இந்தி நாளிதழ் ஒன்றில் வெளியான செய்திதான் இது!! அமிதாப், ஜெயா பச்சன் வீட்டிலிருந்து பிரிந்து தனிக்குடித்தனம் செல்ல விரும்புகிறாராம் ஐஸ்வர்யா ராய் பச்சன். காரணம்? மெகா சீரியல் காரணம்தான்! மாமியார் பிரச்சனை! அதாவது மாமியார் ஜெயாபச்சன் ஐஸ்வர்யா ராயின் ஒவ்வொரு விஷயத்திலும் தலையிட்டு சுதந்திரத்தைக் காலி செய்கிறார் என்று அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது. ஜெயபச்சன் ஒன்றும் கொடுமை படுத்தவில்லை. மாறாக ஐஸ்வர்யா ராய் சம்பந்தப்பட்ட ஒவ்வொரு சிறுவிஷயத்திலும் கூடுதலாக அக்கறை எடுத்துக் கொள்வது பெரும் இடைஞ்சலாக இருக்கிறது […]
சென்னை, நவ. 22- வங்க கடலில் உருவான ஹெலன் புயல் இன்று பிற்பகல் ஆந்திர மாநிலம் மசூலிப்பட்டினத்திற்கு தெற்கே கரையை கடந்தது. இதனால் அந்த பகுதியில் கனமழை பெய்து வருகிறது. தற்போது மேற்கு நோக்கி சென்றுகொண்டிருக்கும் புயல் வலுவிழக்காமல் 6 மணி நேரம் நீடிக்க வாய்ப்பு உள்ளது. கரையை கடந்தபின்னரும் 6 மணி நேரத்துக்கு மணிக்கு 80 கி.மீ. வேகம் வரை காற்று வீசும். அதன்பின்னர் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி வலுவிழக்கத் தொடங்கும் என்றும் வானிலை […]
பீஜிங்:இறந்ததாக நினைத்து இறுதி சடங்கு செய்தபோது குழந்தை திடீரென கதறி அழுதது. சீனாவில் நடந்த இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. சீனாவில் அகு மாகாணத்தில் குழந்தைகள் மருத்துவமனை உள்ளது. இங்கு ஹபே நகரத்தை சேர்ந்த தம்பதியின் ஆண் குழந்தை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டது. பிறந்து சில நாட்களே ஆன அந்த குழந்தை மூச்சு திணறலால் பாதிக்கப்பட்டது. இதனால் குழந்தையை தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து டாக்டர்கள் சிகிச்சையளித்து வந்தனர். இந்த நிலையில் குழந்தையின் உடல் நலம் மிகவும் பாதிக்கப்பட்டது. […]
சிதம்பரம்: கடலூர் மாவட்டம் சிதம்பரத்தை சேர்ந்த சாஹரி அம்மாள் விஸ்வநாத ஐயர் நினைவாக அவருடைய குடும்பத்தை சேர்ந்தவர்கள் ரூ.3.5 கோடி மதிப்புள்ள பவள மாலையை காணிக்கையாக கொடுத்தார்கள். மார்கழி மாதம் ஆருத்ரா தரிசனத்தின் போது திருத்தேரில் ஸ்ரீ நடராஜர் அலங்காரத்தில் காட்சி தருவார். அப்போது, நடராஜருக்கு இந்த மாலை அணிவிக்கப்படும். இத்தாலி நாட்டை சேர்ந்த இந்த பவள மாலையில் 20 பவுன் தங்கம் சேர்க்கப்பட்டுள்ளது. பவள மணியின் எடை 961 கிராம் 600 மில்லி கிராம். இந்த […]
மும்பை பாந்த்ரா பகுதியில் உள்ள அடுக்கு மாடி குடியிருப்பில் நடிகர் கமல்ஹாசனின் மூத்த மகள் சுருதிஹாசன் வசித்து வருகிறார். கடந்த 19ம் தேதி, படப்பிடிப்புக்கு போய்விட்டு வீட்டு வந்த சுருதிஹாசன கதவை பூட்டிவிட்டு தூங்க சென்றார். அப்போது அவருடைய வீட்டு கதவு தட்டப்பட்டது. பின்னர் சுருதிஹாசன் கதவை திறந்ததும் அவரை, அந்த மர்ம மனிதன் தாக்கினான். கழுத்தைப் பிடித்து நெறித்தான். அவனை, சுருதிஹாசன் பலமாக பிடித்து தள்ளிவிட்டு, உள்பக்கமாக கதவை இழுத்துப் பூட்டிக் கொண்டார். உடனே, ‘‘காப்பாற்றுங்கள்’’ […]
