Tuesday 24th December 2024

தலைப்புச் செய்தி :

குரு பெயர்ச்சி பலன்கள் 2021-2022

Astrologer, Sri Durga Devi upasakar, Krishnarau VG Phone Number: 98411 64648

மேஷம் – உங்கள் இராசிக்கு குரு பகவான் 13.11.2021 அன்று மகர இராசியில் இருந்து கும்ப இராசிக்கு அவிட்ட நட்சத்திரத்தில் பெயர்ச்சி பெற்றார். இராசிக்கு 11-இல் அமர்ந்த குரு, உங்கள் இராசிக்கு 3,5,7-ஆம் இடங்களை பார்வை செய்வதால், இத்தனை நாட்கள் இருந்த மந்த நிலை மாறி விறு,விறுப்புடன் செயல்பட துவங்குவீர்கள். புகழ் பெறும் செயல்களை செய்வீர்கள். பூர்வீக சொத்து வந்து சேரும். திருமண தடை நீங்கி சுபநிகழ்ச்சிகள் நடக்கும். பொதுவாக லாப குரு வாரி வழங்கும்.

ரிஷபம் – உங்கள் இராசிக்கு குரு பகவான் 13.11.2021 அன்று மகர இராசியில் இருந்து கும்ப இராசிக்கு அவிட்ட நட்சத்திரத்தில் பெயர்ச்சி பெற்றார். இராசிக்கு 10-இல் குரு இருப்பது பெரிய யோகம் என்பேன். 10-இல் குரு பதவி கெடுப்பார் என்பார்கள். குரு பகவான் இருக்கும் இடத்தை விட பார்வை படும் இடம் பாக்கியம் பெறும். அந்த வகையில் 2,4,6-ஆம் இடங்களை 5,7,9-ஆம் பார்வையாக பார்க்கிறார். எதிர்பாராத பணம் கிடைக்கும். பொன்-பொருள் சேரும். உடல்நலம் நன்றாக இருக்கும். கடன்கள் கரைந்து போகும். இனி பண மழைதான்.

மிதுனம் – உங்கள் இராசிக்கு குரு பகவான் 13.11.2021 அன்று மகர இராசியில் இருந்து கும்ப இராசிக்கு அவிட்ட நட்சத்திரத்தில் பெயர்ச்சி பெற்றார். உங்கள் இராசிக்கு 9-இல் அமர்ந்தார். குரு பகவான் 5,7,9-ஆம் பார்வையாக ஜென்மத்தை, 3-ஆம் இடத்தை, 5-ஆம் இடத்தை பார்வை செய்வதால், தைரியம் அதிகரிக்கும். துணிச்சலாக வியபாரம் செய்ய தூண்டும். உடல்நலனில் இருந்த நோய்,நொடிகள் ஓடி விடும். எதிர்பாரா உத்தியோக உயர்வு, பதவி கிடைக்கும். குழந்தை பாக்கியம் உண்டாகும். வெளிநாட்டில் வேலை வாய்ப்பு வரும். பண வரவுக்கு பங்கம் இல்லை. லாபம்தான்.





கடகம் – உங்கள் இராசிக்கு குரு பகவான் 13.11.2021 அன்று மகர இராசியில் இருந்து கும்ப இராசிக்கு அவிட்ட நட்சத்திரத்தில் பெயர்ச்சி பெற்றார். உங்கள் இராசிக்கு 8-இல் அமர்ந்தார் குரு. 12-ஆம் இடம், 2-ஆம் இடம், 4-ஆம் இடங்களை பார்வை செய்வதால், அன்னியர்களால் உதவி, அதாவது வெளிநாட்டவர் உதவிகள் எதிர்பாராமல் கிடைக்கும். எதிர்பார்த்ததை விட பணம் தாராளமாக கிடைக்கும். உங்கள் சொல்லுக்கு மதிப்பு உண்டு. திட்டங்கள் நிறைவேறும். வண்டி வாகனம் அமையும். தெய்வ அனுகிரகத்தால் குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். பயணங்கள் அதிகரிக்கும். வழக்குகள் இருந்தால் வெற்றி கிடைக்கும்.

சிம்மம் – உங்கள் இராசிக்கு குரு பகவான் 13.11.2021 அன்று மகர இராசியில் இருந்து கும்ப இராசிக்கு அவிட்ட நட்சத்திரத்தில் பெயர்ச்சி பெற்றார். உங்கள் இராசிக்கு 7-இல் அமர்ந்தார் குரு பகவான். ஜென்மத்தை, 3-ஆம் இடத்தை, 11-ஆம் இடங்களை குரு பார்வை செய்வதால், இதுவரை இருந்த குழப்பங்கள் தீரும். குடும்பம் ஒற்றுமையாகும். செய்யும் தொழிலில் கீர்த்தி பெறுவீர்கள். மனம் அமைதி பெறும். பண வரவுக்கு பஞ்சம் இல்லை. தடைப்பட்ட பட்டபடிப்பு தொடரும். வேலை வாய்ப்பு கிடைக்கும். வீடு, மனை அமையும். சகோதர, சகோதரிகளின் உதவி கிடைக்கும். கவலைகள் காற்றில் பறந்துவிடும். இனி வெற்றிதான்.

