Tuesday 23rd April 2019
Breaking News:
இராகு-கேது பெயர்ச்சி பலன்கள் 2019-2020 !     Horoscope Consultation for 3 Questions Rs.199 only. Click Here for Details. உங்கள் ஜாதகம் தொடர்பான மூன்று கேள்விகளுக்கு பதில் பெற கட்டணம் ரூ.199 மட்டுமே. விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்.    சந்திரன் கெட்டால் நிம்மதி கெடும் !    தமிழ்நாட்டை புயல் தாக்கும் அபாயம்?    ஆங்கில புத்தாண்டு இராசி பலன்கள் 2019 விரிவான பலன்கள்    பித்ரு தோஷம் குடும்பத்தை அழிக்குமா?    தென்மேற்கும் அதன் குணங்களும்! வாஸ்து கட்டுரை.    குரு பெயர்ச்சி பலன்கள் 2018-2019 | Guru Peyarchi Palangal 2018-2019    எங்கேயும், எப்போதும் வெற்றி பெற என்ன வழி?    மனநிம்மதி இல்லாதவர்கள் யார்? ஜோதிட கட்டுரை!    திருமண தடை ஏன்?

முயற்சியில் முன்னேறும் மூன்றாம் எண்

Astrologer, 

V.G. KrishnaRau  

3 – குரு

 3. தேதி பிறந்தவர் – எதையும் பொருமையாக ஆராய்ந்து முடிவெடுப்பார். யாரையும் அன்பினால் தன்வசப்படுத்துவார். விரோதிகளையும் நண்பராக்கும் திறமை படைத்தவர். முற்பகுதியை விட பிற்பகுதியில்தான் நல்ல முன்னேற்றதை அடைவார்கள்.

 12. தேதி பிறந்தவர் – எடுக்கும் முயற்சியில் தைரியத்துடன் போராடி வெற்றி பெறாமல் விடமாட்டார்கள். மூர்க்க குணத்தால் அவ்வப்போது கெட்ட பெயர் எடுக்க நேரும். யார் கஷ்டப்பட்டாலும் அவர்களுக்கு ஒடி சென்று உதவும் குணம் படைத்தவர்கள்.

21. தேதி பிறந்தவர் – யாரையும் தன் வசப்படுத்தும் பேச்சாற்றல் நிறைந்தவர்கள். சோதனைகளை சாதனையாக்கும் அளவுக்கு கடுமையாக போராடி  உழைத்து வெற்றி பெறுவார்கள். நல்ல சிந்தனை, தெய்வபக்தி, பெரியோர்களிடத்தில் பணிந்து நடப்பது போன்ற நற்செயல்கள் இவரிடத்தில் நன்கு இருக்கும். நல்ல உயர்ந்த நிலைக்கு வருவார்கள்.

30. தேதி பிறந்தவர்கள் – எதிரிகளை உண்டு இல்லை என்று செய்யும் குணம் படைத்தவர்கள். லாபம் தராத விஷயங்களாக இருந்தாலும் நம்பி வந்தவர்களுக்கு உதவும் குணம் படைத்தவர். சபையில் தன் பேச்சுக்கு என்றும் தனி மரியாதையை பெறுகிற அளவில் பேச்சாற்றல் உடையவராக இருப்பார்கள். தியானம், யோகாவில் ஆர்வம் இருக்கும்.

பெயர் எண்  

3 -ம் எண்ணில் பெயர் அமைந்தால் புகழும், பதவியும் கிடைக்கும். எதையும் பல முறை சிந்தித்து செயல்பட வைக்கும். காலத்திற்கு ஏற்ப பணிந்து சென்று வெற்றியை கொடுக்கும் எண்.

12 -ம் எண்ணில் பெயர் அமைந்தால் அவர்கள் ஏணியாக இருப்பார்கள். உழைப்புக்கு ஏற்ற ஊதியம் கிடைக்காது. பிரச்சனைகள் ஒன்று போனால் ஒன்று வரும்.

