Saturday 2nd May 2026

தலைப்புச் செய்தி :

Category archives for: Headlines

சீனாவில் இறுதி சடங்கு செய்தபோது இறந்த குழந்தை கதறி அழுததால் பரபரப்பு

பீஜிங்:இறந்ததாக நினைத்து இறுதி சடங்கு செய்தபோது குழந்தை திடீரென கதறி அழுதது.  சீனாவில் நடந்த இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. சீனாவில் அகு மாகாணத்தில் குழந்தைகள் மருத்துவமனை உள்ளது. இங்கு ஹபே நகரத்தை சேர்ந்த தம்பதியின் ஆண் குழந்தை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டது. பிறந்து சில நாட்களே ஆன அந்த குழந்தை மூச்சு திணறலால் பாதிக்கப்பட்டது. இதனால் குழந்தையை தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து டாக்டர்கள் சிகிச்சையளித்து வந்தனர். இந்த நிலையில் குழந்தையின் உடல் நலம் மிகவும் பாதிக்கப்பட்டது. […]

சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு ரூ3.5 கோடியில் பவள மாலை

சிதம்பரம்: கடலூர் மாவட்டம் சிதம்பரத்தை சேர்ந்த சாஹரி அம்மாள் விஸ்வநாத ஐயர் நினைவாக அவருடைய குடும்பத்தை சேர்ந்தவர்கள் ரூ.3.5 கோடி மதிப்புள்ள பவள மாலையை காணிக்கையாக கொடுத்தார்கள். மார்கழி மாதம் ஆருத்ரா தரிசனத்தின் போது திருத்தேரில் ஸ்ரீ நடராஜர் அலங்காரத்தில் காட்சி தருவார். அப்போது, நடராஜருக்கு இந்த மாலை அணிவிக்கப்படும். இத்தாலி நாட்டை சேர்ந்த இந்த பவள மாலையில் 20 பவுன் தங்கம் சேர்க்கப்பட்டுள்ளது. பவள மணியின் எடை 961 கிராம் 600 மில்லி கிராம். இந்த […]

சுருதிஹாசன் போலீசில் புகார்; அவரது வீட்டில் இருந்த கண்காணிப்பு கேமராவில் மர்ம நபர் அடையாளம்

மும்பை பாந்த்ரா பகுதியில் உள்ள அடுக்கு மாடி குடியிருப்பில் நடிகர் கமல்ஹாசனின் மூத்த மகள் சுருதிஹாசன் வசித்து வருகிறார். கடந்த 19ம் தேதி, படப்பிடிப்புக்கு போய்விட்டு வீட்டு வந்த சுருதிஹாசன கதவை பூட்டிவிட்டு தூங்க சென்றார். அப்போது அவருடைய வீட்டு கதவு தட்டப்பட்டது. பின்னர் சுருதிஹாசன் கதவை திறந்ததும் அவரை, அந்த மர்ம மனிதன் தாக்கினான். கழுத்தைப் பிடித்து நெறித்தான். அவனை, சுருதிஹாசன் பலமாக பிடித்து தள்ளிவிட்டு, உள்பக்கமாக கதவை இழுத்துப் பூட்டிக் கொண்டார். உடனே, ‘‘காப்பாற்றுங்கள்’’ […]

ரஜினி பிறந்தநாளில் ‘16 வயதினிலே’ ரிலீஸ்: டிஜிட்டல், சினிமா ஸ்கோப்பில் வருகிறது

ரஜினி, கமல் இணைந்து நடித்து 1977–ல் ரிலீசாகி வெற்றிகரமாக ஓடிய ‘16 வயதினிலே’ படம் டிஜிட்டல், சினிமா ஸ்கோப்பில் புதுப்பிக்கப்பட்டு மீண்டும் ரிலீஸ் செய்யப்படுகிறது. அடுத்த மாதம் (டிசம்பர்) 12–ந்தேதி ரஜினி பிறந்த நாளில் தமிழகம் முழுவதும் இப்படத்தை கலைப்புலி தாணு வெளியிடுகிறார். 350 தியேட்டர்களுக்கு மேல் திரையிட திட்டமிட்டுள்ளனர். இதேநாளில் ரஜினியின் ‘கோச்சடையான்’ படத்தின் பாடல்களும் வெளியாகிறது. ‘16 வயதினிலே’ படம் 36 வருடத்துக்கு பிறகு மீண்டும் வருவதால் ரஜினி, கமல் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். தியேட்டர்களில் […]

‘ஹெலன்’ புயல் ஆந்திராவை நோக்கி நகர்ந்து வருகிறது.