கன்னி – உங்கள் இராசிக்கு குரு பகவான் 13.11.2021 அன்று மகர இராசியில் இருந்து கும்ப இராசிக்கு அவிட்ட நட்சத்திரத்தில் பெயர்ச்சி பெற்றார். இராசிக்கு 6-இல் அமர்ந்தாரே என்று தயக்கம் வேண்டாம். குரு பகவான் இருக்கும் இடம் கவலையில்லை. பார்வையே பலம் வாய்ந்தது. உங்கள் இராசிக்கு 2,10,12-ஆம் இடங்களை பார்வை செய்வதால் கடன்கள் கரைந்து போகும். தொழில் துவங்க வைக்கும். எந்த உத்தியோகம் தேடுனீர்களோ அந்த வேலை கிடைக்கும். பயணங்கள் அதிகரிக்கும். உடல்நலம் பெறும். வாக்கு வன்மை உண்டாகும். எதிர்பார்த்த சௌகர்யங்கள் வந்து சேரும். மனக்கஷ்டம் அத்தனையும் தீரும். சுபநிகழ்ச்சிகள் பிரமாதமாக நடக்கும்.

துலாம் – உங்கள் இராசிக்கு குரு பகவான் 13.11.2021 அன்று மகர இராசியில் இருந்து கும்ப இராசிக்கு அவிட்ட நட்சத்திரத்தில் பெயர்ச்சி பெற்றார். உங்கள் இராசிக்கு 5-இல் அமர்ந்தார் குரு பகவான். அருமையான வாழ்க்கை கொடுப்பார். இராசியை, 9-ஆம் இடத்தை, 11-ஆம் இடத்தை பார்வை செய்வதால் உங்கள் எண்ணங்கள் நிறைவேறும். பாக்கியங்கள் சேரும். பொன்-பொருள் கொடுக்கும். குடும்பத்தில் நன்மைகள் உண்டாகும். உத்தியோக உயர்வு உண்டு. வழக்கு ஏதேனும் இருந்தால் வெற்றி உங்களுக்கே. எதிர்பாரா பணவரவு உண்டு. அரசாங்க ஆதரவு கிடைக்கும். கடல் கடந்து வெளிநாடு போகும் பாக்கியத்தை கொடுப்பார்.

விருச்சிகம் – உங்கள் இராசிக்கு குரு பகவான் 13.11.2021 அன்று மகர இராசியில் இருந்து கும்ப இராசிக்கு அவிட்ட நட்சத்திரத்தில் பெயர்ச்சி பெற்றார். உங்கள் இராசிக்கு 4-இல் அமர்ந்தார் குரு பகவான். 4-ஆம் இடத்தில் அமரலாம் பயமே வேண்டாம். நான் குருவின் பார்வைக்குதான் பலன் என்பேன். இராசிக்கு 8,10,12-ஆம் இடங்களை பார்வை செய்வதால், மனவேதனை குறையும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். இத்தனை நாட்கள் இருந்த குழப்பங்கள் பறந்துவிடும். தொழில், உத்தியோகத்தில் முன்னேற்றம் உண்டு. உடல் அளவில் நோய், நொடிகள் தீரும். கடன் சுமை குறையும். சகோதர-சகோதரி வழியில் உதவிகள் கிடைக்கும். பொதுவாக நன்மைகள் தேடி வரும்.





தனுசு – உங்கள் இராசிக்கு குரு பகவான் 13.11.2021 அன்று மகர இராசியில் இருந்து கும்ப இராசிக்கு அவிட்ட நட்சத்திரத்தில் பெயர்ச்சி பெற்றார். உங்கள் இராசிக்கு 3-இல் அமர்ந்தார் குரு பகவான். 7,9,11-ஆம் இடங்களை பார்வை செய்வதால் தொட்டது துலங்கும். பூர்வீக சொத்துக்கள் கைக்கு வந்து சேரும். திருமணம் நடக்கும். பெற்றோரின் உதவிகள் கிடைக்கும். பணவரவிற்கு குறை இருக்காது. கஷ்டபட்ட காலம் மறைந்தது. இனி நன்மைகள் தானே வந்து சேரும். சுபநிகழ்ச்சிகள் அமையும். பிணி தீரும். அருமையான காலம்தான். இனி கவலைகள் கரைந்து விடும். ஜெயம் உண்டு.

