் 5 தமிழர்கள் மீது […]