பாரதிராஜாவின் மகன் நடிகர் மனோஜ்குமார் இயக்கவிருக்கும் புதிய படத்தில் சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடிக்கவுள்ளாராம். தன்னுடைய தந்தை பாரதிராஜா, மணிரத்னம், ஷங்கர் போன்றவர்களிடம் உதவியாளராக நடிகர் மனோஜ்குமார் பணியாற்றியுள்ளார். நடிப்பில் பிரகாசிக்க முடியாத காரணத்தால், படம் இயக்கும் முயற்சியில் இருந்தார். தற்பொது சிவகார்த்திகேயனை வைத்து படம் இயக்க இருப்பது அவருடைய இயக்குநர் கனவை நனவாக்கியிருக்கிறது.
காதல் படத்தில் அறிமுகமான சரண்யா நாக் அந்த படத்தில் பள்ளி மாணவியாக நடித்தாலும் நடித்தார் அடுத்து வந்த “பேராண்மை” படத்திலும் மாணவியாகவே நடித்தார். இந்நிலையில் “ரெட்டை வாலு” படத்திலும் பள்ளி மாணவியாக நடிக்க கேட்டபோது, முதலில் மறுத்துவிட்டாராம். இதனையடுத்து, “யூனிபார்ம் போட்டு போட்டோ ஷுட் நடத்திப் பார்க்கலாம் உங்களுக்கு திருப்தி என்றால் மட்டும் நடியுங்கள்” என்று படயூனிட் சொன்ன பிறகு ஒ.கே. சொன்னாராம். ஆனால், “இதுதான் நான் பள்ளி மாணவியாக நடிக்கும் கடைசி படம். இனிமேல் என்னை […]
“மனோஜ் நைட் ஷியாமளனிடம் போய் 130 கோடி மில்லியன் படத்தை இயக்கும் பொறுப்பைத் தந்திருக்கிறார்களே.. ”என்று ஷியாமளன் “ஆஃப்டர் எர்த்” படத்தை இயக்கிய போது ஹாலிவுட்காரர்கள் அலறினார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு “லான் ரேஞ்சர்” படத்தின் கதையைக் கேட்டால் ஹார்ட் அட்டாக்கே வந்துவிடும். காரணம், ஜோனி டெப் நடிப்பில் ஜுலை மாதம் வெளிவந்த “த லோன் ரேஞ்சர்” படத்தின் பட்ஜெட் 250 கோடி மில்லியன் டாலர்கள். ஆனால் முன் படத்துக்கு அலறியபோது, அந்தப்படம் பெரிய வெற்றி பெற்று ஷியாமளனுக்கு ஹாலிவுட்டில் […]
விஷால் கதாநாயகனாக நடித்து, சுந்தர் சி. இயக்கத்தில் ஜெமினி பிலிம் சர்க்யூட் தயாரித்துள்ள படம் “மதகஜராஜா”. படம் முடிவடைந்து 8 மாதங்கள் ஆகியும் வெளிவராததால் படத்தை வெளியிடும் உரிமையை பெற்றார் விஷால். ஆனால் படத்தை தயாரித்த தயாரிப்பு நிறுவனத்திற்கு, இதற்கு முன் தயாரித்த படங்களின் தோல்வியால், விநியோகதர்களுடன் பிரச்சனை இருந்து வந்தது. இதன் காரணமாக “மதகஜராஜா” வை வெளியிடுவதில் சிக்கல் உருவாகி விஷாலுக்கு ரத்த அழுத்தம் குறைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெறும் அளவில் நிலை உருவானது. இந்நிலையில், […]
ஹன்சிகா புதிதாக ஒரு படத்துக்கு கால்ஷீட் கொடுத்திருக்கிறார். படத்தை இயக்கி கதாநாயகனாக நடிக்கப் போகிறார். நம்ம சுந்தர்.சி. படத்துக்கு பெயர் “அரண்மனை”. ”விஷன் எக்ஸ் மீடியா” என்ற புதிய பட நிறுவனம் சார்பில் தினேஷ் என்பவர் தயாரிக்கும் படம் இது. இவர் பெரிய பட விநியோகஸ்தரும் கூட. இதில் வினய், ஆண்டரியா சந்தானம் உள்பட பலரும் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். செப்டம்பர் மாதம் 2-ந் தேதி முதல், பொள்ளாச்சியில் ஷுட்டிங் ஆரம்பம்! அரண்மனை மாதிரி பெரிய பங்களாவை […]
இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் தயாரிப்பாளர் ஆகியிருக்கிறார். ஓய். எம். மூவிஸ் என்ற பட நிறுவனத்தைத் தொடங்கியிருக்கும் அவர், ஈராஸ் இன்டர்நேஷனல் என்ற நிறுவனத்துடன் இணைந்து விரைவில் ஒரு இந்திப்படத்தைத் தயாரிக்க திட்டமிட்டிருக்கிறார். விரைவில் இயக்குநர், நடிகர், நடிகைகள் தேர்வு நடத்தப்பட இருக்கிறது. படத்துக்கு இசையை அவரே அமைக்க இருக்கிறாராம்.
கனா கண்டேன், அயன், கோ, மாற்றான் படங்களை இயக்கிய கே.வி.ஆனந்த் அடுத்து இயக்கும் படம் அனேகன். இப்படத்தில் தனுஷ் நாயகனாக நடிக்கிறார். மும்பை நாயகி அமிரா தனுசுக்கு ஜோடியாக நடிக்கிறார். மேலும் நவரச நாயகன் கார்த்திக் முக்கிய வேடத்தில் நடிக்கும இப்படத்தில் அதுல் குல்கர்னி, ஆஷிஷ் வித்யார்த்தி, ஜெகன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்க, சுபா கதை திரைக்கதை வசனம் எழுதுகிறார்களாம். அனேகன் படப்பிடிப்பு செப்டம்பர் 2-ந்தேதி பாண்டிச்சேரியில் தொடங்கி, வியட்நாம், கம்போடியா, […]