Wednesday 22nd January 2025

தலைப்புச் செய்தி :

Category archives for: சினிமா

சுவாரசியமான முயற்சிகள் கொண்ட ‘ராஜதந்திரம்’

ராஜா ராணி, குக்கூ, முண்டாசுப்பட்டி போன்ற நல்வெற்றிகளைத் தொடர்ந்து மேலும் தமிழ் சினிமாவின் நல்ல படங்களை கையில் கொண்டிருக்கும் ஃபாக்ஸ் ஸ்டார் நிறுவனம் தற்போது ‘ராஜதந்திரம்’ படத்தை உலகமெங்கும் வெளியிட உள்ளது. களவு – மோசடி வியூக வகைமைத் திரைப்படமான, ‘ராஜதந்திரம்’ தனது புதுமையான முன்னோட்ட காட்சிகளால் (டீஸர் & ட்ரெய்லர்கள்) பார்வையாளர்களை வெகுவாக ஈர்த்துள்ளது. படத்தின் முக்கியமன 6 கதாபாத்திரங்களை விளக்கும் வகையில் 6 பிரத்யேக முன்னோட்ட (டீஸர்கள்) காட்சிகள் மிகவும் நுட்பமாகவும், சாதுர்யமாகவும் திட்டமிடப்பட்டு […]

யுவன் சங்கர்ராஜா-ஜபருன்னிசா திருமணம் ரகசியமாக நடந்தது!

ராமநாதபுரம்: இசையமைப்பாளர் யுவன் சங்கர்ராஜாவுக்கும் ஆடை வடிவமைப்பு நிபுணர் ஜபருன்னிசாவுக்கும் நேற்று இரவு ரகசியமாக திருமணம் நடைபெற்றுள்ளது. பிரபல இசை அமைப்பாளர் இளைராஜாவின் மகன் யுவன் சங்கர்ராஜா 100க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசை அமைத்துள்ளார். கடந்த 2005 ஆம் ஆண்டு சுஜன்யா என்ற தோழியை காதலித்து திருமணம் செய்து கொண்ட யுவன் சங்கர் ராஜாவுக்கு திருமணவாழ்வில் மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் கடந்த 2007 ஆம் ஆண்டு பிரிந்து 2 பேரும் விவாகரத்து பெற்றனர். அதன் பின்னர், […]

இமான் இசையில் கானா பாடலை பாடினார் அனிருத் !

ஜெயம் ரவி நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் ‘ரோமியோ ஜூலியட்’. இதில் இவருக்கு ஜோடியாக ஹன்சிகா மற்றும் பூனம் பஜ்வா நடித்து வருகிறார்கள். மேலும் இவர்களுடன் வம்சி கிருஷ்ணா, கணேஷ் உள்ளிட்ட ஏராளமான நட்சத்திரங்களும் நடிக்கிறார்கள். இந்த படத்தை புதுமுக இயக்குனர் லட்சுமணன் இயக்கி வருகிறார். இப்படத்திற்கு இமான் இசையமைத்து வருகிறார். ஒரு இசையமைப்பாளர் இசையமைக்கும் படத்திற்கு மற்றொரு இசையமைப்பாளர் பாடி வருவது தற்போது வழக்கத்தில் இருந்து வருகிறது. அந்த வரிசையில் இமான் இசையில் இசையமைப்பாளர் […]

திரைப்பட இயக்குனர் கே.பாலசந்தர், காலமானார்!

திரைப்பட இயக்குனர் கே.பாலசந்தர், 84, உடல் நலக்குறைவால், காலமானார். அவரது உடலுக்கு நடிகர்கள் ரஜினிகாந்த், விஜய், அர்ஜூன், மனோரமா, இசையமைப்பாளர்கள் எம்.எஸ்.விஸ்வநாதன், இளையராஜா, ஏ.ஆர்.ரகுமான் உள்ளிட்ட திரைபிரபலங்களும், திமுக தலைவர் கருணாநிதி, திமுக பொருளாளர் ஸ்டாலின், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, தேமுதிக தலைவர் விஜயகாந்த், தமிழக காங்கிரஸ் தலைவர் வாசன் உள்ளிட்ட அரசியல் பிரபலங்களும் அஞ்சலி செலுத்தினர். சில மாதங்களுக்கு முன், பாலசந்தரின் மகன் கைலாசம் இறந்தார். இதனால், பாலசந்தர் மன ரீதியாக பாதிக்கப்பட்டிருந்தார். பத்து […]

நவம்பர் மாதம் முழுவதும் கர்நாடகாவில் பிறமொழிப் படங்களுக்கு தடை – கத்திக்கும் சிக்கல்!

