Monday 29th April 2024

தலைப்புச் செய்தி :

யாருக்கு யார் சதம்? பிள்ளைக்கு தந்தையா? தந்தைக்கு பிள்ளையா?

Sri Durga Devi upasakar, Krishnarau VG.

நான் பல பேர் சொல்லி கேள்விப்பட்டிருக்கிறேன்.

ஐயா.. என் மகன் என்னை கவனிக்கவில்லை, நான் சீராட்டி வளர்த்தேன், இருந்தாலும் என்ன பயன்?. கேட்டதை எல்லாம் வாங்கி கொடுத்தேன். பிற்காலத்தில் என்னை காப்பாற்றுவான் என்று எண்ணி இருந்தேன். என் நம்பிக்கை காற்றில் கரைந்துவிட்டது.

-இது ஒரு தந்தையின் புலம்பல்.

எனக்கு என்ன செய்தார்?. எதிர் நீச்சல் போட்டு நானே நீந்தி வந்தேன். பலரின் அப்பாக்கள் தங்களின் பிள்ளைகளுக்கு எவ்வளவோ செய்கிறார்கள். ஆனால் என் அப்பா எனக்கு என்ன செய்தார்?

-இது மகனின் எதிர் கேள்வி.

இவ்வாறான புலம்பலுக்கும், எதிர் கேள்விகளுக்கும் ஜோதிட ரீதியான விடை 5-ஆம் இடம் மற்றும் 9-ஆம் இடமே. மகனுக்கு தந்தையோ, தந்தைக்கு மகனோ ஒன்றும் செய்ய முடியாது. இந்த 5-ஆம் இடம், 9-ஆம் இடம் அருமையாக இருந்தால்தான் பாசம் நீடிக்கும். உதவிகள் பரிமாறும். அதாவது, தந்தையின் ஜாதகத்தில் 5-ஆம் இடத்தில் 6,8,12-க்குரிய கிரகம் இருந்தாலும், 5-ஆம் இடத்ததிபதியோடு 6,8,12-க்குரியவர் இருந்தாலும் மகன் உதவிக்கு இருப்பானே தவிர அவனால் தந்தைக்கு பொருளாதார ரீதியாக உதவி செய்ய வாய்ப்பில்லை.

மகன் ஜாதகத்தில் 9-ஆம் இடத்தில் 5-க்குரியவர், 2-க்குரியவர், 11-க்குரியவர் இருந்தால் தந்தையின் உதவி கிடைக்கும். 9-ஆம் இடத்தை சனி, செவ்வாய், சூரியன் பார்வை செய்யக் கூடாது. அப்படி 9-ஆம் இடத்தை மகரம், கும்ப இராசிக்கு சம்மந்தப்பட்ட சனியாக இருந்து அந்த 9-ஆம் இடத்தை பார்வை செய்தால் பாதகம் இல்லை. தந்தையின் ஜாதகத்தில் 5-ஆம் இடத்தை லக்கினாதிபதி, 11-ஆம் அதிபதி பார்வை செய்தாலும், 5-ஆம் இடத்தில் குரு அல்லது குரு பார்வை இருந்தாலும் மகனுக்கு உதவிகள் தானாக கிடைக்கும்.

ஆகவே –

வாழ்க்கையில் உதவிகள் கிரகங்களால் அதன் சக்தியால் ஒருவருக்கு ஒருவர் பெறுவார்களே தவிர, நீ செய்யவில்லை, நான் செய்யவில்லை என்று வேதனை அடைவது வேடிக்கைதான்.

மேலும் ஜோதிட கட்டுரைகள் படிக்கவும்…

மேலும் இராசி பலன்கள் படிக்கவும்…

மேலும் வாஸ்து கட்டுரைகள் படிக்கவும்…

மேலும் ஆன்மிக கட்டுரைகள் படிக்கவும்…

ஜோதிட ஆலோசனைக்கு இங்கே பார்க்கவும்…

Send your feedback to: editor@bhakthiplanet.com

For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com

For Astrology Consultation Contact: Astrologer, Sri Durga Devi upasakar, Krishnarau VG.  Phone Number: 98411 64648, Chennai, Tamilnadu, India

http://www.youtube.com/bhakthiplanet

https://www.youtube.com/niranjanachannel

http://www.facebook.com/bhakthiplanet

For Astrology Consultation CLICK Here

© 2011-2020 bhakthiplanet.com  All Rights Reserved

Comments are closed

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2024. All Rights Reserved.| designed & developed by Green Site Tech