21 -ம் எண்ணில் பெயர் அமைந்தால் திடிர் புகழ் வந்து சேரும். நல்ல உயர்வான குணம், நல்ல பண்பை தரும். முயற்சியில் வெற்றி கிடைக்கும். மன அமைதிபெறும். சோதனைகளை போராடி சாதனையாக்குவர். ஏற்றம் ஏற்படும்.

30 -ம் எண்ணில் பெயர் அமைந்தால் எப்போதும் கனவிலேயே இருப்பார்கள். எடுத்த காரியத்தை முடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் லாபமே இல்லாத செயலாக இருந்தாலும் கடுமையாக போராடுவார்கள்.  

39 -ம் எண்ணில் பெயர் அமைந்தால் பெரிய நன்மைகளை கொடுக்காது. உழைப்புதான் அதிகமாக இருக்குமே தவிர பலன் அந்த அளவு இருக்காது. ஒரு பிரச்சனை போனால் ஒரு பிரச்சனை வரும். மற்றவர்களுக்கு அடிபணிந்தேதான் வாழ வைக்கும்.

48 -ம் எண்ணில் பெயர் அமைந்தால் எப்போழுதும் மனம் சஞ்சலத்துடன் இருக்கும். பெரிய முன்னேற்றத்தை கொடுக்காது. ஒரு அடி எடுத்து வைப்பதற்குள் பல பிரச்சனைகளை சந்திக்க நேரும். 

57 –ம் எண்ணில் பெயர் அமைந்தால் எடுக்கும் முயற்சி எல்லாம் உடனே உடனே நடப்பது போல் தெரிந்தாலும் பிறகு சற்று மந்த நிலைக்கு தள்ளப்பட்டுவிடும். வானத்திற்கும் இல்லாமல் பூமிக்கும் இல்லாமல் நடுவில் இருக்கம் திருசங்கு போன்ற எண் இது.

66 –ம் எண்ணில் பெயர் அமைந்தால் நட்பு வட்டாரத்தை பெருக்கி அவர்கள் மூலமாகவே லாபத்தை சம்பாதித்து கொள்வார்கள். ஏற்றமான எதிர்காலத்தை அமைத்து கொள்வார்கள். எடுக்கும் முயற்சி எல்லாம் வெற்றியாக மாறும்.

75 -ம் எண்ணில் பெயர் அமைந்தால் மந்தமான நிலை இருந்தாலும் பிற்காலத்தில் பெரிய லாபத்தை கொடுக்கும். சமுதாயத்தில் நற்பெயர் கிடைக்கும். இவர்களை சுற்றி எப்போதும் நண்பர்கள் இருப்பார்கள்.

84 -ம் எண்ணில் பெயர் அமைந்தால் செலவுகள் அதிகரித்து கொண்டே இருக்கும். எதை செய்தாலும் இழுப்பறி நிலைதான் இருக்கும். நண்பர்களும் எதிரிகள் ஆவார்கள். வெற்றிகளை விட தோல்விகளே அதிகம் சந்திக்க நேரும்.  

93 –ம் எண்ணில் பெயர் அமைந்தால் எதையும் தைரியத்தோடு செய்வார்கள். அதில் லாபத்தையும் அடைவார்கள். நல்ல சிந்தனை, பேச்சாற்றல் இருக்கும். சமுதாயத்தில் நல்ல அந்தஸ்துடன் வாழ்வார்.

102 –ம் எண்ணில் பெயர் அமைந்தால் எடுத்த காரியத்தை பெரியதாக செய்ய வேண்டும் என்று நினைப்பதற்குள் புஸ்வானமாகிவிடும். பெரிய முன்னேற்றதை கொடுக்காது. விரக்தியின் எல்லைக்கே கொண்டு போய்விட்டு விடும்.

ஜாதகம் யோகமாக இருந்தால் எந்த எண்ணில் பெயர் வைத்தாலும் அது பாதகத்தை கொடுக்காது. ஆனால் யோகமான ஜாதகமாக இருந்தாலும் அது முப்பது வருடம் கழித்து நடக்கும் தசையின் காரணத்தால் பாதகத்தை கொடுக்கலாம். அதைதான் நம் முன்னோர்கள் கூறுவார்கள், “முப்பது வருடம் வாழ்ந்தவனும் இல்லை கெட்டவனும் இல்லை.“ அதாவது இராட்டனம் போல் ஏற்றம் – இறக்கம் என்றுதான் ஜாதகம் இருக்கும். அப்படியானால் நல்ல எண்ணில் பெயர் வைத்தால் விதியை மாற்ற முடியுமா? என்றால் நிச்சயமாக முழுவதுமாக மாற்ற முடியாது. ஆனால் பெரும் பாதகத்தை நிச்சயம் தடுக்க முடியும்.

