சென்ற பகுதியை படிக்க கிளிக் செய்யவும் நிரஞ்சனா வீட்டுக்கு மூட்டை மூட்டையாக பரிசுகளுடன் வந்த திருவாதவூரரை குடும்பத்தினரும், உறவினர்களும் வரவேற்று புகழ்ந்தார்கள். ஆனால் திருவாதவூரருக்கு நடப்பது கனவா – நிஜமா?. என்றே புரியவில்லை. “குதிரை வாங்குவதற்கு கொண்டு சென்ற பொருளை சிவாலய திருப்பணிளுக்குதானே செலவு செய்தோம். யார் இந்த குதிரை வீரர்கள்.? இவர்களை நாம் இதற்கு முன்னர் பார்த்தது கூட இல்லையே.? ஆனால் என்னை இதற்கு முன் சந்தித்தது போல பேசினார்களே.? ஏதோ ஒன்று நடக்கிறது. இது […]
சென்ற பகுதியை படிக்க கிளிக் செய்யவும் நிரஞ்சனா வாதவூரடிகள், தாம் படும் துன்பத்தைவிட இறைவனின் சொல் பொய்யாகுமோ? அவ்வாறு ஆகாது. என்று நம்பிக்கையுடன், “திருப்பெருந்துறையில் உறையும் பெருமானே, திருவாலவாயில் உறையும் சிந்தாமணியே, இச்சிறியேற்கு இரங்கிக் கருணை புரியாயோ, ஊரார் உன்னை நகைத்தலை நினைக்க வில்லையோ, உன் அடிமை நான் துன்பத்தில் இருக்கிறேன். இதை அறிந்தும் வராமல் இருப்பாயோ.” என்று வேண்டினார். அன்று ஆவணி மூல நட்சத்திரம். சிவபெருமான், நந்தி தேவரையும், சிவகணங்களையும் அழைத்தார். “பாண்டிய மன்னன் […]
நிரஞ்சனா வைகையாற்றின் கரையில் விளங்கும் ஊர் திருவாதவூர். இங்கு ஆமாத்தியர் எனும் அந்தணர் குலத்தில் பிறந்தவர் வாதவூரடிகள். இவர் சிறந்த சிவபக்தர். இவருடைய நல்லறிவு, திறமை, சொல்லாற்றல், கல்வி அறிவு, நற்பெயர், புகழ் ஆகியவற்றை கேள்விபட்ட பாண்டிய மன்னரான அரிமருத்தன பாண்டியன், வாதவூரடிகளை அழைத்து அவரின் அறிவை திறனை சோதித்து ஆச்சரியம் அடைந்தார். மநுசாத்திரப் புலமை வாய்ந்தவராகவும், தனுர் வேதச் சிறப்பும் கொண்டவராகவும் திகழ்ந்தார் வாதவூரடிகள். அதனால் வாதவூரடிகளை “திருவாதவூரர்” என்று அழைத்து, பாண்டிய நாட்டின் […]
நிரஞ்சனா ஒருவர் வெற்றி பெற்றால், தன் முயற்சியால் அந்த வெற்றியை அடைந்ததாக சொல்வார்கள். தோல்வியை மட்டும் விதி என்று கூறுவார்கள். ஆனால் வெற்றியும் – தோல்வியும் நம் செயல்களை அனுசரித்து இறைவனால் தரப்படுகிறது. இறைவனின் மேல் நம்பிக்கையுடன் தவம் செய்து பயன் பெற்ற பலர் உண்டு. அதில் ஒரு புராண சம்பவத்தை தெரிந்துக் கொள்வோம். பணிப்பெண்ணின் மகன் மகரிஷிகளின் ஆசிரமங்களை சுத்தப்படுத்தி அவர்களுக்கு உணவு சமைத்து தரும் வேலையை செய்து வந்தாள் ஒரு பணிப்பெண். மகரிஷிகளும் அந்த […]
நிரஞ்சனா காஞ்சிபுரம் மாவட்டம் திருப்புலிவனத்தில் உள்ளது,-ஸ்ரீவியாக்ரபுரீஸ்வரர் திருக்கோயில். இறைவனிடம் தமக்கு பண வசதி வேண்டுவோர் சிலர். நல்ல குடும்ப வாழ்க்கை வேண்டுவோர் சிலர், குழந்தை பாக்கியம் வேண்டுவோர் சிலர். இப்படி அது வேண்டும் – இது வேண்டும் என்று வழக்கமான வேண்டுதல்கள்தான் இறைவன் காதில் விழும். ஆனால் ஒரு பக்தரின் வேண்டுதல் இவற்றில் இருந்து முற்றிலும் மாறுப்பட்டு இருந்தது. தமக்கு இரவிலும் கண் தெரியவேண்டும், மலை உச்சியிலும் மர உச்சியிலும் மலர்களை ஏறி பறிப்பதற்கு ஏதுவாக […]
