Friday 1st May 2026

தலைப்புச் செய்தி :

Category archives for: கதம்பம்

‘கோச்சடையான்’ படத்தில் புறக்கணிப்பா? டைரக்டர் கே.எஸ்.ரவிகுமார் ஆவேசம்

கோச்சடையான் படத்தில் என்னை புறக்கணித்ததாக வதந்திகளை பரப்புகிறார்கள்Õஎன்று டைரக்டர் கே.எஸ்.ரவிகுமார் கூறினார். சினிமா படவிழா தூத்துக்குடி, போடிநாயக்கனூர் கணேசன் ஆகிய படங்களில் நடித்த ஹரிகுமார் கதாநாயகனாக நடித்துள்ள புதிய படம், “சங்கராபுரம்”. இந்த படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா, சென்னை கமலா தியேட்டரில்  காலை நடந்தது. விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட டைரக்டர் கே.எஸ்.ரவிகுமார் பேசியதாவது: கோச்சடையான் படத்தில் என்னை புறக்கணிப்பதாகவும், விளம்பரங்களில் என்னுடைய பெயரை சிறிய எழுத்தில் போடுவதாகவும் ஊடகங்களில் செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. […]

தீபாவளி பண்டிகையை காரணம் காட்டி பள்ளி மாணவர்களிடம் தீபாவளி வசூல் தீவிரம்: பெற்றோர் அதிருப்தி

கோவை : கோவையில் சில தனியார் பள்ளிகளில் தீபாவளி பண்டிகையை காரணம் காட்டி, ஆசிரியர் அல்லாத பள்ளி ஊழியர்களுக்கு போனஸ் வழங்குவதாக கூறி “ஜோராக’ நன்கொடை வசூலிக்கப்பட்டு வருகிறது; பள்ளிகளில் நோட்டீஸ் விநியோகித்து கட்டண வசூல் செய்வது, பெற்றோர் வயிற்றில் புளியை கரைத்துள்ளது. ஆண்டு முழுவதும் தங்களுக்காக சேவை செய்பவர்களுக்கு, தீபாவளி பண்டிகை நேரத்தில் அன்பளிப்பு வழங்குவதை பலரும் கடமையாக செய்து வருகின்றனர். இந்த அன்பளிப்பு முறையை கோவையில் உள்ள சில தனியார் பள்ளிகள், தீபாவளி நன்கொடை […]

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் இரவு முதல் மீண்டும் மின் உற்பத்தி தொடக்கம்

கூடங்குளம் அணுமின் நிலையத்தின் முதலாவது அணு உலையில் கடந்த 22–ந்தேதி அதிகாலை 2.45 மணிக்கு மின் உற்பத்தி தொடங்கப்பட்டது. முதலில் 75 மெகாவாட்டாக உற்பத்தி செய்யப்பட்ட மின்சாரம் படிப்படியாக 210 மெகாவாட்டாக அதிகரிக்கப்பட்டது. அந்த மின்சாரம் நெல்லை அபிஷேகப்பட்டி மற்றும் மதுரையில் உள்ள மத்திய மின் தொகுப்பு நிலையங்களுக்கு அனுப்பப்பட்டது. சுமார் 2 மணி நேரத்திற்கு பின்னர் தண்ணீரை குளிர் விக்க செய்யும் பணிக்காக டர்பைன் இயக்கம் நிறுத்தப்பட்டு பரிசோதனைகள் நடத்தப்பட்டன. சாதனங்களை குளிர்வித்து, அதன்பின்னர் இந்திய […]

அமெரிக்க வாழ் இந்திய பெண் மிஸ் நியூஜெர்சி

வாஷிங்டன்: அமெரிக்க வாழ் இந்திய பெண் எமிலி ஷா, 2014 ம் ஆண்டிற்கான மிஸ் நியூஜெர்சியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். அமெரிக்காவின் நியூஜெர்சியில் நடைபெற்ற அழகிப்போட்டியில் அமெரிக்க வாழ் இந்தியரன எமிலி ஷா மிஸ் நியூஜெர்சியாக தேர்ந்து எடுக்கப்பட்டுள்ளார். இதனால் மிஸ் அமெரிக்கா அழகிப்போட்டியிலும், மிஸ் யுனிவர்ஸ் போட்டியிலும் இவர் கலந்து கொள்ள முடியும். 18 வயதான எமிலியின் தந்தை பிரசாந்த் ஷா ஹாலிவுட் படத் தயாரிப்பாளராக உள்ளார். இந்தி சினிமாவிலும், சில ஹாலிவுட் படங்களி லும் நடித்துள்ள […]

7 கிரகங்களுடன் கூடிய புதிய சூரிய குடும்பம் கண்டுபிடிப்பு

7 கிரகங்களுடன் கூடிய புதிய சூரிய குடும்பம் ஒன்றை விண்வெளி விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். நமது சூரிய குடும்பத்தைப் போன்று சில ஒற்றுமைகளைக் கொண்டிருக்கும் இந்த சூரிய குடும்பத்தில் சிறிய கிரகங்கள் முதல் பெரிய கிரகங்கள் வரை வரிசையாக உள்ளதாகவும், முதல் 5 கிரகங்கள் மட்டுமே தெளிவாக தெரிவதாகவும், அடுத்துள்ள கிரகங்கள் தெளிவாக புலப்படவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது. ஜோதிட கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்  வாஸ்து கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்  ஆன்மிக பரிகாரங்கள் படிக்க கிளிக் செய்யவும்  […]

