Friday 29th March 2024

தலைப்புச் செய்தி :

இச்சாசக்தி-ஞான சக்தி- கிரியா சக்தி அருளை தரும் நவராத்திரி. சரஸ்வதி பூஜை முறைகள்

நவராத்திரி சிறப்பு கட்டுரை – பகுதி 2

முந்தைய பகுதிக்கு கிளிக் செய்யவும் niranjana

Written by Niranjana

 விஜயதசமிஎன்றபெயர்காரணம்

பாண்டவர்கள் வன்னிமரத்தில் தங்களுடைய ஆயுதத்தை மறைத்து வைத்துவிட்டு விராட நகரத்தில் அஞ்ஞான வாசம் செய்தார்கள். இதை அறிந்த துரியோதனன் எப்படியாவது பாண்டவர்களை வெளியே கொண்டு வர வேண்டும் என்ற எண்ணத்தில் விராட நகரத்தில் இருந்த பசுமாட்டை எல்லாம் சிறைபிடித்தான். அவனின் நோக்கம், வீண் சண்டை இழுத்து பாண்டவர்களை வெளிகொண்டு வர வேண்டும் என்பதுதான். அமைதியாக இருந்தாலும் அதை பொருக்காத சிலர் வீண் சண்டைக்கு இழுப்பதுதானே சிலரின் குணம். இதை யாராலும் மாற்ற முடியாது அல்லவா. அதுபோல் துரியோதனனும் பாண்டவர்களை போருக்கு அழைத்தான்.

Bhakthi Planetஇதனால் கோபம் கொண்ட விஜயனான அர்ஜுனன், விராடன் மகன் உத்தரனை முன்னிறுத்தி கொண்டு வன்னிமர பொந்தில் மறைத்து வைத்திருந்த ஆயுதங்களை எடுத்து கௌரவப்படையை வென்றார். தசமி அன்று வென்றதால் ஊர்மக்கள், “நம் விஜயன், தசமி அன்று கௌரவப்படையை வீழ்த்தினார். இனி பாண்டவர்களுக்கு வெற்றிதான்” என்று பேச ஆரம்பித்தார்கள். அன்றிலிருந்து விஜயதசமிஎன்ற பெயர் ஏற்பட்டது. மகாநவமி அன்று ஆயுதங்களுக்கு பூஜை செய்ததால் ஆயுதபூஜை என்ற பெயரும் ஏற்பட்டது.

இச்சாசக்தி- ஞான சக்தி- கிரியா சக்தி உருவான கதை 

ஒரு சமயம், மிகப்பெரிய பேரழிவு ஏற்பட்டது. திரும்ப உலகத்தை உருவாக்கும் பெரிய கடமை இறைவனுக்கு உண்டானது. அதனால் இச்சா சக்தி-விருப்பம் நிறைவேறுதல், ஞான சக்தி-  ஞானம்,அறிவுபெறுதல், கிரியா சக்தி- ஆக்கம்,greensite உருவாக்குதல் என்ற பூலோக மக்களுக்கு தேவையானதை முதலில் உருவாக்கினார் என்கிறது புராணம். இதனால் நவராத்திரி அன்று முப்பெரும் தேவிகளின் ஆசியை பரிபூரணமாக பெறுகிறோம்.

சரஸ்வதி பூஜைமுறை 

சரஸ்வதி பூஜையன்று பூஜை ஆரம்பிக்கும் முன் மஞ்சளில் விநாயகரை
பிடித்து விநாயகருக்கு குங்கும்,அறுகம்புல் மலர்கள் சமர்பிக்க வேண்டும். நாம் பயன்படுத்தும் கல்வி அல்லது கணக்கு புத்தகங்களில் பொட்டு வைத்து சரஸ்வதிதேவி படத்தின் முன் வைக்க வேண்டும்.

வீடுகளிலும், அலுவலகங்களிலும் சரஸ்வதி படத்துக்கு சந்தனம் தெளித்து மஞ்சள்-குங்குமம் பொட்டு வைத்து, மல்லிகை பூ, வெண்தாமரை வைத்து அலங்கரிக்க வேண்டும்.

நெய்வேதியம்

சுண்டல், சக்கரைப் பொங்கள், வடை, பொறி, கடலை, அவல், நாட்டுசக்கரை, பழங்களையும் வைத்து பூஜிக்க வேண்டும்.