அறுபத்து மூவர் வரலாறு பகுதி – 14 சென்ற பகுதியை படிக்க… நிரஞ்சனா குண்டக்கல் அரக்கோணம் ரயில் பாதையில் உள்ள இராசம் பேட்டைக்கு அருகில் உள்ளது உடுக்கூர். இது முன்னொரு காலத்தில் உடுப்பூர் என்று அழைக்கப்பட்டது. இந்த ஊரில் பிறந்தவர் நாகன். இவர் வேடவர்களுக்கு தலைவர். இவருடைய மனைவி பெயர் தத்தை. வேடவர் குலத்தில் பிறந்தவளான இவளிடத்தில் தைரியம் அதிகமாகவே திகழ்ந்தது. தத்தை நடந்து வந்தால் சிங்கம் நடந்து வருவது போல் இருக்குமாம். அந்த அளவில் […]
நிரஞ்சனா சும்மா இருப்பது நல்லதென இருந்தாலும், யாராவது வம்பாய் வருவதும் உண்டு. நரி தந்திரத்துடன் செயல்படும் தீய குணத்தவர்களிடம் சிக்கி அவதிப்பட்டவர்கள் – இன்னல்படுபவர்கள் பலருண்டு. அப்படி அவதிப்பட்டவர்களில் ஒருவராக இருந்தவர் விஷ்ணுபகவான். ஆம். அசுரர்கள், தேவர்களை கொடுமைப்படுத்தி வந்தார்கள். அவர்களை காக்க விஷ்ணுபகவான், அசுரர்களுடன் போர் செய்தார். அந்த போர் பல வருடங்கள் தொடர்ந்து நீடித்தது. இதனால் சோர்வுற்ற விஷ்ணுபகவான், ஒய்வு எடுக்க ஒரு இடத்தில் தன் கையில் இருந்த வில்லை பூமியில் ஊன்றி வில்லின் […]
நிரஞ்சனா வாசனை உள்ள இடத்தில்தான் தெய்வம் இருக்கும்.வாசமான மலர்களை கொண்டு இறைவனுக்கு அர்ச்சனை செய்தால்,அவ்வாறு அர்ச்சனை செய்தோருக்கு நல்லவை யாவும் வசியம் ஆகும்.வாழ்க்கையில் நல்ல மாற்றமும் ஏற்றமும் ஏற்படும். பீமன், தாமரை மலரை தேடி போனபோதுதான் பீமனுக்கு ஸ்ரீஅனுமானின் தரிசனமும் அருளும் கிடைத்தது. ஸ்ரீஅனுமானின் அருளை பெற்ற பிறகுதான் காட்டில் இருந்த பாண்டவ சகோதரர்கள், நாட்டை ஆளும் யோகத்தை பெற்றார்கள். இவ்வாறாக மலர்கள் ஒருவரின் வாழ்வை நல்ல விதத்தில் மாற்றும் சக்தி படைத்தது. மலர்களுக்கு மருத்துவ குணமும் […]
நிரஞ்சனா இறைவனுடைய நாமத்தை தினமும் உச்சரிக்க வேண்டுமா? அப்படி உச்சரித்தால் இறைவன் நம்மை வந்து பார்ப்பாரா? என்ற கேள்வி பலருக்கும் இருக்கிறது. மக்கள் அதிகம் இருக்கும் கூட்டத்தில் “சீனிவாசா” என்று அழைத்தால், அந்த கூட்டத்தில் தன்னை தான் அழைக்கிறார்களோ என்று, “சீனிவாசன்” என்ற பெயர் உள்ள அத்தனை பேரும் திரும்பி பார்ப்பார்கள். அதுபோல் இறைவனும் யார் நம்மை அழைப்பது என பார்ப்பார். அதனால்தான் மனிதர்களுக்கு இறைவனுடைய பெயர் வைக்கிறார்கள். புண்ணியம் தேடி தந்த ஹரிதாசர் பண்டரிபுரத்தில் […]
Written by Niranjana ஒலிக்கு சக்தி இருக்கிறதா என்றால் நிச்சயமாக இருக்கிறது. அதனால்தான் நம் முன்னோர்கள், குழந்தைகளுக்கு பெயர் வைக்கும்போது இறைவனுடைய பெயரை வைக்க வலியுறுத்தினார்கள். இறைவனின் பெயரை கொண்ட குழந்தையை பெயர் சொல்லி அழைக்கும்போது இறைவனின் நாமத்தை சொல்கிறோம். இறைவனுடய பெயர் நல்ல ஒசைகொண்டது. அந்த ஓசை இல்லத்தில் ஒலிக்க ஒலிக்க சுபிக்ஷம் ஏற்படும். ‘ஸர்வ மங்கல மாங்கல்ய சிவே ஸர்வார்த்த ஸாதிகே சரண்யே த்ரியம்பகே கௌரி நாராயணி நமோஸ்துதே” என்ற துர்கைக்கு உகந்த மந்திரத்தை […]