Thursday 26th April 2018
Breaking News:
விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு இராசி பலன்கள் ! | Vilambi Tamil New Year 2018    The Fifth House is the House of Wonders    5-ம் இடம் தரும் அற்புத வாழ்க்கை | சிறப்பு கட்டுரை    7th House is the Reason for Sridevi’s Death    நடிகை ஸ்ரீதேவியின் ஆயுளை முடித்த 7-ம் இடம்    Kubera worship will give wealth | செல்வந்தராக்கும் குபேரன் வழிபாடு.    New update : குரு பெயர்ச்சி பலன்கள் 2017- 2018    New Update : Rahu-Ketu Transit Predictions 2017-2018 (Rahu-Ketu Peyarchi) ENGLISH VERSION.    New Update : இராகு-கேது பெயர்ச்சி பலன்கள் 2017-2018    New Update : Astrological titbits that you should know    New Update : அறிந்து கொள்ள சில ஜோதிட தகவல்கள் !    New update : DOES BLACK-MAGIC AFFECT YOU?    New update : செய்வினை பாதிப்பு யாருக்கு ஏற்படும் ?    QR Codes: USE THIS QR CODES FOR BhakthiPlanet.Com Horoscope Consultation payment transaction. Click HERE    Our Virtual Payment Address (VPA) UPI Payment Address : bhakthiplanet@upi     New update: Saturn Transit Predictions (Sani Peyarchi) 2017-2020 (English Version)    இரும்பு அணிகலன் அணியலாமா? கண் திருஷ்டி அகல செம்பு அணிகலன் பயன்படுத்தலாமா? - இலவச ஜோதிட கேள்வி-பதில் பகுதி

7 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே விமானங்களை பயன்படுத்திய இந்தியர்கள்!

மும்பையில், 102வது அறிவியல் மாநாடு நடைபெற்று வருகிறது. பிரதமர் நரேந்திரமோடி, மாநாட்டை தொடங்கி வைத்தார். இதில் பல ஆய்வாளர்களும் தங்களது ஆய்வுகளை சமர்ப்பித்து வருகின்றனர்.

பல ஆயிரம் காலங்களுக்கு முன்பே, இந்தியர்கள் விமானத்தை கண்டுபிடித்து பயன்படுத்தியதாகவும், அந்த விமானங்கள் பிற கோள்களுக்கும் செல்லும் திறன்மிக்கதாக இருந்ததாகவும், இந்திய அறிவியல் மாநாட்டில் ஆய்வு கட்டுரை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. கேப்டன் ஆனந்த் போதாஸ் மற்றும் அமேயா யாதவ் ஆகியோர் இணைந்து சமர்ப்பித்துள்ள ஆய்வு கட்டுரையின் விவரம் வெளியாகியுள்ளது. அதில், விமானம் தயாரிக்கும் தொழில்நுட்பத்தை இந்தியர்கள் 7 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அறிந்து வைத்திருந்தனர். பரத்வாஜ் முனிவர், ஏழாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கூறியுள்ள ஸ்லோகத்தில், ஒரு நாட்டில் இருந்து மற்றொரு நாட்டிற்கும், மற்றொரு கண்டத்திற்கும், ஏன் மற்றொரு கோளுக்குமே, விமானங்களை செலுத்த முடியும் என்று கூறியுள்ளார். இதற்காக 97 புத்தகங்களை உதாரணத்திற்கு காண்பித்துள்ளார்.

விமான தயாரிப்பு குறித்த 500 வகை கொள்கைகள் குறித்து சமஸ்கிருத ஸ்லோகங்களில் குறிப்புகள் உள்ளன. ஆனால், தற்போதைய விஞ்ஞானிகள் கூட 100 கொள்கைகளைத்தான் கண்டுபிடித்துள்ளனர். 8 பிரிவுகளின்கீழ் விமான தயாரிப்பை கற்றுத்தரும் நூல்கள் சமஸ்கிருதத்தில் உள்ளன. தற்போதைய விமானங்களைவிட சக்தியிலும், சொகுசிலும், இந்திய முன்னோர்கள் கண்டுபிடித்த விமானங்கள் சிறப்பானவையாக இருந்துள்ளன. இவ்வாறு அந்த ஆய்வு கட்டுரை தெரிவித்துள்ளது.

நாக்பூரை சேர்ந்த சிவில் இன்ஜினியரிங் பேராசிரியர் ஏ.எஸ்.நேனே சமர்ப்பித்துள்ள ஆய்வுக் கட்டுரையில், பழைய காலத்து இந்திய பொறியாளர்கள், இப்போது உள்ள பொறியாளர்களைவிட திறமையானவர்களாக விளங்கியுள்ளனர் என்று சுட்டிக் காட்டியுள்ளார்.

ஆய்வுக்கட்டுரையை சமர்ப்பித்தவர்களில் பெரும்பாலானோர், இன்றைய இந்திய விஞ்ஞானிகள், பழைய கால சமஸ்கிருத இலக்கியங்களில் கொட்டிக் கிடக்கும், தகவல்களை சேகரித்தால், நவீன கண்டுபிடிப்புகளுக்கு அது உதவிகரமாக இருக்கும் என்று, பரிந்துரைத்துள்ளோனர். மும்பை பல்கலைக்கழக துணை வேந்தர், ராஜன் வேளுக்கர் கூறுகையில், வேதங்களை ஏற்றுக்கொள்கிறார்களோ இல்லையோ, வேதங்களில் என்ன உள்ளது என்பைத படித்து பார்ப்பது நல்லது என்றார். விஞ்ஞானி விஜய் பட்கர் கூறுகையில், தற்போதுள்ள இந்தியர்கள் அடிமை மனோபாவத்தில் உள்ளனர். வெளிநாடு நமது திறமையை ஒப்புக்கொண்டால்தான் நாம் திறமைசாலி என்று நாமே ஒப்புக்கொள்ளும் நிலையில்தான் நமது மனோபாவம் உள்ளது. வெளிநாட்டினர் செய்த பிறகுதான் நாம் அதை பின்பற்ற தொடங்குகிறோம்” என்றார்.

© 2015 bhakthiplanet.com  All Rights Reserved

Posted by on Jan 5 2015. Filed under இந்தியா, செய்திகள், முதன்மை பக்கம். You can follow any responses to this entry through the RSS 2.0. Both comments and pings are currently closed.

Comments are closed

Loading

Naidu Community Matrimony
Free Register For Naidu Community REGISTER NOW
www.manamakkalmalai.com

Ads by bhakthiplanet.com

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2018. All Rights Reserved.| designed & developed by Green Site Tech