Monday 9th June 2025

தலைப்புச் செய்தி :

ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சி காண முடியாதவருக்கு ரூ. 50,000 இழப்பீடு வழங்க உத்தரவு | தமிழ்நாட்டிற்கு கல்வி நிதி: அவசர வழக்காக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு | இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷூ சுக்லா 10-ந்தேதி விண்வெளிக்கு பயணம்| கோடிகளுக்கு அதிபதி நீங்கள் | You Are a Multi Millionaire | கோடிகளை கொட்டும் 4 ஆம் இடம் | 4th Place That Gives Crores of Money | நீச்சம் பெற்ற கிரகம் வாரி வழங்கும் | Debilitated Planet Will Give lot of Wealth and Prosperity | குடும்ப வாழ்க்கை பாதிக்கும் கிரக அமைப்பு | This Planetary Alignment Will Affect The Family Life |

2024 இந்த புத்தாண்டு எப்படி இருக்கும்?

Astrologer, Sri Durga Devi upasakar, G.Krishnarao Phone Number: 98411 64648

01/01/2024 ஆங்கில புத்தாண்டு கன்னி லக்கினத்தில் பிறக்கிறது. லக்கினத்தில் கேது அமர்ந்து, லக்கினத்திற்கு 4-இல் சூரியன், செவ்வாய் தனுசில் இணைந்து, கேதுவை 10-ஆம் பார்வையாக சூரியன் பார்க்கிறார். இதனால் தெய்வ பக்தி அதிகரிக்கும். கோயில் குளங்களில் பூஜை அதிகரிக்கும். செவ்வாய், இராகுவை பார்வை செய்வதால் விஷகாய்ச்சல் அதிகரிக்கும். இதை நான் ஆணித்தரமாக கூறுகிறேன். வெகு ஜாக்கிரத்தையாக இருக்க வேண்டும். இராகுவை செவ்வாய் பார்வை செய்வதால் நாட்டில் அரசியல் குழப்பங்கள் அதிகரிக்கும். ஒற்றுமை குறையும். அதுமட்டுமல்ல இந்திய அளவில் அரசியல் தலைவர்கள் சிலருக்கு உடல்நல பாதிப்பு உண்டாகும். தமிழ்நாட்டுக்குரிய கிரகமான செவ்வாயின் இல்லத்தில் சுக்கிரன் இருக்கும்வரையில் மழையின் பாதிப்பு இருக்கும். பொன் ஆபரணங்கள் விலை குறையும். ஐ.டி துறை பாதிப்பு ஏற்படும். ஜவுளி துறை எதிர்பார்த்த லாபம் தராது. ரியல்-எஸ்டேட் பின்னுக்கு தள்ளப்பட்டு விலை மள.மளவென்று குறையும்.

பொதுவாக உலக அளவில் பொருளாதாரத்தை குறிக்கும் குரு பகவான், செவ்வாய் இல்லத்தில் அமர்ந்து, சனியின் பார்வை பெறுவது நல்லதில்லை. ஆங்கில புத்தாண்டு பிறக்கும் பொழுது கேது திசை, குரு புக்தி நடப்பதால் நன்மைகள், தீமைகள் கலந்து வருமே தவிர பெரிய எதிர்பார்ப்பில் கனவு காண்பது நன்மை இல்லை. இஸ்லாமிய நாடுகளுக்கு பெருத்த சோதனை காலமாக யுத்தங்கள், பொருளாதார பாதிப்பு ஏற்படலாம். இருப்பினும் இஸ்லாமிய நாடுகளை குறிக்கும் கிரகமான இராகு, குரு இல்லத்தில் இருப்பதால் பிரச்னைகளை சந்தித்தாலும் மீண்டு வருவார்கள். இந்த புத்தாண்டில் சீனா வெகுவாக பொருளாதாரத்தில் பின் தள்ளும். அதுமட்டுமல்ல கொடிய வைரஸ் அங்கு பரவுவதோடு மற்ற நாடுகளுக்கும் பரவும். அமெரிக்காவை பொறுத்தவரை கிருத்திகை நட்சத்திரத்திற்குரிய அமெரிக்காவில் ஐ.டி பிரச்னை அதிகரிக்கும். பொருளாதரத்திலும் சற்று வீழ்ச்சி உண்டாகும். அந்நாட்டு தலைவருக்கு ஆரோக்கிய பிரச்னை உண்டாகும். இந்த புத்தாண்டு நன்மைகள் சற்று கொடுத்தாலும், வைரஸ் பாதிப்பு அதிகரிக்கும். ஆகவே எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.

பொதுவாக ஒரு குழந்தை பிறக்கும் பொழுதோ ஒரு வியபாரம் ஆரம்பிக்கும் பொழுதோ கேது திசை வந்தால், பெரும் பிரச்னை கொடுத்துதான் முன்னேற்றத்திற்கு வழி கொடுக்கும். அதுபோல இந்த புத்தாண்டு, கேது திசையில் பிறப்பதால் சற்று பிரச்னைக்கு நம்மை இழுத்து சென்றுதான் நன்மையை கொடுக்கும். ”கேது கெடுத்து கொடுப்பான்” என்பது ஜோதிட தத்துவம். ஆகவே நாம் பெரிய அளவில் வந்து விடுவோம் என்ற எண்ணத்தில் இருக்க வேண்டும். ஆனால் பெரிய அளவில் முதலீடு செய்து பிரச்னைக்குள் போக வேண்டாம் என்று கூறுகிறேன்.

இந்த புத்தாண்டு 8 இராசிகாரர்களுக்கு அள்ளி கொடுக்கும். மற்ற 4 இராசிகாரர்களுக்கு சற்று குறைவான பலன்களையே கொடுக்கும்.

விரிவான 2024 ஆங்கில புத்தாண்டு ராசி பலன்களை இங்கே கிளிக் செய்து படிக்கவும்.

 

 

 

 

 

 

 

 

 

 




ஜோதிட ஆலோசனைக்கு இங்கே பார்க்கவும்…

ஒரு பக்க ஜாதகம் ரூ.59/-க்கு பெற இங்கே பார்க்கவும்.

எங்கள் EBOOKS பெற இங்கே பார்க்கவும்.

Send your feedback to: editor[at]bhakthiplanet[dot]com

For Astrology Consultation Mail to: bhakthiplanet[at]gmail[dot]com

For Astrology Consultation Contact: Astrologer, Sri Durga Devi upasakar, G.Krishnarao Phone Number: 98411 64648, Chennai, Tamilnadu, India

நமது Twitter பக்கம்

https://www.youtube.com/bhakthiplanet

https://www.youtube.com/niranjanachannel

https://www.facebook.com/bhakthiplanet

For Astrology Consultation CLICK Here

© 2011-2023 bhakthiplanet.com  All Rights Reserved

Comments are closed

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2025. All Rights Reserved.| designed & developed by Green Site Tech
Translate »