Tuesday 19th March 2024

தலைப்புச் செய்தி :

தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்.,19ம் தேதி லோக்சபா தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது. ஓட்டு எண்ணிக்கை ஜூன் 4ம் தேதி நடக்கும்.

இராகு-கேது பெயர்ச்சி பலன்கள் 2019-2020 !

Astrologer, Sri Durga Devi upasakar, V.G.Krishnarau. 

மேஷ இராசி அன்பர்களே… உங்கள் இராசிக்கு இராகு 3-ம் இடமான கீர்த்திஸ்தானத்திலும், கேது 9-ம் இடத்திலும் பெயர்ச்சி ஆகி உள்ளது. குருவின் சாரத்தில் அமர்ந்த இராகு பெரும் யோகத்தை கொடுக்கும். சொத்து சுகங்கள் அனைத்தையும் வாரி கொடுக்கும். அயல்நாட்டு பயணம் உண்டாக்கும். கடன் பிரச்னை தீர்க்கும். போட்டிகளில் வெற்றி கொடுக்கும். சகோதரர் வழியில் நன்மை செய்யும். கலைதுறையில் உள்ளவர்களுக்கு லாபம் தரும். 9-ம் இடத்தில் உள்ள கேது, தெய்வ தரிசனம் அதிகம் தருவார். விரோதங்கள் மறையும். மனக்குழப்பத்தை இனி தீர்த்து வைப்பார் கேது பகவான். பெரியவர்களின் உதவி கிடைக்கும். குடும்பத்திற்கு தேவையான பொருட்கள் சேருவதற்கு யோகம் தருவார்.

பொதுவாக, இந்த இராகு-கேது பெயர்ச்சி உங்களுக்கு எல்லா வளங்களையும் தந்திட ஸ்ரீதுர்காதேவியை பிராத்தனை செய்கிறேன். நல்வாழ்த்துக்கள்.

ரிஷப இராசி அன்பர்களே… உங்கள் இராசிக்கு 2-ம் இடத்தில் இராகுவும், 8-ம் இடத்தில் கேதுவும் பெயர்ச்சியாகி உள்ளனர். தனஇராகு பணவரவை தருவார். உங்கள் வாக்கு மேலோங்கும். உங்கள் சொல்லுக்கு மற்றவர்கள் கட்டுப்படுவர். திட்டங்கள் நிறைவேறும். புதிய தொழில் உருவாகும். இதுவரை தடைபட்ட வேலை இனி தேடி வரும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடக்கும். திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் கைகூடி வரும். குழந்தை பேறும் உண்டாகும். எழுத்து துறையில் உள்ளவர்களுக்கும், கமிஷன் வியபாரத்தில் உள்ளவர்களுக்கும் யோகமான நேரம் இது. லாபாதிபதி சாரத்தில் அமர்ந்த இராகு மண்ணையும் பொன்னாக்கும். 8-ம் இட கேது, சூரியன் சாரத்தில் அமர்ந்ததால் செலவுகளை கட்டுப்படுத்தும். செய்ய வேண்டியதை திட்டம் தீட்ட வைக்கும். உடல்நலனில் அக்கரை தேவை. நன்மைகள் தேடி வரும்.

பொதுவாக, இந்த இராகு-கேது பெயர்ச்சி உங்களுக்கு எல்லா வளங்களையும் தந்திட ஸ்ரீதுர்காதேவியை பிராத்தனை செய்கிறேன். நல்வாழ்த்துக்கள்.




