நிரஞ்சனா கன்னியாகுமாரி மாவட்டத்தில் தக்கலையிலிருந்து குலசேகரம் செல்லும் சாலையில் அமைந்திருக்கிறது திருவட்டாறு ஸ்ரீஆதிகேசவ பெருமாள் திருக்கோயில். கேசன் என்ற அசுரன் தனது சகோதரியுடன் தவம் செய்து பிரம்மனிடம் இருந்து சாகாவரம் பெற்றான். வரம் பெற்றவர்கள் சும்மா இருப்பார்களா?. கிடைத்த வரத்தை சோதித்து பார்க்க, தான் உணடு தன் வேலையுண்டு என்று இருக்கும் முனிவர்களிடம் வீணாக சென்று சண்டைபோட்டார்கள். அசுரர்களிடம் மோத முடியாத முனிவர்கள் பெருமாளிடம் முறையிட்டார்கள். முனிவர்களின் மனக்கவலையை தீர்க்க பெருமாள் பூலோகத்திற்கு வந்து அசுரன் கேசனை […]
நிரஞ்சனா கோயம்புத்தூர் நகரின் மேற்கில் 15.கி.மீ தூரத்தில் இத்திருக் கோவில் அமைந்து உள்ளது. சூரபத்மனும் அவனுடைய சகோதரர்களும் பல தவங்கள் செய்து பல வரங்களை பெற்றார்கள். வரங்களை பெற்ற பிறகு முனிவர்களை கொடுமைப்படுத்தினார்கள். பொறுத்து பார்த்து நிம்மதி இழந்த முனிவர்கள் சிவபெருமானிடம் முறையிட்டார்கள். “பொறுமையாக இருங்கள். என் சக்தியால் பிறப்பெடுக்கும் முருகன், சூரனை அழிப்பான். அதுவரை நீங்கள் பாதுகாப்பாக மருதமலையில் தங்கி இருங்கள்.“ என்றார் சிவன். இறைவன் அருளியது போல சூரனை அழித்து மருதமலையில் இருந்த முனிவர்களை […]
நிரஞ்சனா சிவமும் சக்தியும் ஒன்றே என்று சிவபெருமான் பலமுறை சொல்லியும் சக்தியான அம்பிகை சமாதானம் அடையவில்லை. இதனால் சினம் கொண்ட சிவன், “நீ எம்மை பிரிந்து காளியாக மாறுவாய்.“ என்று சபித்து விடுகிறார். இதை சற்றும் எதிர்பார்க்காத சக்திதேவி, தன் தவறுக்கு மன்னிப்பும் அத்துடன் சாப விமோசனமும் கேட்டார். “கோபத்தில் தந்த சாபமாக இருந்தாலும், தேவர்களுக்கும் முனிவர்களுக்கும் அசுரர்களால் ஆபத்து வர இருக்கிறது. அவர்களை காப்பாற்ற வேண்டிய நேரம் வரும். அதுவரை நீ உக்கிரத்தின் உச்சக்கட்டமாகத்தான் […]
நிரஞ்சனா சித்திரகுப்தர். இவரை பற்றி முதலில் நாம் தெரிந்து கொள்வோம். சிவன் தன் கைகளால் ஒரு அழகான சித்திரம் வரைந்தார். அந்த சித்திரத்திற்கு உயிர் கொடுத்தாள் அம்பிகை. இப்படி உயிர் பெற்ற சித்திரமே சித்திரகுப்தர். அன்னை பராசக்தி அந்த சித்திரத்திற்கு உயிர் கொடுத்த நாள் ஒரு சித்திரை மாதம், சித்திரை நட்சத்திரம் என்பதுவும் இதில் விசேஷம். அதனால் கூட அவருக்கு சித்திரகுப்தர் என பெயர் பொருந்தியது. பிறந்து வளர்ந்தவனுக்கு ஒரு வேலை வேண்டாமா?. அதனால் சித்திரகுப்தருக்கு ஒரு […]
