Wednesday 22nd January 2025

தலைப்புச் செய்தி :

ஆங்கில புத்தாண்டு இராசி பலன்கள் – 2016


Sri Durga Devi upasakar,Astrologer, Sri Durga Devi upasakar, V.G.Krishnarau. Phone Number: 98411 64648, Chennai

V.G.Krishnarau. 

01.01.2016, வெள்ளிக்கிழமை அன்று ஆங்கில புத்தாண்டு பிறக்கிறது. வெள்ளி என்றாலே ஸ்ரீமகாலஷ்மிக்கு விருப்பமான நாள். அருமையான தினத்தன்று புத்தாண்டு பிறக்கிறது. இந்த புத்தாண்டு பிறப்பின் விசேஷம் என்னவென்றால், 12 இராசிகாரர்களுக்கும் “கெஜகேசரி யோகம்” என்கிற சிறப்புக்குரிய யோகத்தை கொடுத்து மகிழ்விக்க போகிறது.

சிம்ம இராசி, கன்னி லக்கினம், உத்திரம் நட்சத்திரத்தில் பிறக்கும் ஆங்கில புத்தாண்டு, அமோகமாக இருக்கும். செவ்வாய், சுக்கிரன் பரிவர்த்தனை பெறுவதால், நாட்டில் தொழில் வளம் விருத்தியாகும். அன்னிய நாட்டவரின் அதட்டல் அடங்கிவிடும். விண்வெளி ஆராய்ச்சிகள் வெற்றி பெறும். மக்களுக்கு தேவையான வசதிகள் பெருகும். விவசாயம் செழித்தோங்கும்.

இப்படி மகிழ்ச்சியான புத்தாண்டாக இருப்பினும், லக்கின இராகு நோய் நொடிகளை கொடுக்கும். ஆனாலும் பெரிய பாதிப்பு இல்லாமல் தக்க நடவடிக்கையால் அமுங்கி விடும். ஸ்ரீதுர்காதேவி அனுகிரகத்தால் குருவும், சந்திரனும் அனுகூலமான சேர்க்கையால் யோகத்தை தரும். எப்படிபட்ட பிரச்னையாக இருந்தாலும் தாக்காது. ஸ்ரீதுர்காதேவியை வணங்குவோம், ஆனந்தம் அடைவோம். நல்வாழ்த்துக்கள்!

Meshamமேஷ இராசி அன்பர்களேஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள். இந்த 2016-ஆம் ஆண்டில், உங்கள் இராசிக்கு பஞ்சஸ்தானத்தில் குரு, சந்திரன் இணைந்து, கெஜகேசரி யோகத்தை தந்திருப்பதால், எதிர்பாரா யோகம் வந்தடையும். தடைபட்ட காரியங்கள் கைக்கு வந்து சேரும். 5-க்குரிய சூரியன்,9-ஆம் இடத்தில் உள்ளார். வீடு, மனை வாங்கும் யோகம் உண்டு. 12-ஆம் இடத்தில் உள்ள கேது, தெய்வ ஸ்தலங்களுக்கு சென்று வரும் பாக்கியத்தை தருவார். 6-இல் இராகு இருப்பதால், கடன் பிரச்னை சற்று குறையும். 10-ஆம் இடத்தில் உள்ள புதன், தடைபட்ட கல்வியை தொடரச் செய்யும். புதிய தொழில் துவங்குவீர்கள். தளர்ந்த தொழில் புத்துயிர் பெறும். அஷ்டம சனியாக இருப்பதால், ஜாமீன் கையெழுத்து, கூட்டாளி விஷயங்களில் கவனம் தேவை.  ஸ்ரீதுர்கா தேவி அருளால் மகிழ்ச்சியான வாழ்க்கை பொங்கும்.

