Sunday 25th February 2018
Breaking News:
Kubera worship will give wealth | செல்வந்தராக்கும் குபேரன் வழிபாடு.    New update : குரு பெயர்ச்சி பலன்கள் 2017- 2018    New Update : Rahu-Ketu Transit Predictions 2017-2018 (Rahu-Ketu Peyarchi) ENGLISH VERSION.    New Update : இராகு-கேது பெயர்ச்சி பலன்கள் 2017-2018    New Update : Astrological titbits that you should know    New Update : அறிந்து கொள்ள சில ஜோதிட தகவல்கள் !    New update : DOES BLACK-MAGIC AFFECT YOU?    New update : செய்வினை பாதிப்பு யாருக்கு ஏற்படும் ?    QR Codes: USE THIS QR CODES FOR BhakthiPlanet.Com Horoscope Consultation payment transaction. Click HERE    Our Virtual Payment Address (VPA) UPI Payment Address : bhakthiplanet@upi     New update: Saturn Transit Predictions (Sani Peyarchi) 2017-2020 (English Version)    இரும்பு அணிகலன் அணியலாமா? கண் திருஷ்டி அகல செம்பு அணிகலன் பயன்படுத்தலாமா? - இலவச ஜோதிட கேள்வி-பதில் பகுதி

சனிஸ்வர பகவானை வணங்கினால் ஓடும் தீவினை

Written by Niranjana

நாம் இருக்கும் பூமியிலிருந்து எங்கோ இருக்கின்ற கிரகங்களால் இந்த பூமியில் வாழ்கின்ற மனிதர்களுக்கு எவ்வாறு ஏற்ற-தாழ்வுகளை உண்டாக்கும்? என்ற கேள்வி பரவலாக இருக்கிறது.

கிரகங்கள் மனிதனை பாதிக்காது. அவரவர் உழைப்பும் புத்திசாலித்தனமும்தான் வெற்றி-தோல்விகளுக்கு காரணம் என்பவர்கள் உள்ளனர். சரிதான். ஆனால் அதற்காக கிரகங்களால் பூமிக்கோ அல்லது பூமியின் வாழ்கின்ற மனிதர்கள் மற்றும் பிற ஜீவன்களுக்கோ தாக்கமே இருக்காது என்பது சரியல்ல.

அமாவாசை, பௌர்ணமி போன்ற நாட்களில், கடலின் அலைகள் சற்று வேகமாக இருக்கும். அத்துடன் இந்த நாட்களில் மனநல பாதிப்படைந்தவர்களையும், உடல்நலம் சரியில்லாதவர்களையும் மேலும் சற்று பாதிப்பு அதிகரிக்கும் என்று விஞ்ஞான மருத்துவம் ஒப்புக்கொள்கிறது. இது, கிரகங்களால் மனிதனுக்கு தாக்கம் இருக்கிறது என்கிற மெய்ஞான கருத்தை ஏற்றுக்கொள்கிறது என்பதே உண்மையாகும்.

சனிகிரகமானது, கலிலியோ கலிலி டெலஸ்கோப் மூலம் பார்த்ததில், “ராட்சஸ காதுகள் முளைத்தது போல் ஒரு கிரகம்” இருக்கிறது என்றார். சனிகிரகம் என்று பெயர் வைப்பதற்கு முன்பு, இக்கிரகத்தை “பேய்கிரகம்“ என்று கூட மேலைநாட்டு ஆராய்ச்சியாளர்கள் அழைத்தார்கள். அத்துடன் சனியை வாயு கிரகம் என்றுக்கூட சொல்கிறது விஞ்ஞானம்.

இன்று, நமது சனிஸ்வர பகவானின் அதிசய செயலை கண்டு, அமெரிக்காவின் நாசா விஞ்ஞானிகளே சனிபகவானின் சக்தியை உணர்ந்துவிட்டார்கள்.

