Monday 20th May 2024

தலைப்புச் செய்தி :

Free Horoscope Question-Answer:- Send your horoscope question to editor@bhakthiplanet.com with "Free Question-Answer" to get your horoscope question answered for free. Only one Answer is free. For more than two queries refer to Payment Service. Free answer to your question will be available only in BhaktiPlanet Free Q&A section. Unable to get a reply to your personal e-mail. இலவச ஜாதக கேள்வி-பதில்:- உங்கள் ஜாதகம் தொடர்பான ஒரு கேள்விக்கான பதிலை இலவசமாக பெற editor@bhakthiplanet.com இ-மெயில் முகவரிக்கு உங்கள் ஜாதக கேள்வியை "இலவச கேள்வி-பதில்" என்று குறிப்பிட்டு அனுப்பவும். ஒரு பதில் மட்டுமே இலவசம். இரண்டுக்கும் மேற்பட்ட கேள்விகளுக்கு கட்டண சேவையை பார்க்கவும். உங்கள் கேள்விக்கான இலவச பதில், பக்திபிளானெட் இலவச கேள்வி பதில் பகுதியில் மட்டும் இடம் பெறும். உங்கள் தனிப்பட்ட இ-மெயிலில் பதில் பெற இயலாது. NEW VIDEOS IN OUR BHAKTHI PLANET YOUTUBE CHANNEL : இந்த பெண்ணுக்கு அமைந்த கணவன். | வாழ்க்கையை புரட்டிப்போடும் பித்ரு தோஷம்👻 தீர்வு என்ன💡 |

ஜுன் 17 முதல் ஆகஸ்ட் 12வரை எச்சரிக்கையாக இருக்க வேண்டும்

Sri Durga Devi upasakar, Krishnarau VG.

வணக்கம் அன்பர்களே…

ஸ்ரீதுர்காதேவியையும், ஸ்ரீவராகி அம்மனையும் வணங்கி இதை எழுதுகிறேன். நம் வாழ்க்கையில் இன்பமும், துன்பமும் வருவது இயற்கை. இப்பொழுது நாம் துன்பத்தின் வளையத்தில் இருக்கிறோம். எப்பொழுது விடுபடுவோம் என்றால், தற்காலம் கிரகநிலைபடி கேந்திரங்களில் அதாவது மீனத்தில் செவ்வாய் 17.06.2020 முதல் இருக்கிறது. அடுத்து மிதுனத்தில் இராகு, அடுத்து கன்னி இராசியை செவ்வாய் பார்வை, தனுசில் கேது-சனி.

ஆக- மீனத்திற்கு 4-ம் இடம் மிதுனம். மிதுனத்திற்கு 4-ம் இடம் கன்னி. கன்னிக்கு 4-ம் இடம் தனுசு. இப்படி 4-க்கு 4-ல் கேந்திரங்கள். இந்த நான்கு பக்கமும் கேட் போட்டாச்சு. அதாவது தொல்லைகள் உக்கிரமாகலாம். சரி, இதிலிருந்து எப்படி தப்பிப்பது? என்றால், அரசாங்கம் சொல்படி நடக்க வேண்டும். முக்கியமாக சமூக கட்டுப்பாடு தேவை. அடுத்து, ஆண்டவனை பிராத்னை செய்வது. அவனின்றி ஓர் அணுவும் அசையாது. நான் ஏற்கனவே, தற்போது கிரகநிலைகள் சாதகமாக இல்லை என்று பக்தி பிளானெட் இணையதளத்தில் பதிவு செய்தேன். தற்காலம் தாக்கம் சற்று கூடுதலாக இருக்கும். அதாவது செவ்வாய் மீனத்திற்கு வந்தவுடன், மீனத்தில் செவ்வாய் 17.06.2020 முதல் 12.8.2020வரை இருக்க வாய்ப்பு இருக்கிறது.

மீனத்தில் இருக்கும் செவ்வாய், மிதுனத்தில் இருக்கும் இராகுவை பார்வை செய்வதும், அதே இராகுவை தனுசில் இருக்கும் சனி 7-ம் பார்வையாக பார்வை செய்வதும் நல்லதல்ல.




உலகில் சில நாடுகளில் நெருப்பினால் விபத்து, மக்களின் கிளர்ச்சி, போராட்டம், வாகன விபத்து இப்படி பல சம்பவங்கள் நடக்க வாய்ப்பு உள்ளது. ஆகவே, எல்லாம் எனக்கு தெரியும் என்று இருக்காமல், நாம் நமது அரசாங்கத்தின் சொல்லுக்கு மதிப்பளித்து செயல்பட்டால் தப்பித்தோம். இல்லையெனில் ஏற்கனவே நாம் சிக்கி உள்ள வளையம், மேலும் இறுக்கிவிடும். ஆம், வைரஸ் சாதாரண வளையம் அல்ல. அது நம்மை ஒன்றும் செய்யாது என்று வரட்டு பிடிவாதத்தை சூறை தேங்காய் போல் உடைத்துவிட்டு, குடும்பத்தினரின் நலனை எண்ணி ஆண்டவனை பிராத்தனை செய்து அமைதியாக இருந்து, தேவையில்லாமல் ஊர் சுற்றாமல், வைரஸ் எனும் வளைத்தை அரசாங்க அறிவுரைபடியும், ஆண்டவனின் அனுகிரகத்தாலும் உடைத்து வெளி வருவோம். மறுபடியும் கூறுகிறேன். 17.06.2020 முதல் 12.08.2020வரை கவனம் தேவை.

மேலும் ஜோதிட கட்டுரைகள் படிக்கவும்…

மேலும் இராசி பலன்கள் படிக்கவும்…

மேலும் வாஸ்து கட்டுரைகள் படிக்கவும்…

மேலும் ஆன்மிக கட்டுரைகள் படிக்கவும்…

ஜோதிட ஆலோசனைக்கு இங்கே பார்க்கவும்…

Send your feedback to: editor@bhakthiplanet.com

For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com

For Astrology Consultation Contact: Astrologer, Sri Durga Devi upasakar, Krishnarau VG.  Phone Number: 98411 64648, Chennai, Tamilnadu, India

http://www.youtube.com/bhakthiplanet

https://www.youtube.com/niranjanachannel

http://www.facebook.com/bhakthiplanet

For Astrology Consultation CLICK Here

© 2011-2020 bhakthiplanet.com  All Rights Reserved

Posted by on Jun 9 2020. Filed under Astrology, Bhakthi planet, Headlines, கதம்பம், செய்திகள், ஜோதிட சிறப்பு கட்டுரைகள், ஜோதிடம், முதன்மை பக்கம். You can follow any responses to this entry through the RSS 2.0. Both comments and pings are currently closed.

Comments are closed

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2024. All Rights Reserved.| designed & developed by Green Site Tech