சென்னை, டிச. 12– வடபழனி 100 அடி ரோடு லோகநாதன் நகர் 1–வது தெருவில் நாவல் மூலிகை உணவகம் மற்றும் சித்த ஆயுர் வேத மருத்துவமனை புதிதாக அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நாளை (வெள்ளிக்கிழமை) காலை 9 மணிக்கு நடைபெறுகிறது. விழாவில் மேயர் சைதை துரைசாமி, கோகுல இந்திரா எம்.எல்.ஏ. ஆகியோர் கலந்து கொண்டு நாவல் மூலிகை உணவகம் மற்றும் சித்த ஆயுர்வேத மருத்துவமனையை திறந்து வைக்கிறார்கள். முதல் விற்பனையை சென்னை அரசு பொது மருத்துவமனை […]
புதுடெல்லி, டிச.12- வரி ஏய்ப்பு செய்ததாக கூறி சென்னையிலுள்ள நோக்கியா நிறுவனத்தின் மொபைல் போன் தயாரிப்பு தொழிற்சாலையை வருமான வரித்துறையினர் கடந்த செப்டம்பர் மாதம் சீல் வைத்தனர். இந்நிலையில் இந்நிறுவனம் தனது மொபைல் போன் தொழிலை மைக்ரோசாப்ட் நிறுவனத்திடம் 42,500 கோடி ரூபாய்க்கு விற்க முடிவு செய்துள்ளது. இந்நிறுவனத்தின் சென்னை தொழிற்சாலையை விற்பதற்கு முன் இந்திய அரசுக்கு செலுத்தவேண்டிய 21,000 கோடி வரியை செலுத்துமாறு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியது. இதை எதிர்த்து அந்நிறுவனம் டெல்லி உயர்நீதிமன்றத்தில் […]
பாதுகாப்பு செலவை சரிகட்ட வேறு வங்கி ஏ.டி.எம்.களில் பணம் எடுத்தால் ரூ.26 பிடித்தம் செய்யப்படும் என்று வங்கிகள் அறிவித்துள்ளன. பெங்களூரில் சமீபத்தில் ஏ.டி.எம்.மில் பணம் எடுத்துக் கொண்டிருந்த வங்கி பெண் அதிகாரி சரமாரியாக அரிவாளால் வெட்டப்பட்டார். இதையடுத்து ஏ.டி.எம்.களில் பாதுகாப்பை பலப்படுத்த காவல்துறையினர் உத்தரவிட்டுள்ளனர். தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, மராட்டியம் உள்பட பல மாநிலங்கள், ஏ.எம்.டி.களில் பாதுகாப்பை செய்ய கால அவகாசத்துடன் ‘கெடு’ விதித்துள்ளன. இதனால் காவலாளியை நியமிக்க வேண்டிய நிர்ப்பந்தம் வங்கிகளுக்கு ஏற்பட்டுள்ளன. இது வங்கிகளுக்கு […]
புதுடெல்லி:டெல்லி உள்பட 5 மாநில சட்டசபை தேர்தல் முடிவுகளை உடனுக்குடன் பேஸ்புக் மற்றும் டுவிட்டரில் வெளியிட தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. டெல்லி, ராஜஸ்தான், சட்டீஸ்கர், மத்தியபிரதேசம், மிசோரம் ஆகிய 5 மாநில சட்டசபை தேர்தல்கள் நடைபெற்று வருகின்றன. ராஜஸ்தான் மற்றும் டெல்லி தவிர மற்ற 3 மாநிலங்களில் வாக்குப்பதிவு முடிந்து விட்டது. ராஜஸ்தானில் வரும் 1ம் தேதியும், டெல்லியில் வரும் 4ம் தேதியும் வாக்கு பதிவு நடைபெறுகிறது. 5 மாநிலங்களிலும் பதிவான வாக்குகள் 8ம் தேதி […]
இந்தியாவையே திரும்பி பார்க்க செய்த சிறுவன் பிருத்வி. பள்ளிகளுக்கு இடையே மும்பையில் நடந்த போட்டியில் 546 ரன்கள் குவித்து உலக சாதனை படைத்த பிருத்வியை பத்திரிகைகள் பாராட்டியது மட்டுமல்லாமல் அடுத்த சச்சின் உருவாகி வருகிறார் என்று ஆரூடம் தெரிவித்தன. கிரிக்கெட் ஜாம்பவான் கவாஸ்கர் தனிப்பட்ட முறையில் பிருத்விக்கு வாழ்த்து தெரிவித்து கடிதம் அனுப்பி இருக்கிறார். அந்த கடிதத்தில் கூறியிருப்பது: அன்பு பிருத்வி, இது சுருக்கமாக உனக்கு பாராட்டு தெரிவிக்கும் கடிதம். 546 ரன்கள் எடுத்ததற்காக உன்னை பாராட்டுகிறேன். […]
