Thursday 9th May 2024

தலைப்புச் செய்தி :

கே.வி.ஆனந்த் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் அனேகன்!

கனா கண்டேன், அயன், கோ, மாற்றான் படங்களை இயக்கிய கே.வி.ஆனந்த் அடுத்து இயக்கும் படம் அனேகன். இப்படத்தில் தனுஷ் நாயகனாக நடிக்கிறார். மும்பை நாயகி அமிரா தனுசுக்கு ஜோடியாக நடிக்கிறார். மேலும் நவரச நாயகன் கார்த்திக் முக்கிய வேடத்தில் நடிக்கும இப்படத்தில் அதுல் குல்கர்னி, ஆஷிஷ் வித்யார்த்தி, ஜெகன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்க, சுபா கதை திரைக்கதை வசனம் எழுதுகிறார்களாம்.

அனேகன் படப்பிடிப்பு செப்டம்பர் 2-ந்தேதி பாண்டிச்சேரியில் தொடங்கி, வியட்நாம், கம்போடியா, மலேசியலா உள்ளிட்ட நாடுகளில் தொடர்ந்து நடைபெறுகிறதாம். ஏஜிஎஸ் பிலிம்ஸ் தயாரிக்கும் இப்படம் காதல், காமெடி, அனல் பறக்கும் சண்டை காட்சிகளில் நிறைந்த கதையில் உருவாகிறதாம். இப்படத்துக்காக இதுவரை நடிக்காத மாறுபட்ட தோறறத்தில் நடிக்கிறாராம் தனுஷ்.

இப்படத்தின் தலைப்பு பற்றி கே.வி.ஆனந்த் கூறுகையில், நம சிவாய வாழ்க என்ற திருவாசக பாடலில் ஏகன் அனேகன் இறைவன் அடி வாழ்க என்று சொல்கிறார் மாணிக்க வாசகர். அனேகன் என்றால் ஒன்றானவன். உருவில் பலரானவன் என்பது பொருள் என்கிறார்.

mm ads

Posted by on Aug 31 2013. Filed under Headlines, சினிமா, செய்திகள், முதன்மை பக்கம். You can follow any responses to this entry through the RSS 2.0. Both comments and pings are currently closed.

Comments are closed

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2024. All Rights Reserved.| designed & developed by Green Site Tech