Friday 22nd November 2024

தலைப்புச் செய்தி :

தமிழகத்தில் 5 நாட்கள் மழை பெய்ய வாய்ப்பு: வரும் 25-ம் தேதி 7 மாவட்டங்களில் கனமழை  *  மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை - மத்திய மந்திரிக்கு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் *

தாய்ப்பால்

குழந்தை நோயின்றி வாழ சத்துக்கள் நிரம்பிய, தாய்ப்பாலே ஏற்றது. அழகு குறையும் என்பதற்காக குழந்தைக்குப் பால் தர மறுத்தால் மார்பக புற்று நோய் வந்து உயிருக்கே ஆபத்து வந்தவிடும். முதல் குழந்தைக்கு பால் கொடுக்காவிட்டால், உபயோகப்படுத்தப்படாத மார்பகம் சுருங்கி அழகும் குறைந்து அடுத்த குழந்தைக்குப் பால் சுரப்பதும் குறைந்துவிடும். தாய்ப்பால் கொடுக்க ஆரம்பித்தால் தான்  கர்ப்பப்பை சுருங்கி வயிறு குறையும்.

ஒரு நாளைக்கு ஒரு லிட்டர் தாய்ப்பால் சுரக்கின்றது என்றால் தாயின் உடலிலிருந்து ஒரு லிட்டர் சத்துள்ள திரவம் வெளியேறுகின்றது அல்லவா. அப்படி தினமும் ஒரு லிட்டர் சத்துள்ள திரவத்தை உணவாகத் தரவேண்டுமல்லவா. அப்படி திரவ உணவு கொடுக்காத காரணங்களினால் தான் தாய்ப்பால் குறைகின்றது.

இயற்கை  உணவு உண்டால் தேவையான அளவிற்கு தாய்ப்பால் கிடைக்கும் என்பதில் சந்தேகமில்லை.

உலகிலேயே மிகச் சிறந்த உயிர்ச் சத்துள்ள திரவங்கள் கிடைக்குமிடம் புத்தம் புதிய பழங்களும் காய்கறிகளும் தான். இவற்றில் 80% க்கு மேல் தண்ணீர் தான் இருக்கின்றது. எல்லாவிதமான பழங்களையும் சாப்பிடலாம். திராட்சை, ஆரஞ்சு போன்ற பழங்களையும் சாப்பிடுவது கஷ்டமாக இருந்தால் சாறு பிழிந்தும் சாப்பிடலாம். தினமும் கேரட் சாப்பிடவேண்டும். முளைவிட்ட நிலக்கடலை கைப்பிடி, நான்கு முந்திரிப்பருப்பு, ஒரு டம்ளர் தண்ணிர் விட்டு மிக்ஸியில் அரைத்து துணியில் பிழிந்தால் ஒரு டம்ளர் நிலக்கடலைப் பால் கிடைக்கும். இதனுடன் தேன் கலந்து தினமும் ஒரு டம்ளர் குடிக்கலாம். இதனால் குழந்தைகளுக்கு பால் கொடுக்குமளவிற்கு பால் அதிகமாகச் சுரக்க ஆரம்பித்துவிடும்.

ஒரு தாய் இரண்டு வருடங்கள் வரை கட்டாயமாக தன் குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்க வேண்டும்.

ஜோதிட கட்டுரை படிக்க கிளிக் செய்யவும் 

வாஸ்து கட்டுரை படிக்க கிளிக் செய்யவும் 

ஆன்மிக பரிகாரங்கள் படிக்க கிளிக் செய்யவும் 

மருத்துவம் பகுதியை படிக்க கிளிக் செய்யவும் 

அறுசுவை சமையல் பகுதியை படிக்க கிளிக் செய்யவும் 

For Astrology Consultation Contact: Astrologer, Sri Durga Devi upasakar, V.G.Krishnarau.  Phone Number: 98411 64648, Chennai, Tamilnadu, India 

For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com

Posted by on Sep 30 2013. Filed under Headlines, மருத்துவம், முதன்மை பக்கம். You can follow any responses to this entry through the RSS 2.0. Both comments and pings are currently closed.

Comments are closed

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2024. All Rights Reserved.| designed & developed by Green Site Tech