சென்னை: வேட்டி கட்டியவர்களை அனுமதிக்காமல் தமிழர் நாகரிகத்துக்கு எதிராக செயல்படும் மன்றங்களின் (கிளப்புகள்) அனுமதிகள் ரத்து செய்யப்படும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா கடுமையாக எச்சரித்துள்ளார். தமிழக சட்டசபையில் இன்று முதல்வர் ஜெயலலிதா விதி எண் 110-ன் கீழ் வேட்டி விவகாரம் குறித்து அறிக்கை ஒன்றை தாக்கல் செய்து பேசியதாவது: வேட்டி கட்டிக் கொண்டு சென்ற நீதிபதியை அனுமதிக்காத கிளப்பின் செயல் கடுமையாக கண்டிக்கத்தக்கது. வேட்டி கட்டியவர்களை அனுமதிக்காதது தமிழர் நாகரிகத்தை அவமதிக்கும் செயல். தமிழர் நாகரிகத்தைக் […]
சென்னை, ஜூலை 15-ந் தேதி காமராஜரின் பிறந்த நாளாகும். தமிழக அரசின் சார்பில் இந்த நாள் இன்று கொண்டாடப்பட்டது. சென்னை மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் (கலங்கரை விளக்கம் அருகே) உள்ள காமராஜர் சிலை இன்று அலங்கரிக்கப்பட்டு இருந்தது. சிலை அமைந்துள்ள பகுதியில் துணியால் கூடாரம் போடப்பட்டு இருந்தது. காலையில் இருந்தே மேளதாளங்கள் இசைக்கப்பட்டன. காமராஜரின் சிலைக்குக்கீழ் அவரது படம் வைக்கப்பட்டு இருந்தது. முதல்-அமைச்சர் ஜெயலலிதா இன்று காலை 11.45 மணிக்கு அங்கு வந்தார். காமராஜரின் படத்துக்கு […]
சென்னை, தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் மூலம் 10 ஆயிரம் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்படும் என்று முதல்-அமைச்சர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். சட்டப்பேரவையில் விதி 110ன் கீழ் பேசிய தமிழக முதல்- அமைச்சர் ஜெயலலிதா இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் மூலம் 10 ஆயிரம் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்படும். சென்னை மற்றும் இதர நகரங்களில் ரூ. 825 கோடியில் குடியிருப்புகள் அமைக்கப்படும். திருச்சி நாவல்பட்டில் 68,82 ஏக்கரில் 1,360 பல்வேறு வகை மனைகள் ஏற்படுத்தப்படும். […]
புதுடெல்லி, மே 21- புதுடெல்லியில் உள்ள பாராளுமன்ற மைய மண்டபத்தில் நேற்று நடைபெற்ற பா.ஜனதா பாராளுமன்ற குழு கூட்டத்தில், மோடி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்நிகழ்ச்சியில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றிருந்த கட்சிகளின் தலைவர்கள் பலர் கலந்துக்கொண்டனர். அவ்வகையில், தமிழகத்தில் அந்த கூட்டணியில் இடம்பெற்றிருந்த தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், அவரது மனைவி பிரேமலதா, மைத்துனரும் அக்கட்சியின் இளைஞர் அணி மாநில செயலாளருமான எல்.கே.சுதீஷ் ஆகியோரும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர். அப்போது, இந்த மகத்தான வெற்றிக்காக உழைத்த கூட்டணி கட்சியினருக்கும், பாராளுமன்ற […]
சென்னை, வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைத்தந்த தமிழக மக்களுக்கும், உழைத்த அ.தி.மு.க. தொண்டர்களுக்கும், தோழமைக் கட்சியினருக்கும் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் என்று முதல்–அமைச்சர் ஜெயலலிதா கூறினார். சென்னை போயஸ் தோட்டத்திலுள்ள தமது இல்லத்தில் நேற்று மதியம் முதல்–அமைச்சர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் அளித்த பேட்டி வருமாறு:– வரலாறு காணாத வெற்றி நடந்து முடிந்த பாராளுமன்ற மக்களவைத் தேர்தலில் வரலாறு காணாத வெற்றியை அ.தி.மு.க.வுக்கு வழங்கியுள்ள எனது அன்பார்ந்த தமிழக மக்களுக்கு முதலில் எனது நெஞ்சார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் […]