சென்னை, நவ.21– மத்திய வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று தீவிரம் அடைந்து புயலாக மாறியது. அந்த புயலுக்கு ‘ஹெலன்’ என்ற பெயர் சூட்டப்பட்டுள்ளது. இது ஆந்திராவை நோக்கி நகர்ந்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி ‘ஹெலன்’ புயல் சென்னையில் இருந்து கிழக்கு வடகிழக்கே 450 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. ஆந்திர மாநிலம் காவாலியில் இருந்து 420 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கிறது. ‘ஹெலன்’ புயல் நாளை மதியம் ஆந்திர மாநிலம் […]

ஏற்காடு தொகுதியில் ஜெயலலிதா 28–ந்தேதி தேர்தல் பிரசாரம்

சென்னை, நவ. 21– அ.தி.மு.க. தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:– 4.12.2013 அன்று நடை பெற உள்ள ஏற்காடு சட்ட மன்றத் தொகுதிக்கான இடைத் தேர்தலை முன்னிட்டு, அ.தி.மு.க. பொதுச் செயலாளரும் முதல்–அமைச்சருமான ஜெயலலிதா வருகிற 28–ந்தேதி (வியாழக்கிழமை) அ.தி.மு.க. வேட்பாளர் சரோஜாவை ஆதரித்து, ஏற்காடு சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட கீழ்க்கண்ட இடங்களில் தேர்தல் பிரசாரம் செய்ய உள்ளார். 1. பேசும் இடம்: மின்னாம் பள்ளி, (வழி– காரிப்பட்டி, கருமாபுரம், மேட்டுப்பட்டி, எம். பெருமாபாளையம், டோல்கேட்) […]

பாதுகாவலர் இல்லாத ஏ.டி.எம்.கள் மூடப்பட்டன- கர்நாடக அரசு நடவடிக்கை

பெங்களூர், நவ. 21– பெங்களூரில் ஏ.டி.எம்.மில் பணம் எடுத்த வங்கி பெண் அதிகாரியை மர்ம மனிதன் அரிவாளால் வெட்டி பணத்தை பறித்து சென்றான். தலையில் பலத்த அரிவாள் வெட்டு விழுந்ததால், அந்த பெண்ணின் ஒரு பக்க உடல் உறுப்புகள் செயல் இழந்து விட்டன. அவரை தாக்கிய மர்ம மனிதனை பிடிக்க 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. தாக்குதல் சம்பவம் நடந்த ஏ.டி.எம்.மில் காவலாளி நியமிக்கப்படவில்லை. இது பற்றி தகவல் அறிந்ததும் கர்நாடக மாநில அரசு காவலாளி இல்லாத ஏ.டி.எம்.கள் […]

நடிகர் நாகேஷ் பேரன் கதாநாயகன் ஆனார்

மறைந்த பழைய காமெடி நடிகர் நாகேஷ் பேரன் கஜேஷ் ஆனந்த் கதாநாயகன் ஆனார். ஏ.எம்.நந்தகுமார் இயக்கும் படத்தில் அவர் நடிக்கிறார். இப்படத்துக்கு இன்னும் பெயரிடப்படவில்லை. இதன் படப்பிடிப்பு துவங்கியுள்ளது. கஜேஷ் ஆனந்த் ஓட்டல் நிர்வாகம் பற்றி படித்துள்ளார். இவர் நாகேஷ் மகனும் நடிகருமான ஆனந்த் பாபுவின் மகன் ஆவார். கதாநாயகனானது குறித்து கஜேஷ் ஆனந்த் சொல்கிறார். எனக்கு 18 வயது இருக்கும் போது தாத்தா நாகேஷ் மறைந்து விட்டார். என் தந்தை ஆனந்த் பாபு நடிகராக இருந்தும்கூட […]

மகளிருக்காக மட்டும் திறக்கப்பட்ட பாரதிய மஹிலா வங்கி.

முன்னால் பிரதமர் இந்திரா காந்தியின் பிறந்த நாளை முன்னிட்டு , பாரதிய மஹிலா வங்கி என்று அழைக்கப்படும் அனைத்து மகளிர் வங்கி  இன்று லக்னோவில் திறக்கப்பட்டது. இதனை பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோர் மும்பையில் இருந்து கானொளி காட்சி மூலம் திறந்து வைத்தனர். முதலில் நாடு முழுவதும் எழு கிளைகள் திறக்கப்படுகிறது. லக்னோவில் இன்று திறக்கப்பட்ட கிளையில் 10 பெண் ஊழியர்கள் பணிபுரிவார்கள் என்று ஒரு அதிகாரி தெரிவித்தார். இந்த ஆண்டு […]

பாலசந்தருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது

இயக்குனர் பாலசந்தருக்கு அவ‌ரின் கலையுலக பங்களிப்புக்காக வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட உள்ளது. ரெய்ன் ட்ராப் என்ற சமூக அமைப்பு இந்த விருதை வழங்குகிறது. அதன் செய்திக் குறிப்பில், கடந்த பல வருடங்களாக திரையுலகுக்கு பாலசந்தர் ஆற்றிவரும் அளப்ப‌ரிய பங்களிப்புக்காக வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. டிசம்பர் 1ஆம் தேதி இந்த விருது பாலசந்தருக்கு வழங்கப்படுகிறது. இந்த விழாவில் ஏ.ஆர்.ரஹ்மான், எஸ்.பி.பாலசுப்பிரமணியம், மனோரமா ஆகியோர் கலந்து கொள்வார்கள் எனவும் அந்த செய்திக் குறிப்பு கூறுகிறது. ஜோதிட […]

Recent Entries

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2026. All Rights Reserved.| designed & developed by Green Site Tech
Translate »