சோனி நிறுவனம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் 1.08 மில்லின் டாலர் கணினி விற்பனையில் நஷ்டம் ஏற்பட்டுளளதாகவும். இதன்காரணமாக 5000 பணியாட்களை குறைக்கவுள்ளதாகவும் எச்சரித்துள்ளது. ஜோதிட கட்டுரை படிக்க கிளிக் செய்யவும் வாஸ்து கட்டுரை படிக்க கிளிக் செய்யவும் ஆன்மிக பரிகாரங்கள் படிக்க கிளிக் செய்யவும் For Astrology Consultation Contact: Astrologer, Sri Durga Devi upasakar, V.G.Krishnarau. Phone Number: 98411 64648, Chennai, Tamilnadu, India For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com […]
மும்பை:மும்பை கடற்கரையில் ரூ. 100 கோடி செலவில் சத்ரபதி சிவாஜிக்கு சிலை அமைக்கப்படும் என மகாராஷ்டிர முதல்வர் பிரிதிவிராஜ் சவான் அறிவித்துள்ளார்.இரும்பு மனிதர் என போற்றப்படும் இந்தியாவின் முதல் உள்துறை அமைச்சர் வல்லபாய் பட்டேலுக்கு அவரது சொந்த மாநிலமான குஜராத்தில் ரூ. 2500 கோடி செலவில் 182 அடி உயர சிலை அமைக்க மாநில முதல்வர் நரேந்திரமோடி திட்டமிட்டுள்ளார். அமெரிக்காவின் சுதந்திரா தேவி சிலையின் உயரத்தை விட இரண்டு மடங்கு உயரத்தில் அமைக்கப்படும் இந்த சிலை உலகிலேயே […]
48 மணி நேரத்தில் பெயரை மாற்றாவிடில் சட்டப்படி எடுக்கப்படும் நடவடிக்கைக்கு தயாராகிக் கொள்ளுங்கள் என ஹாலிவுட் தயாரிப்பு நிறுவனம் மிரட்டல் விடுத்துள்ளது. பாபா ஃபிலிம்ஸும், ஈராஸ் என்டர்டெய்ன்மெண்டும் இணைந்து பிரபுதேவா இயக்கும் படத்தை தயாரித்து வருகின்றன. படத்துக்கு ஆக்ஷன் ஜாக்சன் என பெயர் வைத்தனர். அஜய் தேவ்கான், சோனாக்ஷிசின்கா நடித்துள்ளனர். ஜுன் 6 ஆம் தேதி படம் வெளியாக உள்ளது. இந்தப் பெயர் – ஆக்ஷன் ஜாக்சன் – நாங்கள் 1988 ல் எடுத்த ஹாலிவுட் படத்தின் […]
மும்பை, பிப். 5- மகாராஷ்டிர மாநிலத்தில், பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் உள்ள மக்கள் பயன்பெறும் வகையில் ‘குறைந்த விலை வீடுகள்’ என்ற திட்டத்தின் கீழ் போவாய் பகுதியில் ரூ.54 ஆயிரத்துக்கு வீடு வழங்க உள்ளதாக தகவல் பரவியது. இதுதொடர்பான விண்ணப்ப படிவங்களும் விற்பனை செய்யப்பட்டன. இதனால் தங்கள் சொந்த வீடு கனவு நிறைவேற இந்த திட்டம் உதவும் என்ற ஆசையில் நேற்று மும்பை மற்றும் அருகில் உள்ள பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான மக்கள் விண்ணப்பங்களுடன் முதல்வரின் அலுவலகமான […]
மாஸ்கோ, பிப். 5- ரஷ்யாவின் சோச்சி நகரில் வரும் 7-ம் தேதி முதல் 23-ம் தேதி வரை குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற உள்ளன. இதையொட்டி, முதன்முதலில் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் தொடங்கிய புராதனமான கிரீஸ் நாட்டின் ஏதென்ஸ் நகரில் ஏற்றப்பட்ட ஒலிம்பிக் ஜோதி சென்ற ஆண்டு ரஷ்யா வந்தடைந்தது. ரஷ்யாவின் அனைத்துப் பகுதிகளையும் சென்று வந்து கொண்டிருக்கும் இந்த ஜோதியின் தொடர் ஓட்டத்தினை ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் கடந்த அக்டோபர் மாதம் 6-ம் […]
