Sunday 2nd August 2026

தலைப்புச் செய்தி :

Category archives for: முதன்மை பக்கம்

காற்றழுத்த தாழ்வு நிலை நீடிப்பு: புயல் சின்னமாக மாற வாய்ப்பு

சென்னை, டிச 4– தென் மேற்கு வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை தமிழகத்தை நோக்கி நகர்ந்து வந்தது. அது நேற்று முன்தினம் தீவிர காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறியது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் கடலோர மாவட்டங்களிலும் உள் மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் காற்றழுத்த தாழ்வு பகுதி வடக்கு நோக்கி நகரும் என்று கணிக்கப்பட்ட நிலையில் அது நகராமல் அங்கேயே நிலை கொண்டுள்ளது. இதன் காரணமாக வரும் 24 மணி […]

ஹன்சிகாவிடம் ரசிகர்கள் ரகளை: கையை பிடித்து இழுத்து கலாட்டா

ஹன்சிகா ‘உயிரே உயிரே’ என்ற தமிழ் படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு கோவாவில் நடந்து வருகிறது. அங்கு ஹன்சிகா பங்கேற்ற பாடல் காட்சியொன்றை படமாக்கினர். அப்போது படப்பிடிப்பை காண அங்கு பெரும் கூட்டம் கூடியது. கடற்கரையில் ஹன்சிகா ஆடிக்கொண்டு இருந்தபோது ரசிகர்கள் அவரை சூழ்ந்தனர். ஹன்சிகாவோடு சேர்ந்து நின்று போட்டோ எடுக்க முண்டியடித்தார்கள். சிலர் அத்துமீறி ஹன்சிகா கையை பிடித்து இழுத்து ரகளையில் ஈடுபட்டனர். ரசிகர்கள் பிடியில் சிக்கி ஹன்சிகா தவித்தார். போலீசாரும் பாதுகாவலர்களும் விரைந்து […]

கோயம்பேட்டில் ஆக்கிரமித்து கட்டிய புதுமுக நடிகரின் வீடு இடிப்பு: மனைவி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு

கோயம்பேடு, டிச.4– கோயம்பேடு மார்க்கெட் பின்புறம் நெற்குன்றம் சாலையில் வசித்து வருபவர் ராஜ்குமார். புதுமுக நடிகரான இவர், ‘அறுவடை நேரம்’ என்ற படத்தை தயாரித்து கதாநாயகனாக நடித்து வருகிறார். இவரது மனைவி சாந்தகுமாரி. இவர்களது வீடு நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான 700 சதுரஅடி நிலத்தில் கட்டப்பட்டு இருந்தது. இதுகுறித்து நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் நடிகர் ராஜ்குமாருக்கு நோட்டீசு அனுப்பினர். வீட்டை இடித்து அகற்றுமாறு கூறி இருந்தனர். ஆனால் நடிகர் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்தார். இந்த நிலையில் […]

ட்விட்டரில் களமிறங்கிவிட்டார் வடிவேலு!

தனது அன்பார்ந்த ரசிகர்களுடன் நேரடி தொடர்பு வைத்துக்கொள்வதற்காக அச்சாரமிட்டுள்ளார் நடிகர் வடிவேலு. தனது ரசிகர்களிடம் நேரடியாக கனெக்ஷன் வைத்துக்கொள்ள விரும்பிய வைகைப்புயல், தற்போது சமூக வலைதளமான ட்விட்டரில் களமிறங்கிவிட்டார். இவர் ட்விட்டரில் சில வினாடிகளில் கிட்டத்திட்ட 4000 நபர்கள் வைகைப்புயலை பின் தொடர ஆயத்தமாகினர். ஜோதிட கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்  வாஸ்து கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்  ஆன்மிக பரிகாரங்கள் படிக்க கிளிக் செய்யவும்  For Astrology Consultation Contact: Astrologer, Sri Durga Devi […]

வங்க கடலில் காற்றழுத்த பகுதி தீவிரம்: புயலாக மாற வாய்ப்பு

சென்னை, டிச. 2– சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் ரமணன் நிருபர்களிடம் கூறியதாவது:– தென்கிழக்கு வங்க கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு நிலை வலுப்பெற்று தீவிர காற்றழுத்த தாழ்வு பகுதியாக தென்மேற்கு வங்க கடல் பகுதியில் நிலை கொண்டுள்ளது. இதன் காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் பரவலாக மழை பெய்துள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மண்டலமாக மாற வாய்ப்பு உள்ளது. அப்படி மாறும்பட்சத்தில் (புயல்) அது தீவிரமாக கண்காணிக்கப்பட்டு எந்த திசை […]