சூரபத்மன் முருகனிடம் போருக்கு வராமல் செய்ய இறைவியாக இருந்தாலும் பராசக்தியால் தடுத்து நிறுத்த முடியாது. முருகன் போர்களத்தை சந்திக்க வேண்டும் என்பது விதி. சூரனை அழிக்க பவழத்தால் ஆன வேலை கொடுத்து வெற்றி பெற செய்தார். முருகனுக்கு வெற்றி சாதகமாக இருக்க பவழவேல் ஒரு பரிகாரம்.

அதை போல், கெட்ட நேரத்தை நல்ல நேரமாக மாற்ற முடியாது. ஆனால் பெரிய பாதகத்தை கொடுக்காமல் நல்ல நேரம் வரும்  வரை எண்கள் பத்திரமாக அந்த நபரை பாதுகாக்கும்.

மூச்சி விட சிரம்மப்படுகிறவர்களுக்கு வென்டிலெட்டர் வைத்து வாழ வைக்கிறார்கள். அதை போல்தான் பெயர் எண்களும்.  பெயர் எண்ணை நமது நன்மைக்கேற்ப மாற்றி கொள்ளலாம். இந்த எண்கள் உங்களுக்கு சாதகமாக வருமா? என்று நீங்கள் தெரிந்து கொள்ளவேண்டும் என்றால், உங்கள் ஜாதகத்தையும் ஆராய்ந்து பார்க்க வேண்டும். குரு ஆதிக்கம் எப்படியிருக்கிறது? என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். ஜாதகம் இல்லாதவர்கள், பிறந்த தேதி, மாதம், வருடத்தின் உடல் எண் – உயிர் எண்ணை பார்த்து பெயர் எண்ணை வைக்க வேண்டும். அப்படி செய்தால்தான் நன்மை ஏற்படும்.

அதிர்ஷ்ட நிறம் –   மஞ்சள், பிங்க்

அதிர்ஷ்ட ராசி கல் –  கனக புஷ்பராகம்

அதிர்ஷ்ட எண் – 5, 9.

மேலும் எண் கணிதத்திற்கான பலன்களை அறிய கிளிக் செய்யவும்.

குரு பெயர்ச்சி பலன்கள் 2012-2013 | Guru Peyarchi Palan 2012-2013 VIDEO      

2012-2013 குரு பெயர்ச்சி பலன்கள்   

http://www.youtube.com/bhakthiplanet

ஜோதிட கட்டுரை படிக்கவும்  

வாஸ்து கட்டுரை படிக்கவும்  

ஆன்மிக பரிகார கட்டுரை படிக்கவும்

Click here for 2012 New Year Rasi Palan / 2012 புத்தாண்டு இராசி பலன்கள் CLICK செய்யவும் 

சனி பெயர்ச்சி பலன்களுக்கு இங்கே CLICK செய்யவும் 

சிவன் கோயி்ல், அம்மன் கோயில், முருகன் கோயில், பெருமாள் கோயில், பிற கோயில்கள் 

CLICK FOR VIDEO PAGE

editor@bhakthiplanet.com

இலவச ஜோதிட கேள்வி-பதில் பகுதிக்கு கிளிக் செய்யவும் 

For Astrology consultation Click Here 

© 2012 bhakthiplanet.com  All Rights Reserved

 

Posted by on Jun 30 2012. Filed under எண்கணிதம். You can follow any responses to this entry through the RSS 2.0. Both comments and pings are currently closed.

Comments are closed

Loading

Naidu Community Matrimony
Free Register For Naidu Community REGISTER NOW
www.manamakkalmalai.com

Ads by bhakthiplanet.com

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2019. All Rights Reserved.| designed & developed by Green Site Tech