Saturday 27th April 2024

தலைப்புச் செய்தி :

2024 ஆங்கில புத்தாண்டு இராசி பலன்கள்

Astrologer, Sri Durga Devi upasakar, G.Krishnarao Phone Number: 98411 64648

01/01/2024 ஆங்கில புத்தாண்டு கன்னி லக்கினத்தில் பிறக்கிறது. லக்கினத்தில் கேது அமர்ந்து, லக்கினத்திற்கு 4-இல் சூரியன், செவ்வாய் தனுசில் இணைந்து, கேதுவை 10-ஆம் பார்வையாக சூரியன் பார்க்கிறார். 2024 புத்தாண்டு பொது பலன்களை சில தினங்களுக்கு முன்பு வெளியிட்டு இருந்தன். அதனை படிக்காதவர்கள் இங்கே கிளிக் செய்து படிக்கவும்.

இப்பொழுது 12 இராசி அன்பர்களுக்கும் இந்த ஆங்கில புத்தாண்டு பலன் என்ன என்பதை இங்கே படித்து தெரிந்துக்கொள்வோம்.

மேஷ இராசி : இந்த ஆங்கில புத்தாண்டில் உங்கள் இராசியிலேயே குரு அமர்ந்து 5-ஆம் இடம், 7-ஆம் இடம், 9-ஆம் இடங்களை பார்வை செய்வதால் எதிர்பாரா தனம், திருமணம், சுப காரியங்கள் கொடுக்கும். சிலர் சொத்துக்கள் வாங்குவார்கள். குரு பார்வை குழந்தை பாக்கியத்தையும் கொடுக்கும் 6-இல் கேது இருப்பதால் உடல்நலனில் கவனம் தேவை.

ரிஷப இராசி : உங்கள் இராசிக்கு 4-ஆம் இடம், 6-ஆம் இடம், 8-ஆம் இடத்தை பார்வை செய்வதால் இந்த ஆங்கில புத்தாண்டு உயர்கல்வி, வீடு, மனை வாங்கும் யோகம் கொடுக்கும். வழக்கு இருந்தால் வெற்றி தரும். உடல்நலனில் பிரச்னைகள் தீரும். வெளிநாடு செல்லும் யோகத்தை உண்டாக்கும். 7-இல் புதன், சுக்கிரன் இருப்பதால் புதிய தொழில் அமையும்.

மிதுன இராசி : உங்கள் இராசிக்கும் 3-ஆம் இடம், 5-ஆம் இடம், 7-ஆம் இடத்தை குரு பார்வை செய்வதால் இந்த ஆங்கில புத்தாண்டில் மற்றவர்கள் புகழும்படி காரியத்தை சாதிப்பீர்கள். மனதைரியம் அதிகரிக்கும். பிள்ளைகளுக்கு திருணம் செய்ய வாய்ப்பு வரும். சிலருக்கு உத்தியோக உயர்வு உண்டாகும். நண்பர்களால், உடன் பிறந்தவர்களால் ஆதாயம் உண்டாகும். கூட்டு தொழில் அமையும்.

கடக இராசி : உங்கள் இராசிக்கு 2-ஆம் இடம், 4-ஆம் இடம், 6-ஆம் இடத்தை குரு பார்வை செய்வதால் இந்த ஆங்கில புத்தாண்டு பலனாக கைக்கு கை பணம் வந்தபடி இருக்கும். புதிய வாகனம் அல்லது வாகனம் புதுப்பிக்கும் காலம் இது. தடைப்பட்ட கல்வி தொடரும். விரோதிகள் சிதறி ஓடுவார்கள். சூழ்ச்சி முறியடிக்கப்படும். சூரியன் 6-இல் இருப்பதால் அரசாங்க ஆதரவு கிடைக்கும். 9-இல் இராகு செலவு பார்த்து செய்யவும்.

சிம்ம இராசி : இந்த ஆங்கில புத்தாண்டில் உங்கள் இராசிக்கு ஜென்ம ஸ்தானம், 3-ஆம் இடம், 5-ஆம் இடத்தை குரு பார்வை செய்வதால் மஹா தைரியம் உண்டாகும். எப்பேர்ப்பட்ட காரியத்தையும் சாதிப்பீர்கள். நோய் நொடி தீரும். வெற்றி, புகழ், கீர்த்தி உண்டாகும். பணவரவு அதிகரிக்கும். பிள்ளைகளுக்கு மேல் படிப்பு படிக்க வெளிநாடு செல்லும் வாய்ப்பு வரும்.

கன்னி இராசி : உங்கள் இராசிக்கு 12-ஆம் இடம், 2-ஆம் இடம், 4-ஆம் இடத்தை குரு பார்வை செய்வதால் இந்த ஆங்கில புத்தாண்டில் விரயங்கள் தவிர்க்கப்படும். தூரதேச பயணம் உண்டாகும். வேலை வாய்ப்பு வரும். உத்தியோகத்தில் இடமாற்றம் ஏற்படும். பெற்றோரால் தனலாபம் உண்டு. 7-இல் இராகு இருப்பதால் அதிகம் பேசுவதை தவிர்க்க வேண்டும். வீண் விவாதம் வேண்டாம்.