மகரம் – உங்கள் இராசிக்கு குரு பகவான் 13.11.2021 அன்று மகர இராசியில் இருந்து கும்ப இராசிக்கு அவிட்ட நட்சத்திரத்தில் பெயர்ச்சி பெற்றார். உங்கள் இராசிக்கு 2-இல் அமர்ந்தார் குரு பகவான். 6,8,10-ஆம் இடங்களை பார்வை செய்கிறார். முக்கியமாக கடன் ஒழிந்து விடும். நோய் நொடி தீரும். இழத்துக் கொண்டு இருந்த கேஸ் முடிவுக்கு வரும். குடும்பத்தில் இருந்த தகராறுகள் தீரும். தொழிலில் நஷ்டம் அடைந்தவர்கள் இனி தொழில்துறையில் முன்னேற்றம் அடைவார்கள். தாய், தந்தையின் உதவிகள் கிடைக்கும். பொன்-பொருள் சேரும். பொதுவாக அருமையான காலகட்டம்.

கும்பம் – உங்கள் இராசிக்கு குரு பகவான் 13.11.2021 அன்று மகர இராசியில் இருந்து கும்ப இராசிக்கு அவிட்ட நட்சத்திரத்தில் பெயர்ச்சி பெற்றார். உங்கள் இராசிக்கு ஜென்மத்தில் அமர்ந்ததால் தொட்டது துலங்கும். 5,7,9-ஆம் இடங்களை பார்வையும் செய்வதால், எதிர்பாரா பெரிய யோகங்கள் வந்தடையும். புத்திர பாக்கியம் உண்டாகும். திருமணம் இனிதே நடைபெறும். மேலதிகாரியின் உதவிகள், அரசாங்க உதவிகள் தேடி வரும். வீடு, வாகனம் அமையும். “ஜென்ம குரு வனவாசம்” என்பார்கள். அதை காதில் வாங்காதீர்கள். குரு பார்வைதான் முக்கியம். அவ்வகையில் குரு அருமையாக 5,7,9-ஆம் இடங்களை பார்வை செய்வதால், மண்ணும் பொன்னாகும்.

மீனம் – உங்கள் இராசிக்கு குரு பகவான் 13.11.2021 அன்று மகர இராசியில் இருந்து கும்ப இராசிக்கு அவிட்ட நட்சத்திரத்தில் பெயர்ச்சி பெற்றார். உங்கள் இராசிக்கு 12-இல் அமர்ந்தார் குரு பகவான். 12-ஆம் இட குரு நல்லதா? என்று நினைக்கிறீர்களா? 12-ஆம் இடத்தில் குரு அமரலாம். குரு பார்வையை பாருங்கள். 4,6,8-ஆம் இடங்களை பார்க்கிறார். உடல்நலம் சுகம் பெறும். கடன்காரர்களின் தொல்லை அறவே நீங்கும். பட்ட கஷ்டங்கள் அத்தனையும் மறையும். வழக்கு இருந்தால் முடிவுக்கு வரும். குடும்ப சிக்கல் தீரும். பயணங்கள் அதிகம் இருக்கும். அத்தகைய பயணங்களில் மட்டும் கவனம் தேவை. இத்தனை நாட்கள் நீங்கள் தேடிய உத்தியோகம் இனி உங்களை தேடி வரும். மனவேதனை குறையும். பேச்சில் கவனமாக இருங்கள். மற்றபடி நன்மைகளை பெறுவீர்கள்.


Related Posts

குரு பெயர்ச்சி அதிக பெரும் பலன் யாருக்கு?

மேலும் ஜோதிட கட்டுரைகள் படிக்கவும்…

மேலும் இராசி பலன்கள் படிக்கவும்…

மேலும் வாஸ்து கட்டுரைகள் படிக்கவும்…

மேலும் ஆன்மிக கட்டுரைகள் படிக்கவும்…

ஜோதிட ஆலோசனைக்கு இங்கே பார்க்கவும்…

Send your feedback to: editor@bhakthiplanet.com

For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com

For Astrology Consultation Contact: Astrologer, Sri Durga Devi upasakar, Krishnarau VG Phone Number: 98411 64648, Chennai, Tamilnadu, India

http://www.youtube.com/bhakthiplanet

https://www.youtube.com/niranjanachannel

http://www.facebook.com/bhakthiplanet

https://twitter.com/bhakthiplanet

For Astrology Consultation CLICK Here

© 2011-2021 bhakthiplanet.com  All Rights Reserved

Posted by on Nov 23 2021. Filed under Headlines, Home Page special, இராசி பலன்கள், கதம்பம், செய்திகள், ஜோதிடம், முதன்மை பக்கம். You can follow any responses to this entry through the RSS 2.0. Both comments and pings are currently closed.

Comments are closed

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2024. All Rights Reserved.| designed & developed by Green Site Tech
Translate »