Stories written by bhakthiplanet.com
வாஷிங்டன், மார்ச். 1– ரஷியா அருகேயுள்ள உக்ரைனில் அதிபர் விக்டர் யனுகோவிச்சுக்கு எதிராக பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். எனவே, அவர் பதவியில் இருந்து விலகி தப்பி ஓடி விட்டார். தற்போது அங்கு இடைக்கால அரசு செயல்பட்டு வருகிறது. விக்டர் யனுகோவிச் ரஷியாவின் தீவிர ஆதரவாளர் ஆவார். எனவே, அவருக்கு அடைக்கலம் தர ரஷிய அதிபர் புதின் சம் மதித்து விட்டார். மேலும், உக்ரைனில் தன்னாட்சி உரிமை பெற்ற கிரிமியா தீபகற்பத்தின் தலைநகர் சிம்பெரோ போவில் உள்ள பாராளுமன்ற […]
புதுடெல்லி, மார்ச். 1– காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி நாடு முழுவதும் தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார். வேட்பாளர்களை தேர்வு செய்வது தொடர்பாக அவர் காங்கிரஸ் நிர்வாகிகள், தொண்டர்களிடம் கருத்துக்களை அறிந்து வருகிறார். கடந்த 26–ந்தேதி ராகுல் காந்தி அசாம் மாநிலம் சென்றார். ஜோர்கட் என்ற இடத்தில் அவர் மகளிர் அமைப்பைச் சேர்ந்தவர்களிடம் ஆலோசனை செய்தார். இதில் 600 பெண்கள் கலந்து கொண்டனர். அவர்களிடம் ராகுல்காந்தி கருத்துக்களை கேட்டார். அப்போது காங்கிரஸ் பெண் கவுன்சிலர் போன்டி ராகுல்காந்தியை […]
புதுச்சேரி, மார்ச்.1– புதுவை முதல்–அமைச்சர் ரங்கசாமி இன்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியின்போது கூறியதாவது:– புதுவை பொதுப்பணி துறையில் பணி நீக்கப்பட்ட 1311 பேருக்கு வருகிற 3–ந் தேதி மீண்டும் பணி வழங்கப்படுகிறது. அவர்களுக்கு நாளொன்றுக்கு ரூ.137 சம்பளமாக வழங்கப்படும். பொதுப்பணிதுறையில் பணி புரிந்து இறந்த ஊழியர்களின் வாரிசுகள் 150 பேருக்கு ‘கேஷுவல் லேபர்’ பணி வழங்கப்படும். கால்நடை மருத்துவ கல்லூரியில் பணி நீக்கப்பட்ட 109 பேர் 3–ந் தேதி மீண்டும் பணி நியமனம் செய்யப்படுகின்றனர். காரைக்காலில் சிறப்பு […]
காரகாஸ், தென் அமெரிக்காவில் அமைந்துள்ள வெனிசூலா நாட்டில் அதிபர் நிகோலஸ் மதுரோ ஆட்சிக்கு எதிராக போராட்டம் நடக்கிறது. காரகாஸ் உள்பட பல முக்கிய நகரங்களில் ஆயிரக்கணக்கானோர் வீதிகளில் திரண்டு ஆர்ப்பாட்டம் நடத்துகிறார்கள். இதனால் வாகன, லாரிகள் போக்குவரத்து முடக்கி விட்டன. இதன் விளைவாக பால், காய்கறிகள், சமையல் கியாஸ் உள்பட அத்தியாவசிய பொருட்களை கொண்டு செல்லும் பணி கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனால் அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு வணிக வளாகம், கடைகள் முன் பொதுமக்கள் வெகுநேரம் காத்துக்கிடக்கிறார்கள். […]
நடிகர் சிம்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ஹன்சிகாவுடனான தொடர்பை முறித்துக் கொண்டதாக அறிவித்துள்ளார். மேலும், ஹன்சிகாவுடனான காதலால் நிறைய கஷ்டங்களை அனுபவித்து விட்டேன். ஆகையால், தற்போது நான் யாரையும் காதலிக்கவில்லை. தனியாகத்தான் இருக்கிறேன் என்பதை இங்கே கூறிக்கொள்கிறேன். இதை ஆழ்ந்து யோசித்து முடிவு செய்துள்ளேன். இனிமேல், ஹன்சிகாவுக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை. ஹன்சிகா எனது கடந்த காலம். எந்த கட்டாயத்தினால் இந்த முடிவை எடுத்தேன் என்பதை இங்கே நான் கூறமுடியாது. இந்த அறிக்கையை என்னுடைய […]