மிதுன இராசி அன்பர்களே… உங்கள் இராசிக்கு ஜென்மத்தில் இராகுவும், 7-ம் இடத்தில் கேதுவும் பெயர்ச்சியாகி வந்துள்ளனர். குரு சாரத்தில் அமர்ந்த இராகு, நண்பர்களால் நன்மைகளை தருவார். துவண்டு போன தொழில் இனி புத்துயிர் பெறும். மனைவியால் யோகம் அடைய செய்யும். உத்தியோகத்தில் இருந்தவர்கள் சுயதொழில் தொடங்கச் செய்யும். வெளிநாட்டில் கல்வி தொடர வாய்ப்பு தரும். பெற்றோரின் உதவி கிடைக்கும். இதுநாள் வரை பட்ட கஷ்டம் இனி தீரும். ரியல் எஸ்டேட், கட்டுமான தொழிலில் உள்ளவர்கள் மறுமலர்ச்சி பெறுவர். பிள்ளைகளுக்கு திருமணம் நடக்கும். சகோதரவர்கத்தில் நன்மை உண்டாகும். சப்தம கேது செலவுகளை அதிகரிக்கச் செய்யும். வாகனம் ஓட்டுவதில் நிதானம் தேவை. யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போட வேண்டாம்.

பொதுவாக, இந்த இராகு-கேது பெயர்ச்சி உங்களுக்கு எல்லா வளங்களையும் தந்திட ஸ்ரீதுர்காதேவியை பிராத்தனை செய்கிறேன். நல்வாழ்த்துக்கள்.

கடக இராசி அன்பர்களே… உங்கள் இராசிக்கு 12-ம் இடத்தில் இராகுவும், 6-ம் இடத்தில் கேதுவும் பெயர்ச்சி ஆகி வந்துள்ளனர். குரு சாரத்தில் அமர்ந்த இராகு, இனி பெரிய திருப்பத்தை உண்டாக்குவார். எதுவும் செய்ய முடியாமல் ஜென்மத்தை பிடித்திருந்த இராகு, இப்போழுது விடுதலை செய்ததால் நினைத்ததை மட,மடவென்று முடிப்பீர்கள். ஆரோக்கியத்தில் புத்துணர்ச்சி பெறுவீர்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து பணவரவு கிடைக்கும். இனி டென்ஷன் குறையும். தொழிலில் நல்ல லாபம் பெறுவீர்கள். தடைபட்ட கட்டடம் கட்டி முடிக்கப்படும். கூட்டு தொழிலில் நல்ல லாபம் கிட்டும். இயந்திரங்கள், ஓட்டல் தொழில் செய்பவர்கள் நன்மைகளை பெறுவர். குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் இனி பறந்து போகும். 6-ம் இடத்தில் உள்ள கேது பகவான், பயணங்களை அதிகம் தருவார். வியபாரத்தில் அகலகால் வைக்க வேண்டாம். திட்டம் போட்டு காரியங்களை செய்யுங்கள். வாகனம் ஓட்டுவதிலும் கவனம் தேவை. முயற்சிகள் வெற்றி தரும்.

பொதுவாக, இந்த இராகு-கேது பெயர்ச்சி உங்களுக்கு எல்லா வளங்களையும் தந்திட ஸ்ரீதுர்காதேவியை பிராத்தனை செய்கிறேன். நல்வாழ்த்துக்கள்.

சிம்ம இராசி அன்பர்களே… உங்கள் இராசிக்கு 11-ம் இடத்தில் இராகுவும், 5-ம் இடத்தில் கேதுவும் பெயர்ச்சி ஆகி வந்துள்ளனர். குரு சாரத்தில் அமர்ந்த இராகு, லாபத்தில் இருப்பதால், பெரிய அளவில் வெற்றிகளை பார்ப்பீர்கள். இதுநாள்வரை இருந்த தீராத பிரச்னைகள் தீரும். மனவேதனை அகலும். வழக்கில் நன்மைகள் உண்டாகும். வட்டிக்கு வட்டி கொடுத்த நீங்கள், இனி அடுத்தவர்களுக்கு பண உதவி செய்வீர்கள். குடும்பத்தில் பல சுபநிகழ்ச்சிகள் நடக்கும். பட்டப்படிப்பில் வெற்றி அமையும். துவண்டு நின்ற தொழில் புத்துயிர் பெறும். பொன்-பொருள், ஆபரணம் வாங்குவீர்கள். நோய்நொடிகள் தீரும். டென்ஷன் இனி அகலும். வீடு, மனை வாங்குவீர்கள். ஏற்றுமதி தொழிலில் உள்ளவர்கள் நன்மைகளை பெறுவார்கள். அன்னியர்களின் உதவிகள் கிடைக்கும். 5-ம் இடத்தில் கேது பகவான் வந்துள்ளதால், சிந்தனைகளை அதிகரிக்கச் செய்வார். இனி, திட்டங்கள் நிறைவேறும். ஆனால் எதிலும் அவசரம் கூடாது. தெய்வ தரிசனம் அதிகரிக்கும். நன்மையான நேரமே.

