நிரஞ்சனா மயிலாப்பூர் என்ற பெயர் வந்ததற்கு காரணமே கற்பகவல்லி அம்பிகையால்தான். அன்னை மயிலாக உருவெடுத்து சிவபெருமானை நினைத்து தவம் செய்தாள். அதனால் இந்த பகுதிக்கு மயிலாப்பூர் என்று பெயர் ஏற்பட்டது. இத்திருக்கோயிலுக்கு உள்ள முக்கிய சிறப்பு என்னவென்றால் உடல்நலம் இல்லாதவர்கள் இக்கோயிலுக்கு வந்தால் நலம் பெறுவார்கள். நம்முடைய எண்ணங்களை வாய் திறந்து ஈசனிடம் சொல்ல வேண்டியதில்லை. மனதில் நினைத்தாலே நிறைவேறும் என்கிறார் சேக்கிழார். நாம் நம்முடைய வேண்டுதலை மனதில் நினைத்தப்படி இந்த கோயிலுக்குள் நுழைந்தாலே நினைத்தது நிறைவேறும். […]
நிரஞ்சனா கடம்பந்துறை என்ற இத்தலம் இன்று குளித்தலை என அழைக்கப்படுகிறது. திருச்சியிலிருந்து கரூர் செல்லும் சாலையில் இருந்து முப்பது கி.மீ தொலைவில் இந்த கோயில் இருக்கிறது. காசிக்கு போனால் பாவம் தொலையும் என்பது போல் இந்த ஸ்தலத்திற்கு வந்தால் காசிக்கு வந்த புண்ணியம் கிடைக்கும் என்கிறது ஸ்தலபுராணம். ஆம்.. காசியில் இருக்கும் சிவாலயம் வடக்கு நோக்கி அமைந்திருப்பது போன்று, இந்த ஆலயமும் வடக்கு நோக்கி அமைந்திருக்கிறது. அதனால் இந்த திருக்கோயில் தட்சிணகாசி என்ற பெயரும் பெற்றிருக்கிறது. இந்த […]
நிரஞ்சனா மதுரையில் இருந்து இராமநாதபுரம் செல்லும் பிரதான சாலையில் 50கி.மீ.தொலைவில் மானாமதுரை என்ற தலம் அமைந்துள்ளது. இங்கு சோமநாதர் திருகோயில் உள்ளது. முனிவர்கள் தவம் செய்ய சிறந்த இடத்தை தேடி கொண்டு வந்தார்கள். எந்த இடமும் அவர்களுக்கு திருப்தியாக இல்லை. இப்படியே தேடி தேடி சென்றதில், மிக பிரமாண்ட வில்வ மரங்கள் படர்ந்து விரிந்து இருந்த பகுதிக்கு வந்தார்கள். வில்வ இலையின் நறுமனமும் காற்றில் தென்றலாய் வீசியது. “அடடா… இத்தனை வில்வ மரங்களா? சிவனே மகிழ்ந்து இந்த […]
நிரஞ்சனா சேலம் ஆத்தூர் சாலையில் உள்ள வாழப்பாடியிலிருந்து 5கி.மீ தொலைவில் பேளூர் அமைந்துள்ளது. முன்னொரு காலத்தில் வெள்ளூர் என்று அழைக்கப்பட்ட இடத்தை இன்று பேளூர் என்று அழைக்கிறோம். பதரிகா ஆசிரமத்தில் இருக்கின்ற முனிவர்கள் வேத சாஸ்திரத்தில் தேர்ச்சி பெற்றவர்கள். இருந்தாலும் மழையில்லாத காரணத்தால் வறட்சி ஏற்பட்டது. உண்ண உணவு இல்லாமல் தவித்தார்கள். இதனால் வசிஷ்டரிடம் முறையிட்டார்கள். இவரின் வழிகாட்டுதலில் கொங்கு நாட்டில் வெள்ளாறு பாய்ந்து வளப்படுத்தும் இடத்திற்கு குடிவந்தார்கள். அந்த நகருக்கு வெள்ளூர் என்று பெயர் வைத்து […]
விபூதியின் மகிமைகள் நிரஞ்சனா வங்கதேசத்தில் “புஜபலன்“ என்ற அரசன் நேர்மையாக ஆட்சி செய்து வந்தான். இந்த அரசன் தன் பிறந்தநாள் அன்று அந்தணர்களுக்கு ஏராளமான தானங்களை வழங்கினான். இதை கேள்விப்பட்ட அந்தணர்கள் திரண்டு வந்தார்கள். விதர்ப்ப தேசத்தில் இருந்து “சுசீலன்“ என்ற அந்தணரும் வந்தார். இவரை கண்ட மற்ற அந்தணர்கள் “அரசே நீங்கள் சுசீலனுக்கு பரிசு வழங்கி விடுங்கள். அவர் வாங்கிய பிறகு நாங்கள் பெற்றுக்கொள்கிறோம். இவர் சகல சாஸ்திரங்கள் தெரிந்தவர். உலகநாயகனான ஈசனை வணங்குபவர். […]