Wednesday 22nd January 2025

தலைப்புச் செய்தி :

வேலை சீக்கிரம் கிடைக்க என்ன பரிகாரம்? | இலவச ஜோதிட கேள்வி-பதில் பகுதி!

free astrologyAstrologer, Sri Durga Devi upasakar, V.G.Krishnarau. Phone Number: 98411 64648, ChennaiSri Durga Devi upasakar, V.G.Krishnarau.

Click for Previous Part

கேள்வி:- ஐயா, நான் இலங்கை, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவன். நான் தற்பொழுது மலேசியாவில் வசிக்கிறேன். இங்கு வேலை தேடலாம் என நினைத்து தேட ஆரம்பித்தேன். வேலை கிடைப்பது கஷ்டமாகவே உள்ளது. கிடைக்கிற வேலையை செய்து கொண்டும், நண்பர்களிடம் கடன் வாங்கிக் கொண்டும் எனது வாழ்க்கையை மலேசியாவில் தொடர்ந்து கொண்டிருக்கின்றேன். எனக்கு இன்னும் நிரந்தர வேலை கிடைக்கவில்லை. கடனும் அதிகமாகி, கடன் தொல்லைகளும் ஆரம்பிக்கின்றது. இதெல்லாமே ஏழரை சனியின் தாக்கமா? நான் இன்னும் சிலகாலம் மலேசியாவில் இருக்க ஆசைப்படுகிறேன். எனது ஆசை நிறைவேறுமா?

– துஷாந்தன்

பதில்:- துலா இராசி, மகர லக்கினத்தில் பிறந்துள்ள உங்களுக்கு, இராகு புக்தி முடிந்தவுடன் நல்லகாலம் பிறக்கும். தற்போது உங்களுக்கு இது ஏழரை சனியின் இரண்டாவது சுற்று. ஆகவே நன்மையே செய்யும். 03.08.2014-ல் பிறகு மேலும் நல்ல வேலை வாய்ப்புகள் அமைந்து, கடன்கள் குறையும். உங்கள் ஜாதகத்தில் லாப ஸ்தானத்தில் குரு-கேது அமைந்துள்ளனர். குடும்ப ஸ்தானத்தை செவ்வாய் பார்வை செய்வதால், முருகப் பெருமானை வழிபாடு செய்து வரவும். வாழ்க்கையில் முன்னேற்றம் தரும்.

கேள்வி:- என் பிறந்த தேதி விவரங்களும் என் மனைவியின் பிறந்த தேதி விவரங்களும் அனுப்பியுள்ளேன். எங்களுக்கு குழந்தை பாக்கியம் உண்டா? ஒருமுறை abortion ஆகிவிட்டது. தயவுசெய்து இதற்கு மட்டும் பதில் அளிக்கவும்.

-கண்ணன்

பதில்:- நீங்கள் ரிஷப இராசியிலும், உங்கள் மனைவி மேஷ இராசியிலும் பிறந்துள்ளார். உங்கள் இருவரின் ஜாதக கிரகநிலைகளை ஆராய்ந்து பார்த்தபோது, இராகு-கேது அமைந்துள்ள இடங்களால் குழந்தை பாக்கிய தடை ஏற்படுத்துகிறது. ஆனாலும் புத்திர பாக்கியம் உண்டு. கவலை வேண்டாம். ஸ்ரீதுர்கை அம்மனை வழிபாடு செய்து வரவும்.

கேள்வி:- சிலர் அருள் வாக்கு சொல்வதைப் பார்த்திருப்பீர்கள். இப்படி தெய்வங்களுடன் தொடர்பு கொள்பவர்களது ஜாதக அமைப்பு எவ்வாறு இருக்கும்? ஒருவரது உயிர் எப்படி எந்த வகையில் பிரியும் என்பதை 12 – ஆம் இடத்தை வைத்து சொல்லலாம் என்கிறார்களே. (உ – ம்) 12 – ஆம் இடத்தை செவ்வாய் பார்த்தாலோ அல்லது அங்கு இருந்தாலோ விபத்தில் உயிர் பிரியும் என்று சொல்லப் படுகிறதே. இது உண்மையா. இது குறித்து விளக்கமாக சொல்லவேண்டுமாய் தங்களை பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.

