Monday 3rd August 2026

தலைப்புச் செய்தி :

Category archives for: முதன்மை பக்கம்

3டி-யில் ஷோலே

இந்திய சினிமா சரித்திரத்தில் முக்கியமான படங்களில் ஒன்று ஷோலே. இந்தியன் கமர்ஷியல் சினிமாக்களை ஷோலேக்கு முன் ஷோலேக்கு பின் என்று பிரிக்கலாம். ஷோலேக்கு பிறகு வெளிவந்த கமர்ஷியல் படங்களில் அப்படத்தின் தாக்கம் கடுமையாக இருந்தது. அமிதாப்பச்சன், தர்மேந்திரா, அம்ஜத்கான், ஹேமமாலினி, ஜெயா பச்சன் நடித்த ஷோலே 1975-ல் வெளியானது. இந்தியா முழுக்க வரவேற்பை பெற்ற இப்படத்தை 3டி-யில் வெளியிடுகிறார்கள். யுடிவி அந்தப் பணியை மேற்கொண்டிருக்கிறது. ஷோலேயை ரமேஷ் சிப்பி இயக்கியிருந்தார். திரைக்கதை ஜாவேத் அக்தர், சலீம் கான். […]

இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை மீட்க பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம்

இலங்கை சிறையில் வாடும் தமிழக மீனவர்கள் 86 பேர் மீட்பதற்கு பிரதமர் மன்மோகன் சிங் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுதொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், பாக் நீரினை பகுதியில், மீன் பிடிக்கச் செல்லும் அப்பாவித் தமிழக மீனவர்களை, இலங்கை கடற்படை அத்துமீறி தாக்குதல் நடத்தி வருவதாக குறிப்பிட்டுள்ளார். கடந்த வாரம், ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரத்தில் இருந்து மீன் பிடிக்கச் சென்ற மீனவர்கள் 30 பேரும், அவர்களுக்குச் சொந்தமான 7 படகுகளும், இலங்கை கடற்படையால் […]

சார்பதிவாளர் அலுவலகங்களை கேமரா மூலம் அதிகாரிகள் கண்காணிக்கும் திட்டம் ஜெயலலிதா தொடங்கி வைத்தார்

சென்னை, ஆவணப் பதிவு மோசடிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், சார்பதிவாளர் அலுவலக நடவடிக்கைகளை கேமரா மூலம் அதிகாரிகள் கண்காணிக்கும் திட்டத்தை முதல்–அமைச்சர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார். இனி சொந்தக் கட்டிடம் நில ஆவணங்கள் பதிவு செய்தல், வில்லங்கச் சான்று வழங்குதல், திருமணப் பதிவு போன்ற பணிகளுக்காக சார்பதிவாளர் அலுவலகங்களை பொதுமக்கள் அதிக எண்ணிக்கையில் நாடி வருகின்றனர். இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த சார்பதிவாளர் அலுவலகங்கள் வாடகை கட்டிடங்களில் இயங்கி வருவதோடு, பதிவு ஆவணங்களை பராமரிப்பதற்கும், பணியாளர்கள் பணியாற்றுவதற்கு போதிய […]

சென்னையில் இருந்து ஆந்திராவுக்கு மீண்டும் பேருந்துகள் இயக்கம்

சென்னை, தெலங்கானா தனி மாநிலத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஆந்திராவில் உள்ள சில அமைப்புகள் முழு அடைப்புப் போராட்டத்தில் ஈடுபட்டன.இதன் காரணமாக, இரு தினங்களாக சென்னையில் இருந்து ஆந்திரா செல்லும் பேருந்து போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் சென்னையிலிருந்து ஆந்திராவிற்கு பேருந்துப் போக்குவரத்து இன்று  மீண்டும் தொடங்கியுள்ளது. ஜோதிட கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்  வாஸ்து கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்  ஆன்மிக பரிகாரங்கள் படிக்க கிளிக் செய்யவும்  மருத்துவம் பகுதியை படிக்க கிளிக் செய்யவும்  அறுசுவை […]

திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு: தரிசனத்துக்கு 22 மணி நேரம் ஆகிறது

திருப்பதி, நவ. 9– திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு பக்தர்கள் கூட்டம் கடந்த 2 நாட்களாக அதிகரித்து உள்ளது. இன்றும், நாளையும் விடுமுறை என்பதால் நேற்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருமலையில் குவிந்தனர். வைகுண்டம் 2–வது கியூ காம்ப்ளக்ஸில் அனைத்து கம்பார்ட்மெண்டுகளும் நிரம்பி வழிந்த நிலையில் கோவிலுக்கு வெளியே 500 மீட்டர் தூரத்துக்கு பக்தர்கள் நீண்ட வரிசையில் தரிசனத்துக்கு காத்து நின்றனர். தர்ம தரிசனத்துக்கு 22 மணி நேரம் ஆகிறது. பாதயாத்திரையாக வரும் பக்தர்கள் தரிசனத்துக்கு 5 மணி நேரம் […]