உங்கள் இராசிக்கான பரிகாரம் : ஸ்ரீதுர்கை அம்மனுக்கு, செவ்வாய் கிழமையில் எழுமிச்சை தீபம் ஏற்றுங்கள். அத்துடன், மாதத்தில் ஒரு செவ்வாய்கிழமை இராகுகாலத்தில் ஸ்ரீதுர்கைக்கு எழுமிச்சை மாலை அணிவியுங்கள். உங்கள் வாழ்க்கையில் வசந்த காற்று வீசும்.

reshabamரிஷப இராசி அன்பர்களேஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள். இந்த 2016-ஆம் ஆண்டில், உங்கள் இராசிக்கு சுகஸ்தானத்தில் குரு, சந்திரன் இணைந்து கெஜகேசரி யோகத்தை தந்திருப்பதால், தடைபட்ட கட்டட வேலை வேகமாக கட்டி முடிக்கப்படும். வாகனம் விருத்தி உண்டு, குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். வெளிநாட்டில் வேலை வாய்ப்பு அமையும். 6-ஆம் இடத்தில் செவ்வாய் இருப்பதால், நீண்ட நாட்களாக வாட்டி வதைத்த நோய் நொடி நீங்கும். விரோதியும் அடி பணிவான். அஷ்டமஸ்தானத்தில் சூரியன் உள்ளதால், குடும்பத்தில் சற்று சிறு,சிறு பிரச்னைகள் எழலாம். ஆனாலும் பெரிய பாதிப்பு வராது. பஞ்சமஸ்தானத்தில் இராகு அமையப்பெற்றுள்ளார். பூர்வீக சொத்தால் லாபம் வரும். சப்தமத்தில் சனி, சுக்கிரன் இருப்பதால், கூட்டு தொழில் லாபம் பெறும். 2016-ஆம் ஆண்டு உங்களுக்கு முருகன் அருளால் முன்னேற்றமான வாழ்க்கையாக அமையும்.

உங்கள் இராசிக்கான பரிகாரம் : முருகப்பெருமானை வணங்குங்கள். ஒரு முறையாவது திருத்தணிக்கு சென்று உங்கள் பெயருக்கு அர்ச்சனை செய்யுங்கள். செவ்வாய்கிழமையில் முருகனுக்கும், செவ்வாய் பகவானுக்கும் வாசனை மலர்களை சமர்ப்பியுங்கள். முருகப்பெருமானின் ஆசியால் தடை கற்கள் படிகல்லாக மாறி உங்கள் வாழ்க்கையில் ஏற்றம் ஏற்படும்.

Methunamமிதுன இராசி அன்பர்களே ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள். இந்த 2016-ஆம் ஆண்டில், உங்கள் இராசிக்கு 3-ஆம் இடமான வெற்றி, புகழ்-கீர்த்தி ஸ்தானத்தில் குரு, சந்திரன் அமர்ந்து, கெஜகேசரியோகத்தை தந்துள்ளனர். இந்த கெஜகேசரி யோகமானது உங்களுக்கு புகழ், கீர்த்தி ஸ்தானத்தில் அமைந்திருப்பதால், மற்றவர்கள் பெருமைபட வாழ்வீர்கள். சகோதரவர்கத்தால் நன்மை கிடைக்கும். இருப்பினும், சுகஸ்தானத்தில் இராகு இருப்பதால் உடல் நலனில் கவனம் தேவை. 6-ஆம் இடத்தில் சனி, சுக்கிரன் இணைந்து இருக்கின்ற காரணத்தால், எடுத்த காரியத்தை வெற்றி பெறச் செய்யும். திருமணம் நடைபெறும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சி நடக்கும். அஷ்டமஸ்தானத்தில் புதன் உள்ளதால், அயல் நாட்டு தொழில் தொடர்பு வர வாய்ப்புண்டு. வெளிநாட்டில் வேலை வாய்ப்பு வரலாம். 10-ஆம் இடத்தில் கேது இருப்பதால், செய்யும் தொழிலில் நிதானம் தேவை. அகலகால் வைக்கக் கூடாது. விநாயகப் பெருமானை வணங்குங்கள், அனைத்தும் நன்மையாக வந்தடையும்.

உங்கள் இராசிக்கான பரிகாரம் : விநாயகப்பெருமானுக்கு அருகம்புல் மாலை அணிவியுங்கள். வியாழக்கிழமையில் விநாயகர் கோயிலுக்கு சென்று தேங்காயை இரண்டாக உடைத்து, அதில் தேங்காய் எண்ணெய் ஊற்றி தீபம் ஏற்றுங்கள். எடுக்கும் காரியம் தேங்காமல் கணபதியில் அருளால் சட்டேன்று நிறைவேறும். சூரத்தேங்காயும் உடைத்தால் கூடுதல் பலன் கிடைக்கும்.