நாசா விஞ்ஞானிகளை அதிசயிக்க வைத்த சனி பகவான்

நாசா விஞ்ஞானிகள் பல செயற்கை கோள்களை விண்வெளிக்கு அனுப்பி வருகிறார்கள். அதுபோன்ற ஒரு நாசாவின் செயற்கை கோள், “திருநள்ளாறு அருள்மிகு தர்ப்பாரண்யேஸ்வரர்” கோவிலுக்கு நேர் மேலே உள்ள வான்பகுதியை கடக்கும் போது, மூன்று வினாடிகள் ஸ்தம்பித்துவிட்டு திணறி, அந்த மூன்று வினாடிகளுக்கு பிறகு மீண்டும் தன் வழக்கமான செயல்பாட்டை செய்கிறது. இருந்தாலும் செயற்கை கோளுக்கு எந்தவித பழுதும் ஏற்படுவதில்லை. அதை அறிந்த விஞ்ஞானிகள், எதனால் இதுபோல் சம்பவம் நடக்கிறது? என்று ஆராய்ந்தபோது,

சனிகிரகத்தில் இருந்து, கண்களுக்கு தெரியாத  “கருநீலக்கதிர்கள்” திருநள்ளாறு கோவில் மீது விழுகிறது. அதுவும் இரண்டரை வருடங்களுக்கு ஒருமுறை ஏற்படும் சனிபெயர்ச்சியன்று, கருநீலக்கதிர்களின் அடர்த்தி 45நாட்கள்வரை அதிகமாக இருக்கிறது. மனிதனுக்கு அப்பாற்பட்ட – மனித சக்தி மிஞ்சிய ஒரு சக்தி உண்டு என்பதை உணர்ந்து, திருநள்ளாறு வந்த நாசா விஞ்ஞானிகள், சனி பகவானை வணங்கினார்கள்.

எல்லா கிரகங்களுக்கும் சக்தி இருக்கிறது. அதுவும் சனிபகவானுக்கு அதிகமாகவே ஆற்றல் இருக்கிறது. அதனால்தான், “சனியை போல் கொடுப்பார் இல்லை, சனியை போல் கெடுப்பார் இல்லை” என்றார்கள் நம் இந்தியதிருநாட்டின் மெய்ஞானிகள்.

இன்றைய மேலைநாட்டு விஞ்ஞானம் வளர்ச்சியடைவதற்கு முன்னதாகவே, நமது பாரததேசத்தில் குறிப்பாக, தமிழ் ஜோதிட வல்லுனர்கள் – தமிழ் சித்தர்கள் – ஞானிகள் – மகான்கள் போன்றோர் பஞ்சாங்கத்தை கணித்து, அனைத்து கிரகங்களின் ஆற்றல் – நிறம் – தூரம் – அதன் அளவு போன்றவற்றை கணித்தார்கள். அதுவும், சனிபகவான் நீலவர்ணத்திலும், கருமை வர்ணத்திலும் இருப்பார் என்று நம்மவர்களே சொல்லிவிட்டார்கள்.

கதவுகள் இல்லாத ஊர். மக்களை காக்கும் சனி மகாராஜர் 

ஒரு சூரியன் ஆயிரம்கோடி ஜீவன்களுக்கு வெளிச்சம் தருவது போல், சனிபகவானும் ஒவ்வொரு ஜீவராசிகளையும் அவற்றின் செயல்களையும் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார். அவர் நம்முடன் எப்போதும் இருக்கிறார் என்று ஆணித்தரமாக இன்றைக்கும் நிரூபித்து வருகிறார் மகராஷ்டரா மாநிலத்தில்.

மகாராஷ்டிரா மாநிலத்தில், சிங்கனாப்பூர் என்கிற ஊர் இருக்கிறது. இது, ஷீரடியில் இருந்து சுமார் எழுபது கிலோ மீட்டர் தொலையில் உள்ளது. இங்குள்ள சனிபகவானை, “சனிமகாராஜ்” என்று மக்கள் அழைக்கிறார்கள். சிங்கனாப்பூரின் கிழக்கே பனாஸ்நாலா ஆற்றில், சுமார் 160 வருடங்களுக்கு முன்பு விடாமல் பெய்த மழையால், பனாஸ்நாலா ஆற்றில் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அப்போது அந்த ஆற்றில் ஒரு பெரிய கல் மிதந்து கொண்டு வந்து, கரையோரமாக இருந்த கொடியில் சிக்கி கொண்டது.