மதுரை,பிப்.5 – கோலி சோடா சினிமாவில் நடித்த நடிகர்கள் மதுரை ரசிகர்கள் முன் தோன்றினர். கடந்த வாரம் வெளிவந்த கோலி சோடா திரைப்படம் தமிழகம் எங்கும் தியேட்டர்களில் திரையிடப்பட்டு வெற்றிகரமாக ஓடிக்கொண்டியிருக்கிறது. மதுரை வட்டாரத்தில் 28 தியேட்டர்களில் கோலி சோடா ரிலீஸ் செய்யப்பட்டு வெற்றிகரமாக ஓடிக்கொண்டியிருக்கிறது. இந்தநிலையில் இந்த படத்தின் இயக்குநர் விஜய் மில்டன் நடிகர்கள் கிஷோர், குட்டமணி, பாண்டி, ஸ்ரீராம்,கதாநாயகி சாந்தினி, நடிகைகள் சுஜாதா, சேத்தி, இசையமைப்பாளர் அருணகிரி, ஸ்டண்ட் மாஸ்டர் சுப்ரீம் சுந்தர் உள்ளிட்ட […]
சென்னை, பிப். 5– பிரதமர் மன்மோகன் சிங்குக்கு முதல்–அமைச்சர் ஜெயலலிதா ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:– ‘‘பாரம்பரியம் மிக்க பாக் ஜலசந்தி பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 57 பேரை இரு வேறு சம்பவங்களில் அவர்களது 11 படகுகளுடன் இலங்கை கடற்படை கைது செய்தது. இது குறித்து தங்களுக்கு கடந்த ஜனவரி 30–ந் தேதியும், கடந்த 3–ந் தேதியும் கடிதங்கள் எழுதியிருந்தேன். கடந்த ஜனவரி 27–ந் தேதி சென்னையில் மீனவர்கள் மட்டத்தில் […]
நியூயார்க், பிப்.5- இத்தாலி நாட்டின் பிரபல உணவு வகைகளில் ஒன்றான ‘பிட்ஸா’ உலகின் பல நாடுகளில் வாழும் மக்களின் மிகவும் விருப்பமான உணவுகளின் பட்டியலில் சிறப்பிடம் வகித்து வருகிறது. இரண்டு ரொட்டிகளுக்கு இடையே பச்சை வெங்காயம், தக்காளி, குடை மிளகாய், வெள்ளரிக்காய், அரை வேக்காட்டு உருளைக்கிழங்குடன் சிறிதளவு பாலாடைக்கட்டி வைத்து விற்கப்படும் சைவ பிட்ஸாவும், உள்புறத்தில் காய்கறிகளுக்கு பதிலாக மாடு, ஆடு, கோழி இறைச்சி வகைகளை அடைத்து விற்கப்படும் அசைவ பிட்ஸாவும் உலகம் முழுவதும் பரவலாக விற்கப்படுகின்றன. […]
சென்னை, பிப். 5– பாராளுமன்றத்துக்கு வருகிற மே மாதம் தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி அரசியல் கட்சிகள் கூட்டணி பேச்சு வார்த்தை மற்றும் தொகுதி பங்கீடு பற்றிய பேச்சு வார்த்தையை தீவிரப்படுத்தி உள்ளன. தமிழ்நாட்டில் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்டு மற்றும் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சிகள் இடம் பெற்றுள்ளன. இந்த கட்சிகளின் தலைவர்கள் சமீபத்தில் முதல்–அமைச்சர் ஜெயலலிதாவை சந்தித்து பேசினார்கள். அப்போது தங்களுக்கு தலா 3 தொகுதிகள் வேண்டும் என்று இடதுசாரி கட்சிகள் கோரிக்கை விடுத்ததாக […]
சென்னை, பிப்.1-_ முதல்_அமைச்சர் ஜெயலலிதா அங்கன் வாடி கட்டிடங்களை புதுப்பிக்க ரூ.96.31 கோடி நிதியை ஒதுக்கி தந்துள்ளார் என்று சட்டசபையில் அமைச்சர் பா.வளர்மதிதெரிவித்தார். பல்லடம் தொகுதியில் உள்ள வலையப்பாளையம் மற்றும் அகிலாண்டபுரத்தில் உள்ள அங்கன்வாடி கட்டிடங்கள் பழுதடைந்ததால் அவை சமுதாய கூடத்தில் செயல்பட்டு வருகின்றன. புதிய கட்டிடம் கட்ட அரசு ஆவண செய்யுமா? என்று பல்லடம் தொகுதி எம்.எல்.ஏ கே.பி.பரமசிவம் கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்து அமைச்சர் பா.வளர்மதி கூறியதாவது:_ அங்கன்வாடி மையங்களுக்கு தேவைப்படும் புதிய […]