புதுடெல்லி, மே. 17- புதிதாக அமைய இருக்கும் 16-வது பாராளுமன்றத்தில் 3-வது பெரிய கட்சி என்ற பெருமையை அ.தி.மு.க. பெற்று உள்ளது. 543 உறுப்பினர்களை கொண்ட பாராளுமன்றத்தில் பாரதீய ஜனதா அதிக இடங்களை கைப்பற்றி தனிப்பெரும்பான்மை பெற்று உள்ளது. அதற்கு அடுத்தபடியாக காங்கிரஸ் கட்சி 2-வது இடத்தை பெற்று இருக்கிறது. காங்கிரசுக்கு அடுத்தபடியாக அ.தி.மு.க. 37 இடங்களில் வெற்றி பெற்று 3-வது பெரிய கட்சி என்ற கவுரவத்தை பெற்று இருக்கிறது. ஜோதிட கட்டுரை படிக்க கிளிக் செய்யவும் […]
சென்னை, இந்தியாவில் பிரதமர் பதவியேற்க இருக்கும் நரேந்திர மோடிக்கு தமிழகத்தை சேர்ந்த அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். விஜயகாந்த் நரேந்திர மோடிக்கு வாழ்த்து தெரிவித்து தே.மு.தி.க.தலைவர் விஜயகாந்த் அனுப்பி உள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:– தே.மு.தி.க.அங்கம் வகிக்கும் தேசிய ஜனநாயக கூட்டணி இந்தியாவின் பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்று தனி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க போகிறது. இதற்காக எனது இதயங்கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். இந்தியாவில் உள்ள ஏழை–எளிய மக்களின் தேவைகள் நிறைவேறவும், குஜராத்தை போன்று ஊழலற்ற, […]
நாடாளுமன்றத்தேர்தலில் தமிழகத்தில் அதிமுக 37 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. தற்போதைய நிலவரப்படி திமுக ஒரு தொகுதிகளில் கூட முன்னிலை பெறவில்லை. இந்த நிலையில், தோல்வி குறித்து திமுக பொருளாளர் ஸ்டாலின் கூறியபோது, திமுக ஒரு போதும் தோல்வி கண்டு துவளாது. தேர்தல் முடிவு மக்களுக்கு மகிழ்ச்சி என்றால் எங்களுக்கும் மகிழ்ச்சிதான்.மேலும் நாட்டின் பிரதமாரக பதவியேற்கவுள்ள மோடிக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன் என்று தெரிவித்தார். ஜோதிட கட்டுரை படிக்க கிளிக் செய்யவும் வாஸ்து கட்டுரை படிக்க கிளிக் செய்யவும் […]
தமிழ்நாடு, புதுச்சேரியில் உள்ள 40 பாராளுமன்ற தொகுதிகளில் போட்டியிட்ட அ.தி.மு.க. 37 தொகுதிகளில் வெற்றி பெற்று வரலாற்று சாதனை படைத்தது. இந்த பாராளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் உள்ள 39 பாராளுமன்ற தொகுதிகளிலும், புதுச்சேரி பாராளுமன்ற தொகுதியிலும் அ.தி.மு.க. தனித்து போட்டியிட்டது. எந்த கட்சியுடனும் கூட்டணி அமைக்காமல் அ.தி.மு.க. துணிச்சலுடன் தனித்து களம் இறங்கியது முதல்-அமைச்சர் ஜெயலலிதா மாநிலம் முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து, அ.தி.மு.க. அரசின் சாதனைகள் மற்றும் திட்டங்களை சொல்லி மக்களிடம் வாக்கு கேட்டார். அவரது […]
தமிழகம், புதுச்சேரியில் தேர்தல் அமைதியாக நடந்தது: 73 சதவீத ஓட்டுப்பதிவு. முதல்முறை வாக்காளர்கள் ஆர்வத்துடன் வாக்களித்தனர்! தமிழகத்தில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி 61% வாக்குகள் பதிவு ஆகி உள்ளதாக சென்னையில் தேர்தல் அதிகாரிகள் பேட்டி அளித்துள்ளனர். அதிகபட்டசமாக தர்மபுரியில் 71% வாக்குகள் பதிவு ஆகி உள்ளதாக தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வாக்குப்பதிவுக்கு விடுமுறை விடாத நெல்லை சென்னை சில்க்ஸ் – சீல் வைப்பு;ஊழியர்கள் கொடுத்த புகாரின் பேரில் தேர்தல் அதிகாரிகள்அதிரடி நடவடிக்கை! ஐ.டி. நிறுவனங்கள் மீது […]