கடந்த 4 காலாண்டுகளில் அதாவது ஒரு வருடத்தில் இன்போசிஸ், விப்ரோ, டிசிஎஸ் ஆகிய மூன்று முக்கிய நிறுவனங்களில் இருந்து சுமார் 1,00,000 ஊழியர்கள் வெளியேறியுள்ளதாக முக்கிய ஆய்வு முடிவுகள் தெரிவித்துள்ளது. இந்திய ஐடி நிறுவனங்களில் 19-20 சதவீத வெளியேற்ற விகிதம் மிகவும் சாதாரணமான ஒன்றாக உள்ளது. கடந்த 5 வருடங்களில் இதன் விகிதம் தொடந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. இக்காலகட்டத்தில் இம்மூன்று நிறுவனங்களில் 150,000 பணியாளர்கள் இணைந்துள்ளதாகவும் இந்த ஆய்வு முடிவுகள் தெரிவிக்கிறது. மார்ச் 2015ஆம் ஆண்டின்படி […]
தமிழ்நாட்டைச் சேர்ந்த ஏவுகணை விஞ்ஞானியான 84 வயது அப்துல் கலாம், இந்தியாவின் மிக உயர்ந்த விருதான ‘பாரத ரத்னா’ விருதை பெற்றவர். கல்வித்துறையில் மிகுந்த ஈடுபாடு கொண்ட அப்துல் கலாம் மிகவும் எளிமையானவர். ஜனாதிபதியாக இருந்த போதும், பதவிக்காலம் முடிந்த பின்னரும் பள்ளிக்கூடங் கள் மற்றும் கல்லூரிகளுக்கு சென்று மாணவர்கள் மத்தியில் உரையாடுவதை வழக்கமாக கொண்டிருந்தார். கருத்தரங்குகளிலும் கலந்து கொண்டு உரையாற்றி வந்தார். கல்வியின் மூலமே நாட்டை முன்னேற்ற முடியும் என்பதில் உறுதியாக இருந்த அப்துல் கலாம், நதிகள் […]
மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் முதல் ரயில்வே பட்ஜெட் என்பதால் இந்த பட்ஜெட் அவரது நிர்வாகத் திறமையை மதிப்பிடுவதற்கான அளவுகோலாக இருக்கும் என பரவலாக எதிர்பார்க்கப்பட்ட ரயில்வே பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள்: வயது முதிர்ந்தோர், ஊனமுற்றோர் வசதிக்காக வீல் சேர்களை ஆன்லைனில் புக் செய்து கொள்ளும் வசதி. விவசாயிகளுக்காக கிசான் யாத்ரா ரயில் சேவை துவக்கப்படும். ரயில்வே கார்டுகளுக்கு யோகா பயிற்சி அளிக்கப்படும். முதியோர் ஊனமுற்றோருக்கு கீழ் படுக்கை வசதி கிடைக்க முன்னுரிமை. பெரு […]
பயணிகள் ரயில் கட்டணம் அதிகரிக்கப்பட மாட்டாது என்று ரயில்வே பட்ஜெட்டில், அமைச்சர் சுரேஷ் பிரபு அறிவித்தார். 2015 – 16 நிதி ஆண்டுக்கான ரயில்வே பட்ஜெட்டை அமைச்சர் சுரேஷ் பிரபு மக்களவையில் இன்று (வியாழக்கிழமை) தாக்கல் செய்தார். அமைச்சர் சுரேஷ் பாபு தனது ரயில்வே பட்ஜெட் உரையில், “பயணிகள் ரயில் கட்டணம் உயர்த்தப்படவில்லை” என்றார். மேலும், “ரயில்வே துறை – இந்தியப் பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. ரயில்வே துறையில் செய்யப்படும் முதலீடுகள் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சிக்கு […]
மும்பையில், 102வது அறிவியல் மாநாடு நடைபெற்று வருகிறது. பிரதமர் நரேந்திரமோடி, மாநாட்டை தொடங்கி வைத்தார். இதில் பல ஆய்வாளர்களும் தங்களது ஆய்வுகளை சமர்ப்பித்து வருகின்றனர். பல ஆயிரம் காலங்களுக்கு முன்பே, இந்தியர்கள் விமானத்தை கண்டுபிடித்து பயன்படுத்தியதாகவும், அந்த விமானங்கள் பிற கோள்களுக்கும் செல்லும் திறன்மிக்கதாக இருந்ததாகவும், இந்திய அறிவியல் மாநாட்டில் ஆய்வு கட்டுரை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. கேப்டன் ஆனந்த் போதாஸ் மற்றும் அமேயா யாதவ் ஆகியோர் இணைந்து சமர்ப்பித்துள்ள ஆய்வு கட்டுரையின் விவரம் வெளியாகியுள்ளது. அதில், விமானம் தயாரிக்கும் […]
