புதுடெல்லி, டிச. 19- மத்திய அரசு ஊழியர்களின் சம்பளத்தை திருத்தம் செய்வதற்காக 7-வது சம்பள கமிஷன் அமைப்பதற்கு பிரதமர் மன்மோகன் சிங் கடந்த செப்டம்பர் மாதம் ஒப்புதல் அளித்தார். எனினும் 7-வது சம்பள கமிஷன் அமைப்பதற்கு முறைப்படி திட்டம் தயாரிக்கப்பட்டு அமைச்சரவையின் ஒப்புதலுக்கு வைக்கப்படவில்லை. இந்நிலையில், 7-வது சம்பள கமிஷன் அமைப்பதற்கான திட்டம் இன்னும் ஓரிரு வாரங்களில் அமைச்சரவையில் தாக்கல் செய்யப்பட்டு பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று தெரிகிறது. இதற்காக மத்திய நிதியமைச்சகம் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. அமைச்சரவையின் […]
அஜித், தமன்னா, சந்தானம், வித்தார்த், அப்புக்குட்டி மற்றும் பலர் நடிக்க, சிவா இயக்கியிருக்கும் படம் ‘வீரம்’. விஜயா நிறுவனம் தயாரிக்க, தேவி ஸ்ரீபிரசாத் இசையமைத்து இருக்கிறார். இப்படம் பொங்கலை முன்னிட்டு ஜனவரி 10ம் தேதி திரைக்கு வரவிருக்கிறது. இப்படத்தின் இசை வெளியீடு நாளைதான் (20-12-2013) நடைபெற உள்ளது. ஆனால் அதற்கு முன்பாகவே படத்தின் பாடல்கள் இணையதளங்களில் திருட்டுத்தனமாக வெளியாகிவிட்டதாம். இது படக்குழுவினரை அதிர்ச்சியடைய செய்துள்ளது. இந்நிலையில் ‘வீரம்’ படத்தின் அதிகாரபூர்வமான இசை வெளியீடு நாளை ‘ரேடியோ மிர்ச்சி’ […]
புதுடெல்லி: அமெரிக்காவில் கைது செய்யப்பட்ட இந்திய துணை தூதர் தேவயானியை கவுரப்படுத்துவதற்காக, அவரை ஐ.நா. நிரந்தர பணிக்கு மத்திய அரசு மாற்றியுள்ளது. இதன் மூலம் அவருக்கு அமெரிக்க அரசின் முழுப் பாதுகாப்பு கிடைக்கும்.அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள இந்திய தூதரகத்தில் துணை தூதராக பணியாற்றும் ஐ.எப்.எஸ் அதிகாரி தேவயானி கோப்ரகடேவை(39), விசா விதிமுறை மீறல் குற்றச்சாட்டில் அமெரிக்க போலீசார் கைது செய்து மிகவும் மோசமாக நடத்தினர். இதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் உள்ள அமெரிக்க […]
ஒரு விதவைக்கு வழங்கப்பட வேண்டிய நஷ்ட ஈட்டை, அவர் மறுமணம் செய்து கொள்வதால் மறுக்க முடியாது என்று மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவில் கூறியுள்ளது. மும்பை உயர்நீதிமன்ற நீதிபதி தர்மாதிகாரி அளித்த உத்தரவில், ஒரு விபத்தில் கணவரை இழந்த மனைவிக்கு, நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்று சட்டம் சொல்கிறது. ஒருவரை திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து, குழந்தை பெற்ற நிலையில், கணவர் இறந்து விடுவதால், அந்த குழந்தையை வளர்க்க வேண்டிய கடமை அப்பெண்ணுக்கு ஏற்படுகிறது. அதனால், அவருக்கு […]
கிளிண்டன், டிச.19- அமெரிக்காவில், கடைகளில் திருடி வந்த ஒரு நாய் கைது செய்யப்பட்டது. தெற்கு கரோலினா மாநிலம் கிளிண்டனில் உள்ள ஒரு சூப்பர் மார்க்கெட்டில் இச்சம்பவம் நடைபெற்றது. அங்கு அடிக்கடி பொருட்கள் திருடுபோய் வந்தன. திருடனை கண்டுபிடிப்பதற்காக, கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை கடை ஊழியர்கள் ஆய்வு செய்தனர். அதில், குற்றவாளி ஒரு நாய் என அறிந்து ஆச்சரியம் அடைந்தனர். அந்த நாய், கதவு திறக்கும் வரை காத்திருப்பதும், கதவு திறந்தவுடன் உள்ளே நுழைந்து, நாய்களுக்கான உணவு […]
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் பணியாற்றும் இந்திய தூதர் தேவயானியை அமெரிக்க போலீசார் கைது செய்ததும், அத்து மீறி நடந்து கொண்ட விதமும் இந்தியாவில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க போலீஸ் நடவடிக்கைக்கு இந்தியா கண்டனம் தெரிவித்த பின்பு தேவயானி ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். அவர் நடந்த சம்பவம் பற்றி டெல்லியில் உள்ள வெளியுறவுத்துறை அலுவலகத்துக்கு இ.மெயிலில் உருக்கமான கடிதம் அனுப்பியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:– அமெரிக்க போலீசார் என்னை கைது செய்த போது தூதர் என்ற விதிமுறைகள் […]
மும்பை, இதய நோய் முற்றிலுமாக ஒழிக்கப்பட வேண்டும் என்று மும்பையில் நடந்த சினிமா விழாவில் சச்சின் தெண்டுல்கர் உருக்கமாக பேசினார். சினிமா விழா இந்தியில் திரிவேதி, உட்சாவ் போன்ற படங்களை இயக்கிய முன்னணி இயக்குனர் சேகர் சுமனின் மகன் இதய நோயால் மரணம் அடைந்தார். இதை மையமாக வைத்து சேகர் சுமன் இயக்கத்தில் உருவாகியுள்ள படமே ‘ஹாட்லெஸ்’. இந்த திரைப்படம் பிப்ரவரி மாதம் திரைக்கு வருகிறது. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா மும்பை பிரபாதேவியில் உள்ள […]
புதுடெல்லி: அமெரிக்காவில் இந்திய துணைத் தூதர் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அமெரிக்க தூதரகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.அமெரிக்காவில் இந்திய துணை தூதராக உள்ள தேவயானி கோப்ரகடேவை கடந்த வாரம் விசா மோசடி குற்றச்சாட்டுக்காக அமெரிக்க போலீசார் கைது செய்து, ஆடையை கலைத்து சோதனையும் நடத்தினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த மத்திய அரசு, பாதுகாப்பு, சலுகைகள் பெறுவதற்காக இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதரக அதிகாரிகளுக்கு வழங்கப்பட்ட அடையாள அட்டைகளை பறிமுதல் செய்தது. டெல்லியில் அமெரிக்க தூதரகம் […]