Saturday 18th May 2024

தலைப்புச் செய்தி :

Free Horoscope Question-Answer:- Send your horoscope question to editor@bhakthiplanet.com with "Free Question-Answer" to get your horoscope question answered for free. Only one Answer is free. For more than two queries refer to Payment Service. Free answer to your question will be available only in BhaktiPlanet Free Q&A section. Unable to get a reply to your personal e-mail. இலவச ஜாதக கேள்வி-பதில்:- உங்கள் ஜாதகம் தொடர்பான ஒரு கேள்விக்கான பதிலை இலவசமாக பெற editor@bhakthiplanet.com இ-மெயில் முகவரிக்கு உங்கள் ஜாதக கேள்வியை "இலவச கேள்வி-பதில்" என்று குறிப்பிட்டு அனுப்பவும். ஒரு பதில் மட்டுமே இலவசம். இரண்டுக்கும் மேற்பட்ட கேள்விகளுக்கு கட்டண சேவையை பார்க்கவும். உங்கள் கேள்விக்கான இலவச பதில், பக்திபிளானெட் இலவச கேள்வி பதில் பகுதியில் மட்டும் இடம் பெறும். உங்கள் தனிப்பட்ட இ-மெயிலில் பதில் பெற இயலாது. NEW VIDEOS IN OUR BHAKTHI PLANET YOUTUBE CHANNEL : இந்த பெண்ணுக்கு அமைந்த கணவன். | வாழ்க்கையை புரட்டிப்போடும் பித்ரு தோஷம்👻 தீர்வு என்ன💡 |

குரு பெயர்ச்சி குபேரனாக்குமா?

AstrologerSri Durga Devi upasakar, G Krishnarao.  Phone Number: 98411 64648

அன்பார்ந்த பக்தி பிளானெட் நேயர்களுக்கு வணக்கம். 12.04.2022 அன்று குரு பகவான் தன் சொந்த இல்லமான மீன இராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். இந்த குரு பெயர்ச்சி யாருக்கெல்லாம் சாதகமாக பலனை தருவார் என்றால், முக்கியமாக ஜாதகத்தில் குரு பலமாக அமர்ந்து திசை நடக்கும் காலம் அதியோக பலனை தருவார். சிலர், குரு பகவான் ஜென்மத்தில் வந்துவிட்டது வனவாசம்தான், 3-இல் வந்துவிட்டது தொட்டது துலங்காது, 8-இல் வந்துவிட்டது, அகப்பட்டவனுக்கு அஷ்டம குரு என்று இப்படி, குரு அமரும் இடத்தை வைத்து பலன் சொல்வார்கள் – பயம் காட்டுவார்கள்.

என் அனுபவப்படி குரு அமரும் இடத்தை விட, பார்வை படும் இடமே பலம் அடைகிறது. சரி, தற்காலம் குரு மீனத்தில் அமர்ந்து 5,7,9-ஆம் பார்வைகளாக கடகம், கன்னி, விருச்சிகத்தை பார்ப்பதால் திக்கு தெரியாமல் இருந்தவர்களுக்கு திசை தெரிய ஆரம்பிக்கும். இனி நற்காலம்தான்.

சரி, மீன இராசிக்கு ஜென்மத்தில், மேஷ இராசிக்கு 12-இல் குரு, சிம்மத்திற்கு 8-இல் குரு, துலா இராசிக்கு 6-இல் குரு வந்துவிட்டதே? மேற்படி இராசிகாரர்களின் கதி அதோ கதிதானா? இப்படி கூறுபவர்களும் உண்டு. என்னை பொருத்தவரை குரு பார்வைதான் முக்கியமாக பலன் தரும் என்பேன். மேஷத்திற்கு 12-இல் குரு இருந்தால் கடன்காரனாக ஊரைவிட்டே போய்விடுவானா? இல்லை, படுத்தபடுக்கையாகி விடுவானா?. பயம் வைப்பதில் பலர் கைதேர்ந்தவர்கள்.

