கனடாவில் உள்ள ஒரு நகரின் தெருவிற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்திய சினிமாவின் 100வது ஆண்டு விழாவை சிறப்பிக்கும் வகையில் கனடாவின் பிரதான நகரங்களுள் ஒன்றான டொரண்டோவின் மர்கம் நகரில் சர்வதேச இந்திய திரைப்பட விழா நடைபெற்று வருகிறது. உள்ளூர் நேரப்படி நேற்று (திங்கட்கிழமை) மாலை 3 மணியளவில் தொடங்கிய இவ்விழாவில் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் சாதனைகளை போற்றி புகழாரம் சூட்டப்பட்டது. பின்னர், மர்கம் பகுதியில் உள்ள பிரதான தெரு ஒன்றுக்கு ஏ.ஆர்.ரஹ்மான்(அல்லாஹ் – ரக்ஹா ரஹ்மான்) […]
மும்பையை அடுத்த குர்கான் பகுதியான சந்தோஷ்நகர் என்ற இடத்தில் 20 வயதுக்குட்பட்ட 6 சிறுவர்கள் தீபாவளி பண்டிகையை கடந்த வெள்ளிக்கிழமை கொண்டாடினார்கள். அப்போது அந்த பகுதியை சேர்ந்த 16 வயது பெண்ணை அவர்கள் தங்களுடன் இணைந்து தீபாவளி பண்டிகை கொண்டாட வருமாறு அழைப்பு விடுத்தனர். இதை ஏற்று அந்த பெண்ணும் அவர்களுடன் தீபாவளி பண்டிகையில் கலந்து கொண்டார். பின்னர் அந்த பெண்ணை அவர்கள் வலுக்கட்டாயமாக ஆள் நடமாட்டம் இல்லாத இடத்துக்கு அழைத்துச்சென்று, குளிர்பானத்தில் பீர் கலந்து கொடுத்து […]
பத்திரப்பதிவு துறையில் ஆள்மாறாட்டத்தை தடுக்க சார் பதிவாளர் அலுவலகங்களில் புகைப்படம் எடுக்கும் திட்டம் நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது. பத்திரப்பதிவு அலுவலகங்களில் பதிவு செய்யப்படுவது அனைத்தும் வெளிப்படையாகவும், பொதுமக்கள் திருப்தி அடைய வேண்டும் என்பதற்காக பத்திரப்பதிவு துறை அலுவலக நிகழ்வுகளை காமரா மூலம் கண்காணிக்க முதலமைச்சர் ஜெயலலிதா நடவடிக்கை எடுத்துவருகிறார். அந்தவகையில், 578 சார் பதிவாளர் அலுவலகங்கள் மற்றும் 3 முகாம் அலுவலகங்களில் பத்திரப்பதிவின் போது ஆள்மாறாட்டத்தை தடுக்க வெப்-காமரா மூலம் புகைப்படம் எடுக்கும் திட்டம் நேற்று […]
சென்னை, நவ. 5 – வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவானதால். தமிழக கடலோர மாவட்டங்களில் மழை எச்சரிக்கை கொடுத்துள்ளார். இயக்குனர் ரமணன் தகவல். வங்க கடலில் கன்னியாகுமரி அருகே நிலைக்கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழ்நாடு முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் இலங்கை அருகே வங்க கடலில் மேலும் ஒரு காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது. இதனால் பலத்த மழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதுகுறித்து சென்னை […]
தமிழகத்தில் உள்ள பத்திரப்பதிவு துறை அலுவலகங்களில் பதிவு செய்யும் பத்திரங்களை சிடி ஆக வழங்கும் புதிய திட்டத்தை நாளை (புதன்கிழமை) முதலமைச்சர் ஜெயலலிதா தொடங்கி வைக்கிறார். இதுகுறித்து பத்திரப்பதிவுத்துறை அதிகாரிகள் கூறியதாவது:- தமிழ்நாடு அரசுக்கு அதிக வருவாய் பெற்று தரும் அரசுத்துறைகளில் வணிகவரித்துறை மற்றும் மது விலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறைக்கு அடுத்து மூன்றாவது இடத்தில் இருப்பது பத்திரப்பதிவுத்துறை. குறிப்பாக 2012-2013 ஆம் ஆண்டு பத்திரப்பதிவு துறை ரூ.7,455.41 கோடி வருவாயை ஈட்டி தந்துள்ளது. தற்போது மேலும் […]