இந்தியாவின் மிக உயரிய சிவிலியன் விருதான ‘பாரத ரத்னா’ விருது, நாட்டின் முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய், மற்றும் காலஞ்சென்ற கல்வியாளர் மதன்மோகன் மாளவியாவுக்கு வழங்கப்படுவதாக அரசு அறிவித்துள்ளது. இந்தியக் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி இதை தமது டிவிட்டர் செய்தி மூலம் இதை உறுதியும் செய்துள்ளார். வாஜ்பாய்க்கு இந்த உயரிய விருது வழங்கப்பட வேண்டும் என்று பல ஆண்டுகளாகவே பாரதிய ஜனதா கட்சி கோரிவந்துள்ளது. ஒரு சில தினங்களுக்கு முன்பு கூட, அவரின் நீண்டநாள் […]
நியூயார்க், குஜராத் கலவரம் தொடர்பான வழக்கில் பிரதமர் நரேந்திர மோடிக்கு நியூயார்க் கோர்ட்டு சம்மன் அனுப்பியிருந்தது. இதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் சையது அக்பரூதீன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘அமெரிக்காவில் வாழும் இந்தியர்கள் பிரதமர் மோடியின் வருகையை ஆவலுடன் எதிர்நோக்கியிருக்கின்றனர். இப்படிப்பட்ட சூழ்நிலையில், குஜராத் கலவர வழக்கில் பிரதமருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் அடிப்படை ஆதாரமற்றவை. இதை சுப்ரீம் கோர்ட்டும் ஏற்கனவே நன்கு விசாரித்து குற்றச்சாட்டில் எந்த ஆதாரமும் இல்லை என்பதை […]
புதுடெல்லி, தமிழக முதல்–அமைச்சர் ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கு பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடந்தது. இந்த வழக்கின் விசாரணை அனைத்தும் முடிந்துள்ள நிலையில், நாளை (சனிக்கிழமை) தீர்ப்பு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்தநிலையில் இந்த தீர்ப்பை வேறு மாநிலத்தில் வைத்து வழங்கவோ அல்லது, தீர்ப்பின்போது ஜெயலலிதா கோர்ட்டில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்கவோ உத்தரவிடுமாறு சுப்ரீம் கோர்ட்டில் நேற்று வழக்கறிஞர்கள் ஆர்.கிருஷ்ணமூர்த்தி மற்றும் என்.ராஜாராமன் ஆகியோர் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு சுப்ரீம் […]
2014-சர்வதேச குழந்தைகள் அமைதிக்கான சர்வதேச விருது இந்திய வம்சாவளியை சேர்ந்த நேகா குப்தா உள்பட 3 பேருக்கு வழங்கப்படுகிறது. ஆம்ஸ்டர்டாமை சேர்ந்த குழந்தைகள் நல அமைப்பு ஒன்று உலக அளவில் குழந்தைகள் உரிமைகளுக்காக போராடுபவர்களுக்கு ஆண்டு தோறும் சர்வதேச குழந்தைகள் அமைதி விருது வழங்கி வருகிறது. இந்த ஆண்டு இந்த விருதுக்காக அமெரிக்காவில்வாழ்து வரும் இந்தியா வம்சாவளியை சேர்ந்த நேகா குபதா தேர்வு செய்யபட்டு உள்ளார். 18 வயதாகும் நேகா சொந்தமாக ஒரு அறக்கட்டளை அமைத்து குழந்தைகள் […]
திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் இருந்து திருப்பதி வெங்கடாசலபதி கோயிலுக்கு ஆடி 1ம் தேதி வஸ்திர மரியாதை செய்யப்பட்டு வருகிறது. ஆடி மாதம் நாளை பிறப்பதையொட்டி, ஸ்ரீரங்கம் கோயிலில் இருந்து திருப்பதி கோயிலுக்கு எடுத்துச் செல்லப்படும் வஸ்திரங்கள், குடைகள், மங்கல பொருட்கள் அனைத்தும் பெரிய தட்டுகளில் ரங்க விலாச மண்டபத்தில் வைக்கப்பட்டு இருந்தது. இன்று காலை 7.20 மணிக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு யானை மீது ஒரு தட்டை வைத்துக் கொண்டு மற்ற தட்டுகளை அதிகாரிகள், கோயில் […]