ஏழு மாதங்களுக்குள் 364 புத்தகங்களைப் படித்து முடித்த சிறுமி
இங்கிலாந்தை சேர்ந்த சிறுமி ஒருவர் 9 வயதில் ஏழு மாதங்களுக்குள் 364 புத்தகங்களை முழுமையாக படித்துள்ளார். இங்கிலாந்தின் ஆஷ்லே பகுதியில் வசித்து வரும் ஃபெயித் என்ற 9 வயது சிறுமி விதவிதமான புத்தகங்களை படிப்பதில் மிகுந்த ஆர்வம் காட்டிவருகிறார்.
இவர் இவருடைய வயதுடைய பிற குழந்தைகளை போல இல்லாமல் இந்த வயதிலேயே சுமார் 364 புத்தகங்களை படித்து முடித்துள்ளார்.
இது குறித்து அச்சிறுமி கூறுகையில், புத்தகம் படிப்பது கணினியில் வீடியோ கேம் விளையாடுவதை போல சுவாரஸ்யமானது, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நேரடியாகத் தெரிவதைவிட, புத்தகம் படிக்கும்போது தான் கற்பனையை உபயோகிக்க வேண்டியிருப்பது படிப்பதை மேலும் சுவாரஸ்யமாக்குகின்றது எனத் தெரிவித்துள்ளார்.
குழந்தைகளுக்கான ஹாரி பாட்டர் போன்ற புத்தகத்திலிருந்து பெரியவர்களுக்கான நாவல்கள் வரை அனைத்து வகை புத்தகத்தையும் படிக்கும் இச்சிறுமிக்கு புத்தகம் படிக்கும் வழக்கத்தை அவருடைய பள்ளி ஆசிரியர்கள் கற்றுக்கொடுத்துள்ளனர்.
ஃபெயித் ஏழு மாதங்களுக்குள் 364 புத்தகங்களைப் படித்து முடித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஃபெயித் படிப்பது மட்டுமில்லாமல், வாரத்தில் நான்கு முறை ஜிம்னாஸ்டிக்ஸ் வகுப்புகள், கராத்தே பயிற்சிகள் மற்றும் டிரம்ஸ் வாசிக்கக்கூட பழகிக் கொண்டிருப்பதாக தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
ஜோதிட கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்
வாஸ்து கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்
ஆன்மிக பரிகாரங்கள் படிக்க கிளிக் செய்யவும்
For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com
http://www.youtube.com/bhakthiplanet
http://www.youtube.com/niranjanachannel