12-ஆம் இட குரு சிறைக்கு தள்ளும், மரண பயம் கொடுக்கும், கண்டம் கொடுக்கும் என்பது வெறும் பிதற்றல்தான். அதை பெரியதாக எடுத்துக்கொள்ளாதீர்.

மேஷ இராசிக்கு 4-ஆம் இடம், 6-ஆம் இடம், 8-ஆம் இடங்களை குரு பார்வை செய்வதால் வீடு மாற்றம், உத்தியோக மாற்றம், கடன் பிரச்னைகளில் தீர்வு, ரோக நிவர்த்தி போன்றவற்றை தரும். பயம் இல்லை.




சிம்ம இராசிக்கு 2-ஆம் இடம், 4-ஆம் இடம், 12-ஆம் இடங்களை குரு பார்வை செய்வதால் வழக்கில் வெற்றி, தூர தேச பயணம், தனலாபம், குடும்ப பிரச்னைக்கு தீர்வு, உடல்நிலையில் முன்னேற்றம் தந்திடும்.

குரு பார்வை சிறப்பானது என்று எல்லா ஜோதிட நூல்களும் கூறும்போது இக்கருத்தைதான் எடுத்துக்கொள்ள வேண்டும். சரி, துலா இராசிக்கு 6-இல் குரு அமர்ந்து, 2-ஆம் இடம், 12-ஆம் இடம், 10-ஆம் இடங்களை பார்வை செய்யும்போது தொழில் விருத்தி, ஜீவன லாபம், கடன் நிவர்த்தி, வழக்கில் வெற்றி, குடும்பத்தில் அடிதடி நிலை மாறி, அமைதி பூங்காவாகும். உங்கள் பேச்சுக்கு மதிப்பு கிடைக்கும்.

ஆகவே, அன்பார்ந்த வாசகர்களே… இந்த குரு பெயர்ச்சி 6 இராசிகாரர்களை கோடீஸ்வரர்களாக்கு என்று சிலரும், இல்லை இல்லை 5 இராசிகாரர்களுக்குதான் அள்ளி தரும் என்று கூறுபர்கள் உண்டு.

குரு பகவான் என்னதான் அருமையான வீட்டில் அமர்ந்தாலும், அவர் பார்வையே Password போன்றது. அது இல்லாமல் உங்கள் வாழ்க்கை கணக்கை இயக்க முடியாது. ஆகையால், குரு பகவான் ஜென்ம இராசிக்கு வந்துவிட்டது என்றோ, 3-6-8-12-ஆம் இடங்களில் வந்துவிட்டது என்றோ பயம் வேண்டாம்.

உங்கள் ஜாதகத்தில் லக்கினம், 5, 9-ஆம் இடங்கள் நன்றாக இருந்தால் அஷ்டம குருவோ, அஷ்டம சனியோ உங்களை ஒன்றும் பாதிக்காது. ஸ்ரீதுர்காதேவி அருளால் எல்லோரும் எல்லா நலமும் பெற்றிட பிரார்த்தனை செய்கிறேன்.

அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள். நன்றி.

மேலும் வாஸ்து கட்டுரைகள் படிக்கவும்…

மேலும் ஆன்மிக கட்டுரைகள் படிக்கவும்…

ஜோதிட ஆலோசனைக்கு இங்கே பார்க்கவும்…

Send your feedback to: editor@bhakthiplanet.com

For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com

For Astrology Consultation Contact: Astrologer, Sri Durga Devi upasakar, G Krishnarao.  Phone Number: 98411 64648, Chennai, Tamilnadu, India

http://www.youtube.com/bhakthiplanet

https://www.youtube.com/niranjanachannel

http://www.facebook.com/bhakthiplanet

For Astrology Consultation CLICK Here

© 2011-2022 bhakthiplanet.com  All Rights Reserved

Comments are closed

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2024. All Rights Reserved.| designed & developed by Green Site Tech