பொதுவாக, இந்த இராகு-கேது பெயர்ச்சி உங்களுக்கு எல்லா வளங்களையும் தந்திட ஸ்ரீதுர்காதேவியை பிராத்தனை செய்கிறேன். நல்வாழ்த்துக்கள்.

கன்னி இராசி அன்பர்களே… உங்கள் இராசிக்கு 10-ம் இடத்தில் இராகுவும், 4-ம் இடத்தில் கேதுவும் பெயர்ச்சி ஆகி வந்துள்ளனர். குரு சாரத்தில் அமர்ந்த இராகு, இனி நன்மைகளை வாரி வழங்குவார். சொந்த வீடு, வாகன விருத்தி கொடுப்பார். குடும்பத்தில் இருந்த சண்டை சச்சரவுகள் தீர்ந்து, சுமுகமாக மாறும். இதுவரை இருந்த தடைகள் அதாவது, எதை செய்தாலும் தடையாக இருந்து வந்த நிலை மாறி, காரியங்கள் வெற்றி அடையும். வசிக்க சொந்த வீடு, மனை அமையும். உறவினர்களின் வருகையும், அவர்களால் நன்மையும் உண்டு. ஜவுளி, மளிகை பொருட்கள் வியபாரத்தில் உள்ளவர்கள் நன்மைகளையும், லாபங்களையும் அதிகம் பெறுவர். தாயாரின் உடல்நலனை கவனிக்க வேண்டும். கேது 4-ம் இடத்தில் இருப்பதால் ஆரோக்கியத்தில் உங்கள் சுகத்தை கவனித்துக் கொள்ள வேண்டியது அவசியம். மாணவர்கள் தங்களின் கல்வியில் மிக கவனமாக இருக்க வேண்டியதும் அவசியம்.

பொதுவாக, இந்த இராகு-கேது பெயர்ச்சி உங்களுக்கு எல்லா வளங்களையும் தந்திட ஸ்ரீதுர்காதேவியை பிராத்தனை செய்கிறேன். நல்வாழ்த்துக்கள்.

துலா இராசி அன்பர்களே… உங்கள் இராசிக்கு 9-ம் இடத்தில் இராகுவும், 3-ம் இடத்தில் கேதுவும் பெயர்ச்சி ஆகி வந்துள்ளனர். குரு சாரத்தில் அமர்ந்த இராகு, திட்டங்கள் அனைத்தையும் வெற்றி பெற செய்வார். உத்தியோகத்தில் உயர்வு, சிலருக்கு இடமாற்றமும் உண்டு. இனி எப்போதும் கையில் பணம் புரளும். வருமானம் வரும் அதே நேரம் செலவும் அதிகரிக்கும். உழைப்பும் கூடுதலாகும். பொன்-பொருள், ஆடைகளை வாங்குவீர்கள். பல நாட்களாக இருந்த கடன் குறைய ஆரம்பிக்கும். சிலருக்கு கடன் முற்றிலும் தீரும். பழைய வாகனத்தை விற்று புதிய வாகனம் வாங்குவதற்கு சாதகமான நேரம இது. மனை வாங்குவதற்கும் சாதகமான நேரம்தான். திருமணம், குழந்தை பேறு போன்ற சுபநிகழ்ச்சிகள் குடும்பத்தில் நடக்கும். 3-ம் இடத்தில் கேது உள்ளதால் காரியத்தை தடை செய்ய, புகழ் கெடுக்க சிலர் வரலாம். கவனம் தேவை. துன்பங்கள் தீரும், இனி நற்காலமே.

