Friday 19th April 2024

தலைப்புச் செய்தி :

சென்னைக்கு பாதிப்பா?

Sri Durga Devi upasakar, V.G.Krishnarau.

அன்பர்களே… சில நாட்களாக பல செய்திகள் மழை பற்றி வந்த வண்ணம் உள்ளன. கனமழை வரப் போகிறது என்றும் அதனால் சென்னைக்கு பாதிப்பு உண்டு என்றும் சில கருத்துக்கள் வருகின்றன. ஜோதிட சாஸ்திரம் கூறும் பஞ்சாங்கமும் சென்னை வெள்ளத்தில் பாதிக்கும் என்று கூறுகின்றன. பொதுவாக மழை/கனமழை வந்தால் உலகத்தில் எங்கு தாழ்வான பகுதி இருக்கின்றனவோ அங்கு வெள்ளம் சூழ்ந்துக்கொள்ளும். அதைப் போலவே சென்னையில் சில தாழ்வான பகுதிகளில் வெள்ளம் அல்லது மழை நீர் சூழ்ந்துக்கொள்ளலாம். ஆனால், அம்பாள் அனுகிரகத்தால் பெரும் பாதிப்பு சென்னைக்கு வராது.

சென்னை, மேஷ இராசி, அஸ்வினி நட்சத்திர ஆதிக்கத்தில் உள்ள மாநகரம். இன்று (04.10.2018 வாக்கிய பஞ்சாங்கப்படி) குரு பெயர்ச்சி ஆகிறது. மேஷ இராசியின் பலத்தில் உள்ள சென்னைக்கு 8-ம் இடமாக குரு பகவான் வந்துள்ளார். இராசிக்கு 12-க்குரிய குரு, 8-ம் இடத்தில் அமர்ந்துள்ளது கெடுதல் செய்யாது. 12-க்குரியவன் 8-ல் அமர்ந்தால் விபரீத இராஜயோகம். பெரிய அளவிலான கெடுதல் தடுக்கப்படும். இது குருவின் அருளாளே நடக்கும்.

மேஷ இராசி, செவ்வாயின் அதிகாரத்தை கொண்ட ஆட்சி வீடு. அதே செவ்வாய், மகரத்தில் அமர்ந்து, மேஷ இராசியை பார்வை செய்வதால், பெரும் பாதிப்பு தவிர்க்கப்படும். ஆகவே எனது கணிப்பின்படி சென்னைக்கு எந்த பாதிப்பும் வராது. ஸ்ரீதுர்காதேவி அருளால் சூறை காற்றும் திசை திரும்பி போகும். அன்னையை வணங்குவோம், வளமாக வாழ்வோம்.

மேலும் ஜோதிட கட்டுரைகள் படிக்கவும்…

மேலும் இராசி பலன்கள் படிக்கவும்…

மேலும் வாஸ்து கட்டுரைகள் படிக்கவும்…

மேலும் ஆன்மிக கட்டுரைகள் படிக்கவும்…

ஜோதிட ஆலோசனைக்கு இங்கே பார்க்கவும்…

Send your feedback to: editor@bhakthiplanet.com

For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com

For Astrology Consultation Contact: Astrologer, Sri Durga Devi upasakar, V.G.Krishnarau.  Phone Number: 98411 64648, Chennai, Tamilnadu, India

http://www.youtube.com/bhakthiplanet

https://www.youtube.com/niranjanachannel

http://www.facebook.com/bhakthiplanet

For Astrology Consultation CLICK Here

© 2011-2018 bhakthiplanet.com  All Rights Reserved

Posted by on Oct 4 2018. Filed under Astrology, Bhakthi planet, Headlines, கட்டுரைகள், செய்திகள், ஜோதிடம், முதன்மை பக்கம். You can follow any responses to this entry through the RSS 2.0. Both comments and pings are currently closed.

Comments are closed

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2024. All Rights Reserved.| designed & developed by Green Site Tech