அச்சமயம், அந்த பக்கமாக ஆடு மெய்க்கும் ஒரு சிறுவன் வந்துக் கொண்டு இருந்தான். “அட கல் மிதந்து வந்திருக்கிறதே?” என்று அதிசயப்பட்டு, ஊரில் இருந்த மக்களிடம், தான் கண்ட காட்சியை சொன்னான். ஊர்மக்கள் அந்த கல்லை எடுத்தவுடன்,

“நான் சனீஸ்வரன். உங்களை ஒரு மகாராஜனை போல் காப்பேன். என்னை நம்புகிறவர்களுக்கு பக்கபலமாகவே இருப்பேன். என் ஊர் மக்களுக்கு எந்த ஆபத்தும் வராமல் காப்பேன். இது உறுதி.” என்று வானில் ஓர் அசரிரீ கேட்டது.

“நம்மை காக்க சனிபகவானே வந்திருக்கிறார்” என்பதை உணர்ந்த மக்கள், சனிஸ்வர பகவானின் உருவம் இல்லா கல்லை ஒரு இடத்தில் வைத்து பூஜிக்க ஆரம்பித்தார்கள்.

சனி பகவானின் வாக்கின்படி இன்றுவரை ஒரு அரசரை போன்று சனிமகராஜ் அந்த ஊரை காப்பாற்றி வருகிறார். இந்த ஊரில் பல வீடுகளிலும் பெரிய பெரிய கடைகளிலும் கூட கதவுகள் இல்லை. திரைச்சீலைதான் கதவு. கதவுகள் இல்லாமல் இருந்தாலும் இன்றுவரை ஒரு பொருள் கூட களவு போனதில்லை என்கிறார்கள்.

“அப்படியே யாராவது திருடினால், திருடியவனுக்கு அதுதான் கடைசி திருட்டு. மீண்டும் வேறு இடம் தேடி போய் திருட அவனுக்கு கண் பார்வை இருக்காது” என்கிறார்கள் அந்த ஊர்மக்கள்.

காளிபக்தரை ஆட்டுவித்த சனிஸ்வரர் 

மகாகாளியின் பக்தராகவும் செல்லபிள்ளையாகவும் இருந்த   விக்கிரமாதித்தனையே ஒரு வேலைக்காரனை போல் மாற்றிவிட்டார் சனிஸ்வரர் என்றால் நாமெல்லாம் எந்த மூலைக்கு.

காடாறு மாதம் நாடாறு மாதம் என்று இருந்தாலும், யாருக்கும் அடிமையாக இல்லாமல் அரசனாகவே இருந்து வந்தார் விக்கிரமாதித்தன்.

“உன் ஜாதகப்படி இன்னும் சில நிமிடத்தில் ஏழரை சனி பிடிக்கப்போகிறது, சனி பகவானிடம் அன்பாக பேசு. நீ என்னுடைய பக்தனாக இருந்தாலும், சனிஸ்வரர் தரும் இன்னல்களில் இருந்து தப்பிக்க முடியாது. நீ பொறுமையாக அனுபவித்துதான் ஆக வேண்டும்.“ என்றாள் விக்கிரமாதித்தனின் இஷ்ட தெய்வமான மகாகாளி.

காளிதேவி கூறியது போல்,  விக்கிரமாதித்தன் முன் தோன்றினார் சனிபகவான். “விக்கிரமாதித்தா… உன் ஜாதக விதிப்படி ஏழரை ஆண்டுகள் உன்னை ஆட்டுவிக்க வந்திருக்கிறேன். நீ இன்றுமுதல் என் பிடியில் மாட்டினாய்“ என்றார்.

விக்கிரமாதித்தன், ஐம்பதுக்கும் மேற்பட்ட நாடுகளுக்கு அரசனாக இருந்தாலும், அவர் அதிகாரத்தின் கீழ் இருக்கும் மதுராபுரி சிற்றரசன் மதுரேந்திர ராஜாவிடம் வேலைகாரனாக ஏழரை வருடங்கள் பணிசெய்தார்.