நிரஞ்சனா கயிலாயமலையில் சிவபெருமான் பார்வதிதேவிக்கு பிரணவ மந்திரத்தையும் அதன் விளக்கத்தையும் உபதேசித்து கொண்டு இருந்தார். அப்போது அம்பிகையின் மடியில் இருந்த பாலமுருகனும் இதை கேட்டார். “தந்தை என் தாய்க்கு உபதேசித்ததை நான் அவர் அனுமதியில்லாமல் கேட்பது பாவசெயல்.“ என்று அவர் மனம் கருதி திருப்பரங்குன்றம் சென்று தவம் இருந்தார். முருகனின் தவத்தை ஏற்று சிவசக்தி காட்சி தந்தார்கள். அவர்கள் காட்சி தந்த இடம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலாக இப்போது திகழ்கிறது. மதுரை மீனாட்சியை தரிசிப்பவர்கள் திருபரங்குன்றத்தில் முருகனையும் […]
நிரஞ்சனா திருவெள்ளறை புண்டரீகாட்ச பெருமாள் திருக்கோயில் திருச்சி – துறையூர் நெடுஞ்சாலையில் திருச்சியிலிருந்து பதினேழு கி.மீ. தொசைவில் உள்ளது. சோழநாட்டுத் திவ்விய தேசங்களில் நான்காவதாக அறியப்படுகிறது. திரேதாயுகத்தில் அயோத்தி நகரை சிபி சக்கரவர்த்தி அரசாண்டு வந்தார். ஒருநாள் நீலிவனம் பக்கமாக சென்று கொண்டு இருந்த அரசர், அங்கு வெள்ளை நிறத்தில் ஒரு பன்றி அங்கும் இங்குமாக ஒடி கொண்டு இருந்தது. பன்றியாக இருந்தாலும் பார்க்க மிக வெள்ளையாக அழகாக இருக்கிறதே என்று நினைத்து, தாம் அரசர் என்பதையே […]
நிரஞ்சனா முருகனுக்கு ஆறுபடை வீடு. அதில் ஒன்று திருச்செந்தூர். சூரன் முருகனுக்கு பயந்து மாமரமாக காட்சி கொடுத்தார். எல்லாம் கண நேரத்தில் அறியும் ஆறுமுகனால் இதை தெரிந்து கொள்ள முடியாதா என்ன? மரமாக உருமாறி இருக்கும் சூரனை தன் வேலால் அந்த மரத்தை இரண்டாக பிளந்தார். சூரனை கொன்றதால் பிரம்மஹத்திதோஷம் முருகனை பிடித்து கொண்டது. முன்னோரு சமயம் பிரம்மஹத்திதோஷம் நீங்குவதற்கு அன்னபூரணியிடம் உணவை வாங்கி சாப்பிட்ட பிறகுதான் சிவனுக்கே தோஷம் நீங்கியது. ஆனால் ஆறுமுக பெருமானோ யார் […]
விபூதியின் மகிமைகள் நிரஞ்சனா வங்கதேசத்தில் “புஜபலன்“ என்ற அரசன் நேர்மையாக ஆட்சி செய்து வந்தான். இந்த அரசன் தன் பிறந்தநாள் அன்று அந்தணர்களுக்கு ஏராளமான தானங்களை வழங்கினான். இதை கேள்விப்பட்ட அந்தணர்கள் திரண்டு வந்தார்கள். விதர்ப்ப தேசத்தில் இருந்து “சுசீலன்“ என்ற அந்தணரும் வந்தார். இவரை கண்ட மற்ற அந்தணர்கள் “அரசே நீங்கள் சுசீலனுக்கு பரிசு வழங்கி விடுங்கள். அவர் வாங்கிய பிறகு நாங்கள் பெற்றுக்கொள்கிறோம். இவர் சகல சாஸ்திரங்கள் தெரிந்தவர். உலகநாயகனான ஈசனை வணங்குபவர். […]