Katakamகடக இராசி அன்பர்களே ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள். இந்த 2016-ஆம் ஆண்டில், உங்கள் இராசிக்கு தனஸ்தானம் என்கிற இரண்டாம் இடத்தில் குரு, சந்திரன் இணைந்து கெஜகேசரி யோகத்தை உண்டாக்குவதால், மண்ணும் பொன்னாகும். குடும்பத்தில் சுபிட்சமான செலவுகள் ஏற்படும். கடன் சுமை தீரும். புதிய தொழில் உருவாகும். எதிர்பார்த்த நற்காரியங்கள் நிறைவடையும். சுகஸ்தானஸ்தில் செவ்வாய் உள்ளார். வாகன விஷயங்களில் செலவுகள் வரலாம். புதிய வாகனம் வாங்கும் யோகமும் உண்டு. பஞ்சமஸ்தானத்தில் சனி, சுக்கிரன் அமையப்பெற்றுள்ளதால், கவலையே வேண்டாம். வழக்கு பிரச்னை அனைத்தும் பஞ்சு போல் பறந்து விடும். பணம் தாராளமாக வந்தடையும். பாக்கிய ஸ்தானத்தில் ஞானகாரகனான கேது அமையப்பெற்றுள்ளார். குலதெய்வம் அருளால் நன்மைகள் தேடி வரும். 6-ஆம் இடத்தில் குடும்பாதிபதியான சூரியன் இருப்பதால், யாருக்கும் பெரிய அளவில் கடன் கொடுக்கும் வேலை வேண்டாம். மற்றபடி இந்த 2016-ஆம் ஆண்டில் உங்கள் குலதெய்வத்தின் அருளால் மகிழ்ச்சியான வாழ்க்கையாக அமையும்.

உங்கள் இராசிக்கான பரிகாரம் : உங்கள் குலதெய்வத்திற்கு பால் அபிஷேகம், சந்தனம், பன்னீர் அபிஷேகமும், குங்கும அர்ச்சனையும் செய்து, வஸ்திரம் அணிவியுங்கள். முடிந்தால் பொங்கல் வைத்து வழிபடுங்கள். குலதெய்வத்தின் அருளால் உங்கள் இல்லத்திலும் உள்ளத்திலும் மகிழ்ச்சி பொங்கும்.

Simamசிம்ம இராசி அன்பர்களே ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள். இந்த 2016-ஆம் ஆண்டில், உங்கள் ஜென்ம இராசியில் சந்திரனுடன், குருவும் இணைந்து, கெஜகேசரி யோகத்தை உண்டாக்குவதால், புதிய உத்வேகம் எழும். குடும்பத்தில் சுபிட்சம் பெருகும். தடைப்பட்டு வந்த திருமணம், தடை இல்லாமல் நடக்கும். தனஸ்தானத்தில் இராகு இருக்கின்ற காரணத்தால், குடும்பத்தினரை மகிழ்ச்சி அடைய செய்வீர்கள். கீர்த்தி ஸ்தானத்தில் செவ்வாய் உள்ளார். மற்றவர்கள் பாராட்டும் படி சாதனை படைப்பீர்கள். சுகஸ்தானத்தில் சனி, சுக்கிரன் இணைந்திருப்பதன் காரணத்தால், சொத்துக்கள் வாங்கும் யோகம் உண்டு. 6-ஆம் இடத்தில் புதன் உள்ளார். கடன் பிரச்னை சற்று இருக்கலாம். தேவை இல்லாமல் விரோதம் வளர்க்க வேண்டாம். பரபரப்பு அவசரம் கூடாது. காரணம், இந்த தன்மைகளை புதன் உருவாக்குவார். ஆகவே கவனம் தேவை.