துலாம் இராசி : உங்கள் இராசிக்கு ஜென்மத்தையும், 3-ஆம் இடம், 11-ஆம் இடத்தையும் குரு பார்வை செய்வதால், இந்த ஆங்கில புத்தாண்டில் பொருள் சேர்க்கை உண்டு. உத்தியோகம் உயர்வோ இடமாற்றமோ ஏற்படும். தேவையில்லா செலவு கட்டுப்படுத்த வேண்டும். குடும்ப உறவில் சற்று கருத்து வேறுபாடு உண்டாகும். சிலருக்கு வெளிநாடு செல்லும் யோகம் உண்டு. முக்கியமாக 12-இல் கேது, உடல்நலனில் கவனம் தேவை.

விருச்சிகம் இராசி : உங்கள் இராசிக்கு 2-ஆம் இடம், 10-ஆம் இடம், 12-ஆம் இடத்தை குரு பார்வை செய்வதால் இந்த ஆங்கில புத்தாண்டில் இனி பணத்திற்கு பஞ்சம் இல்லை. குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். புதிய தொழிலோ, உத்தியோகமோ ஏற்படும். தெய்வ தரிசனம் உண்டாகும். தூர பயணம் ஏற்படும். விரயங்கள் தவிர்க்கவும். எதிர்த்து பேசுவதையும் தவிர்க்க வேண்டும். உடல்நலனில் கவனம் தேவை.

தனுசு இராசி : உங்கள் இராசிக்கு ஜென்மத்தை, 9-ஆம் இடம், 11-ஆம் இடத்தை குரு பார்வை செய்வதால் இத்தனை நாள் பீடித்த நோய் நொடி இந்த ஆங்கில புத்தாண்டில் இருந்து நீங்கும். மற்றவர்களின் உதவி கிடைக்கும். வீடு, மனை வாங்கும் யோகம் ஏற்படும். திருமண தடை நீங்கும். வெளிநாட்டு பயணம், வெளிநாட்டில் வியாபாரத் தொடர்பு ஏற்படும். புதிய நண்பர்களால் எதிர்பாரா உதவி கிடைக்கும்.

மகரம் இராசி : உங்கள் இராசிக்கு 8-ஆம் இடம், 10-ஆம் இடம், 12-ஆம் இடத்தை குரு பார்வை செய்வதால் இந்த ஆங்கில புத்தாண்டு முதல் நீங்களே ஆச்சரியப்படும்படி காரியம் வெற்றி அடையும். விரோதியும் நண்பனாவான். தடைப்பட்ட தொழில் துவங்கும். வழக்கு இருந்தால் வெற்றி உண்டு. தொழிலில் அமோக லாபம் வரும். பிள்ளைகளால் சில பிரச்னைகள் வரும். 2-இல் சனி பகவான் இருப்பதால் மிக,மிக ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

கும்பம் இராசி : உங்கள் இராசிக்கு 7-ஆம் இடம், 9-ஆம் இடம், 11-ஆம் இடங்களை குரு பார்வை செய்துக்கொண்டிருப்பதால் இந்த ஆங்கில புத்தாண்டு பலனாக, இதுவரை தடைப்பட்ட காரியங்கள் கைக்கூடும். வண்டி வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். வீடு, மனை அமையும். தெய்வ அனுகூலத்தால் தொட்டது துலங்கும். நண்பர்களால் ஆதாயம் கிடைக்கும். வெளிநாட்டில் வேலை வாய்ப்பு வரும். குடும்பத்தில் சுபகாரியம் நடக்கும்.

மீனம் இராசி : உங்கள் இராசிக்கு மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டிய காலகட்டம். 6-ஆம் இடம், 8-ஆம் இடம், 10-ஆம் இடங்களை குரு பார்வை செய்வதால் வழக்கு ஏதேனும் இருந்தால் தொய்வு ஏற்படும். அடுத்தவர் பேச்சில் விழ வேண்டாம். வீண் தகராறு செய்ய வேண்டாம். 7-இல் கேது இருப்பதால், பெண்களால் தொல்லை உண்டாகும். மற்றப்படி 2-இல் உள்ள குரு, பொறுமை இருந்தால் லாபம் தருவார். உத்தியோக உயர்வு, தனலாபம் இந்த ஆங்கில புத்தாண்டு பலனாக கிடைக்கும் எனலாம்.




ஜோதிட ஆலோசனைக்கு இங்கே பார்க்கவும்…

ஒரு பக்க ஜாதகம் ரூ.59/-க்கு பெற இங்கே பார்க்கவும்.

எங்கள் EBOOKS பெற இங்கே பார்க்கவும்.

Send your feedback to: editor@bhakthiplanet.com

For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com

For Astrology Consultation Contact: Astrologer, Sri Durga Devi upasakar, G.Krishnarao Phone Number: 98411 64648, Chennai, Tamilnadu, India

 

 

 

 

 

 

 

 

 

நமது Twitter பக்கம்

https://www.youtube.com/bhakthiplanet

https://www.youtube.com/niranjanachannel

https://www.facebook.com/bhakthiplanet

For Astrology Consultation CLICK Here

© 2011-2023 bhakthiplanet.com  All Rights Reserved

Posted by on Dec 9 2023. Filed under Bhakthi planet, Headlines, இராசி பலன்கள், கதம்பம், செய்திகள், ஜோதிடம், முதன்மை பக்கம். You can follow any responses to this entry through the RSS 2.0. Both comments and pings are currently closed.

Comments are closed

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2024. All Rights Reserved.| designed & developed by Green Site Tech