Sunday 2nd August 2026

தலைப்புச் செய்தி :

Category archives for: முதன்மை பக்கம்

செவ்வாய் கிரக பயணத்துக்கு 20,000 இந்தியர்கள் விண்ணப்பம்

செவ்வாய் கிரகத்துக்கு சென்று அங்கேயே நிரந்தரமாக தங்குவதற்கான பயணத்துக்கு, இந்தியர்கள் 20,000 பேர் உள்பட உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து மொத்தம் 2,02,586 பேர் விண்ணப்பித்துள்ளனர். செவ்வாய் கிரகத்தில் நிரந்தரமாகத் தங்குவதற்கான “ஒரு வழிப் பயணம்’ ஒன்றை “மார்ஸ் ஒன்’ என்ற தனியார் நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது. இந்தப் பயணத்துக்காக 5 மாதத்தில் 140 நாடுகளில் இருந்து சுமார் 2 லட்சம் விண்ணப்பங்கள் அந்த தனியார் நிறுவனத்தில் அளிக்கப்பட்டுள்ளன. இந்த மொத்த விண்ணப்பத்தில் 24 சதவீதம் அமெரிக்காவில் […]

நோக்கியாவின் சென்னை தொழிற்சாலையை மைக்ரோசாப்ட்டிற்கு விற்கலாம்: டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி, டிச.12- வரி ஏய்ப்பு செய்ததாக கூறி சென்னையிலுள்ள நோக்கியா நிறுவனத்தின் மொபைல் போன் தயாரிப்பு தொழிற்சாலையை வருமான வரித்துறையினர் கடந்த செப்டம்பர் மாதம் சீல் வைத்தனர். இந்நிலையில் இந்நிறுவனம் தனது மொபைல் போன் தொழிலை மைக்ரோசாப்ட் நிறுவனத்திடம் 42,500 கோடி ரூபாய்க்கு விற்க முடிவு செய்துள்ளது. இந்நிறுவனத்தின் சென்னை தொழிற்சாலையை விற்பதற்கு முன் இந்திய அரசுக்கு செலுத்தவேண்டிய 21,000 கோடி வரியை செலுத்துமாறு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியது. இதை எதிர்த்து அந்நிறுவனம் டெல்லி உயர்நீதிமன்றத்தில் […]

லிங்குசாமியின் இயக்கத்தில் சூர்யா

சூர்யாவின் அடுத்த படத்தை லிங்குசாமி தனது திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் மூலமாக தயாரித்து இயக்கவிருக்கிறார் என்கிற செய்தி தற்போது உறுதியாகியுள்ளது. கடந்த வாரம் சென்னையில் இதற்கான போட்டோ ஷூட் நடந்தது. இன்னமும் பெயரிடப்படாத இப்படத்தில் சூர்யா தாடி வைத்தபடி நடிக்கவிருக்கிறார். படப்பிடிப்பு அடுத்தா மாதம் மும்பையில் துவங்க இருக்கிறதாம். அதற்கு அடுத்த ஷெட்யூல் ஹைதாராபாத்தில் நடக்க இருக்கிறதாம். படத்தில் சூர்யாவின் ஜோடியாக சமந்தா நடிக்கிறார். மற்றும் இந்தி நடிகர் மனோஜ் பாஜ்பாய் முக்கிய பாத்திரத்தில் நடிக்கிறார். நீண்ட […]

ஜனாதிபதியின் சமையல்காரர்

அமெரிக்காவில் வெளியாகியிருக்கிறது ‘தி பட்லர்’ என்கிற ஹாலிவுட் திரைப்படம். யூஜின் ஆலன் என்கிற அமெரிக்க வெள்ளை மாளிகையில் ஜனாதிபதிகளின் சமையல்காரராயிருந்த சமையல்காரரின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு எழுதப்பட்ட புத்தகத்தை தழுவி எடுக்கப்பட்டிருக்கிறது இப்படம். 1952லிருந்து 1986 வரை வெள்ளை மாளிகையில் சமையல்காரராக பணியாற்றும் சிசில் என்கிற சமையல்காரப் பாத்திரமாக கதை விரிகிறது. இந்த சமையல்காரர் தனது வாழ்நாளில் பல முக்கிய ஜனாதிபதிகளுக்கு சமையல் பரிமாறுகிறார். வரலாற்றில் அமெரிக்கா எடுத்த பல முக்கிய முடிவுகளை அவர் தனது கண்களால் […]

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த மண்டலம் புயலாக மாறியது

சென்னை, டிச. 7- வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை புயல் சின்னமாக மாறியது. இதனால் தமிழக கடலோர மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்துள்ளது. தென்மேற்கு வங்ககடலில் கடந்த வாரம் காற்றழுத்த தாழ்வு நிலை உருவானது. அது காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறி அதே இடத்தில் நிலை கொண்டு இருந்தது. காற்றழுத்த தாழ்வு பகுதியானது புயல் சின்னமாக மாறும் வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்தது. என்றாலும் மேல் […]