ஆயுத பூஜை 

niranjana channelஆயுத பூஜையில் அன்று வீட்டில் சமையலுக்கு பயன்படுத்தும் கத்தி, சமையல் பாத்திரங்களில் ஒரு சில பாத்திரங்கள் மற்றும் வீட்டின் உபயோக பொருட்களுக்கு விபூதி தெளித்து சந்தனம் பொட்டு வைத்து குங்குமம் வைக்க வேண்டும். நம் அலுவலகத்தில் உள்ள பொருட்களுக்கும் வாகனங்களுக்கும் பூஜை செய்ய வேண்டும். காரணம், அந்த பொருட்களை வாங்குவதற்கு பொருளாதர வசதி தந்த முப்பெரும் தேவிகளுக்கு மரியாதையும் நன்றியும் செய்வதாக ஐதீகம்.

பூஜை மந்திரம்

கணபதி மந்திரமும், சரஸ்வதிக்கு உகந்த காயத்திரி மந்திரங்களும் சொல்லலாம். இந்த மந்திரங்களை சொல்வதால் பூஜை செய்த பலன் இன்னும் சிறப்பாக கிடைக்கும்.

ஓம் கணபதி காயத்ரி

ஓம் ஏகதந்தாய வித்மகே!
வக்ர துண்டாய தீமகி!
தன்னோ தந்தி ப்ரசோ தயாத்!

சரஸ்வதி மந்திரம்

ஓம் வாக்தேவ்யை ச வித்மஹே
பிரஹ்மபத்ன்யை ச தீமஹி
தன்னோ வாணீஹ் ப்ரசோதயாத்

விஜயதசமி 

மறுநாள் விஜயதசமி அன்று நல்ல நேரம் பார்த்து பூஜையில் வைத்த புத்தகத்தையும்,Manamakkal Malai பொருட்களையும் உபயோகப்படுத்த வேண்டும். புதிய தொழில் தொடங்கவும் விஜயதசமி சிறந்த தினமாகும். குழந்தைகளை பள்ளியில் சேர்க்க இந்த தினம் சிறப்பானது. இப்படி நல்ல செயல்களை விஜயதசமி அன்று செய்தால் அதற்குரிய பலன் வைரம் போல் ஜொலிக்கும்.

ஏற்றமான வாழ்க்கை அமைய கலைவாணியின் அருளை இப்போதே பெறுவோம். அனைவருக்கும் ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி திருநாள் நல்வாழ்த்துக்கள்.!

Guru Peyarchi Palangal & Pariharam 2016-2017 All Rasi palangal Click Here 

Tamil New Year Rasi Palangal & Pariharam 2016 – 2017 All Rasi palangal Click Here

RAHU KETU PEYARCHI 2016 – 2017 All Rasi Palangal

2016 New Year Rasi Palangal & Pariharam All Rasi Palan Click Here 

 சாமுத்ரிகா லட்சணம் கிளிக் செய்யவும் 

மச்ச பலன்கள் கிளிக் செய்யவும் 

SANI PEYARCHI 2014 TO 2017 RASI PALANCLICK HERE

ஜோதிட கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்

வாஸ்து கட்டுரை படிக்க கிளிக் செய்யவும் 

ஆன்மிக பரிகாரங்கள் படிக்க கிளிக் செய்யவும் 

For Astrology Consultation Contact: Astrologer, Sri Durga Devi upasakar, V.G.Krishnarau.  Phone Number: 98411 64648, Chennai, Tamilnadu, India 

For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com

http://www.youtube.com/bhakthiplanet

http://www.youtube.com/niranjanachannel

http://www.facebook.com/bhakthiplanet

For Astrology Consultation CLICK Here

© 2011-2016 bhakthiplanet.com  All Rights Reserved

Posted by on Sep 26 2016. Filed under Headlines, ஆன்மிக பரிகாரங்கள், ஆன்மிகம், ஆன்மிகம், கட்டுரைகள், முதன்மை பக்கம். You can follow any responses to this entry through the RSS 2.0. Both comments and pings are currently closed.

Comments are closed

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2024. All Rights Reserved.| designed & developed by Green Site Tech