-ஷிவா

பதில்:- ஒருவரின் ஜாதகத்தில் 5-ம் இடம் அதாவது பூர்வ புண்ணிய ஸ்தானம் பலமாக இருக்க வேண்டும். ஐந்தாம் இடத்தில் கேது, செவ்வாய் இணைந்திருந்தால் அவர்கள் சொல்வது இறைவனின் அருள்வாக்கு போன்று பலிக்கும். 2-ம் இடம் பலமாக இருந்தாலும் வாக்கு சித்தம் பெற்று அருள் வாக்கு சொல்வர். விபத்தை பொறுத்தவரையில், 12-ம் இடத்தில் செவ்வாய் இருந்தாலும், பார்த்தாலும் மட்டும் விபத்தால் உயிரிழப்பு என்று சொல்ல முடியாது. விபத்துக்கு 4-ம் இடத்தின் அதிபதியும் காரணமாக இருக்கிறது. கூடவே சுப கிரகங்களின் பார்வை, அதன் சாரம் போன்றவை நன்கு இருந்தாலும், சனியின் அமைப்பு சரியாக இருந்தாலும் உயிருக்கு ஆபத்தை தராது.

கேள்வி:- மதிப்பிற்குரிய ஐயா அவர்களுக்கு வணக்கம். எனக்கு 2002 நவம்பர் மாதம் திருமணம் நடந்தது. 2006-ல் பிரிந்தோம். 2006 முதல் 2010-ம் ஆண்டு வரையில் எனக்கு பிரச்னைக்குரிய ஆண்டாகவே இருந்தது. 2009-2011-ல் வேலை எதுவும் இல்லாமல் இருந்தேன். 2012-ல் வேலை கிடைத்தது. ஆனால் அந்த வேலையில் நான் நீடிக்கவில்லை. உடல்நிலை காரணமாகவும், வழக்குகள் காரணமாகவும் வேலையை ராஜினாமா செய்துவிட்டேன். ஒரு பில்டரிடம் பண முதலீடு செய்தேன். ஆனால் அவர் என்னை ஏமாற்றிவிட்டார். என்னுடைய விவகாரத்து வழக்கும் இரண்டு ஆண்டுகளாக நடந்து வருகிறது. எனக்கு எப்போது நல்ல வேலை கிடைக்கும்? சொந்தமாக சாப்ட்வேர் கன்சல்டிங் தொழில் செய்யலாம் என நினைக்கிறேன். சொந்த தொழில் எனக்கு லாபம் தருமா?

-S.V.குமரன்

பதில்:- உங்கள் ஜாதகத்தில் களத்திர ஸ்தானத்தை பாதகாதிபதி சனி பார்வை செய்வதாலும், ஏழாம் அதிபதியை, அஷ்டமாதிபதி செவ்வாய் பார்வை செய்வதாலும், சயன ஸ்தானம் வலு குறைந்து இருப்பதாலும் திருமண வாழ்க்கையில் பாதிப்பை ஏற்படுத்தியது. இருப்பினும் கவலை வேண்டாம். ஒருமுறையாவது திருநாகேஸ்வரம் சென்று இராகு தோஷ பரிகாரம் செய்து வரவும். குடும்ப வாழ்க்கையில் அமைதி கிடைக்கும். நவம்பர் மாதத்தில் இருந்து நல்லவை நடக்கும். சொந்த தொழில் முயற்சி இப்போது வேண்டாம். இரண்டு ஆண்டுகள் சென்ற பின் தொடங்கவும்.

கேள்வி:- ஐயா, திருமணமாகி 7 வருடங்கள் ஆகிறது. குழந்தை இல்லை. வாழ்க்கையில் எனக்கு எந்த முன்னேற்றமும் இதுவரையில் இல்லை. எனக்கு சொந்த தொழில் செய்யும் யோகம் இருக்கிறதா? உங்கள் ஆலோசனையை எதிர்பார்க்கிறேன்.

-YOGESH PATEL

பதில்:- கும்ப இராசியில் பிறந்த உங்களுக்கு, பூர்வ புண்ணிய ஸ்தானத்தை சுக்கிரன் பார்வை செய்வதால் குழந்தை பாக்கியம் உண்டு. கவலை வேண்டாம். சுக்கிரன் அமர்ந்த வீடு செவ்வாயின் இல்லம். ஆகவே முருகன் வழிபாடு செய்து வரவும். தொழில் ஸ்தானத்தில் குரு தனித்து இருப்பதால் பெரிய முதலீடுகளை செய்து தொழில் தொடங்குவதில் கவனமாக இருக்க வேண்டும்.