பாலிவுட் திரையுலகின் பிரபலமான நடிகையான ஐஸ்வர்யா ராய் கடந்த ஒன்றாம் தேதி தனது 40வது பிறந்த நாளைக் கொண்டாடினார். அப்போது நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் கணவர் அபிஷேக் பச்சன் அவரது பிறந்த நாளுக்கு அளித்த சிறப்பு பரிசு குறித்து நிருபர்கள் கேட்டனர். கணவர் தனக்கு பரிசளித்தார் என்று கூறிய ஐஸ்வர்யா அந்தப் பரிசு என்னவென்பதை அவரிடமே கேட்டுத்தெரிந்து கொள்ளுமாறும் கூறினார். மேலும், கணவர் தனக்கு அளித்த விலையில்லாப் பரிசு என்று அவர் தனது மகள் ஆராத்யாவைக் குறிப்பிட்டார். […]
விமான பயணத்திலும் போலி டிக்கெட் அறிமுகமான ஒரு சம்பவம் வெனிசுலா நாட்டில் கண்டுபிடிக்கப்பட்டது. அங்குள்ள காரகாஸ் நகரில் இருந்து கனடா நாட்டிற்கு விமானம் புறப்பட தயாரானது. அப்போது விமானத்தில் 5 பயணிகள் கூடுதலாக இருப்பது விமானிக்கு தெரியவந்தது. உடனே 5 பேரையும் சிப்பந்திகள் கீழே இறக்கி பாதுகாப்பு பணியில் இருந்த ராணுவ அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். அந்த 5 பயணிகளிடமும் விசாரணை நடத்தியதில் 4 பேர் ஈரான் நாட்டையும், ஒருவர் ஆப்கானிஸ்தானையும் சேர்ந்தவர் என்பதும், இவர்களிடம் கனடா செல்வதற்கான […]
சென்ற பகுதிக்கு கிளிக் செய்யவும் Written by Niranjana சூனியத்தை செய்தவனிடமே திருப்பி அனுப்பிய பாம்பன் சுவாமிகள் சிதம்பரத்தில் சுவாமிகள் தங்கி இருந்த காலம். சைவத்தை சிலர் தூற்றியதால் சுவாமிகளுக்கும் அவர்களுக்கும் பகை ஏற்பட்டு, நீதிமன்றத்தில் வழக்கு நடந்து கொண்டிருந்தது. வழக்கின் முடிவில் சுவாமிகளே வெற்றி பெற்றார். இதனால் கோபம் கொண்ட பகைவர்கள், சுவாமிகளுக்கு செய்வினை செய்தார்கள். முருகன் அருளால், அந்த செய்வினையை செய்தவருக்கே திருப்பி அனுப்பினார் பாம்பன் சுவாமிகள். பாம்பன் சுவாமிகளுக்கு முருகப் பெருமான் வழி காட்டிய […]
Written by Niranjana பாம்பன் என்ற ஊரில் செங்கமல அம்மையார் – சாத்தப்பபிள்ளையின் மகனாக பிறந்தவர் அப்பாவு. இவரே பின்னாளில் பாம்பன் சுவாமிகள் என்று அழைக்கப்பட்டார். இவர் 1850-ல் பிறந்தார் என்று சொல்கிறார்கள். 1866-ஆம் ஆண்டு தன் படிப்பை தொடங்கினார். முனியாண்டிப் பிள்ளை என்பவரிடம் தமிழ் கற்றார். சிறுவயதில் இருந்தே இவர், கந்தசஷ்டி கவசத்தை விரும்பி படிக்கத் தொடங்கினார். அத்துடன் சேது மாதவஅய்யர் என்பவரிடம் வடமொழியும் கற்றார். தமிழ்மொழியை மேலும் கற்பதில் ஆர்வமாக இருந்தார் சுவாமிகள். காரணம் […]
அவ்வளவு எளிதில் யாரையும் பாராட்டிவிட மாட்டார் கமல். அதேபோல் ஆறி தணிந்த பின்பே பல படங்களையும் பார்ப்பது அவரின் வழக்கம். மாறாக அஜீத்தின் ஆரம்பம் படத்தைப் பார்த்து படம் சம்பந்தப்பட்டவர்களை பாராட்டியுள்ளார். ஆரம்பம் படத்தை ஸ்டைலிஷாக எடுத்திருக்கிறார் விஷ்ணுவர்தன். எதிர்மறை விமர்சனங்கள் இருந்தாலும், ஒருமுறை நம்பி பார்க்கலாம் என்பதாகவே தொண்ணூறு சதவீத விமர்சனங்கள் உள்ளன. அஜீத்தின் ஸ்டைலும், நடிப்பும் படத்தின் ப்ளஸ். ஆரம்பத்தை பெங்களூருவில் உள்ள மல்டி பிளக்ஸில் கமல்ஹாசன் பார்த்து ரசித்துள்ளார். அஜீத் உள்ளிட்ட முன்னணி […]