பாதுகாவலர்கள் கெடுபிடியின்றி சாதாரண உடையில் ஒபாமா புத்தக கடைக்கு சென்றார்

வாஷிங்டன், டிச. 2- கிருஸ்துமஸ் பண்டிகைக்கு முந்தைய ஒருமாத காலத்தை நன்றி தெரிவிக்கும் நாளாக (தேங்க்ஸ் கிவிங் டே) கடைபிடிப்பது அமெரிக்கர்களின் வழக்கம். இந்த ஒரு மாதத்தில் தங்களுக்கு மிகவும் நெருக்கமான நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு எதிர்பாராத பரிசுகளை தந்து அசத்துவது இந்த நன்றி தெரிவிக்கும் நாளின் சிறப்பம்சமாகும். 4 ஆண்டுகளுக்கு முன்னர் அமெரிக்கா கடுமையான பொருளாதார சரிவை சந்தித்தபோது நன்றி அறிவிப்புக்காக அன்பளிப்புகளை வாங்குபவர்கள் தாங்கள் வசிக்கும் பகுதியில் உள்ள சிறிய கடைகளில் மட்டுமே வாங்கி […]

தேர்தல் முடிவுகளை பேஸ்புக்கில் வெளியிட ஆணையம் தயார்

புதுடெல்லி:டெல்லி உள்பட 5 மாநில சட்டசபை தேர்தல் முடிவுகளை உடனுக்குடன் பேஸ்புக் மற்றும் டுவிட்டரில் வெளியிட தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. டெல்லி, ராஜஸ்தான், சட்டீஸ்கர், மத்தியபிரதேசம், மிசோரம் ஆகிய 5 மாநில சட்டசபை தேர்தல்கள் நடைபெற்று வருகின்றன. ராஜஸ்தான் மற்றும் டெல்லி தவிர மற்ற 3 மாநிலங்களில் வாக்குப்பதிவு முடிந்து விட்டது. ராஜஸ்தானில் வரும் 1ம் தேதியும், டெல்லியில் வரும் 4ம் தேதியும் வாக்கு பதிவு நடைபெறுகிறது. 5 மாநிலங்களிலும் பதிவான வாக்குகள் 8ம் தேதி […]

சுட்டி வீரருக்கு கவாஸ்கர் வாழ்த்து 1 லட்சம் பரிசு

இந்தியாவையே திரும்பி பார்க்க செய்த சிறுவன் பிருத்வி. பள்ளிகளுக்கு இடையே மும்பையில் நடந்த போட்டியில் 546 ரன்கள் குவித்து உலக சாதனை படைத்த பிருத்வியை பத்திரிகைகள் பாராட்டியது மட்டுமல்லாமல் அடுத்த சச்சின் உருவாகி வருகிறார் என்று ஆரூடம் தெரிவித்தன. கிரிக்கெட் ஜாம்பவான் கவாஸ்கர் தனிப்பட்ட முறையில் பிருத்விக்கு வாழ்த்து தெரிவித்து கடிதம் அனுப்பி இருக்கிறார். அந்த கடிதத்தில் கூறியிருப்பது: அன்பு பிருத்வி, இது சுருக்கமாக உனக்கு பாராட்டு தெரிவிக்கும் கடிதம். 546 ரன்கள் எடுத்ததற்காக உன்னை பாராட்டுகிறேன். […]

காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் கோவில் மேலாளர் சங்கர ராமன் கொலை வழக்கில் அனைவரும் விடுதலை: கோர்ட் தீர்ப்பு

காஞ்சீபுரம், காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் கோவில் மேலாளர் சங்கர ராமன் கொலை வழக்கில் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர். சங்கர ராமன் கொலை காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் கோவில் மேலாளர் சங்கர ராமன் 3.9.2004 அன்று அந்த கோவிலின் உள்ளே உள்ள தனது அலுவலகத்தில் பட்டப்பகலில் படுகொலை செய்யப்பட்டார். இது குறித்து விஷ்ணு காஞ்சி காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. இது தொடர்பாக காஞ்சி சங்கராச்சாரியார்கள் ஜெயேந்திரர், விஜயேந்திரர், சுந்தரேச அய்யர், ரகு, அப்பு, கதிரவன், ரஜினிகாந்த், அம்பிகாபதி, […]

டிசம்பர் 1–ந்தேதி செவ்வாய் கிரகத்துக்கு திசை திரும்புகிறது மங்கள்யான்

புதுடெல்லி, நவ. 27– மங்கள்யான் விண்கலம் வருகிற 1–ந்தேதி பூமியின் சுற்று வட்டப்பாதையில் இருந்து செவ்வாய் கிரகத்துக்கு திசை திருப்பப்படுகிறது. செவ்வாய்கிரகம் பற்றி ஆராய்ச்சி செய்வதற்காக இந்தியா மங்கள்யான் விண்கலத்தை அனுப்பி உள்ளது. ரூ.450 கோடி செலவில் தயாரிக்கப்பட்ட இந்த விண்கலம் பி.எஸ்.எல்.வி. ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்தில் இருந்து விண்ணில் செலுத்தப்பட்டது. பூமியைச் சுற்றி வரும் மங்கள்யானின் சுற்று வட்டப்பாதை படிப்படியாக உயர்த்தப்பட்டு வருகிறது. கடைசியாக 2 லட்சம் கி.மீ. உயரத்துக்கு பல்வேறு சிக்கல்களுக்குப்பின் உயர்த்தப்பட்டது. […]

Recent Entries

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2026. All Rights Reserved.| designed & developed by Green Site Tech
Translate »