சென்னை, பிப்.26- சென்னை மீனம்பாக்கம் உள்நாட்டு விமான நிலையத்தில் இன்று பகல் எதிர்பாராத வகையில் தீ விபத்து ஏற்பட்டது. பறக்கும் விமானங்களின் மீது விமான நிலைய ஓடுபாதையை வட்டமிடும் கழுகு போன்ற பெரிய பறவைகள் மோதி விடாமல் இருக்க வெடிகளை கொளுத்தி பறவைகளை விரட்டுவது வழக்கம். அவ்வகையில், இன்று பகல் வெடிகளை கொளுத்தி போட்ட போது அவற்றில் இருந்து பறந்த தீப்பொறி விமான நிலைய கட்டிடத்தின் ஒரு பகுதியில் பட்டதால் இந்த விபத்து ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். […]
கலிபோர்னியா: அமெரிக்காவில் நாயோடு வாக்கிங் சென்ற தம்பதிக்கு யோகம் அடித்தது. அங்கு மரத்தடியில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க நாணய புதையல் கிடைத்துள்ளது.கலிபோர்னியாவில் உள்ள தம்பதி தினமும் காலையில் தனது செல்ல நாயை அழைத்து கொண்டு வாக்கிங் செல்வது வழக்கம். கடந்த சில நாட்களுக்கு முன்பு அவ்வாறு சென்ற போது ஒரு மரத்தின் அடியில் உடைந்து போன இரும்பு டின் ஒன்றின் பகுதியை கண்டனர். இதனை கண்டு அவர்களுடைய செல்ல நாயும் குரைக்கவே, அதில் என்ன […]
சென்னை, ரஜினிகாந்த் தந்தை–மகனாக இரட்டை வேடங்களில் நடித்திருக்கும் புதிய படம், ‘கோச்சடையான்.’ இந்த படத்தை அவருடைய மகள் சவுந்தர்யா அஸ்வின் டைரக்டு செய்திருக்கிறார். கே.எஸ்.ரவிகுமார் டைரக்ஷன் மேற்பார்வை செய்துள்ளார். ரஜினிகாந்துடன், சரத்குமார், நாசர், ஆதி, இந்தி நடிகர் ஜாக்கி ஷராப், தீபிகா படுகோன், ஷோபனா, ருக்மணி மற்றும் பலரும் நடித்து இருக்கிறார்கள். படம், ‘மோஷன் கேப்சர்’ என்ற புதிய தொழில்நுட்பத்தில் பிரமாண்டமான முறையில் தயாராகி இருக்கிறது. இந்த படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா, சென்னை சத்யம் தியேட்டரில் […]
சென்னை, பிப். 26– சென்னையை அடுத்துள்ள கேளம்பாக்கம் சிறுசேரி சிப்காட் வளாகத்தில் பெண் என்ஜினீயர் உமா மகேஸ்வரி கொடூரமாக கற்பழித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கடந்த 13–ந் தேதி மாயமான உமா மகேஸ்வரி 9 நாட்கள் கழித்து சிறுசேரி சிப்காட் வளாகத்திலேயே பிணமாக மீட்கப்பட்டார். உள்ளூர் போலீசார் வசம் இருந்து வழக்கு விசாரணை சி.பி.சி.ஐ.டியிடம் ஒப்படைக்கப்பட்டது. உயர் போலீஸ் அதிகாரிகள் தலைமையில் 100–க்கும் மேற்பட்ட போலீசார் இரவு பகலாக சிறுசேரியில் முகாமிட்டு கொலையாளிகளை […]
சென்னை, பிப். 26– எண்ணூர் துறைமுகத்துக்கு காமராஜர் பெயர் சூட்டப்பட்டுள்ளது. இதற்காக மத்திய மந்திரி ஜி.கே.வாசனுக்கு பாராட்டு விழா இன்று நடந்தது. பாராட்டு விழாவுக்காக காங்கிரஸ் தரப்பில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன. அந்த போஸ்டரின் மீது நாம் தமிழர் கட்சியினர் சத்திய மூர்த்தி பவனை இன்று முற்றுகையிடப் போவதாக இன்று போஸ்டர் ஒட்டினார்கள். இதைப் பார்த்த காங்கிரஸ் தொண்டர்கள் ஆவேசமடைந்தனர். ராயப்பேட்டை விழாவில் திரண்டிருந்த காங்கிரஸ் தலைவர்களுக்கு இந்த தகவல் பறந்தது. இதையடுத்து தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன், […]