புதுடெல்லி, நவ. 27– மங்கள்யான் விண்கலம் வருகிற 1–ந்தேதி பூமியின் சுற்று வட்டப்பாதையில் இருந்து செவ்வாய் கிரகத்துக்கு திசை திருப்பப்படுகிறது. செவ்வாய்கிரகம் பற்றி ஆராய்ச்சி செய்வதற்காக இந்தியா மங்கள்யான் விண்கலத்தை அனுப்பி உள்ளது. ரூ.450 கோடி செலவில் தயாரிக்கப்பட்ட இந்த விண்கலம் பி.எஸ்.எல்.வி. ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்தில் இருந்து விண்ணில் செலுத்தப்பட்டது. பூமியைச் சுற்றி வரும் மங்கள்யானின் சுற்று வட்டப்பாதை படிப்படியாக உயர்த்தப்பட்டு வருகிறது. கடைசியாக 2 லட்சம் கி.மீ. உயரத்துக்கு பல்வேறு சிக்கல்களுக்குப்பின் உயர்த்தப்பட்டது. […]
பலசூர், நவ. 23- ஒடிசா மாநிலம் பலசூர் அருகேயுள்ள சண்டிபூர் கடலில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த கப்பற்படை கப்பலிலிருந்து இன்று தனுஷ் ஏவுகணை வெற்றிகரமாக ஏவி சோதிக்கப்பட்டது. கண்டம் விட்டு கண்டம் சென்று தாக்கும் திறன் கொண்ட இந்த தனுஷ் ஏவுகணை, 500 கிலோ முதல் 1000 கிலோ வரை அணுஆயுதங்களை சுமந்து சென்று வெற்றி இலக்கை மிக துல்லியமாக தாக்கியது. இந்திய விஞ்ஞானிகளால் தயாரிக்கப்பட்ட பிரித்வி ஏவுகணையில் இருந்து முற்றிலும் மாறுபட்ட இந்த தனுஷ் ஏவுகணை, இன்று காலை […]
புதுச்சேரி, நவ.22– ஹெலன் புயலின் தாக்கத்தையொட்டி புதுவையில் அதிகாலை தொடங்கி மழை பெய்து வருகிறது. மத்திய வங்க கடலில் உருவான குறைந்த காற்று அழுத்த தாழ்வு நிலை வலுவடைந்து புயலாக மாறியுள்ளது. அதற்கு ‘ஹெலன்’ என்று பெயரும் சூட்டப்பட்டுள்ளது. ‘ஹெலன்’ புயல் தற்போது தீவிரமடைந்துள்ளது. அது ஆந்திர மாநிலம் மசூலிபட்டினம் அருகே மையம் கொண்டுள்ளது. புயல் இன்று (வெள்ளிக் கிழமை) மாலை மசூலிப்பட்டினம் அருகே கரையை கடக்கும். ‘ஹெலன்’ புயலின் தாக்கத்தால் தமிழகத்தில் சில பகுதிகளிலும் புதுவையிலும் […]
சென்னை, நவ. 22- வங்க கடலில் உருவான ஹெலன் புயல் இன்று பிற்பகல் ஆந்திர மாநிலம் மசூலிப்பட்டினத்திற்கு தெற்கே கரையை கடந்தது. இதனால் அந்த பகுதியில் கனமழை பெய்து வருகிறது. தற்போது மேற்கு நோக்கி சென்றுகொண்டிருக்கும் புயல் வலுவிழக்காமல் 6 மணி நேரம் நீடிக்க வாய்ப்பு உள்ளது. கரையை கடந்தபின்னரும் 6 மணி நேரத்துக்கு மணிக்கு 80 கி.மீ. வேகம் வரை காற்று வீசும். அதன்பின்னர் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி வலுவிழக்கத் தொடங்கும் என்றும் வானிலை […]
சென்னை, நவ.21– மத்திய வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று தீவிரம் அடைந்து புயலாக மாறியது. அந்த புயலுக்கு ‘ஹெலன்’ என்ற பெயர் சூட்டப்பட்டுள்ளது. இது ஆந்திராவை நோக்கி நகர்ந்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி ‘ஹெலன்’ புயல் சென்னையில் இருந்து கிழக்கு வடகிழக்கே 450 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. ஆந்திர மாநிலம் காவாலியில் இருந்து 420 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கிறது. ‘ஹெலன்’ புயல் நாளை மதியம் ஆந்திர மாநிலம் […]