Saturday 27th April 2024

தலைப்புச் செய்தி :

14/01/2021 மகர சூரியன் தை மாதம் நன்மையா?

Astrologer, Sri Durga Devi upasakar, Krishnarau VG.  Phone Number: 98411 64648,

அன்புள்ள பக்தி பிளானட் அன்பர்களுக்கு வணக்கம். ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். உலகில் வறுமை ஒழியட்டும். நோய் நொடிகள் அகன்றோடட்டும். உலக மக்களை காத்திட அம்பாள் அருள் புரிய வேண்டும் என ஸ்ரீதுர்காதேவி உபாசகர் வேண்டுகிறேன். பிராத்தனை செய்கிறேன்.

சரி –

இதுவரை பட்டதுபோதும். இனி எப்படி இருக்கப்போகிறது? என்று பார்த்தால், மகரத்தில் சூரியன், சனி, குரு, புதன் என நால்வரும் ஒன்றாக சேர்ந்து இருக்கிறார்கள். இதில் சூரியன், சனி சேருவது நன்மை இல்லை. அம்பாள் அருளால் குரு அந்த பகையை குறைத்துவிட்டது.

இதில் குரு, சனி சேர்ந்து பிரம்மஹத்தி தோஷம் உண்டாக்கிவிட்டது. சரி, இதனால் என்ன பிரச்னை? என்றால், முக்கியமாக பங்கு வர்த்தகம் (Share Market) சரிந்து போவதற்கு காரணம் ஆகிறது. சூரியன், உத்திராட நட்சத்திரமான அவன் சொந்த சாரத்தில் (காலில்) அமர்கிறது. சனி, திருவோணம் சந்திரன் காலில் அமர்கிறது.

சூரியன், அவன் நின்ற இடத்திற்கு 8-க்குரிய கால், சனி அவன் நின்ற இடத்திற்கு 7-க்குரிய கால். இதை பார்க்கும்போது அரசியல் சதுரங்க ஆட்டத்தில் பல குழப்பங்கள், இங்கு இருப்பதும் அங்கு ஓடுவதும் Musical chair ஆட்டம் நடைபெறும். நண்பர்களும் பகைவர்களாக மாறுவார்கள்.

ஏற்கனவே நான் 10/12/2019 to 10/01/2021-க்குள் மழை அதிகமாக இருக்கும் என்று எழுதி இருந்தேன். தற்பொழுது வருவது மழை அல்ல. இனி 16/01/2021-வரை வர போகிறதே அதுதான் மழை.

சரி, இனி குரு நீச்சம் பெற்று, சனியுடன் சேர்ந்ததால், மளிகை பொருட்கள் லாபம் அதிகரிக்கும். போதுமான நவதானியங்கள், அரிசி கை இருப்பு இருக்க வேண்டும். இரும்பு வியபாரம் ஏறுமுகமாக இருக்கும். தங்கம் விலை ஏற்ற-இறக்கம் தரும்.

உலகளவில் வைரஸ் என்ன செய்யுமோ? எப்படி செய்யுமோ? ஆனால் இந்தியாவை பொருத்தவரை கிருத்திகை நட்சத்திர ஆளுமை படைத்த இந்தியாவில் வைரஸ் இன்னும் பயமுறுத்தும். பல வைரஸ் நோய்கள் வந்த வேகத்தில் ஓடிவிடும்.

காரணம் –

சூரியனின் நட்சத்திரமான கிருத்திகை, உத்திரம், உத்திராடம்.




இதில், கிருத்திகை நட்சத்திரத்தில் இந்தியா இருப்பதால், அண்டைநாட்டு விரோதிகளும் இந்தியாவை அசைக்க முடியாது. அண்டை நாட்டில் இருந்து வரும் வைரஸ் தொற்றும் சுவடு தெரியாமல் வரிந்து கட்டிக்கொண்டு ஓடிவிடும்.

முக்கியமாக – சுக்கிரன் இல்லத்தில் இராகு அமர்ந்து குரு பார்வை பெறுவதால், பெண்களுக்கு மிக,மிக யோக காலம்.

சூரியன், புதன் இணைந்து இருப்பதால், கல்விதுறைக்கு மறுமலர்ச்சி பிறக்கும்.

அரசியலிலும் பெண்களின் ஆதிக்கம் உயரும்.

அம்பாள் அருள் உண்டாக்கட்டும் – பொங்கல், இல்லத்தில் பொங்கட்டும்.

அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

மேலும் ஜோதிட கட்டுரைகள் படிக்கவும்…

மேலும் இராசி பலன்கள் படிக்கவும்…

மேலும் வாஸ்து கட்டுரைகள் படிக்கவும்…

மேலும் ஆன்மிக கட்டுரைகள் படிக்கவும்…

ஜோதிட ஆலோசனைக்கு இங்கே பார்க்கவும்…

Send your feedback to: editor@bhakthiplanet.com

For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com

For Astrology Consultation Contact: Astrologer, Sri Durga Devi upasakar, Krishnarau VG.  Phone Number: 98411 64648, Chennai, Tamilnadu, India

http://www.youtube.com/bhakthiplanet

https://www.youtube.com/niranjanachannel

http://www.facebook.com/bhakthiplanet

For Astrology Consultation CLICK Here

© 2011-2021 bhakthiplanet.com  All Rights Reserved

Comments are closed

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2024. All Rights Reserved.| designed & developed by Green Site Tech