ரஜினி, கமல் இணைந்து நடித்து 1977–ல் ரிலீசாகி வெற்றிகரமாக ஓடிய ‘16 வயதினிலே’ படம் டிஜிட்டல், சினிமா ஸ்கோப்பில் புதுப்பிக்கப்பட்டு மீண்டும் ரிலீஸ் செய்யப்படுகிறது. அடுத்த மாதம் (டிசம்பர்) 12–ந்தேதி ரஜினி பிறந்த நாளில் தமிழகம் முழுவதும் இப்படத்தை கலைப்புலி தாணு வெளியிடுகிறார். 350 தியேட்டர்களுக்கு மேல் திரையிட திட்டமிட்டுள்ளனர். இதேநாளில் ரஜினியின் ‘கோச்சடையான்’ படத்தின் பாடல்களும் வெளியாகிறது. ‘16 வயதினிலே’ படம் 36 வருடத்துக்கு பிறகு மீண்டும் வருவதால் ரஜினி, கமல் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். தியேட்டர்களில் […]

சென்னை, நவ.21– மத்திய வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று தீவிரம் அடைந்து புயலாக மாறியது. அந்த புயலுக்கு ‘ஹெலன்’ என்ற பெயர் சூட்டப்பட்டுள்ளது. இது ஆந்திராவை நோக்கி நகர்ந்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி ‘ஹெலன்’ புயல் சென்னையில் இருந்து கிழக்கு வடகிழக்கே 450 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. ஆந்திர மாநிலம் காவாலியில் இருந்து 420 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கிறது. ‘ஹெலன்’ புயல் நாளை மதியம் ஆந்திர மாநிலம் […]
சென்னை, நவ. 21– அ.தி.மு.க. தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:– 4.12.2013 அன்று நடை பெற உள்ள ஏற்காடு சட்ட மன்றத் தொகுதிக்கான இடைத் தேர்தலை முன்னிட்டு, அ.தி.மு.க. பொதுச் செயலாளரும் முதல்–அமைச்சருமான ஜெயலலிதா வருகிற 28–ந்தேதி (வியாழக்கிழமை) அ.தி.மு.க. வேட்பாளர் சரோஜாவை ஆதரித்து, ஏற்காடு சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட கீழ்க்கண்ட இடங்களில் தேர்தல் பிரசாரம் செய்ய உள்ளார். 1. பேசும் இடம்: மின்னாம் பள்ளி, (வழி– காரிப்பட்டி, கருமாபுரம், மேட்டுப்பட்டி, எம். பெருமாபாளையம், டோல்கேட்) […]
பெங்களூர், நவ. 21– பெங்களூரில் ஏ.டி.எம்.மில் பணம் எடுத்த வங்கி பெண் அதிகாரியை மர்ம மனிதன் அரிவாளால் வெட்டி பணத்தை பறித்து சென்றான். தலையில் பலத்த அரிவாள் வெட்டு விழுந்ததால், அந்த பெண்ணின் ஒரு பக்க உடல் உறுப்புகள் செயல் இழந்து விட்டன. அவரை தாக்கிய மர்ம மனிதனை பிடிக்க 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. தாக்குதல் சம்பவம் நடந்த ஏ.டி.எம்.மில் காவலாளி நியமிக்கப்படவில்லை. இது பற்றி தகவல் அறிந்ததும் கர்நாடக மாநில அரசு காவலாளி இல்லாத ஏ.டி.எம்.கள் […]
மறைந்த பழைய காமெடி நடிகர் நாகேஷ் பேரன் கஜேஷ் ஆனந்த் கதாநாயகன் ஆனார். ஏ.எம்.நந்தகுமார் இயக்கும் படத்தில் அவர் நடிக்கிறார். இப்படத்துக்கு இன்னும் பெயரிடப்படவில்லை. இதன் படப்பிடிப்பு துவங்கியுள்ளது. கஜேஷ் ஆனந்த் ஓட்டல் நிர்வாகம் பற்றி படித்துள்ளார். இவர் நாகேஷ் மகனும் நடிகருமான ஆனந்த் பாபுவின் மகன் ஆவார். கதாநாயகனானது குறித்து கஜேஷ் ஆனந்த் சொல்கிறார். எனக்கு 18 வயது இருக்கும் போது தாத்தா நாகேஷ் மறைந்து விட்டார். என் தந்தை ஆனந்த் பாபு நடிகராக இருந்தும்கூட […]