மும்பையில் ரூ.54 ஆயிரத்துக்கு சொந்த வீடா? முதல்வர் அலுவலகத்தில் குவிந்த மக்கள்
மும்பை, பிப். 5-
மகாராஷ்டிர மாநிலத்தில், பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் உள்ள மக்கள் பயன்பெறும் வகையில் ‘குறைந்த விலை வீடுகள்’ என்ற திட்டத்தின் கீழ் போவாய் பகுதியில் ரூ.54 ஆயிரத்துக்கு வீடு வழங்க உள்ளதாக தகவல் பரவியது. இதுதொடர்பான விண்ணப்ப படிவங்களும் விற்பனை செய்யப்பட்டன.
இதனால் தங்கள் சொந்த வீடு கனவு நிறைவேற இந்த திட்டம் உதவும் என்ற ஆசையில் நேற்று மும்பை மற்றும் அருகில் உள்ள பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான மக்கள் விண்ணப்பங்களுடன் முதல்வரின் அலுவலகமான மந்த்ராலயாவிற்கு படையெடுத்தனர்.
அங்கு சென்றபிறகுதான் அப்படி ஒரு திட்டமே அரசிடம் இல்லை என்று தெரிந்தது. இதனால் மக்கள் அதிருப்தியுடன் அங்கிருந்து சென்றனர்.
குறைந்த விலையில் வீடு கேட்டு நேற்று ஏராளமான விண்ணப்பங்கள் வந்திருப்பதை அறிந்த முதல்வர் பிருத்விராஜ் சவான், குறைந்த விலை வீட்டுவசதி திட்டம் எதுவும் அரசாங்கத்தால் அறிவிக்கப்படவில்லை என்றும், அது தொடர்பான விண்ணப்ப படிவங்கள் போலியானவை என்றும் விளக்கம் அளித்தார். இருப்பினும் விவரம் தெரியாத நூற்றுக்கணக்கான மக்கள் இன்றும் முதல்வரின் அலுவலகத்திற்கு வந்து ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
இதுபோன்ற போலியான தகவல்களை பரப்பியவர்கள் யார் என்பது பற்றி விசாரணை நடத்தப்படும் என்று முதல்வர் அலுவலக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
ஜோதிட கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்
வாஸ்து கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்
ஆன்மிக பரிகாரங்கள் படிக்க கிளிக் செய்யவும்
For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com
http://www.youtube.com/bhakthiplanet
http://www.youtube.com/niranjanachannel