திருவள்ளூர்:பூந்தமல்லி அருகே வீரராகவபுரத்தில் உள்ள எஸ்ஏ.பொறியியல் கல்லூரி மாணவர்கள் எஸ்.கார்த்திகேயன், சி.செந்தில்குமார், ஆர்.பிரபாகரன் ஆகியோர் விரிவுரையாளர் எச்.அன்வர் பாஷாவின் வழிகாட்டு தலின்படி முக அம்சங்களை கொண்டு ஓட்டுனரின் விழிப்புணர்வை கண்காணிக்கும் கருவியை கண்டுபிடித்துள்ளனர். இந்த கருவி மூலம் கண் அசைவை கண்காணித்து கார் ஓட்டுனரின் அயர்வை கண்டறியலாம். கண்காணிப்பு கருவி சென்சார் தகவலை பெற்று, ஓட்டுனரின் அப்போதைய ஓட்டும் திறனை குறிக்கிறது. சென்சாரில் உள்ள வீடியோ ஓட்டுனரை படம் பிடிக்கிறது. ஓட்டுனரின் சோர்வு குறிப்பிட்ட எல்லையை தொடும்போது […]
தண்டையார்பேட்டை : வண்ணாரப்பேட்டையில் ஸ்டான்லி அரசு மருத்துவமனை உள்ளது. இங்கு 1250க்கு மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். மருத்துவர்கள், ஊழியர்கள், நோயாளிகளை பார்க்க வரும் அவர்களது உறவினர்கள் தங்களது பைக்குகளை மருத்துவமனை வளாகத்தில் நிறுத்துவது வழக்கம். இந்த பைக்குகள் அடிக்கடி மாயமாகி விடுகிறது. இதுகுறித்து மருத்துவமனையில் உள்ள காவல்நிலையத்தில் பலர் புகார் செய்துள்ளனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து பைக் கொள்ளையர்களை தேடிவருகின்றனர். இந்நிலையில் மாதவரத்தை சேர்ந்த ரஜினி (35) என்பவர், மருத்துவமனையில் சிகிச்சை பெறும் உறவினரை […]
தர்மபுரி: தர்மபுரி அருகே ரூ.70 மின் கட்டணம் செலுத்தி வந்த விவசாயிக்கு திடீரென ரூ.2 லட்சம் பில் வந்ததால் அதிர்ச்சியடைந்தார். தர்மபுரி மாவட்டம் கம்பைநல்லூர் ஆல்ட்ரிப்பட்டியைச் சேர்ந்தவர் சின்னசாமி (40). விவசாயியான இவரது வீட்டில் ஒரு பேன், ஒரு டி.வி, 2 குண்டு பல்பு உள்ளது. இரண்டு மாதத்திற்கு ஒருமுறை மின் கட்டணமாக ரூ.70 செலுத்தி வந்துள்ளார். கடந்த வாரம் அவரது வீட்டில் மின்சார மீட்டர் ரீடிங் எடுக்கப்பட்டது. அதில், ரூ.2 லட்சம் மின் கட்டணம் செலுத்தவேண்டும் […]
சென்னையில் இரண்டு தபால் நிலையங்கள் மீது மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டுகள் வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது. நள்ளிரவு மயிலாப்பூர், மந்தைவெளி ஆகிய இரண்டு தபால் நிலையங்கள் மீது இந்த பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டன. இதில் இரண்டு தபால் நிலையங்களிலும் தீப்பற்றி எரிந்தது. தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்புத் துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இது தொடர்பாக இரண்டு பேரை கைது செய்துள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜோதிட கட்டுரை படிக்க கிளிக் செய்யவும் […]
டெல்லி: வங்கிகள் பெறும் குறுகிய கால கடனுக்கான வட்டியை ரிசர்வ் வங்ககி 0.25% உயர்த்தியுள்ளது. இதனால் ரெபோ ரேட் 7.50 சதவீதத்திலிருந்து 7.75 சதவீதமாக அதிகரித்துள்ளது. இந்த வட்டி உயர்வால் தனிநபர், வீடு, வாகன கடன்களின் வட்டி விகிதமும் அதிகரிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இரண்டாம் காலாண்டிற்கான நிதிநிலை ஆய்வு அறிக்கையை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையின்படி ரொக்க கையிருப்பு விகிதத்தில் எந்த மாற்றமும்(4%) செய்யப்படவில்லை. மேலும் அவசரக் கால தேவைக்கான வட்டி விகிதம், 0.25% குறைக்கப்பட்டுள்ளது. […]
