சிம்புவும், ஆண்ட்ரியாவும் நெருக்கமாக இருப்பது போன்ற படங்கள் சமீபத்தில் இணையதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. வி.டி.வி. கணேஷ், மீராஜாஸ்மின் ஜோடியாக நடிக்கும் இங்க என்ன சொல்லுது படத்தில் சிம்புவும் ஆண்ட்ரியாவும் கவுரவ தோற்றத்தில் வருகிறார்கள். அந்த படத் தில் நடித்தபோது இப்படங்கள் எடுக்கப்பட்டதாக கூறப்பட்டது. படத்தில் நடித்தபோது இருவருக்கும் கெமஸ்ட்ரி நன்றாக இருந்தது என்று வி.டி.வி. கணேஷ் தெரிவித்தார். இதையடுத்து சிம்பு, ஆண்ட்ரியா இடையே காதல் துளிர்ந்துள்ளதாக கிசுகிசுக்கள் பரவின. ஏற்கனவே சிம்புவும் ஹன்சிகாவும் காதலித்து வந்தனர். […]
இயக்குனரும், நடிகருமான பார்த்திபன் கதையே இல்லாமல் ஒரு படத்தை இயக்க முடிவு செய்துள்ளார். தன்னுடைய படங்களில் தலைப்பை வித்தியாசமாக வைக்கும் பார்த்திபன் இந்த படத்திலும் வித்தியாசமான தலைப்பை தேர்வு செய்துள்ளார். இவர் இயக்கும் புதிய படத்திற்கு ‘கதை திரைக்கதை வசனம் இயக்கம்’ என பெயர் வைத்துள்ளார். இந்த படத்தின் போஸ்டர்களை 100 ஆண்டு இந்திய சினிமாவுக்கு செலுத்தும் மரியாதை என்ற அறிவிப்போடு வெளியிட்டுள்ளார். இப்படத்தின் தொடக்கவிழா சென்னையில் உள்ள பிரபல நட்சத்திர ஓட்டலில் நடைபெற்றது. இதில் பார்த்திபன் […]
திருச்செந்தூர்: திருச்செந்தூர் கந்தசஷ்டி திருவிழாவில் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் இன்று நடக்கிறது. இதை காண லட்சக்கணக்கான பக்தர்கள் திருச்செந்தூரில் குவிந்துள்ளனர். அறுபடை வீடுகளில் இரண்டாவது படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்தசஷ்டி திருவிழா கடந்த 3ம் தேதி துவங்கியது. முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் இன்று (8ம் தேதி) மாலை 4.35 மணிக்கு திருச்செந்தூர் கடற்கரையில் நடக்கிறது. இதையொட்டி, இன்று அதிகாலை 1 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 2 […]
பிலிப்பைன்ஸ் நாட்டில் சமர் தீவு உள்ளது. இது தலைநகர் மணிலாவில் இருந்து தென் கிழக்கில் 600 கி.மீட்டர் தூரத்தில் உள்ளது. இந்த தீவை ‘ஹையான்’ என்ற புயல் நெருங்கி வந்து மிரட்டிக் கொண்டிருந்தது. இந்த நிலையில் இந்த புயல் பிலிப்பைன்ஸ் நேரப்படி இன்று அதிகாலை 4.40 மணிக்கு (இந்திய நேரப்படி நேற்று இரவு 8.40-க்கு) கடுமையாக தாக்கியது. இதனால் மணிக்கு 185 கி.மீட்டர் வேகத்தில் கடுமையான சூறைக்காற்றுடன் மழை கொட்டியது. ரோடுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. வீடுகளுக்குள் […]
சென்னை, உலக செஸ்போட்டியில் கார்ல்செனின் சவாலை எதிர்கொள்ள தயாராக இருப்பதாக தெரிவித்த இந்திய வீரர் விஸ்வநாதன் ஆனந்த், தனக்கு உதவியாக இருக்கும் வீரர்களின் பட்டியலையும் வெளியிட்டார். ஆனந்த் பேட்டி நடப்பு சாம்பியன் இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த், உலகின் நம்பர் ஒன் வீரர் நார்வேயின் மாக்னஸ் கார்ல்சென் இடையிலான உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி சென்னையில் உள்ள ஹயாத் நட்சத்திர ஓட்டலில் நாளை தொடங்குகிறது. 12 சுற்று கொண்ட இந்த போட்டியில் யார் முதலில் 6.5 புள்ளிகளை எட்டுகிறார்களோ? […]