கேள்வி:- ஐயா என் முதல் வணக்கம். நான் என் ஜாதகத்தை அட்டாச் செய்து இருக்கிறேன். என் கேள்வி. நான் ஷேர் மார்க்கெட்டிங் செய்ய உகந்தவனா? இதை செய்து நஷ்டம் அடைந்திருக்கிறேன். எப்போது லாபம் கிடைக்கும். ஜாதகம் எப்படி இருக்கிறது ஐயா.

-ச.ராஜரத்தினம்

பதில்:- துலா இராசியில் பிறந்துள்ளீர்கள். தற்போது உங்களுக்கு ஜென்ம சனி நடைப்பெற்றுக் கொண்டிருக்கிறது. இன்னும் மூன்று வருடங்கள் ஷேர் மார்க்கெட்டிங் விவகாரங்கள் வேண்டாம். குரு திசை நடைப்பெறுகிறது. ஜாதகம், யோக ஜாதகம்.

கேள்வி:- அன்புள்ள ஐயா. என் ஜாதகத்தில் பூர்வ ஜென்ம சாபம் இருக்கிறதா? சொந்த தொழில் என்ன செய்யலாம்? எந்த கிரகம் என் ஜாதகத்தில் வலுவாகவும், பலவீனமாகவும் உள்ளது? எந்த ரத்தினத்தை நான் அணியலாம்?

-K.V.சிவகுமார்

பதில்:- கன்னி இராசியில் பிறந்துள்ளீர்கள். உங்கள் லக்கினத்திற்கு பூர்வ புண்ணியாதிபதி குரு ஆவார். பூர்வ ஜென்ம சாபம் எதுவும் இல்லை. தற்காலம் ஏழரை சனி நடைப்பெற்று வருவதால் பிரச்னைகள் இருக்கலாம். உங்கள் ஜாதகப்படி செவ்வாய் பலமாக உள்ளது. சாதாரண பச்சை கல் மோதிரம் வெள்ளியில் செய்து அணியவும். நவகிரக வழிபாடு தொடர்ந்து செய்து வருவது உங்கள் ஜாதகப்படி நன்மை செய்யும்.

கேள்வி:- பெருமதிப்பிற்குரிய ஐயா அவர்களுக்குBhakthi Planet வணக்கம். நான் பக்தி பிளானட் பார்த்து வருகிறேன். இதில் உள்ள விஷயங்கள் பயன் உள்ளதாக இருக்கிறது. இலவச ஜோதிட பகுதிக்கு என் ஜாதகத்தை அனுப்பி உள்ளேன். கடந்த 9 மாதங்களாக சிங்கப்பூரில் வேலை தேடி வருகிறேன். வேலை சீக்கிரம் கிடைக்க என்ன பரிகாரம் செய்ய வேண்டும்?

-குமாரசாமி

பதில்:- உங்களுக்கு தற்காலம் ஜென்ம சனி நடைப்பெற்று வருகிறது. கிரக நிலைகள் சாதகமாக இல்லை. நவம்பர் மாதத்திலிருந்து நல்ல நேரம் தொடங்கும். இறைவன் அருளால் இதற்கிடையில் ஒரு வேலை கிடைத்தாலும் பொறுமையுடன் அதில் இருங்கள். ஸ்ரீமகாலஷ்மியையும், திருப்பதி வெங்கடாசலபதி சுவாமியையும் நம்பிக்கையுடன் வணங்கி வாருங்கள். நல்ல வேலை வாய்ப்பும், வசதிகளும் கிடைக்கும்.

கேள்வி:- வணக்கம் ஐயா. நான் பிறந்த தேதி மற்றும் விவரங்களை தந்துள்ளேன். என்னுடைய நிலை நாளுக்கு நாள் மோசம் அடைகிறது. என் ஜாதகம் எப்படி உள்ளது. முன்னேற்றம் அடைவேனா?

-ராஜேஷ் கண்ணா

பதில்:- மிதுன லக்கினம், கும்ப இராசியில் பிறந்துள்ளீர்கள். 16.04.2015-ம் ஆண்டுவரை உங்கள் ஜாதகப்படி கிரக நிலைகள் சுமாராகவே உள்ளது. இதன் பிறகு நல்ல எதிர்காலம் உண்டு. இதனிடையே 19.06.2014-க்கு பிறகு சற்று முன்னேற்றம் கிடைக்க வாய்ப்புள்ளது. தனாதிபதி பாக்கியஸ்தானத்தில் உள்ளார். நல்ல வாழ்க்கை அமையும். குல தெய்வ வழிபாடு சரியாக செய்யவும்.

