Thursday 9th May 2024

தலைப்புச் செய்தி :

ஸ்டான்லி மருத்துவமனையில் தொடரும் பைக் திருட்டு

தண்டையார்பேட்டை : வண்ணாரப்பேட்டையில் ஸ்டான்லி அரசு மருத்துவமனை உள்ளது. இங்கு  1250க்கு மேற்பட்ட நோயாளிகள்  சிகிச்சை பெற்று வருகின்றனர். மருத்துவர்கள், ஊழியர்கள், நோயாளிகளை பார்க்க வரும் அவர்களது உறவினர்கள் தங்களது பைக்குகளை மருத்துவமனை வளாகத்தில் நிறுத்துவது வழக்கம்.
இந்த பைக்குகள் அடிக்கடி மாயமாகி விடுகிறது. இதுகுறித்து மருத்துவமனையில் உள்ள காவல்நிலையத்தில் பலர் புகார் செய்துள்ளனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து பைக் கொள்ளையர்களை தேடிவருகின்றனர்.

இந்நிலையில் மாதவரத்தை சேர்ந்த ரஜினி (35) என்பவர், மருத்துவமனையில் சிகிச்சை பெறும் உறவினரை பார்க்க நேற்று முன்தினம் பைக்கில் வந்தார். திரும்பி வந்தபோது அவரது பைக்கை காணவில்லை. இதுகுறித்து ஸ்டான்லி அரசு மருத்துவமனை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், பலதரப்பட்ட மக்கள் இந்த மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர். இவர்களை பார்க்க உறவினர்கள் ஏராளமானோர் வந்து செல்கின்றனர். அவர்களது பைக்குகள் திருடப்படுகிறது. குறிப்பாக புதிய, நல்ல நிலையில் உள்ள பைக்குகளையே கொள்ளையர்கள் திருடி செல்கிறார்கள். இவ்வளவு பெரிய மருத்துவமனையில் பைக் திருட்டு நடப்பது அதிர்ச்சியாக உள்ளது. இதை தடுக்க போலீசார் தீவிர ரோந்து பணியிலும், கண்காணிப்பிலும் ஈடுபடவேண் டும் என வலியுறுத்தினர்.

ஜோதிட கட்டுரை படிக்க கிளிக் செய்யவும் 

வாஸ்து கட்டுரை படிக்க கிளிக் செய்யவும் 

ஆன்மிக பரிகாரங்கள் படிக்க கிளிக் செய்யவும் 

மருத்துவம் பகுதியை படிக்க கிளிக் செய்யவும் 

அறுசுவை சமையல் பகுதியை படிக்க கிளிக் செய்யவும் 

For Astrology Consultation Contact: Astrologer, Sri Durga Devi upasakar, V.G.Krishnarau.  Phone Number: 98411 64648, Chennai, Tamilnadu, India 

For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com

http://www.youtube.com/bhakthiplanet

Posted by on Oct 29 2013. Filed under Headlines, செய்திகள், தமிழகம், முதன்மை பக்கம். You can follow any responses to this entry through the RSS 2.0. Both comments and pings are currently closed.

Comments are closed

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2024. All Rights Reserved.| designed & developed by Green Site Tech