ஹோட்டலில் குறைந்த விலைக்கு விற்கப்பட்ட மனித இறைச்சி
நைஜீரியாவில் உள்ள ஒரு ஹோட்டலில் மனித இறைச்சியை விற்பனை செய்த குற்றத்திற்காக 11 பேர் கைது செய்யப்பட்டுளளனர்.
நைஜீரியாவின் அனம்பிரா மாகாணத்தில் ஒஸ்-ஒக்வுடு பகுதி உள்ளது. அங்குள்ள ஹோட்டலில் மனித இறைச்சி விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
உடனே, அந்த ஹோட்டலுக்கு விரைந்த போலீசார் மேற்கொண்ட சோதனையில், அந்த ஹோட்டலில் 2 மனித தலைகள், 2 ஏ.கே.47 ரக துப்பாக்கிகள் மற்றும் ஆயுதங்களும் இருந்தன.
இது குறித்து ஹோட்டல் உரிமையாளர் மற்றும் ஊழியர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. பின்னர், 6 பெண்கள் உட்பட 11 பேரை கைது செய்த போலீசார் இவர்களுக்கு மனித இறைச்சி எங்கிருந்து கிடைத்தது என்பது குறித்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இச்சம்பவம் குறித்து கூறிய பொதுமக்கள், அந்த ஹோட்டலில் எப்போதும் மக்கள் அழுக்கான உடைகளையே அணிந்திருப்பார்கள், அவர்கள் அதிக அளவு இறைச்சியை மிக குறைந்த விலைக்கு விற்கும்போதே எங்களுக்கு சந்தேகம் இருந்தது எனத் தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜோதிட கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்
வாஸ்து கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்
ஆன்மிக பரிகாரங்கள் படிக்க கிளிக் செய்யவும்
For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com
http://www.youtube.com/bhakthiplanet
http://www.youtube.com/niranjanachannel