கேள்வி:- அன்புள்ள ஐயா. என் வாழ்க்கையில் நிறைய பிரச்னைகளை சந்திக்கிறேன். கடந்த 5 வருடங்களாக நான் பார்க்கிற வேலைகளை எல்லாம் இழந்து வருகிறேன். எனக்கு ஒரு சரியான வேலை இதுவரையில் அமையவில்லை. இதுவே என் மனநிம்மதியை கெடுக்கிறது. தயவு செய்து என் ஜாதகத்தை கணித்து ஆலோசனை சொல்லவும்.

– RAJESH DHARMAN NAIR

பதில்:- உங்கள் ஜாதகத்தை பார்த்த உடன் உங்கள் துன்பங்கள் கண் முன் தெரிகிறது. கன்னி இராசி, ரிஷப லக்கினத்தில் பிறந்துள்ளீர்கள். ஏழரை சனியின் பிடியில் தற்போது பாத சனியில் உள்ளீர்கள். நவம்பர் 2-ம் தேதிவரை அப்படிதான் இருக்கும். இதன் பிறகு நல்ல நிலையை காண்பீர்கள். ஆஞ்சநேயரை வழிபாடு செய்து வரவும். உங்கள் பிரச்னைகளுக்கு அவர்தான் நிவர்த்தி தரும் தெய்வம்.

கேள்வி:- நான் ரியல் எஸ்டேட் தொழில் செய்ய விரும்புகிறேன். தொழில் சக்சஸ் ஆகுமா? பார்ட்னர்ஷிப் சரியாக வருமா? நிரந்தர தொழில் அமையவில்லை. என்ன காரணம்?

-K.சம்பத்

பதில்:- மீன இராசி, கடக லக்கினத்தில் பிறந்துள்ளீர்கள். உங்கள் லக்கினத்திற்கு அஷ்டமத்தில் சனி அமைந்துள்ளதால், தற்போது நடைப்பெறும் அஷ்டம சனி உங்களை பாதிக்கிறது. ரியல் எஸ்டேட் தொழில் உங்களுக்கு லாபத்தை தரும். ஆனால் லக்கினத்திற்கு 7-ம் அதிபதி, எட்டாம் இடத்தில் இருப்பதால், கூட்டு தொழில் நன்மை தராது. சுயமாக முன்னேறும் ஜாதகம் இது.

*******

வாசகர்கள் கவனத்திற்கு: ஜாதகத்தை கணிப்பதற்கு பிறந்த தேதி விவரங்கள், பிறந்த நேரம், பிறந்த இடம் போன்றவற்றை தெளிவாக அனுப்பவும்.

ஜோதிடம் – ஆன்மிகம் தொடர்பான உங்கள் கேள்விகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி : bhakthiplanet@gmail.com

For Astrology Consultation Contact: Astrologer, Sri Durga Devi upasakar, V.G.Krishnarau. Phone Number: 98411 64648, Chennai, Tamilnadu, India

இது ஒரு இலவச சேவையாகும். விரிவான பலன்களை அறிய கட்டண சேவையை பார்க்கவும்.

உடனடியாக 3 நாட்களுக்குள் தனிப்பட்டமுறையில் உங்கள் மின்னஞ்சலுக்கு பதில் பெற கட்டண சேவை பார்க்கவும்.

மேலும் ஜோதிட கட்டுரைகள் படிக்கவும்…

மேலும் இராசி பலன்கள் படிக்கவும்…

மேலும் வாஸ்து கட்டுரைகள் படிக்கவும்…

மேலும் ஆன்மிக கட்டுரைகள் படிக்கவும்…

ஜோதிட ஆலோசனைக்கு இங்கே பார்க்கவும்…

For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com

For Astrology Consultation Contact: Astrologer, Sri Durga Devi upasakar, V.G.Krishnarau.  Phone Number: 98411 64648, Chennai, Tamilnadu, India

http://www.youtube.com/bhakthiplanet

http://www.facebook.com/bhakthiplanet

For Astrology Consultation CLICK Here

© 2014 bhakthiplanet.com  All Rights Reserved

Posted by on Apr 2 2014. Filed under Headlines, இலவச ஜோதிட கேள்வி பதில், கதம்பம், செய்திகள், ஜோதிடம், முதன்மை பக்கம். You can follow any responses to this entry through the RSS 2.0. Both comments and pings are currently closed.

Comments are closed

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2025. All Rights Reserved.| designed & developed by Green Site Tech
Translate »