Wednesday 22nd January 2025

தலைப்புச் செய்தி :

Category archives for: மருத்துவம்

யார் ரத்த தானம் செய்யலாம்?

ரத்ததானம் செய்பவரின் ரத்த அழுத்தம் இயல்பாக இருக்க வேண்டும். 18 முதல் 60 வயது வரை உள்ளவர்கள் ரத்ததானம் செய்யலாம். ரத்ததானம் செய்பவர்களின் எடை 45 கிலோவுக்கு மேல் இருக்க வேண்டும். சாதாரண மனிதனின் உடலில் 5 லிட்டர் ரத்தம் உள்ளது. ரத்ததானத்தின்போது 350 மில்லி லிட்டர் ரத்தம் மட்டுமே எடுக்கப்படும். நாம் தானம் செய்யும் ரத்தம், 24 மணி நேரத்தில் மீண்டும் உற்பத்தியாகிவிடும். மூன்று மாதத்திற்கு ஒரு முறை ரத்ததானம் செய்யலாம். ரத்த தானம் செய்ய […]

மருத்துவம் குணம் கொண்ட சீயக்காய்

சீயக்காய் பொடி கிருமிக் கொல்லியாகவும், புண்களை ஆற்றுவித்து, சீழ்பிடிக்காமல் வற்றச் செய்யும் மருத்துவக் குணமும் கொண்டதாகும். தலைமுதல் கால்வரை வரக்கூடிய சொறி, சிரங்கு, அடிபட்ட ரணங்களை “டெட்டால்” மூலம் கழுவுவதைப் போல் சீயக்காய்ப் பொடியை நீரில் கலந்து காய்ச்சி, அந்த கஷாயத்தால் கழுவலாம். செப்டிக் புண்களையும், சீழ் வடியும் ரணங்களையும், சீயக்காயினால் கழுவி வர விரைந்து அவை ஆறும். தலைமுடியில் அழுக்குப்படிந்து ”சிக்கு” ஆகிவிட்டால் சீயக்காயினை அரைத்துப் புழுங்கலரிசி வடித்த கஞ்சியில் குழைத்து தலை சிக்கு மீது […]

வயிற்று இரைச்சலை நீக்கிக் குடலுக்கு வலுவை கொடுக்கும் கறிவேப்பிலை

உணவு பதார்த்தங்களுக்கு சிறந்த மணமூட்டியாக விளங்குவது கறிவேப்பிலை. இதைப் பச்சையாகவும் உண்ணலாம். இரத்த சுத்திக்கேற்றது. பித்தம், மாற்றும் வாந்தியைத் தடுக்கும். வயிற்று இரைச்சலை நீக்கிக் குடலுக்கு வலுவைக் கொடுக்கும். மூல பேதியை கட்டும் இதில் வைட்டமின் “ஏ“ சத்து அதிகமாக இருக்கிறது.  அத்துடன் வைட்டமின் பி, சி யும் உண்டு. ஓரளவு இரும்புச் சத்தும் உண்டு. கறிவேப்பிலையைக் காயவைத்து, பொடித்து சோற்றுடன் சிறிது நெய்யும் கலந்து உண்டால் குடல் இறுக்கம், மூலக்கடுப்பு போன்றவை குணமாகும். கறிவேப்பிலையை இஞ்சி, […]

கருவில் இருக்கும் குழந்தைக்கு முக்கிய தேவை அயோடின் சத்து

கருவில் உள்ள குழந்தைக்குத் தேவையான அயோடின் சத்து அதன் தாயிடமிருந்து கிடைக்காத நிலையில், பிறவிலேயே சில குறைபாடுகள் ஏற்படும். குழந்தைப் பருவத்திலேயே முறையான மூளை மற்றும் உடல் வளர்ச்சி இல்லாத நிலை போன்றவை ஏற்படக்கூடும். பிறந்த குழந்தைகளுக்குப் போதிய நினைவாற்றலும் சுய சிந்தனையும் இல்லாத நிலையுடன் தைராய்டு பாதிப்பு, பிறக்கும்போதே முன் கழுத்துக் கழலை, வளர் இளம் பருவத்தில் உள்ளவர்களுக்கு முன் கழுத்துக் கழலை, உடல் வளர்ச்சிப் பாதிப்பு, இளம் வயதில் வரும் ஹைப்போ தைராய்டிசம், மன […]

முடி உதிர்வதைத் தடுத்து. இரத்த சுத்தப்படுத்தும் முட்டைக்கோஸ்

முட்டைக்கோசைக் குறைந்த அளவில் நீரில் வேகவைக்க வேண்டும். வேகவைத்த நீரைச் சமையலில் சேர்த்தால்தான் இதன் சத்துகளை நாம் பெற முடியும். பச்சையாக உண்ணக்கூடிய கீரைகளில் முட்டைக்கோசும் ஒன்று என்றாலும், வயிற்றுப் புண்ணுள்ளவர்கள் பச்சையாகச் சாப்பிடக்கூடாது. உடல் நலத்திற்கும், உயிர்வளத்திற்க்கும் ஏற்றது முட்டைக்கோசு. நீர்ச்சளியைப் போக்க வல்லது. சர்க்கரை நோய் உள்ளவர்கள் முட்டைக்கோசை அதிகமாகத் தங்கள் உணவு வகைகளோடு  சேர்த்துச் சாப்பிடுவது நல்லது. முக்கியமாகத் தாதுக்குறைவு ஏற்பட்டவர்கள் இதனைத் தாராளமாகச் சேர்த்தக்கொள்ள வேண்டும். உடல் பலத்திற்கும், உடல் தளர்ச்சியுற்றோருக்கும், […]

பல்வலிக்கு எளிய தீர்வு என்ன?