உங்கள் இராசிக்கான பரிகாரம் : வெள்ளிக்கிழமையில், சுக்கிர பகவானை வணங்குங்கள். சனிக்கிழமையில் பெருமாளை வணங்குங்கள். பெருமாளுக்கு கல்கண்டு படைத்து வணங்கி, அந்த பிரசாதத்தை சாப்பிடுங்கள். முடிந்தளவில் தயிர் சாதத்தையும் படையுங்கள். இறைவனின் அருளால் உங்கள் வாழ்க்கையில் நல்ல திருப்பங்கள் உருவாகும்.

Kanniகன்னி இராசி அன்பர்களே ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள். இந்த 2016-ஆம் ஆண்டில்,குரு, சந்திரன் இணைந்து கெஜகேசரி யோகத்தை தந்தனர். முக்கியமாக வெளிநாட்டில் தொழில் தொடர்புகளும், வேலை வாய்ப்பும் தரும் யோகம் இது. ஜென்மத்தில் இராகு உள்ளார். தேவைக்கு அதிகமாக கடன் வாங்காதீர்கள். குடும்பஸ்தானத்தில் செவ்வாய் இருப்பதால், இதுநாள் வரையில் குடும்பத்தில் இருந்த குழப்பம் தீரும். கீர்த்தி ஸ்தானத்தில் சனி, சுக்கிரன் உள்ளனர். சொத்துக்கள் வாங்கும் யோகம் உண்டு. சுகஸ்தானத்தில் சூரியன் அமைந்ததால், கல்வியில் தடை ஏற்படுத்தச் செய்வார். இறைவன் அருளால், குரு பார்வை இருப்பதால் எப்படியும் கல்வியை தொடர்வீர்கள். பஞ்சமஸ்தானத்தில் புதன் இருக்கின்ற காரணத்தால், பூர்வீக சொத்தில் சிறு வாக்கு வாதம் உருவாகி பிறகு சுமுகமாகும். சப்தமஸ்தானத்தில் கேது அமைந்ததால், கூட்டு தொழில் விஷயத்தில் சற்று எச்சரிக்கை தேவை. குடும்பத்தில் சுப நிகழ்ச்சிக்காக கடன் ஏற்படும். சிவபெருமான் அருளால் சிறப்பான ஆண்டாக அமையும்.

உங்கள் இராசிக்கான பரிகாரம் :  திங்கட் கிழமையில் ஈஸ்வரன் ஆலயத்திற்கு சென்று வில்வ இலையை சிவலிங்கத்திற்கு அணிவியுங்கள். விநாயகப்பெருமானுக்கு அருகம்புல் அணிவித்து வணங்குங்கள். ஒருவருக்காவது, உங்கள் ஜென்ம நட்சத்திரம் வரும் நாளில் அன்னதானம் செய்யுங்கள். உங்களை வாட்டி வதக்கும் கஷ்டங்கள் விலகி இறைவனின் அருளால் நன்மைகள் தேடி வரும்.

Thulaதுலா இராசி அன்பர்களே ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள். இந்த 2016-ஆம் ஆண்டில், குரு, சந்திரன் இணைந்து லாபத்தில் உள்ளனர். ஆகவே, இந்த கெஜகேசரி யோகத்தால் முன்னேற்ற பாதைக்கு வழி தெரிந்து விட்டது. இனி யோக காலம்தான். தொழில்துறையில் மாற்றம் உண்டு. உத்தியோகத்தில் இடபெயர்ச்சி ஏற்படுத்தும். திருமணம் நடைபெற சாத்திய கூறு உண்டு. ஜென்ம இராசியில் செவ்வாய் இருப்பதால், உடல்நலனில் கவனம் தேவை. முன்கோபம் வேண்டாம். ஏழரை சனி உள்ளதால், குடும்பத்தில் சலசலப்பு ஏற்படுத்தும். ஆகவே மௌனம் தேவை. கீர்த்தி ஸ்தானத்தில் சூரியன் அமைந்த காரணத்தால், எடுத்த காரியத்தை போராடி நிறைவேற்றுவீர்கள். சுகஸ்தானத்தில் புதன் உள்ளார். கல்வியால் பலன் உண்டு. உறவினர் வருகையால் சிறு பிரச்னை உருவாக்கும். 6-ஆம் இடத்தில் உள்ள கேது பகவான், வழக்கில் சற்று இழுப்பறி தருவார். ஸ்ரீஆஞ்சனேயரின் அருளால் இந்த ஆண்டு சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்.

