Monday 29th April 2024

தலைப்புச் செய்தி :

சூப்பர் ஸ்டாரை அரசியலுக்கு வராமல் தடுப்பது யார்?

Astrologer, Sri Durga Devi upasakar, Krishnarau VG.  Phone Number: 98411 64648

உலக புகழ் பெற்ற சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் அரசியல் ஆர்வம் கொண்டவர். அரசியல் ஈடுபாடு கொண்டு கட்சி துவக்க வேண்டும் என்று இருந்தார்.

அவை தடைப்பட்டது ஏன்? யாராவது தடுத்தார்களா?.

ஒருபோதும் யாரும் யாருடைய முன்னேற்றத்தையும் தடுக்க முடியாது. நம்மை உச்சிக்கு ஏற்றுவதும், பள்ளத்தில் தள்ளுவதும் நவகிரகங்களை தவிர யாராலும் முடியாது.

அரசியலில் சாதிக்க வேண்டும் என்றால், அரியனை ஏற வேண்டும் என்றால், அரியனையில் ஒருவனை அமர்த்த வேண்டும் என்றாலும் நம் ஜாதகத்தில் சூரியன், செவ்வாய் வெகு பலமாக இருக்க வேண்டும். நாட்டை ஆளக்கூடிய அரசனுக்கு மகனாக இருந்தாலும், அந்த மகனின் ஜாதகத்தில் சூரியன், செவ்வாய் சரியில்லை என்றால் மன்னனின் மகனாக இருந்தாலும் மன்னன் ஆக முடியாது.

சரி- சூப்பர் ஸ்டார் ஜாதகத்தில் என்ன இருக்கிறது? என்று பார்ப்போம்.

மகர இராசி, சிம்ம லக்கினத்தில் பிறந்தவர் ரஜினிகாந்த் அவர்கள். இவரின் ஜாதகத்தில் லக்கினத்திற்கு 4-ஆம் இடத்தில் சூரியன். அந்த சூரியனை சனியும், கேதுவும் லக்கினத்திற்கு 2-ஆம் இடத்தில் அமர்ந்து பார்வை செய்வார்.

அதாவது –

சனி பகவான் 3-ஆம் பார்வையாக சூரியனை பார்ப்பதால், சூரியன் அரசியலுக்கு பலம் இல்லாமல் போனது.

சரி – செவ்வாயை கவனித்தால், சிம்ம லக்கினத்திற்கு 6-இல் மகரத்தில் சந்திரனோடு செவ்வாய் இணைந்து இருக்கிறது. மகரத்தில் உச்சம் பெற்றது செவ்வாய்தான். ஆனால் அவன் சிம்ம லக்கினத்திற்கு 12-க்குரிய சந்திரனோடு சேர்ந்ததால் அரசியல் பலம் குறைந்தது.

அதுமட்டுமல்ல –

உடலாகிய சந்திரனோடு செவ்வாய் சேர்ந்ததால் அதாவது, சுகாதிபதி செவ்வாய் உடல்நலத்தை சற்று பாதித்தார்.

மேலும் ஜாதகத்தில், லக்கினாதிபதி சூரியன் 10-ஆம் பார்வையாக லக்கினத்தை பார்த்தார். அதுமட்டுமின்றி, 10-ஆம் இடத்தை பாவி பார்த்தால் உலக புகழ் உண்டு. ஆகவே திரு. ரஜினிகாந்த் அவர்கள் யாருக்கும் எளிதில் கிடைக்காத புகழ் பெற்று திகழ்கிறார்.

தற்காலம் இவருக்கு புதன் திசை.

லக்கினத்திற்கு 2,11-க்குரிய திசையாக நடக்கிறது. கேது புக்தி வேறு நடைப்பெறுகிறது. உடல்நலம் பாதிக்கிறது.

ஆகவே நான் கூறவது என்னவென்றால், நவகிரகங்கள் இவரின் அரசியல் பாதையை தடை செய்கிறதே தவிர, பிறர் யாரும் இவரின் அரசியல் பயணத்தை தடை செய்ய முடியாது.

இவரின் ஜாதகத்தில், லக்கினத்திற்கு 2-இல் கேது, சனி அமர்ந்து, கேது புக்தி நடப்பதால் அவர் மனகுழப்பம் இல்லாமல், மனவேதனை இல்லாமல் உடல் ஆரோக்கியமாக இருக்க அம்பாள் அருள் புரிய வேண்டும்.




மேலும் ஜோதிட கட்டுரைகள் படிக்கவும்…

மேலும் இராசி பலன்கள் படிக்கவும்…

மேலும் வாஸ்து கட்டுரைகள் படிக்கவும்…

மேலும் ஆன்மிக கட்டுரைகள் படிக்கவும்…

ஜோதிட ஆலோசனைக்கு இங்கே பார்க்கவும்…

Send your feedback to: editor@bhakthiplanet.com

For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com

For Astrology Consultation Contact: Astrologer, Sri Durga Devi upasakar, Krishnarau VG.  Phone Number: 98411 64648, Chennai, Tamilnadu, India

http://www.youtube.com/bhakthiplanet

https://www.youtube.com/niranjanachannel

http://www.facebook.com/bhakthiplanet

For Astrology Consultation CLICK Here

© 2011-2021 bhakthiplanet.com  All Rights Reserved

Comments are closed

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2024. All Rights Reserved.| designed & developed by Green Site Tech