சென்னை விளையாட்டு மேம்பாட்டுக்காக தமிழக அரசு பல கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது என்று முதல்–அமைச்சர் ஜெயலலிதா பேசினார். உலக சதுரங்க போட்டியின் தொடக்க விழா, சென்னை நேரு விளையாட்டு அரங்கத்தில் நேற்று நடைபெற்றது. இந்தப்போட்டியை தொடக்கி வைத்து முதல்–அமைச்சர் ஜெயலலிதா ஆற்றிய உரை வருமாறு:– சதுரங்கத்துக்கு பொற்காலம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த காலகட்டத்தில், இந்தப்போட்டி நடைபெறுவது, சதுரங்கத்துக்கு பொற்காலமாகும். மிகப்பழமையான புத்திகூர்மைக்கான இந்த விளையாட்டின் தாயகமான இந்தியாவில், முதல்முறையாக இந்தப்போட்டி நடைபெறுகிறது. உலக சதுரங்க வாகையர் […]
நடிகர் கமலஹாசன் இன்று தனது 59–வது பிறந்த நாளை கொண்டாடினார். நடிகர், நடிகைகள் பலர் நேரிலும் போனிலும் வாழ்த்தினார்கள். பிறந்த நாளையொட்டி நேற்று நள்ளிரவு முக்கியஸ்தர்களுக்கு சென்னையில் உள்ள ஒட்டல் ஒன்றில் விருந்து கொடுத்தார். இதில் நடிகர்கள் ஆர்யா, தனுஷ், டைரக்டர்கள் மணிரத்னம், செல்வமணி, நடிகை சுகாசினி உள்ளிட்ட பலர் பங்கேற்று கமலுக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்தினார்கள். நடிகை கவுதமியும் இதில் பங்கேற்றார். பின்னர் கமல் ‘கேக்’ வெட்டினார். கமலை அர்ஜுன் வாழ்த்தியுள்ளார். அவர் கூறும்போது, இந்திய […]
தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட ஓப்பனிங் கொண்ட ஹீரோக்களில் நடிகர் அஜீத்தும் ஒருவர். அவரது படம் வெளியாகும் போதெல்லாம் தியேட்டர்களில் ரசிகர்கள் கூட்டம் அலைமோதும். அந்த வகையில் ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்போடு தீபாவளிக்கு 2-நாட்கள் முன்னதாக அஜீத்தின் ‘ஆரம்பம்’ படம் திரையரங்குகளில் வெளியானது. இந்த படத்தை பார்க்க தியேட்டர்களில் ரசிகர்கள் கூட்டம் அலைமோதியது. ‘பில்லா’ வெற்றிக்குப் பிறகு விஷ்ணுவர்தன்–அஜீத் கூட்டணியில் உருவான படம் என்பதால், இதுவரை இல்லாத அளவிற்கு ‘ஆரம்பம்’ படத்திற்கு டிக்கெட் விற்பனையும் படுஜோராக நடந்தது. முதல் […]
திருச்செந்தூர், நவ.7 – திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நாளை மாலை சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடக்கிறது. இதில் லட்சக்கணக்காக பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர். முருப்பெருமானின் இரண்டாவது வது படை வீடாக திகழ்வது திருச்செந்தூர். திருச்சீரலைவாய் என்று அழைக்கப்படும் இக்கோவிலில் முருகப் பெருமான், சுப்பிரமணிய சுவாமியாக காட்சி தருகிறார். கோவிலில் ஐப்பசி மாதம் அமாவாசையை அடுத்து 6 ம் நாள் முருகன் சூரனை சம்ஹாரம் செய்து ஆட்கொண்ட திருநாளாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு கந்தசஷ்டி விழா கடந்த […]
பீஜிங், செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பை ஆய்வு செய்வதற்காக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் மங்கள்யான் விண்கலம் நேற்று முன்தினம் விண்ணில் செலுத்தப்பட்டது. இதற்கு உலக நாடுகள் பாராட்டு தெரிவித்து வருகின்றன. ஆசியாவில் இந்தியாவின் மிகப்பெரிய போட்டி நாடாக கருதப்படும் சீனாவும் இத்திட்டத்தை வரவேற்றுள்ளது. இது குறித்து, சீனாவில் இயங்கி வரும் தெற்காசிய கல்வி அகடாமி பேராசிரியர் யி ஹைலின் கூறும்போது, ‘‘செவ்வாய் கிரக ஆய்வில் இந்தியாவின் மங்கள்யான் திட்டம் மிகப்பெரிய வெற்றியாகும். இதற்காக உலக நாடுகள் […]