திடீரென்று பல் வலித்தால் கிராம்புதான் கை கண்ட மருந்து. இரண்டு கிராம்புகளை வலியுள்ள பல்லின்மேல் வைத்து சிறிது நேரம் கடித்தபடியிருந்தால் வலி நின்று போகும். அல்லது வலி குறையும். கிராம்புவை விட பல்வலிக்கு நல்ல மருந்து கிடையாது. ஆனால் இது நிரந்தரத் தீர்வாகாது. வலிக்கான காரணம் என்ன என்று கண்டறிந்து அதற்கான சிகிச்சையை செய்தாக வேண்டும். ஒரு டம்ளர் வெது வெதுப்பான நீரில் ஒரு டீஸ்பூன் கல் உப்பைப் போட்டு கரைத்து கொப்பளித்து வந்தால் வலி நின்றுபோகும். […]

உயர் ரத்த அழுத்தம் என்பது எது?-கட்டுப்படுத்த என்ன வழி?

இதயம் நம் உடலில் இருக்கும் ரத்தத்தை பம்ப்செய்துதான் மற்ற உடல் உறுப்புகளுக்கு அனுப்புகிறது. அப்போது இதயம் சுருங்கி விரிவதைத்தான் ரத்த அழுத்தம் என்கிறோம். இதயம் தசைகள் சுருங்கும்போது அழுத்தம் கூடுதலாக இருக்கும். அதுதான் 120 சிஸ்டோலிக் அளவு. இதயம் விரியும் போது அழுத்தம் குறைவாக இருக்கும். அதுதான் 80  டையாஸ்டோலிக் அளவு. அதாவது ஒரு மனிதனுக்கு 120/80 என்ற மில்லிமீட்டர் பாதரச  அளவு இருந்தால் அவர் நார்மல். உயர் ரத்த அழுத்தம் என்பது எது? 120/80 என்ற […]

உடல் எடை குறைய சுலபமான வழி

உடலைக் குறைக்க வேண்டும் என்று சொன்ன உடனே பலரும் நினைப்பது என்ன தெரியுமா? காலை உணவைத் தவிர்த்து விடுவது அல்லது இரவில் சாப்பிடாமல் இருப்பது என்பதுதான். ஏதாவது ஒரு வேளை உணவைத் தவிர்ப்பதன் மூலம் நாம் சாப்பிடும் உணவின் அளவு குறைந்து, அதனால் நம் உடல் எடை குறைந்து விடும் என்று நினைத்தால் இதை விடத் தவறு வேறு எதுவும் இல்லை. நிச்சயம் இந்த வழிமுறை பயன் தராது. ஏன் தெரியுமா? ஏதாவது ஒரு வேளை உணவைத் […]

தாய்ப்பால்

குழந்தை நோயின்றி வாழ சத்துக்கள் நிரம்பிய, தாய்ப்பாலே ஏற்றது. அழகு குறையும் என்பதற்காக குழந்தைக்குப் பால் தர மறுத்தால் மார்பக புற்று நோய் வந்து உயிருக்கே ஆபத்து வந்தவிடும். முதல் குழந்தைக்கு பால் கொடுக்காவிட்டால், உபயோகப்படுத்தப்படாத மார்பகம் சுருங்கி அழகும் குறைந்து அடுத்த குழந்தைக்குப் பால் சுரப்பதும் குறைந்துவிடும். தாய்ப்பால் கொடுக்க ஆரம்பித்தால் தான்  கர்ப்பப்பை சுருங்கி வயிறு குறையும். ஒரு நாளைக்கு ஒரு லிட்டர் தாய்ப்பால் சுரக்கின்றது என்றால் தாயின் உடலிலிருந்து ஒரு லிட்டர் சத்துள்ள […]

பித்தக் கற்களை எளிதில் கரைத்து வெளியேற்றிவிடும் இளநீர்

காலையில் அருந்தும் இளநீர், சிறு நீரகங்களில் நம் உணவின் மூலம் அதிகம் சேர்ந்துள்ள கால்சிய சேமிப்பையும் மாற்றும் பித்தக் கற்களையும் எளிதில் கரைத்து வெளியேற்றிவிடும் வாய்ப்பு அதிகம். இரத்தக் கொதிப்பு நோயாளிகளையும் நாற்பது வயதுக்கு மேற்பட்டவர்களையும் பக்கவாதம் தாக்காமல் பாதுகாக்க இளநீரில் அபரிதமாக உள்ள பொட்டாசியம் உப்பு உதவுகிறது. பொட்டாசியத்துடன் மக்னீசியமும் இணைந்து செயல்படுவதால் எலும்புகளும் தசைகளும் சோம்பலோ, இறுக்கமோ இன்றி புத்துணர்ச்சி பெறுகின்றன. இதனால் சுறுசுறுப்பாக மாறிவிடுகின்றோம். முக்கியமாக மக்னீசிய உப்பு மாரடைப்பு வராமல் தடுத்துவிடுகிறது. […]

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2025. All Rights Reserved.| designed & developed by Green Site Tech
Translate »