உங்கள் இராசிக்கான பரிகாரம் : சனிக்கிழமையில் சனிஸ்வர பகவான் சன்னதி சென்று எள் தீபம் ஏற்றுங்கள். காக்கைக்கு எள் சாதத்தை சனிக்கிழமைதோறும் வையுங்கள். ஸ்ரீஆஞ்சனேயர் கோயிலுக்கு சென்று உங்கள் பெயருக்கு அர்ச்சனை செய்யுங்கள். உங்கள் வாழ்க்கை சிறப்பாக அமைய இறைவன் அருள் பரிவான்.

Viruchikamவிருச்சிக இராசி அன்பர்களே ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள். இந்த 2016-ஆம் ஆண்டில், உங்கள் இராசிக்கு 10-ஆம் இடத்தில் குரு, சந்திரன் இணைந்து, “கெஜகேசரி யோகம்” அமைந்ததால், மனமகிழ்ச்சி ஏற்படும். தடைகள் நீங்கும். பொன் – பொருள் சேரும். குடும்பத்தில் சுபகாரியம், திருமணம் நடைபெறும். தனஸ்தானமான இரண்டாம் இடத்தில், சூரியன் உள்ளார். இதனால், செலவுகள் அதிகம் ஏற்படும். உடல்நலனில் கவனம் தேவை. விரயஸ்தானத்தில் செவ்வாய் அமைந்ததால், முன் கோபத்தை தரும். பஞ்சமஸ்தானத்தில் கேது உள்ளார். அயல்நாட்டுக்கு செல்லும் வாய்ப்பு வரும். தொழில்துறை வாய்ப்புகளும், உத்தியோகமும் அயல் நாட்டில் அமையலாம். உங்கள் இராசிக்கு லாபஸ்தானமான 11-ஆம் இடத்தில் இராகு இருப்பதால், அரசாங்க ஆதரவு கிடைக்கும். இதுநாள் வரை இருந்த கடன் தொல்லை நீங்கும். சகோதர வர்க்கத்தால் சற்று மனக்கசப்பு வரலாம். ஆகவே சகோதர-சகோதரிகளிடம் பொறுமை தேவை. முருகன் அருளால் முன்னேற்றம் உண்டு யோகமான ஆண்டாக அமையும்.

உங்கள் இராசிக்கான பரிகாரம் : முருகப்பெருமானை வணங்குங்கள். செவ்வாய்க்கிழமையில் கந்த சஷ்டி கவசத்தை பாராயணம் செய்யுங்கள். முருகப்பெருமானின் அருளால் முன்னேற்றம் கிடைக்கும்.

Dhanusuதனுசு இராசி அன்பர்களே ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள். இந்த 2016-ஆம் ஆண்டில், குரு, சந்திரன் இணைந்து உங்களுக்கு கெஜகேசரி யோகத்தை தந்திருப்பதால், தடைபட்ட காரியங்கள் இனி தடை இல்லாமல் நடைபெறும். பொன், பொருள் வீடு, மனை அமையும். ஜென்ம இராசியில் சூரியன் உள்ளதால் உழைப்பு அதிகமாகும். தனஸ்தானத்தில் புதன் இருக்கிறார். குடும்ப செலவு அதிகமாகும். சுகஸ்தானத்தில் கேது அமைந்ததால், உடல் நலனில் கவனம் தேவை. உங்களுக்கு தற்போது விரய சனி நடைப்பெற்று வருகிறது. ஆகவே, யாரிடமும் வாக்கு வாதம் வேண்டாம். லாபஸ்தானத்தில் செவ்வாய் உள்ளார். சோதனை எல்லாம் சாதனையாக மாற வாய்ப்புண்டு. சுபகாரியங்கள் நடைபெறும். 10-ஆம் இடத்தில் இராகு அமைந்து தொழில் துறையில் வளர்ச்சி கிடைக்க காரணமாக இருப்பார். வேலை வாய்ப்பு அமையும். ஆனாலும், கடன் சுமை இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள். காரணம் இப்போது உங்களுக்கு 7½ சனியில் விரய சனி நடக்கிறது. வம்பு வந்தாலும் ஒதுங்கிக் கொள்ளுங்கள். நண்பர்களால் ஆதாயம் உண்டு. பைரவர் அருளால் லாபமான ஆண்டாக இருக்கும்.