திமுக உறுப்பினர் எ.வ.வேலுவை சட்டசபையில் இன்று கண்டக்டர் என்று விமர்சித்தனர். இது குறித்து கருத்து தெரிவித்த திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தே கண்டக்டராக இருந்தவர்தானே என்று கூறியுள்ளார். தமிழக அரசின் மினி பேருந்து குறித்த விவாதம் இன்று சட்டசபையில் நடந்தது. சட்டசபையில் கேள்வி நேரத்திற்கு பிறகு இந்திய குடியரசுக் கட்சியின் தலைவர் செ.கு. தமிழரசன் எம்.எல்.ஏ. மினி பேருந்துகள் பற்றி பேசியபோது, பேருந்துகளில் இருப்பது இரட்டை இலை இல்லை அது இயற்கை காட்சி என்று […]
தி.மு.க. முன்னாள் அமைச்சர் புலவர் செங்குட்டுவன்; அந்தமான் மாநில ராஷ்ட்ரிய ஜனதா தளத் தலைவர் பி.ஆர். கணேசன் திருச்சி மாநகர் மாவட்டம், திருச்சி–2 தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திருச்சி கே. சௌந்தரராசன், தூத்துக்குடி மாவட்டம், காயல்பட்டினம் நகர மன்றத் தலைவர் ஐ.ஆபிதாசேக், எட்டையபுரம் பேரூராட்சி மன்றத் தலைவர் கா. கோவிந்தராஜ பெருமாள் உள்ளிட்டோர் முதல்வர் ஜெயலிதா முன்னிலையில் தனித்தனியாக அதிமுகவில் இணைந்தனர் மேலும் பிரபல செய்தி வாசிப்பாளர்கள், பாத்திமா பாபு, நிர்மலா பெரியசாமி, தஞ்சாவூர் மாவட்ட […]
கோவை : கோவையில் சில தனியார் பள்ளிகளில் தீபாவளி பண்டிகையை காரணம் காட்டி, ஆசிரியர் அல்லாத பள்ளி ஊழியர்களுக்கு போனஸ் வழங்குவதாக கூறி “ஜோராக’ நன்கொடை வசூலிக்கப்பட்டு வருகிறது; பள்ளிகளில் நோட்டீஸ் விநியோகித்து கட்டண வசூல் செய்வது, பெற்றோர் வயிற்றில் புளியை கரைத்துள்ளது. ஆண்டு முழுவதும் தங்களுக்காக சேவை செய்பவர்களுக்கு, தீபாவளி பண்டிகை நேரத்தில் அன்பளிப்பு வழங்குவதை பலரும் கடமையாக செய்து வருகின்றனர். இந்த அன்பளிப்பு முறையை கோவையில் உள்ள சில தனியார் பள்ளிகள், தீபாவளி நன்கொடை […]
கூடங்குளம் அணுமின் நிலையத்தின் முதலாவது அணு உலையில் கடந்த 22–ந்தேதி அதிகாலை 2.45 மணிக்கு மின் உற்பத்தி தொடங்கப்பட்டது. முதலில் 75 மெகாவாட்டாக உற்பத்தி செய்யப்பட்ட மின்சாரம் படிப்படியாக 210 மெகாவாட்டாக அதிகரிக்கப்பட்டது. அந்த மின்சாரம் நெல்லை அபிஷேகப்பட்டி மற்றும் மதுரையில் உள்ள மத்திய மின் தொகுப்பு நிலையங்களுக்கு அனுப்பப்பட்டது. சுமார் 2 மணி நேரத்திற்கு பின்னர் தண்ணீரை குளிர் விக்க செய்யும் பணிக்காக டர்பைன் இயக்கம் நிறுத்தப்பட்டு பரிசோதனைகள் நடத்தப்பட்டன. சாதனங்களை குளிர்வித்து, அதன்பின்னர் இந்திய […]
சென்னை உயர்நீதிமன்றத்தின் புதிய நீதிபதிகளாக ஏழு நீதிபதிகள் வெள்ளிக்கிழமை பதவி ஏற்றுக் கொண்டனர். இவர்களுக்கு தலைமை நீதிபதி ராஜேஷ்குமார் அகர்வால் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். சென்னை உயர்நீதிமன்றத்தின் நீதிபதிகளாக ஜி.சொக்கலிங்கம், வி.எஸ்.ரவி, ஆர்.மகாதேவன், எஸ்.வைத்தியநாதன், கே.கல்யாணசுந்தரம், புஷ்பா சத்யநாராயணா, பி.என்.பிரகாஷ் ஆகியோரை நியமித்து குடியரசுத் தலைவர் உத்தரவிட்டார். இதையடுத்து ஏழு புதிய நீதிபதிகளின் பதவிப்பிரமாணம் சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இவர்கள் அனைவருக்கும் தலைமை நீதிபதி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். புதிய நீதிபதிகள் பதவியேற்ற பிறகு, […]