Stories written by bhakthiplanet.com
வெலிங்டன், ஜன.31- உலகில் மிக அபூர்வமாக தென்படும் அரியவகை ‘கண்ணாடி மீன்’ நியூசிலாந்தை சேர்ந்த ஒரு மீனவரின் வலையில் சிக்கியுள்ளது. நியூசிலாந்தின் வடபகுதியில் உள்ள கரிகரி வளைகுடா பகுதியில் அந்நாட்டை சேர்ந்த ஃப்ரேஸர் என்பவர் தனது மகன்களுடன் மீன் பிடித்து கொண்டிருந்தார். அப்போது கடல் நீரின் மேற்பரப்பில் கண்ணாடி போன்ற பளபளப்பான ஏதோ ஒரு அழகிய பொருள் நெளிந்து, நெளிந்து செல்வதை கண்டு வியப்படைந்த அவர், தனது கைவலையை லாவகமாக வீசி அந்த அபூர்வ மீனை சிறைபிடித்தார். […]
சௌதி அரேபியாவில், தனது கணவருக்கு பிடித்த ஹாலிவுட் நடிகை கிம் கர்தாஷியான் போல மாற நினைத்து ஹேர் ஸ்டைலை மாற்றி, முகத்தை பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்ட மனைவியை, கணவர் விவகாரத்து செய்திருப்பது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. நடிகை மீது வெறியாக இருந்த கணவரின் கவனத்தை தன் மீது திருப்ப, நடிகை போலவே, சிகை அலங்காரத்தை மாற்றிக் கொண்டு, முகத்தையும் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டார் மனைவி. இதனால், கணவர் தன் மீது அன்பு செலுத்துவார் என்று […]
உயர்நீதிமன்றங்களில் உள்ள தற்போதைய நீதிபதிகளின் எண்ணிக்கையில் 25 சதவீதம் உயர்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் டெல்லியில் நடைபெற்ற நீதிபதிகள் மாநாட்டில், அனைத்து மாநில உயர்நீதிமன்றங்களிலும், ஏராளமான வழக்குகள் பல ஆண்டுகளாக தேங்கி இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்குகளை முடித்து வைக்க நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்று கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. அதன்படி, உயர்நீதிமன்றங்களின் தற்போதையை நீதிபதிகளின் எண்ணிக்கையில் 25 சதவீதம் உயர்த்துவது என்று மத்திய சட்டத்துறை அமைச்சகம் முடிவு […]
புதுடெல்லி, ஜன. 31 பத்ம விருதுகள் பெறுபவர்கள் பட்டியலை சமீபத்தில் மத்திய அரசு வெளியிட்டது. அதில் மறைந்த நீதிபதி வர்மாவுக்கு மிக உயரிய விருதான பத்மபூஷண் விருது கொடுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. நீதிபதி வர்மா குடும்பத்தினர் தற்போது பத்ம பூஷண் விருதை ஏற்க மறுப்பு தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு நீதிபதி வர்மாவின் மனைவி புஷ்பா கடிதம் எழுதி அனுப்பியுள்ளார். அதில் அவர், ‘‘என் கணவர் வர்மா எந்த பரிசையும் விருதையும் ஏற்காதவர். சிறந்த நீதிபதி […]
பெர்லின், ஜன. 31- உலகையே ஆட்டிப்படைக்க நினைத்த சர்வாதிகாரி ஹிட்லரின் பேராசையின் விளைவாக 1-9-1939 அன்று தொடங்கிய இரண்டாம் உலகப்போர் 6 ஆண்டு காலம் நீடித்து 2-9-1945 அன்று முடிவுக்கு வந்தது. இந்த போரின் போது பயன்படுத்தப்பட்ட சக்தி வாய்ந்த வெடி குண்டுகள் ஜெர்மனியின் பல பகுதிகளில் புதைந்து கிடப்பதாக 50 ஆண்டுகளுக்கும் மேலாக ஜெர்மனி மக்களிடையே பீதி நிலவி வருகிறது. இந்நிலையில், மேற்கு ஜெர்மனியின் யூனி-சென்டர் அருகே புதிய கட்டுமான பணிகளுக்கான வேலை நடைபெற்று வந்தது. […]
ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகளை 2 ஆண்டுகள் பணிக்கு பின்னரே இடமாற்றம் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு மத்திய அரசு அரசாணையை வெளியிட்டுள்ளது. ஹரியானா மாநிலத்தின் ஐஏஸ் அதிகாரி அசோக் கெம்கா, உத்திரபிரதேச மாநில ஐஏஎஸ் அதிகாரி துர்கா நாக்பால் ஆகியோர் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரமணாக, பணி இடமாற்றம் செய்யப்பட்டதாக புகார்கள் எழுந்தது. இது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில், அதிகாரிகள் அடிக்கடி இடமாற்றம் செய்யப்படுவதை தடுக்க சட்டம் கொண்டுவர வேண்டும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த நிலையில், ஐ.ஏ.எஸ், […]
வனத்துறையில் உயர் அதிகாரிகளை நேரடியாக தேர்வு செய்வதற்கான IFS தேர்வில் தமிழகத்தை சேர்ந்த 15 பேர் வெற்றிபெற்றிருக்கிறார்கள்..அதிலும் திண்டுக்கல்லை சேர்ந்த கவுதம் அகில இந்திய அளவில் 3 ஆம் இடத்தை பிடித்து தமிழகத்திற்கு பெருமை சேர்த்திருக்கிறார்கள். வனத்துறைக்கு வளம்சேர்க்கப்போகும் அவர்களை வாழ்த்தி தமிழகத்தில் இருந்து ஐஎஃப்எஸ் அதிகாரிகளாக பணியேற்கப்போகும் 15 பேரில் நால்வரை நேர்கண்டு வந்திருக்கிறார் செய்தியாளர் ராம்குமார் ஜோதிட கட்டுரை படிக்க கிளிக் செய்யவும் வாஸ்து கட்டுரை படிக்க கிளிக் செய்யவும் IFS தேர்வில் தமிழகத்தை […]
நஸ்ரியாவுக்கும் பிரபல மலையாள டைரக்டர் பாசிலின் மகனும், நடிகருமான பகத் பாசிலுக்கும் காதல் மலர்ந்தது. மலையாள படமொன்றில் நடித்த போது இருவருக்கும் நெருக்கம் ஏற்பட்டு, காதல் வயப்பட்டார்கள். இதனை இரு வீட்டு பெற்றோரும் ஏற்றுக் கொண்டார்கள். திருமண ஏற்பாடுகள் தடபுடலாக துவங்கியுள்ளது. நஸ்ரியாவின் வீடு திருவனந்தபுரத்தில் உள்ளது. எனவே அங்கேயே திருமண நிச்சயதார்த்தத்தை நடத்துகின்றனர். இது குறித்து நஸ்ரியாவின் தந்தை கூறியதாவது:– நஸ்ரியா–பகத் பாசிலின் திருமண நிச்சயதார்த்தத்தை அடுத்த மாதம் நடத்த முடிவு செய்துள்ளோம். இது முழுக்க […]
மாட்டு வண்டிகளில் மணல் அள்ள தடை எதுவும் இல்லை என்று நிதி மற்றும் பொதுப்பணித் துறை அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்தார். சட்டப்பேரவையில் வெள்ளிக்கிழமை தொடங்கிய ஆளுநர் உரை மீதான விவாதத்தில் பேசிய, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் எஸ். குணசேகரன் (சிவகங்கை), மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் கே. பாலகிருஷ்ணன் (சிதம்பரம்) ஆகியோர், மாட்டு வண்டிகளில் மணல் அள்ள அனுமதி இல்லாததால் சாதாரண மக்கள் வீடுகட்ட முடியவில்லை. மணல் தட்டுப்பாட்டால் கட்டுமானப் பணிகள் முடங்கியுள்ளன என்று […]
நெய்வேலி, ஜன.31– என்.எல்.சி. நிர்வாகம் விடுத்துள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:– என்.எல்.சி. சுரங்க பகுதிகளில் சில தொழிலாளர்கள் மது அருந்திவிட்டு குடிபோதையில் பிரச்சினையில் ஈடுபடுவதாக தெரியவந்துள்ளது. இது பணியிடத்து ஒழுக்கத்தையும், சூழ்நிலையையும் கெடுக்கும் விதமாக அமைகிறது. என்.எல்.சி.யின் நிலை ஆணை விதியின்படி, பணியிடத்தில் மது அருந்துதல், அமைதி குலைவு ஒழுங்கின்மையாக நடத்தல் குற்றமாகும். தொழிலாளர்கள் குடிபோதையில் பணிக்கு வந்து தங்களுக்கும், சக தொழிலாளர்களுக்கும், எந்திரங்களுக்கும் பாதுகாப்பு இன்மையை ஏற்படுத்தி வருகின்றனர். எனவே இதுபோன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் என்று […]