 இப்படி சனிஸ்வரரால் விக்கிரமாதித்தன் மட்டுமல்ல, நளசக்கரவர்த்தியும் அவதிப்பட்டார். பல வருடங்கள் குடும்பத்தைவிட்டு பிரிந்து, வாழ வழியில்லாமல் குடும்பமே சிதறி கஷ்டப்பட்டு, பிறகு ஒருநாள் நளனின் குடும்பம் இணைந்தது. நளன் தன் குடும்பத்தோடு ஒரு ஆலயத்திற்கு சென்றபோது, அங்கு இருந்த பரத்வாச முனிவர் நளனிடம்,

“நீ திருநள்ளாறு செல். அங்கு இருக்கும்  பிரம்ம தீர்த்தத்தில் நீராடி, தர்ப்பாரண்யேஸ்வரரை வணங்கி, திருநீற்றை அணிந்துக்கொள். உன்னை பிடித்து ஆட்டும் சனிபகவான் விலகுவார்.“ என்றார்.  முனிவர் கூறியது போல் திருநள்ளாறு சென்று, பிரம்ம தீர்த்தத்தில் நீராடி, தர்ப்பாரண்யேஸ்வரரை வணங்கினார் நளன். தன் கடமை முடிந்தது என விலகினார் சனிபகவான். சனி பிடித்திருந்ததால் உருவம் மாறி, கறுத்து போயிருந்த  நளனின் சரீரம்,  சனி பகவான், நளனை விடுதலை செய்த பிறகு பழைய தேஜசுக்கு திரும்பியது.

சனிஸ்வர பகவானை சனி பெயர்ச்சி அன்று மட்டும் வணங்காமல், சனிகிழமைதோறும் சனிஸ்வர பகவானுக்கு நல்லெண்ணை தீபம் ஏற்றி வணங்க வேண்டும். சனிஸ்வரர் பாதிப்பு உள்ளவர்கள், தினமும் காக்கைக்கு கருப்பு எள் கலந்த சாதத்தை வைக்க வேண்டும். மாற்றுதிறனானிகளுக்கு நம்மால் இயன்ற உதவிகளை செய்ய வேண்டும்.

சனிகிழமையில் சனிஸ்வர பகவானுக்கு கருப்பு நிறத்திலோ, நீலநிறத்திலோ வஸ்திரத்தை அணிவித்தால், அந்த பக்தரின் கௌரவம் காக்கப்படும். முடிந்த அளவு சனிகிழமையில் சனி ஓரையில் நல்லெண்னை தீபத்தை சனிஸ்வர பகவான் முன் ஏற்றினால், சனிஸ்வர பகவானின் அருள் கிடைக்கும். அருள்மிகு சனிஸ்வர பகவானை வணங்கி, அவர் அருளாசியை பெற்று வாழ்வாங்கு வாழ்வோம்.

Guru Peyarchi Palangal & Pariharam 2016-2017 All Rasi palangal Click Here 

Tamil New Year Rasi Palangal & Pariharam 2016 – 2017 All Rasi palangal Click Here

RAHU KETU PEYARCHI 2016 – 2017 All Rasi Palangal

2016 New Year Rasi Palangal & Pariharam All Rasi Palan Click Here 

 சாமுத்ரிகா லட்சணம் கிளிக் செய்யவும் 

மச்ச பலன்கள் கிளிக் செய்யவும் 

SANI PEYARCHI 2014 TO 2017 RASI PALANCLICK HERE

ஜோதிட கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்

வாஸ்து கட்டுரை படிக்க கிளிக் செய்யவும் 

ஆன்மிக பரிகாரங்கள் படிக்க கிளிக் செய்யவும் 

For Astrology Consultation Contact: Astrologer, Sri Durga Devi upasakar, V.G.Krishnarau.  Phone Number: 98411 64648, Chennai, Tamilnadu, India 

For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com

http://www.youtube.com/bhakthiplanet

http://www.youtube.com/niranjanachannel

http://www.facebook.com/bhakthiplanet

For Astrology Consultation CLICK Here

© 2011-2016 bhakthiplanet.com  All Rights Reserved

 

Comments are closed

Loading

Naidu Community Matrimony
Free Register For Naidu Community REGISTER NOW
www.manamakkalmalai.com

Ads by bhakthiplanet.com

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2018. All Rights Reserved.| designed & developed by Green Site Tech