பொதுவாக, இந்த இராகு-கேது பெயர்ச்சி உங்களுக்கு எல்லா வளங்களையும் தந்திட ஸ்ரீதுர்காதேவியை பிராத்தனை செய்கிறேன். நல்வாழ்த்துக்கள்.




விருச்சிக இராசி அன்பர்களே… உங்கள் இராசிக்கு 8-ம் இடத்தில் இராகுவும், 2-ம் இடத்தில் கேதுவும் பெயர்ச்சி ஆகி வந்துள்ளார்கள். குரு சாரத்தில் அமர்ந்த இராகு, பல நன்மைகளை செய்வார். இதுநாள்வரை இருந்த கஷ்டங்கள் இனி இல்லை. எண்ணங்கள் ஈடேறும். கடன் சுமை குறையும். வழக்கு இருந்தால் அதில் வெற்றி பெறுவீர்கள். சொத்து சுகம் உண்டாகும். கலைதுறையில் உள்ளவர்களுக்கு வாய்ப்புகள் அதிகரிக்கும். உத்தியோகம் தேடி போராடி வந்தவர்களுக்கு, வேலை வாய்ப்பு கிடைக்கும். சிலருக்கு சுயதொழில் அமையும். வியபாரிகளுக்கு புதிய தொழிலும் அமையும். பெற்றோரின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. 2-ம் இடத்தில் கேது உள்ளதால், குடும்ப சச்சரவுகளை தீர்த்து வைப்பார் கேது பகவான். சூரியன் சாரத்தில் அமர்ந்த கேது பட,படப்பு உண்டாக்கும். அவசரமும் உண்டாக்கும். எனவே பொறுமை, நிதானம் அவசியம் தேவை. அஷ்டம இராகு என்கிற பயம் வேண்டாம். பஞ்சமாதிபதி சாரத்தில் அமர்ந்ததால், நன்மைகள் தேடி வரும். இனி நற்காலமே.

பொதுவாக, இந்த இராகு-கேது பெயர்ச்சி உங்களுக்கு எல்லா வளங்களையும் தந்திட ஸ்ரீதுர்காதேவியை பிராத்தனை செய்கிறேன். நல்வாழ்த்துக்கள்.

தனுசு இராசி அன்பர்களே… உங்கள் இராசிக்கு 7-ம் இடத்தில் இராகுவும், ஜென்மத்தில் கேதுவும் பெயர்ச்சி ஆகி வந்துள்ளார்கள். குரு சாரத்தில் அமர்ந்த இராகு, இனி அலைச்சல் இல்லாமல் செய்வார். பழைய சொத்து சிலருக்கு கிடைக்கும். வழக்கு இருந்தாலும் வெற்றி பெறும். கூட்டு தொழிலில் இருந்து விலகி தனியாக தொழில் செய்ய சிலர் விரும்புவர். சிரமங்கள் குறையும். வீட்டுக்கு தேவையான பொருட்கள் வந்தடையும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் நடக்கும். குறிப்பாக உயர்கல்வி அமையும். அயல்நாட்டில் சிலருக்கு எதிர்பார்த்த உத்தியோகம் கிடைக்கும். இதுநாள்வரை இருந்த குடும்ப பிரச்னை தீரும். சிலருக்கு சகோதர உதவிகள் வந்தடையும். ஜென்ம கேது உள்ளதால், முக்கியமாக உடல் ஆரோக்கியத்தில் கவனத்துடன் இருங்கள். யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போட வேண்டாம். தெய்வ தரிசனம் செய்யுங்கள். எதையும் அவசரமாக செய்யக்கூடாது. மற்றபடி நற்காலம் எனலாம்.

