Wednesday 27th November 2024

தலைப்புச் செய்தி :

கனமழை : புதுச்சேரி..காரைக்காலில் நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை *|

உலக செஸ் போட்டியின் 8-வது சுற்று டிராவில் முடிந்தது: நெருக்கடியில் விஸ்வநாதன் ஆனந்த்

சென்னை, நவ. 19-

greensiteசென்னையில் நடைபெற்று வரும் உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் நடப்பு சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்தும், நார்வேயின் மேக்னஸ் கார்ல்சனும் விளையாடி வருகின்றனர். மொத்தம் 12 சுற்றுகள் கொண்ட இப்போட்டியில் 7 சுற்றுகள் முடிவடைந்த நிலையில் கார்ல்சன் 4.5-2.5 என முன்னிலை பெற்றிருந்தார்.

இந்நிலையில், இருவருக்கிடையிலான 8-வது சுற்று ஆட்டம் இன்று நடைபெற்றது. இதில், விஸ்வநாதன் ஆனந்த் கறுப்பு காய்களுடனும், கார்ல்சன் வெள்ளை காய்களுடனும் ஆடினர். வெற்றி நெருக்கடியுடன் ஆடிய விஸ்வநாதன் ஆனந்த் கடுமையாகப் போராடி இந்த சுற்றை டிரா செய்தார். 33-வது நகர்த்தலில் டிரா செய்ய ஒப்புக்கொண்டதையடுத்து, இருவருக்கும் தலா அரை புள்ளி வழங்கப்பட்டது.

இதுவரை நடைபெற்ற 8 சுற்றுகள் முடிவில், கார்ல்சன் 5 புள்ளிகள் பெற்றுள்ளார். விஸ்வநாதன் ஆனந்த் 3 புள்ளிகளுடன் மிகவும் பின்தங்கியிருக்கிறார். எனவே, மீதமுள்ள 4 சுற்றுகளில் 3-ல் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் விஸ்வநாதன் ஆனந்த் உள்ளார். நாளை மறுநாள் 9-வது சுற்று ஆட்டம் நடக்கிறது.

ஜோதிட கட்டுரை படிக்க கிளிக் செய்யவும் 

வாஸ்து கட்டுரை படிக்க கிளிக் செய்யவும் 

ஆன்மிக பரிகாரங்கள் படிக்க கிளிக் செய்யவும் 

மருத்துவம் பகுதியை படிக்க கிளிக் செய்யவும் 

அறுசுவை சமையல் பகுதியை படிக்க கிளிக் செய்யவும் 

For Astrology Consultation Contact: Astrologer, Sri Durga Devi upasakar, V.G.Krishnarau.  Phone Number: 98411 64648, Chennai, Tamilnadu, India 

For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com

http://www.youtube.com/bhakthiplanet

Posted by on Nov 19 2013. Filed under Headlines, இந்தியா, செய்திகள், முதன்மை பக்கம். You can follow any responses to this entry through the RSS 2.0. Both comments and pings are currently closed.

Comments are closed

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2024. All Rights Reserved.| designed & developed by Green Site Tech