உங்கள் இராசிக்கான பரிகாரம் : பைரவர் சன்னதிக்கு சென்று பைரவரை வணங்குங்கள். பைரவருக்கு மிளகு தீபம் ஏற்றுங்கள். கஷ்டத்தை நீக்கி மகிழ்ச்சியானதாகவும், லாபகரமான ஆண்டாகவும் அமைய பைரவர் உங்களுக்கு அருள் புரிவார்.

Makaramமகர இராசி அன்பர்களே ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள். அஷ்டமத்தில் குரு, சந்திரன் இணைந்து, கெஜகேசரி யோகத்தை தந்திருப்பதால், பல நாட்களாக இழுத்துக் கொண்டு வந்த சுபகாரியங்கள், சுபிட்சமாக நிறைவடையும். வாகன விருத்தி, வீடு அமையும் யோகம் அத்தனையும் நடைபெறும். உடன் பிறப்பால் பலன் உண்டு. லாபஸ்தானத்தில் சனி, சுக்கிரன் அமைந்ததால், படிப்படியாக வாழ்க்கை உயரும். உறவினர்களால் நன்மைகள் ஏற்படும். ஜீவனஸ்தானத்தில் செவ்வாய் இருக்கிறார். வியபாரம் வளரும். புதிய வருமானத்திற்கு வழி பிறக்கும். தடைபட்ட கல்வி தொடரும். கடன் சுமை குறையும். பாக்கியஸ்தானத்தில் இராகு உள்ளார். பூர்வீக சொத்தில் சற்று வில்லங்கம் ஏற்படுத்தும். வழக்கு இருந்தால் வெற்றி அடையும். விரயஸ்தானத்தில் உள்ள சூரியன், சற்று குடும்பத்தில் பிரச்னையை உருவாக்குவார். ஆகவே நிதானம் தேவை. சிவபெருமானின் அருளால் இவ்வாண்டு உங்களுக்கு அருமையான ஆண்டாக அமைய வாழ்த்துக்கள்.

உங்கள் இராசிக்கான பரிகாரம் : ஞாயிற்று கிழமையில், கோதுமையால் தயாரித்த உணவை தானம் செய்யுங்கள். ஞாயிற்று கிழமையில், சூரிய பகவானை வணங்குங்கள். சூரிய பகவானுக்கு உகந்த காயத்திரி மந்திரத்தை 9 முறை உச்சரிக்கவும். பாதகங்களும் சூரிய பகவானின் அருளால் சாதகமாக மாறி உங்கள் வாழ்க்கையை ஜொலிக்க வைப்பார்.

Kumbamகும்ப இராசி அன்பர்களே ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள். இந்த 2016-ஆம் ஆண்டில், உங்கள் இராசிக்கு சப்தமதில் குரு, சந்திரன் இணைந்து, கெஜகேசரி யோகத்தை ஏற்படுத்தி தருவதால், தொட்டது துலங்கும். மண்ணும் பொன்னாகும். குடும்பத்தில் மகிழ்ச்சிக்கான காரண காரியங்கள் உருவாகும். தனஸ்தானத்தில் உள்ள கேது பகவான், விரயங்களை அதிகரிப்பார். அஷ்டமத்தில் உள்ள இராகு விரோதத்தை தேடி தருவார். ஆகவே, எதிலும் கவனமாக இருக்க வேண்டும். பாக்கியஸ்தானத்தில் செவ்வாய் அமைந்த காரணத்தால், வீடு, மனை வாங்கும் வசதி கிடைக்கும். லாபஸ்தானத்தில் உள்ள சூரியன், கல்வி, தொழில்துறை, உத்தியோகம் இவற்றில் நன்மை ஏற்படுத்தும். விரயஸ்தான்த்தில் உள்ள புதன், உறவினர் வருகையால் சற்று செலவுகளை அதிகரிப்பார். உடல் நலனில் கவனம் தேவை. தாய்மாமன் விஷயத்தில் பொறுமை தேவை. தேவை இல்லாமல் குழப்பம் ஏற்படுத்தும். ஜீவனஸ்தானத்தில் சனி, சுக்கிரன் இருப்பதால் நன்மைகளும் தேடி வரும். ஸ்ரீதுர்கை அம்மனின் அருளால் குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும்.