பொதுவாக, இந்த இராகு-கேது பெயர்ச்சி உங்களுக்கு எல்லா வளங்களையும் தந்திட ஸ்ரீதுர்காதேவியை பிராத்தனை செய்கிறேன். நல்வாழ்த்துக்கள்.

மகர இராசி அன்பர்களே… உங்கள் இராசிக்கு 6-ம் இடத்தில் இராகுவும், 12-ம் இடத்தில் கேதுவும் பெயர்ச்சி ஆகி வந்துள்ளார்கள். குரு சாரத்தில் அமர்ந்த இராகு, இனி உங்கள் புகழை உயர்த்துவார். இதுநாள்வரை எதை தொட்டாலும் தடை என்று இருந்த நிலையை மாறி, இனி நீங்கள் வெற்றி பாதையில் பயணிப்பீர்கள். குறிப்பாக, நீங்கள் வசிப்பதற்கு சொந்தமாக வீடு அமையும். எதிர்பாராதவர்களால் உதவிகள் வரும். படித்த படிப்புக்கு வேலை இல்லையே என்று ஏங்கியவர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். திருமணம், வளைகாப்பு, குழந்தை பேறு இப்படி வீட்டில் சுபநிகழ்ச்சிகள் அமையும். மனதில் இருந்த குழப்பம் அகலும். கணவன்-மனைவிக்குள் இருந்த சச்சரவு தீரும். பொறுமை அதிகரிக்கச் செய்யும். அடமானத்தில் உள்ள பொருட்களை மீட்பீர்கள். ஆரோக்கியத்தில் புத்துணர்ச்சி உண்டாகும். 12-ம் இடத்திற்கு வந்துள்ள கேது, தெய்வீக யாத்திரை செல்லும் பாக்கியத்தை தருவார். அதேநேரம், செலவுகளையும் அதிகரிக்கச் செய்வார் என்பதால் கவனம் தேவை. உணவு விஷயத்திலும் கட்டுபாடு-கவனம் அவசியம்.

பொதுவாக, இந்த இராகு-கேது பெயர்ச்சி உங்களுக்கு எல்லா வளங்களையும் தந்திட ஸ்ரீதுர்காதேவியை பிராத்தனை செய்கிறேன். நல்வாழ்த்துக்கள்.

கும்ப இராசி அன்பர்களே… உங்கள் இராசிக்கு 5-ம் இடத்தில் இராகுவும், 11-ம் இடத்தில் கேதுவும் பெயர்ச்சி ஆகி வந்துள்ளார்கள். 5-ம் இட இராகு, குரு சாரத்தில் அமர்ந்ததால் அடித்தது யோகம் எனலாம். நினைத்தது நடக்கும். கம்பீரமான வாழ்க்கை கொடுக்கும். பலர் போற்றும்படி சில காரியங்கள் நடக்கும். உங்களை கேவலமாக பார்த்தவர்கள், கேளி பேசியவர்கள் வாயடைத்து போவார்கள். இனி கவலையில்லை. தொழில்துறையில் பெரிய முன்னேற்றம் வரும். கடன் குறைந்துவிடும். குடும்பத்தில் குதுகலம் உண்டாகும்.கஷ்டங்கள் என்றுதான் தீருமோஎன்று ஏங்கியவர்களுக்கு இனி கஷ்டங்கள் இல்லை. வாகன விருத்தி, மனை, வீடு அமையும். பிள்ளைகளால் பல நன்மைகள் உண்டு. கணவன் அல்லது மனைவியாலும் நன்மைகள் நடக்கும். இப்படி 5-ம் இட இராகு, பல நல்ல விஷயங்களை வாரி வழங்குவார். 11-ம் இடத்திற்கு வந்துள்ள கேது, நன்மைகள் கொடுத்தாலும் சூரியன் சாரத்தில் இருப்பதால், பேச்சில் கவனம் தேவை. அரசாங்க விஷயத்திலும் சற்று கவனமாக இருங்கள்.