சூர்யாவுக்கு எழுதிய கவுதம் கதையில் சிம்பு நடிக்கிறார்

சூர்யாவுக்காக கவுதம் மேனன் எழுதிய கதையில் சிம்பு நடிக்கிறார். ‘சிங்கம்–2’ படத்துக்கு பிறகு கவுதம்மேனன் இயக்கத்தில் சூர்யா நடிப்பதாக இருந்தது. ஆனால் கவுதம் தயார் செய்த கதை தனக்கு திருப்தி அளிக்கவில்லை என்றும், எனவே அவர் படத்தில் இருந்து விலகுகிறேன் என்றும் சூர்யா பரபரப்பு அறிக்கை வெளியிட்டார். கவுதம்மேனனிடம் இருந்து வாங்கிய ரூ.5 கோடி அட்வான்ஸ் தொகையையும் திருப்பி கொடுத்துவிட்டார். தற்போது லிங்குசாமி இயக்கத்தில் அவர் நடிக்கிறார். இதையடுத்து சூர்யாவுக்கு தயார் செய்த கதையில் சிம்பு நடிக்க […]

சென்னை உயர்நீதிமன்றத்தின் ஏழு புதிய நீதிபதிகள் பதவி ஏற்பு

சென்னை உயர்நீதிமன்றத்தின் புதிய நீதிபதிகளாக ஏழு நீதிபதிகள் வெள்ளிக்கிழமை பதவி ஏற்றுக் கொண்டனர். இவர்களுக்கு தலைமை நீதிபதி ராஜேஷ்குமார் அகர்வால் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். சென்னை உயர்நீதிமன்றத்தின் நீதிபதிகளாக ஜி.சொக்கலிங்கம், வி.எஸ்.ரவி, ஆர்.மகாதேவன், எஸ்.வைத்தியநாதன், கே.கல்யாணசுந்தரம், புஷ்பா சத்யநாராயணா, பி.என்.பிரகாஷ் ஆகியோரை நியமித்து குடியரசுத் தலைவர் உத்தரவிட்டார். இதையடுத்து ஏழு புதிய நீதிபதிகளின் பதவிப்பிரமாணம் சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இவர்கள் அனைவருக்கும் தலைமை நீதிபதி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். புதிய நீதிபதிகள் பதவியேற்ற பிறகு, […]

கார்த்தி படத்தின் பெயர் மாற்றம்…?

காளி என்று பெயர் வைத்திருக்கிறார்கள் ரஞ்சித் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் படத்துக்கு. படத்தின் பெயரை அறிவித்த போதே பெரிசுகள் மத்தியில் புகைச்சல் கிளம்பியது. காரணம் காளி என்ற பெயர். பத்ரகாளி என்ற பெயரில் தொடங்கப்பட்ட படத்தின் படப்பிடிப்பில் பெரிய அளவில் தீ விபத்து ஏற்பட்டது. ரஜினி நடித்த காளி படத்திலும் விபத்து ஏற்பட்டு பலர் உயிரிழந்தனர். காளி என்றாலே பழி நிச்சயம் என்பது தமிழ் சினிமா நம்பிக்கை. இந்த ப்ளாஷ்பேக்கை கேட்டவர்கள் காளி என்ற பெயரை கபாலியாக்க […]

வெங்காய விலை உயர்வுக்கு மத்திய அரசு புது விளக்கம்

வெங்காய விலை உயர்வுக்கு மாநில அரசுகள் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்காததே காரணம் என்று மத்திய வர்த்தக துறை அமைச்சர் ஆனந்த் சர்மா புது விளக்கம் அளித்துள்ளார். வட மாநிலங்களில் வெங்காயத்தின் விலை தற்போது கிலோ ரூ.100-ஐ எட்டிவிட்டது. தொடர்ந்து அதிகரித்து வரும் வெங்காயத்தின் விலையை கட்டுப்படுத்த மத்திய அரசு தவறிவிட்டதாக எதிர்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. இந்தூரில் வெங்காயத்தை நகைகள் போல அணிந்து கொண்டு, பாஜக-வினர் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். வெங்காயம் வாங்குவது நகை வாங்குவது […]

சிகிச்சை சரியில்லை: மருத்துவரை கொன்ற இளைஞர்

சீனாவில், சிகிச்சை திருப்தியளிக்காததால், டாக்டரை இளைஞர் ஒருவர் கத்தியால் குத்திக் கொலை செய்தார். சீனாவின் சேஜியாங் மாகாணம் வென்லீங் நகரில் காது, மூக்கு, தொண்டை நோய்களுக்கு சிகிச்சை அளிக்கும் பிரபல மருத்துவமனை ஒன்று உள்ளது. அங்கு, மருத்துவர் வாங், நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்துக்கொண்டிருந்தார். அப்போது, லியான்(33) என்பவர் அங்கு கத்தியுடன் நுழைந்து மருத்துவரை கத்தியால் குத்தினார். தடுக்க முயன்ற இரண்டு ஊழியர்களுக்கும் கத்திக் குத்து விழுந்தது. இதில் மருத்துவர் உயிரிழந்தார். மற்ற இருவரும் காயத்துடன் சிகிச்சை பெற்று […]

Recent Entries

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2026. All Rights Reserved.| designed & developed by Green Site Tech
Translate »