உங்கள் இராசிக்கான பரிகாரம் : புதன்கிழமை தோறும் அருகில் உள்ள பெருமாள் கோயிலுக்கு சென்று உங்களால் முடிந்தளவு நெய் தானம் செய்யுங்கள். திருக்கோயிலில் உள்ள விளக்குகள் நெய் தீப ஒளியில் மின்னட்டும். உங்கள் பொருளாதார வளர்ச்சியும் இதனால் அதிகரிக்கும். தோஷங்கள் விலகி வெற்றி கிட்டும்.

Meenamமீன இராசி அன்பர்களே ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள். இந்த 2016-ஆம் ஆண்டில், குரு, சந்திரன் இணைந்து, கெஜகேசரி யோகத்தை தந்திருப்பதால், நீங்கள் கண்ட கனவு பலிக்கும். விட்டது, விலகியது அனைத்தும் கைக்கு வந்தடையும். குடும்பத்தில் சுபகாரியம், திருமண விஷயங்கள் பிரமாதமாக நடைபெறும். பாக்கியஸ்தானத்தில் அமைந்துள்ள சனி, சுக்கிரன், புதிய கட்டடம் கட்டும் யோகத்தை தருவார்கள். பொன், பொருள் வாங்கும் பாக்கியம் கிடைக்கும். வீடு, மனை அமையும். உறவினர் வருகை அதிகரிக்கும். கடன்கள் தீரும். வேலை வாய்ப்பு அமையும். நசிந்த தொழில் நிமிர்ந்து நிற்க உதவிகள் கிடைக்கும். நண்பர்களால் யோகம் உண்டு. லாபஸ்தானத்தில் புதன் அமைந்திருப்பதால், நோய் நொடி நீங்கும். 10-ஆம் இடத்தில் அமைந்துள்ள சூரியன், மனமகிழ்ச்சியை வாரி வழங்குவார். பொதுவாக இந்த ஆண்டு உங்களுக்கு மகிழ்ச்சி பொங்க செய்யும் ஆண்டாக அமையும்.

உங்கள் இராசிக்கான பரிகாரம் : சூரிய பகவானுக்கு ஞாயிற்று கிழமைகளில் சிகப்பு மலர்களை அணிவித்து சூரிய பகவானை வணங்குங்கள். அத்துடன்,  உங்கள் ஜென்ம நட்சத்திரம் வரும் நாளில், சூரிய பகவானுக்கு சிகப்பு நிற வஸ்திரம் அணிவியுங்கள். உங்கள் வாழ்க்கை பிரகாசமாக ஜொலிக்கும்.

ENGLISH Version click here...

திருமண வரங்களுக்கு மணமக்கள் மாலை

மேலும் ஜோதிட கட்டுரைகள் படிக்கவும்…

மேலும் இராசி பலன்கள் படிக்கவும்…

மேலும் வாஸ்து கட்டுரைகள் படிக்கவும்…

மேலும் ஆன்மிக கட்டுரைகள் படிக்கவும்…

ஜோதிட ஆலோசனைக்கு இங்கே பார்க்கவும்…

Send your feedback to: editor@bhakthiplanet.com

For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com

For Astrology Consultation Contact: Astrologer, Sri Durga Devi upasakar, V.G.Krishnarau.  Phone Number: 98411 64648, Chennai, Tamilnadu, India

http://www.youtube.com/bhakthiplanet

https://www.youtube.com/niranjanachannel

http://www.facebook.com/bhakthiplanet

For Astrology Consultation CLICK Here

Donate© 2011-2015 bhakthiplanet.com  All Rights Reserved

Comments are closed

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2025. All Rights Reserved.| designed & developed by Green Site Tech
Translate »