பொதுவாக, இந்த இராகு-கேது பெயர்ச்சி உங்களுக்கு எல்லா வளங்களையும் தந்திட ஸ்ரீதுர்காதேவியை பிராத்தனை செய்கிறேன். நல்வாழ்த்துக்கள்.

மீன இராசி அன்பர்களே… உங்கள் இராசிக்கு 4-ம் இடத்தில் இராகுவும், 10-ம் இடத்தில் கேதுவும் பெயர்ச்சி ஆகி வந்துள்ளார்கள். சுகஸ்தான இராகு, குரு சாரத்தில் இருப்பதால், நன்மைகளை கொடுப்பார். இதுநாள்வரை இருந்த மனசோர்வு, குடும்பத்தில் நிலவிய சச்சரவு தீரும். ஆனாலும் அவ்வப்போது சிறு,சிறு பிரச்னைகளும் வரும். புதிய வாகனம் வாங்குவதற்கும் அல்லது வாகனத்தை நவீனப்படுத்துவதற்கும் வாய்ப்பு அமையும். வசிக்கும் வீட்டிலும் புதிதான மாற்றங்களை செய்வீர்கள். சொந்த வீடு இல்லாதவர்களுக்கு வீடு அமையும். உத்தியோகத்தில் இருந்த பிரச்னைகள் தீரும். மேலதிகாரியின் உதவி கிடைக்கும். பட்டப்படிப்பை முடிக்க வாய்ப்பு கிடைக்கும். சிலருக்கு பெரிய அளவில் சொத்து அமையும். வெளிநாட்டில் நீண்ட ஆண்டுகளாக வேலை பார்த்தவர்கள் தாயகம் திருப்பும் சூழ்நிலை உருவாகும். 10-ம் இடத்தில் கேது உள்ளதால், செலவுகளை அதிகம் தருவார். தாயாருக்கும் உடல்நலனில் பிரச்னைகளை உண்டாக்குவார். எதிலும் சற்று நிதானத்துடன் இருந்தால் நன்மைகள் நடக்கும்.

பொதுவாக, இந்த இராகு-கேது பெயர்ச்சி உங்களுக்கு எல்லா வளங்களையும் தந்திட ஸ்ரீதுர்காதேவியை பிராத்தனை செய்கிறேன். நல்வாழ்த்துக்கள்.

*******




 

Recommended: 4-ம் இடத்தில் இராகு-கேது என்ன செய்யும்.?

மேலும் ஜோதிட கட்டுரைகள் படிக்கவும்…

மேலும் இராசி பலன்கள் படிக்கவும்…

மேலும் வாஸ்து கட்டுரைகள் படிக்கவும்…

மேலும் ஆன்மிக கட்டுரைகள் படிக்கவும்…

ஜோதிட ஆலோசனைக்கு இங்கே பார்க்கவும்…

Send your feedback to: editor@bhakthiplanet.com

For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com

For Astrology Consultation Contact: Astrologer, Sri Durga Devi upasakar, V.G.Krishnarau.  Phone Number: 98411 64648, Chennai, Tamilnadu, India

http://www.youtube.com/bhakthiplanet

https://www.youtube.com/niranjanachannel

http://www.facebook.com/bhakthiplanet

For Astrology Consultation CLICK Here

© 2011-2019 bhakthiplanet.com  All Rights Reserved

Posted by on Feb 18 2019. Filed under Astrology, Bhakthi planet, Headlines, இராசி பலன்கள், கதம்பம், செய்திகள், ஜோதிடம், முதன்மை பக்கம். You can follow any responses to this entry through the RSS 2.0. Both comments and pings are currently closed.

Comments are closed

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2024. All Rights Reserved.| designed & developed by Green Site Tech