உலகிற்கு ஆபத்தா? வரும் 04.06.2021 முதல் உஷார்
Astrologer, Sri Durga Devi upasakar, Krishnarau VG.
அன்பார்ந்த பக்தி பிளானேட் வாசகர்களுக்கு வணக்கம். வரும் ஜுன் மாதம் அதாவது 04.06.2021 வெள்ளிக்கிழமை, மிதுனத்தில் இருக்கும் செவ்வாய், கடகத்தில் பிரவேசம் செய்கிறார். மேற்கண்ட தேதியில் செவ்வாய், கடகத்திற்கு சென்ற உடன், மகரத்தில் இருக்கும் சனியின் பார்வையை பெறுகிறார். ரிஷபத்தில் இருக்கும் சூரியனின் பார்வையையும் பெறுவார்.
பொதுவாக – சனி, செவ்வாய் சேர்க்கையோ, பார்வையோ ஏற்பட்டால், அதுவும் கடகத்தில் செவ்வாய் நீச்சம் பெறுவதால், உலகின் பல நாடுகளில் வெள்ள அபாயம், பூகம்பம், நிலநடுக்கம், பெரும் விபத்துகள், நாடுகளுக்கிடையே யுத்தம் (போர்) நிகழும்.
அதுமட்டுமல்ல – கட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என்ற முழு மூச்சுடன் ஊரடங்கு (Lock down) செய்யும் நம் நாட்டில் மக்கள் அரசாங்கத்தின் அறிவுரையை ஏற்காமல் மீன் கடை, இறைச்சி கடை, கருவாடு, காய்கறி கடை என்று பல இடங்களில் சமூக இடைவெளி இல்லாமல் நின்று கொண்டு இருந்தால் நாம் சாப்பிட வேண்டியவற்றை சாப்பிட விடாமல் கொரோனா நம்மை சாப்பிட்டு விடும்.
மறுபடியும் எனக்கு தெரிந்ததை கூறுகிறேன்… நீச்சம் பெற்ற செவ்வாய், விஷத்தை பரப்பும். ஏற்கனவே இதை பதிவு செய்திருக்கிறேன். 15.05.2021 முதல் போதும், போதும் என்ற அளவு மழை இருக்கும் என்று கட்டுரை பதிவு செய்தேன். அதைபோலவே தமிழகம் மற்றும் வட மாநிலங்கள், கேரளா, கர்நாடகா என்று பல பகுதிகள் மற்றும் பல நாடுகள் வெள்ளத்தில் தத்தளிக்கிறது.
ஆகவே – மக்களே… நாம் அரசாங்கத்தின் அறிவுரைகளை ஏற்போம், நம்மையும் நம் குடும்பத்தையும் பாதுகாப்போம். ஸ்ரீதுர்கா தேவி அருளால் அனைவரும் வளமாக, நலமாக வாழ பிரார்த்தனை செய்கிறேன்.
மேலும் ஜோதிட கட்டுரைகள் படிக்கவும்…
மேலும் இராசி பலன்கள் படிக்கவும்…
மேலும் வாஸ்து கட்டுரைகள் படிக்கவும்…
மேலும் ஆன்மிக கட்டுரைகள் படிக்கவும்…
ஜோதிட ஆலோசனைக்கு இங்கே பார்க்கவும்…
Send your feedback to: editor@bhakthiplanet.com
For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com
For Astrology Consultation Contact: Astrologer, Sri Durga Devi upasakar, Krishnarau VG. Phone Number: 98411 64648, Chennai, Tamilnadu, India
http://www.youtube.com/bhakthiplanet
https://www.youtube.com/niranjanachannel
http://www.facebook.com/bhakthiplanet
For Astrology Consultation CLICK Here
© 2011-2021 bhakthiplanet.com All Rights Reserved