Thursday 9th May 2024

தலைப்புச் செய்தி :

நாம் யார்?

Sri Durga Devi upasakar, Krishnarau VG. 

உலகில் வாழும் நாம் அனைவரும் ஆண்டவனால் படைக்கப்பட்டவர்கள். நானும் ஒரு ஜோதிடன்தான். ஜோதி்டராகிய நாம், கிரகங்களை கணித்து சொல்லும்போதும், எழுதும்பொழுது ஐயோ பேராபத்து… அழிந்துவிடும்… உலகிற்கு வந்துவிட்டது அழிவு என்று இப்படியெல்லாம் சொல்லக்கூடாது, எழுதக்கூடாது.

நாம் யார்?

இது வெறும் தலைப்பு அல்ல. ஆண்டவனால் படைக்கப்பட்டவர்கள் உலகின் தலையெழுத்தை கூற யாராலும் முடியாது. நான் யார் தெரியுமா? என்று கொக்கரித்தான் ஹிட்லர். நான் மனது வைத்தால் எல்லாம் என் கையில் என்று சொன்ன அலெக்சாண்டர் போன்றவர்கள் என்ன ஆனார்கள்? நினைத்துப் பாருங்கள். ஜெயிக்கும் வரைதான் நான் சொன்னது சொன்னதுதான் என்று எகத்தாளம் போடுவார்கள். தோல்வி தழுவும்போது, இப்படி ஆகும் என்று கனவிலும் நினைக்கவில்லை என்று புலம்புவார்கள்.

அவனின்றி ஒரு அணுவும் அசையாது – இது சத்திய வாக்கு.

ஜோதிடம் கணித்துச் சொல்லும்போது, நான் சொல்வதுதான் நடக்கும் என்று மார் தட்ட வேண்டாம். அப்படி நான் சொல்வதுதான் நடக்கும் என்றால் நல்லதே கூறவேண்டும்.

நோய்வாய்ப்பட்டு இருக்கும் ஒருவரை பார்த்து, இது ஒன்றும் பெரிய நோய் அல்ல இரண்டு நாளில் சரியாகிவிடும் என்று நம்பிக்கை தந்தால், நோய்வாய்பட்டவர் மகிழ்ச்சியடைவார். தெம்பாக எழுந்து உட்காருவார். அதைவிட்டுவிட்டு நோய்வாய்ப்பட்ட நபரை பார்த்து, ஐயோ இந்த நோய் தீராத பிரச்னை கொடுக்கும் என்று சொன்னால், அடுத்த நாளே அவருக்கு வராத நோய் எல்லாம் வந்துவிடும்.

ஆகவே நல்லதே கூறவேண்டும். கிரகங்களை கணித்து சொல்லும் போது சாதகமாக இல்லை என்றால் பெரிய பிரச்சினை வராது என்று கூறுவது நல்லது.

நானும் பார்க்கிறேன் சில ஊடகங்களில், வாட்ஸ் அப்களில் நெகட்டிவாக அதிகம் வருகிறது. அபசகுன வார்த்தைகள் வருகிறது. இது நல்லதல்ல. சொல்லும் சொல்லுக்கு சக்தி உண்டு.

அவ்வளவு எதற்கு? படைப்பவனை எம்பெருமானே என்கிறோம். அழிப்பவனை எமபெருமானே என்கிறோம் இங்கு ஒரு புள்ளிக்கு பெரும் மாற்றம் இருப்பதை பாருங்கள். ஆக்கல் – அழித்தல் புள்ளியில் அடங்கிவிட்டது. ஆகவே, இனி பலன் கணித்து கூறுபவர்கள் பயம் காட்ட வேண்டாம். தனக்குதான் எல்லாம் தெரியும் என்று, பேராபத்து என்றோ அழியப்போகிறது என்றோ எழுத வேண்டாம் – கூற வேண்டாம். அப்படி ஒரு பாதிப்பு இருந்தாலும் அதை நிறுத்த நம்மை படைத்த ஆண்டவனுக்கு தெரியும்.

இதில் –

நாம் யார்?

மேலும் ஜோதிட கட்டுரைகள் படிக்கவும்…

மேலும் இராசி பலன்கள் படிக்கவும்…

மேலும் வாஸ்து கட்டுரைகள் படிக்கவும்…

மேலும் ஆன்மிக கட்டுரைகள் படிக்கவும்…

ஜோதிட ஆலோசனைக்கு இங்கே பார்க்கவும்…

Send your feedback to: editor@bhakthiplanet.com

For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com

For Astrology Consultation Contact: Astrologer, Sri Durga Devi upasakar, Krishnarau VG.  Phone Number: 98411 64648, Chennai, Tamilnadu, India

http://www.youtube.com/bhakthiplanet

https://www.youtube.com/niranjanachannel

http://www.facebook.com/bhakthiplanet

For Astrology Consultation CLICK Here

© 2011-2020 bhakthiplanet.com  All Rights Reserved

Posted by on Apr 17 2020. Filed under Bhakthi planet, Headlines, கதம்பம், ஜோதிட சிறப்பு கட்டுரைகள், ஜோதிடம், முதன்மை பக்கம். You can follow any responses to this entry through the RSS 2.0. Both comments and pings are currently closed.

Comments are closed

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2024. All Rights Reserved.| designed & developed by Green Site Tech