ஏ.டி.எம்.களில் பணம் எடுத்தால் ரூ.26 பிடித்தம்

பாதுகாப்பு செலவை சரிகட்ட வேறு வங்கி ஏ.டி.எம்.களில் பணம் எடுத்தால் ரூ.26 பிடித்தம் செய்யப்படும் என்று வங்கிகள் அறிவித்துள்ளன. பெங்களூரில் சமீபத்தில் ஏ.டி.எம்.மில் பணம் எடுத்துக் கொண்டிருந்த வங்கி பெண் அதிகாரி சரமாரியாக அரிவாளால் வெட்டப்பட்டார். இதையடுத்து ஏ.டி.எம்.களில் பாதுகாப்பை பலப்படுத்த காவல்துறையினர் உத்தரவிட்டுள்ளனர். தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, மராட்டியம் உள்பட பல மாநிலங்கள், ஏ.எம்.டி.களில் பாதுகாப்பை செய்ய கால அவகாசத்துடன் ‘கெடு’ விதித்துள்ளன. இதனால் காவலாளியை நியமிக்க வேண்டிய நிர்ப்பந்தம் வங்கிகளுக்கு ஏற்பட்டுள்ளன. இது வங்கிகளுக்கு […]

மொபைலில் இண்டர்நெட் இல்லாமலேயே டுவிட்டரை பயன்படுத்தும் வசதி

தற்போது டுவிட்டரை பயன்படுத்த வேண்டுமானால் இண்டர்நெட் கனெக்சன் தேவை. இதை மேலும் எளிமைப்படுத்த டுவிட்டர் நிறுவனம் சிங்கப்பூரை சேர்ந்த ஒரு நிறுவனத்துடன் சேர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. 140 எழுத்துகள் கொண்ட வாசகங்களை ட்விட்டரில் இண்டெர்நெட் சேவை இல்லாமலேயே பதிவு செய்ய முயற்சி நடந்துவருகிறது. ஏற்கனவே பேஸ்புக்குடன் இணைந்துள்ள யு2யோபியா மொபைல் நிறுவனம் தற்போது ட்விட்டருடன் இணைந்து இச்சேவையை வழங்க உள்ளதாக தலைமை நிர்வாகி சுமேஷ் மேனன் ராய்ட்டர் செய்திப்பிரிவுற்கு அளித்துள்ள தகவலில் தெரிவித்துள்ளார். சிறிய கோட் […]

திருமணத்தை தடுக்கும் ஏழாம் இடமும், எட்டாம் இடமும்!

Sri Durga Devi upasakar, V.G.Krishnarau.  இன்று வேலை வாய்ப்பு, தொழில்துறையை விட திருமண விவகாரம் பூதகரமாக இருக்கிறது. இணையத்தை (INTERNET) திறந்தால் மரத்தில் இருக்கும் இலைகளைபோல் எத்தனையோ மேட்ரிமோனி வெப் தளங்கள் – திருமண தகவல் மையங்கள். ஒரு மேட்ரிமோனியில் மட்டும் பதிவு செய்யாமல் பல மேட்ரிமோனிகளிலும் பதிவு செய்துவிட்டு பல ஆண்டுகள் காத்திருந்தும் சிலருக்கு வரன்கள் அமைவதில்லை. ஜோதிட ரீதியாக அதற்கான காரணம் என்ன? பெண்களுக்கு “மாங்கல்ய ஸ்தானம்” என்று சொல்லக்கூடிய 8-ம் இடம் […]

ஐஸ்வர்யாராயை குழப்பும் ராகு!

Sri Durga Devi upasakar, V.G.Krishnarau. ஐஸ்வர்யா ராய் ஜாதகத்தை 19.03.2011 அன்று ஏற்கனவே கணித்து வெளியிட்டோம். அதில் தற்காலம் ராகு திசை நடப்பதால், மனக்குழப்பம் ஏற்படும் என்றும் உடல்நலனில் அதிகம் கவனம் தேவை என்றும் கணித்திருந்தோம். தனுசு இராசி, கன்னி லக்கினத்தில் பிறந்தவர் ஐஸ்வர்யா ராய். தற்போது அவரின் ஜாதகப்படி ராகுவிடம் சிக்கி சஞ்சலப்படுகிறார். இவரின் ஜாதகத்தில் ஜென்மத்தில் இருக்கும் இராகு, சும்மா விடுவாரா? அரசனையும் ஆட்டிப் படைப்பவன் ராகு பகவான். அவனே தசாநாதனாகவும் இருப்பதால், […]

திருமணத்தை பற்றி இப்போது சிந்திக்கவில்லை: சமந்தா

சித்தார்த்தும் சமந்தாவும் காதலிக்கின்றனர். இருவருக்கும் விரைவில் திருமணம் நடக்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதற்கிடையில் சமந்தா தோல் அலர்ஜி நோயால் அவதிப்படுவதாகவும் இதனால் லிங்குசாமி இயக்கும் படப்பிடிப்பில் இருந்து வெளியேறி விட்டதாகவும் கூறப்பட்டது. இதற்கு சமந்தா பதில் அளித்துள்ளார். அவர் கூறியதாவது. நான் சினிமாவில் பிசியாக நடித்துக் கொண்டு இருக்கிறேன். ஐந்து படங்கள், கைவசம் உள்ளன. எனவே திருமணத்தை பற்றி இப்போது சிந்திக்கவில்லை. 3 வருடங்கள் கழித்தே அதுபற்றி யோசிப்பேன். நடிகைகளுக்கு சினிமா வாழ்க்கை என்பது கொஞ்ச […]

Recent Entries

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2026. All Rights Reserved.| designed & developed by Green Site Tech
Translate »