நவம்பர் 1 கர்நாடகா மாநிலம் உதயமான தினமாகும். அன்று பிற மொழிப் படங்கள் எதையும் திரையிடக் கூடாது என்று சில கன்னட அமைப்புகள் கோரிக்கை விடுத்தன. பிற மொழிப் படங்கள் ஓடிக் கொண்டிருந்த திரையரங்குகளில் புகுந்து படத்தை நிறுத்தி, ரசிகர்களையும் வெளியேற்றினர். இந்த சம்பவத்தால் கத்தி, இந்திப் படமான ஹேப்பி நியூ இயர் உள்ளிட்ட கன்னடம் அல்லாத பிற மொழிப் படங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டன. FM உள்ளிட்ட வானொலி சேவைகளிலும் நவம்பர் ஒன்றன்று கன்னடம் தவிர்த்து வேறு […]

விஜய் ஆண்டனியின் அடுத்த படம் – இந்தியா பாகிஸ்தான்

‘நான்’, ‘சலீம்’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து விஜய் ஆண்டனி நடித்து வரும் படம் ‘இந்தியா பாகிஸ்தான்’. இதில் இவருக்கு ஜோடியாக சுஷ்மா ராஜ் நடித்து வருகிறார். மேலும் பசுபதி, எம்.எஸ்.பாஸ்கர் உள்ளிட்ட பலர் படத்தில் நடித்து வருகிறார்கள். பாத்திமா விஜய் ஆண்டனி தயாரிக்கும் இப்படத்திற்கு விஜய் ஆண்டனி இசையமைக்கிறார். ரொமண்டிக் கலந்த காமெடி படமாக உருவாகும் இப்படத்தை ஆனந்த் இயக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்புகள் விரைவாக நடந்து வருகிறது. இன்னும் 15 நாட்கள் படப்பிடிப்பு மீதமுள்ள நிலையில் […]

சிம்புவை மகிழ்ச்சியில் ஆழ்த்திய குறளரசன் !

பசங்க பாண்டிராஜ் இயக்கத்தில் சிம்பு-நயந்தாரா நடிக்கும் படம் ‘இது நம்ம ஆளு’. சிம்புவின் தம்பி இந்தப் படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். எல்லாப் பிரச்னைகளையும் தாண்டி படப்பிடிப்பு முடியும் தருணத்தில் உள்ளது. படத்தின் பர்ஸ்ட் லுக் டீஸர் அடுத்த மாதம் வெளியிடப்பட உள்ளது. இந்நிலையில் இது நம்ம ஆளு படத்தின் பாடல்களில், க்ளைமேக்ஸ் காட்சியில் இடம்பெறும் ஒரு பாடல் தவிர்த்து மற்ற பாடல்கள் அனைத்தும் முழுமையாக முடிந்துவிட்டதாம். இந்த தகவலை சிம்புவே தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார். அதோடு […]

விஜய்-சமந்தா 100 நடன கலைஞர்களுடன் நடனம் ஆடினார்!

விஜய்-சமந்தா நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ள ‘கத்தி’ படத்தில் விஜய் செல்பிபுள்ள என்ற பாடலை பாடியுள்ளார். அனிருத் இசையில் வெளிவந்துள்ள இப்பாடல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இப்பாடலை மிகவும் சிறப்பாக படமாக்க வேண்டும் என்று விரும்பிய படக்குழு, முதலில் வெளிநாடுகளில் படமாக்க திட்டமிட்டனர். ஆனால், படத்தை தீபாவளிக்கு வெளியிட திட்டமிட்டுள்ளதால் வெளிநாடுகளில் அந்த பாடலை படமாக்கினால் அதிக நாட்கள் எடுத்துக் கொள்ளும் என நினைத்த படக்குழு மும்பையிலேயே பிரம்மாண்ட அரங்கு அமைத்து படமாக்க முடிவெடுத்தனர். அதன்படி, […]

புதுபடங்கள் டிவிடியாக வீடுகள் தோறும் சப்ளை: சேரனின் புது திட்டம்

டைரக்டர் சேரன் புதுபடங்களை டி.வி.டி மூலம் வீடுகள் தோறும் சப்ளை செய்யும் புதுதிட்டத்தை துவங்கியுள்ளார். இதற்கு ‘சினிமா டூ ஹோம்’ என்று பெயர் வைத்துள்ளார். டி.டி.எச்., இன்டர்நெட், கேபிள் டி.வி., மொபைல், டி.வி.டி. உள்ளிட்ட பல வழிகளில் வீடுகளுக்கு புதுபடங்களை நேரடியாக கொண்டு செல்லும் வகையில் இத்திட்டம் தயாராகியுள்ளது. இதுகுறித்து சேரன் கூறும் போது, நான் இயக்கிய ’ஜே.கே. எனும் நண்பனின் வாழ்க்கை’ படம் தணிக்கை சான்றிதழ் பெற்று 8 மாதங்களாகியும் ரிலீஸ் செய்ய முடியவில்லை. எனவே […]

என் புதுபடத்தில் விக்ரம் பிரபு நாயகன்: டைரக்டர் விஜய்

இயக்குனர் விஜய் அடுத்த படத்துக்கு தயாராகியுள்ளார். இதில் விக்ரம் பிரபு நாயகனாக நடிக்கிறார். இதுகுறித்து இயக்குனர் விஜய் மாலை மலர் நிருபரிடம் கூறியதாவது:– ‘சைவம்’ படம் வெற்றிகரமாக ஓடுகிறது. பல தரப்பில் இருந்தும் இதற்கு பாராட்டுகள் வந்தன. குழந்தைகளுடன் குடும்பம் குடும்பமாய் பார்க்கிறார்கள். இந்த படத்துக்கு பிறகு நல்ல கதை கொடுக்க வேண்டும் என்ற பொறுப்பு எனக்கு மேலும் அதிகமாகியுள்ளது. விக்ரம் பிரபுவின் படம் சிறந்த காதல் கதையம்சம் உள்ள படமாக இருக்கும். இதன் படப்பிடிப்பு அடுத்த […]

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2025. All Rights Reserved.| designed & developed by Green Site Tech
Translate »