இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை மீட்க பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம்
இலங்கை சிறையில் வாடும் தமிழக மீனவர்கள் 86 பேர் மீட்பதற்கு பிரதமர் மன்மோகன் சிங் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதுதொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், பாக் நீரினை பகுதியில், மீன் பிடிக்கச் செல்லும் அப்பாவித் தமிழக மீனவர்களை, இலங்கை கடற்படை அத்துமீறி தாக்குதல் நடத்தி வருவதாக குறிப்பிட்டுள்ளார்.
கடந்த வாரம், ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரத்தில் இருந்து மீன் பிடிக்கச் சென்ற மீனவர்கள் 30 பேரும், அவர்களுக்குச் சொந்தமான 7 படகுகளும், இலங்கை கடற்படையால் சிறை பிடிக்கப் பட்டதையும், முதலமைச்சர் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
ஏற்கெனவே, தமிழக மீனவர்கள் 56 பேர் இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ளதையும், முதலமைச்சர் சுட்டிக் காட்டியுள்ளார்., எனவே, மொத்தமுள்ள 86 மீனவர்களை மீட்பதற்கும், அவர்களுக்குச் சொந்தமான 42 படகுகளையும் மீட்பதற்கு, பிரதமர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் முதலமைச்சர் ஜெயலலிதா வலியுறுத்தி உள்ளார்.
ஜோதிட கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்
வாஸ்து கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்
ஆன்மிக பரிகாரங்கள் படிக்க கிளிக் செய்யவும்
மருத்துவம் பகுதியை படிக்க கிளிக் செய்யவும்
அறுசுவை சமையல் பகுதியை படிக்க கிளிக் செய்யவும்
For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com
http://www.youtube.com/bhakthiplanet