அமெரிக்காவில் பள்ளிக்கு துப்பாக்கியுடன் வந்த 9 வயது சிறுவன்

நியூயார்க், நவ 9– அமெரிக்காவில் பள்ளிக்கு துப்பாக்கியுடன் வந்த 9 வயது சிறுவன் கைது செய்யப்பட்டான். அமெரிக்காவில் புளோரிடா மாகாணத்தில் உள்ள இப்போலியில் தொடக்க பள்ளி உள்ளது. இங்கு படிக்கும் மாணவர்களை டெப்ராடிரைடென் என்ற பெண் டிரைவர் பஸ்சில் அழைத்து வந்தார். அப்போது பஸ்சில் வந்த ஒரு 9 வயது சிறுவன் குண்டுகள் நிரப்பப்பட்ட ஒரு கை துப்பாக்கியை தனது பைக்குள் வைத்து எடுத்து வந்து இருந்தான். அதை வெளியே எடுத்து சக மாணவர்களிடம் காட்டிக் கொண்டிருந்தான். […]

நகைச்சுவை நடிகர் சிட்டிபாபு காலமானார்

தூள், சிவகாசி, திண்டுக்கல் சாரதி, திருவண்ணாமலை, மாப்பிள்ளை உள்பட பல படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடித்த பிரபல நகைச்சுவை நடிகர் சிட்டிபாபு உடல்நலக் குறைவால் சென்னையில் இன்று காலமானார். சிட்டிபாபு ஏற்கனவே சில வருடங்களுக்கு முன்பு இருதய கோளாறு காரணமாக, ‘பைபாஸ் சர்ஜரி’ செய்து கொண்டார். அதன்பிறகு 2 வருடங்களாக அவர் நடிக்காமல் ஓய்வில் இருந்தார். சமீபகாலமாக அவர் மீண்டும் படங்களில் நடிக்க ஆரம்பித்தார். ஆனாலும் உடல்நிலை ஒத்துழைக்கவில்லை. கடந்த 4 ஆம் தேதி அவர் திடீரென […]

தமிழில் பிறப்பு சான்றிதழ் வழங்கும் திட்டம் துவக்கம்

சென்னையில் தமிழில் பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ் வழங்கும் திட்டத்தை சென்னை மாநகராட்சி மேயர் சைதை துரைசாமி சனிக்கிழமை தொடங்கி வைக்கிறார். சான்றிதழ் பெற்றோர் மற்றும் புதிதாக பெற விரும்புவோர்  இந்த புதிய திட்டத்தில், தங்கள் விருப்பப்படி தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் சான்றிதழை பெற்றுக் கொள்ளலாம். ஜோதிட கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்  வாஸ்து கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்  ஆன்மிக பரிகாரங்கள் படிக்க கிளிக் செய்யவும்  மருத்துவம் பகுதியை படிக்க கிளிக் செய்யவும்  அறுசுவை சமையல் […]

என் சிறுநீரகம், மருமகளுக்கு பொருந்தியதற்காக ஆண்டவனுக்கு நன்றி : மருமகளுக்கு சிறுநீரகத்தை தானம் அளித்த மாமியார்

மும்பையில், மாமியார் ஒருவர், தன் இளம் வயது மருமகளுக்கு சிறுநீரகத்தை தானமாக கொடுத்து பிரமிக்க வைத்துள்ளார். மும்பையை சேர்ந்த வைஷாலி ஷாவுக்கு, 35, காய்ச்சல் காரணமாக இரு சிறுநீரகங்களும் பழுதுபட்டது. உடனடியாக, மாற்று சிறுநீரகம் பொருத்த வேண்டிய நிலை ஏற்பட்டது. அவரின் கணவர், மணிஷ் மனம் உடைந்து போனார். அவரின் சிறுநீரகம் பொருந்தவில்லை. இதனால், அவர் மிகுந்த வருத்தம் அடைந்திருந்த நேரத்தில், வைஷாலியின், மாமியார் சுரேகா ஷா, 59, தன் சிறுநீரகத்தை, மருமகளுக்கு தானம் கொடுக்க முன்வந்தார்.இதை […]

கூகுள் கிளாஸ் மூலம் லாபம் ரூ.6,200 கோடி அதிகரிக்கும்

மும்பை : கூகுள் கிளாஸ் போன்ற ஸ்மார்ட் கண்ணாடியை பயன்படுத்துவதால் பல துறைகளிலும் வேலைத் திறன் அதிகரிக்கும். இதன்மூலம் வருங்காலத்தில் பல துறைகளில் ரூ.6,200 கோடி அளவிற்கு லாபம் அதிகரிக்கும் என்று கார்ட்னர் அமைப்பின் ஆய்வு இயக்குனர் ஏஞ்சலா மெக்லன்டர் கூறியுள்ளார். ஸ்மார்ட் கண்ணாடி குறித்து அவர் கூறியதாவது: கூகுள் கிளாஸ் போன்ற ஸ்மார்ட் கண்ணாடியைப் பயன்படுத்துவ தால் வேலைத் திறன் அதிகரி க்கும் என்று எங்களது ஆய்வு முடிவுகள் தெரிவிக்கிறது. மருத்துவம், களப்பணி, வியாபாரம் மற்றும் […]

Recent Entries

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2026. All Rights Reserved.| designed & developed by Green Site Tech
Translate »